கதையாசிரியர் தொகுப்பு: இந்துமதி

3 கதைகள் கிடைத்துள்ளன.

தூண்டில் புழுக்கள்

 

 அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது. இன்று திங்கட் கிழமை போயாகவேண்டும். ஒன்பதரை மணிக்கெல்லாம் ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டாக வேண்டம். அதன் பின் உள்ளே நுழைந்து மேனேஜிங் டைரக்டர் எம்.சிவக்குமார் எனப் பெயர் பலகையிட்ட அறைக்குள் நுழைய வேணடும். அதை நினைத்த÷ பாதே அடிவயிறு சுருண்டது. உள்ளே அமிலம் சுரக்க ஆரம்பித்தது. அவளைக் கண்ட உடனே அவனது முகம் இறுகும். கண்களில் கோபம் எட்டி பப்க்கும். பேச்சு


பாலை மனம்!

 

 அம்மாவிடம் சொல்லக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. மூன்று நாட்களாக அம்மா ஐ.சி.யு. வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். இயற்கை உபாதைகள் மறந்து போனவளாக இருக்கிறாள். காபியைக்கூட வற்புறுத்தித்தான் குடிக்க வைக்க வேண்டியிருந்தது. ”வேணாம் சகுந்தலா.. விட்டுடு..” நானும் வற்புறுத்தவில்லை. ஐ.சி.யு-வுக்குள்ளேயிருந்து வெள்ளை கோட்டும் ஸ்டெதஸ்கோப்புமாக அண்ணா வெளியே வந்தால் சடாரென்று எழுந்திருப்பாள். விரைந்து அண்ணன் அருகில் போய்க் கேட்பாள்.. ”சங்கரா, அப்பாவுக்கு எப்படிடா இருக்கு..?” ”உஷ்.. அம்மா.. கொஞ்சம் தள்ளி வா..” என்றழைத்துப் போய் சின்னண்ணன் மெதுவாகச்


நாதங்கள் மோதினால்…

 

 நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா. பார்வை, எதிரே எள் விழ இடமின்றி சபா முழுவதும் நிறைந்திருந்த ரசிகர்கள் மீது திரும்பிய போதெல்லாம், முதல் வரிசையில் அவளுக்கு நேராக அவளின் தந்தைக்கு அடுத்து போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி காலியாயிருப்பது அவள் நெஞ்சை உறுத்தியது. அந்த ஒரு நாற்காலியினால் சபா முழு வதுமே காலியாக இருப்பது போன்ற உணர்வு! கடைசியில் பாலமுருகன் வரவே இல்லை.