கதையாசிரியர் தொகுப்பு: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

98 கதைகள் கிடைத்துள்ளன.

கொரோணா ஹொட்டேல்

 

 கொழும்பு -14.4.20. ‘இந்த நேரம் நேற்று இந்த உலகத்தைவிட்டு மறைந்து விடவேணுமென்று நினைத்தேன்;’ அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னைத் திடுக்கிடப் பண்ணின.அவளின் கண்கள் என் முகத்தில் நிலைத்திருந்தன. எனது பார்வையும் அவள் முகத்தில் சட்டென்று படிந்து நின்றதும் எனக்குத் தெரியும். என்ன சொல்கிறாள்? நேற்று மாலை ஏழுமணியளவில் இந்த உலகத்திலிருந்து பிரிந்தோட நினைத்தாளா? ‘ஏனம்மா அப்படிநினைத்தாய்?’ எனது குரலில் படபடப்பு. தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுமளவுக்கு என்ன துயர் இவளுக்கு?; அவளின் பெயர் சுலைகா.மும்பத்தைந்துக்கும் நாற்பதுக்குமிடையில் வயதுள்ள


கமலினி

 

 ‘தோரணம் நாட்டி துளாய்மாலை தொங்கவிட்ட பூரணகும்பம் பொலிவாக முன்வைத்து-’ அந்த திருமணக் காட்சி,கமலினியின் மனக்கண்ணில்,என்றோ நடந்த தனது திருமணம் நடந்த காட்சியாகப் பளிச்சென்று வந்;தபோது, இன்று திருமண கோலத்துடன் அவளது தங்கையின் மகள் கீதாஞ்சலி கமலியின் கால்களைக் கண்ணீரால் நனைப்பது அவளின் இதயத்தில் பனி கொட்டுவது போலிருந்தது. ‘ஆசிர்வாதம் என் கண்மணியே,பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் அம்மா’ கமலினி கீதாஞ்சலியை தன்னுடன் ஆர அணைத்து மனமார வாழ்த்தினாள். கீதாஞ்சலி தனது பெரியம்மா கமலினியின்; மனம் கனிந்த ஆசிர்வாத்துடன்


காதலுக்குப் பேதமில்லை

 

 இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து விளையாடும் சப்தம் காதைப் பிளக்கிறது.இதமான மெல்லிய தென்றல் உடலைத் தடவிச் செல்கிறது.மூக்குக்கண்ணாடியைக் கழட்டிக் கைக்குட்டையாற்; துடைத்தவிட்டு போட்டுக் கொள்கிறேன். அக்கம் பக்கமெல்லாம் ஆரவாரம்.அவற்றைக் கடந்து எங்காவது தனியான இடம் தேடிப் போகவேண்டும் போலிருந்ததால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்மனைவி ஒன்றும் சொல்லாமல் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள்;;.ஆனால் அவள் என்ன நினைப்பாள் என்று எனக்குத் தெரியும்.’


நண்பன்

 

 காலையிளங்காற்று உடம்பில் பட்டதால் எற்பட்ட புத்துணர்வு சுகமாக இருக்கிறது. வெளியில் உலகம் விடிந்து விட்டதற்கான சந்தடிகள் கேட்கின்றன.படுக்கை அறைக்குள் இருளும் ஒளியுமான ஒரு கலப்பு வெளிச்சம். திறந்திதிருந்த ஜன்னல் ஊடாக குளிர்மையான தென்றல் தவழ்ந்து கொண்டிருக்கிறது.ஆனால் என் உடம்பின் எரிவு அதன் குளிர்மையை மிகப் படுத்துவதால் ஏற்படும் விறைப்பினால் போர்வையைத் திரும்பவும் இறுக்கிக் கொள்கிறேன்.காயம்பட்டு புண்ணாகி வலி தரும் எனது காலை மெல்லமாக உயர்த்த முயல்கிறேன்.தாங்க முடியாவில்லை,அவ்வளவு வலி. மெல்லமாகத் திரும்புகிறேன்.திரும்பியதும் பக்கத்தில் படுத்திருக்கும் மனைவியின் மெல்லிய-ஒரே


‘டியானா-லோகன்’

 

 ‘எனது அப்பா மிகவும் நல்லவர்,மற்ற அப்பாக்கள் மாதிரியில்லாமல் என்னைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார் என்றுதான் இதுவரையும் நினைத்திருந்தேன்’ டியானா தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.அவளின் தகப்பன் மிஸ்டர் டேவிட் மாஸ்டன் ஒரு வழக்கறிஞர் மனித உரிமைகளுக்காக வாதாடுவதில் பெயர் பெற்றவர். மற்றவர்களை;மதிக்கத் தெரிந்தவர். தனது மகளில் மிகவும் அன்பு வைத்திருக்கும் தகப்பனின் மகளான டியானாவின் சினேகித சினேகிதிகள் அவளை மிகவும் அதிர்ஸ்டசாலிகளாக நினைக்கிறார்கள். அவள் பல்கலைக்கழகப் படிப்பைத் தொடங்க முதல் பத்தொன்பது வயது வரை அப்பா அம்மா அணைப்பில்


ஒற்றைப் படகு

 

