கதையாசிரியர் தொகுப்பு: ஆல்பர்ட் பெர்னாண்டோ

2 கதைகள் கிடைத்துள்ளன.

அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனுமாம் போற்றி!

 

 அந்தக்கிராமம் முழுக்க அன்பால் பின்னப்பட்டிருந்தது. பண்பால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் முன்னேற்றத்துக்கு நூறு விழுக்காடு காரணம் அமுதா அறிவழகன் தம்பதியினர்தான் காரணம். இருவரும் படித்த பண்பு மிக்கவர்கள். தாம் வாழும் கிராமம் ஒரு முன் மாதிரிக் கிராமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயலாற்றும் செயல் மறவர்கள். அறிவழகன் மனிதப்பணியில் புனிதப்பணியாம் ஆசிரியப்பணியைச் செய்பவர். அலுவல் நேரம் போக மீந்த நேரங்களில் தன் பொன் பொழுதுகளை தான் சார்ந்துள்ள கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஓர் தன்னார்வலர்!


மனத்தில் மாசிலா மணியே போற்றி!

 

 ஆளவந்தார் அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இருக்காதா? அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது. அய்யா,”அம்மனுக்கு நீங்கள் இந்தமுறை செய்த சிறப்பு முற்காலத்தில் அரசர்கள் கூடச் செய்திருக்கமாட்டார்கள்” என்றார் ஒருவர். “பின்னே கண்ணைப்பறிக்கும் ஒட்டியாணம் அம்மனுக்கே புது மெருகல்லவா? வேறு யாருஞ் செய்ய இயலாச் சிறப்பு அய்யா,” என்றார் இன்னொருவர். “அம்மன் கோயில் உள்ளவரை அய்யா பேர் இருக்கும்!” என்று ஒருவர். கூடியிருந்தவர்கள் புகழப்புகழ உற்சாகத்தில் மிதந்தார் ஆளவந்தார். ஆளவந்தார் அந்த சுத்துப்பட்டி கிராமங்கள் அறிந்த ஒரு