கதையாசிரியர் தொகுப்பு: இந்திரா ராஜமாணிக்கம்

1 கதை கிடைத்துள்ளன.

நெடி

 

 ”பேசாம கவுன்சிலிங் போயிட்டு வாயேன்” அகிலேஷ் விளையாட்டாகச் சொல்லவில்லை என்பது புரிந்தது. சமீபமாக நானே இதுபற்றி யோசித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அவன் சொன்னதை கிண்டலேதும் செய்யாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தேன். ”உனக்கு யாரையாவது தெரியுமா?” மிகத்தீர்க்கமான யோசனையில் இருக்கும்போது மனித முகங்கள் ஏன் இத்தனை கொடூரமாய் காட்சியளிக்கின்றன?! என்னிடமிருந்து இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த கோணலான நெற்றிச்சுழிப்பிலேயே தெரிந்தது. அவ்வளவு சீக்கிரம் ஆமோதித்துவிட்டதை அவனால் நம்பமுடியவில்லை. ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள மறுபடி கேட்டால் ஒருவேளை என் முடிவை மாற்றிக்கொள்ளலாம் என்றிருந்தேன்.