கதையாசிரியர் தொகுப்பு: இயக்குநர் ரமணா

1 கதை கிடைத்துள்ளன.

நண்டு

 

 நான் மிகுந்த சந்தோஷமாக இருந்த நாட்களில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். மெரினா பீச் கண்ணுக்கு எட்டிய தூரம் கடல், வெள்ளை மணல், தூரத்து வானம். சற்றுத் தள்ளி அம்மா மணலில் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள். அப்பா எப்போதும் வருவதே இல்லை. அம்மா ஏன் தனியே இருக்கிறாள்? புரியவில்லை. சற்றுத் தள்ளி குணமணி சித்தி. அம்மாவுடன் பள்ளியில் ஒன்றாகப் பணிபுரிபவள். அம்மாவின் தோழி. எனக்கு அவள் உறவு அல்ல. ஆனால், அவளை நான் சித்தி என்றுதான் கூப்பிடுவேன். சௌந்தர் சித்தப்பா.