 லண்டன்-1974 வீட்டிலிருந்து கடிதம் வந்திருக்கிறது. பிள்ளையார் சுழியுடன் ஆரம்பித்து அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதமும் உயிருள்ள தவிப்புகளின் நிழல் வடிவம் என்பதை ஞாகப்படுத்துகிறது.இலங்கையிலிருந்து என் சினேகிதர்கள்.உறவினர்கள்,பெற்றோர் ஒவ்வொருவருமே ஒவ்வொரு கோண உறவின் அடிப்படையில் எழுதும் கடிதங்கள் என் உள்ளத்தின் உணர்ச்சிகளைத் தூண்டுவதுண்டு.சிலவேளைகளில்,நேரம் கிடைத்தால் உலகில் எவருமே இல்லாத இ.டத்திற்கு ஓடிப்போய்த் தனிமையில் இருக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றும். ‘ஏய் பாலா’ என்ற குரலைக்கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்புகிறேன். தெரிந்த முகம்! தூரத்தில் நிற்கிறது. உள்ள பொதுத்தெரு என்பதையும் மறந்து மிகவும்


சின்னம்மாவின் ‘அவர்’

 

 சிவா தனது மனைவி கலாவின் சின்னம்மா தேவராணியை அன்று பினனேரம் சென்று பார்ப்பதாக முடிவு கட்டிய விடயம் அவனது நண்பன் ஒருத்தனின் எதிர்பாராத வருகையால் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. வந்திருந்த நண்பனுக்குத் தேனீர் கொண்டு வந்த கலாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதைச் சிவா அவதானித்தபோது தர்மசங்கடமாகவிருக்கிறது.கலா,இலங்கைக்கு விடுதலைக்கு வரத்திட்டமிட்ட உடனேயே இந்தத் தடவையாவது தனது சின்னம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையைத் தனது கணவனிடம் மிகவும் அழுத்தமாகச் சொல்லி விட்டாள். சிவா தனது குடும்பத்துடன் நீண்ட நாளைக்குப்


லண்டன் வீதியில் சிவப்புப் பொட்டுக்கள்

 

 டேவிட்டுக்குத் தெரியும்,தன் நடையில் உள்ள துள்ளலும் முகத்திற் தோன்றும் மகிழ்சியும் அவனுக்கே அசாதாரணமானவை என்று.ஆனாலும் தன் மகிழ்ச்சியை ரசிக்க அவன் தயங்கவில்லை. இன்னும் சில வினாடிகளில் அவனின் காதலி வரோணிக்காவுடன் சேர்ந்து ரசிக்கப் போகிறான். வரோணிக்கா! அவளின் நினைவின் இனிமையில் அவன் முகம் குறுகுறுக்கிறது.அவன் அவளிடம் இன்று கேட்கப்போகும் கேள்வியை தனது மனதுக்குள்; கேட்டுப் பார்க்கிறான். அவள் அவளது மனம் திறந்து சொல்லாமல் மறுத்ததெல்லாம் அவனுக்குத் தெரியும்.அவளின் மறுப்பு அவனில் அவனுக்கு அன்பு இல்லை என்பதற்கு அர்த்தமில்லை.அவனுக்கு


சித்திரத்தில் பெண்எழுதி

 

 (நான் மாணவியாக இருக்கும்போது -எழில் நந்தி- என்ற புனை பெயரில் ‘வசந்தம்’பத்திரிகைக்கு எழுதிய கதை) ஏழைப் பெண்களை எரித்தழிக்க வசதியான ஆண்கள் ஒருநாளும் தயங்குவதில்லை. உடம்பெல்லாம் தாங்கமுடியாமல் எரிகின்றது.அக்கினிக்குள் குளிப்பவள்போல அவள் துடிக்கின்றாள்.பொன்னுடல் என்று வர்ணிக்கத் தக்க அவள் உடல் எரிந்த கருகிய அடையாளத்தில் பார்ப்பதற்குக் பயங்கரமாகவிருக்கிறது. உடம்பின் கீழ்ப்பாகம் முழுதும் கருகிவிட்டது.மேற்பாகத்தில் பெரியதாக்கம் எதுவுமில்லை.அதுவும் அந்தக் குறுகுறுப்பான முகத்தில் எந்த வடுவும் இல்லை.கீழ்ப்பாக எரிவின் வேதனையால்,அவள் முகம் சுருங்குகின்றது.கீழுதட்டைப் பற்களால் கடித்துக்கொண்டு வேதனையை மனதினுள் அமுக்குகிறாள்.அவளுக்கு


ரத்தினம் அப்பா

 

 வெளியே செல்ல முடியாத வெயில்.வியர்வையும் புழுக்கமும் ஏதோ ஒரு அரிகண்டமான நிலையில் நெளிகிறார் ரத்தினம் அப்பா. அந்த வார்ட்டில் உள்ள மறைவுக் கட்டில்களில் ஒன்றின் சொந்தக்காரர் அவர்.தன் மறைவை எடுத்துவிட்டு வெளியே நோக்குகிறார்.’மிஸி’ என்றழைக்கிறார்.யாருக்கோ ஊசி மருந்து கொடுத்துக் கொண்டிருந்த தாதி ராஜி நிமிர்கிறாள். ‘மிஸி பிள்ளை,இங்க வா மோனை ஒருக்கா’ ரத்தினம் அப்பாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு விரைகிறாள் அவரிடம். ‘சீச்சீ என்ன வெயில், என்ன புழுக்கம், அப்பப்பா’ வெறும் வியர்வைப் புழுக்கம் மட்டுமில்லை அவருக்கு.வேதனைப் புழுக்கமும்தான்