கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.ரக்ஷனா சக்தி

1 கதை கிடைத்துள்ளன.

நேர்த்தி

 

 மாலை. இருள் கவியத் தொடங்கியது. அறுத்த புல்லைக் கட்டி, தலைமீது சுமையாக ஏற்றிய சாலாச்சி விறுவிறுவென வரப்பில் ஏறி நடையைக் கட்டினாள். நாலு எட்டுப் போட்டால் தாமிரவரணி வடிகால் வந்துவிடும். சுமை கனத்தது. வேர்க்க விறுவிறுக்க நடந்தாள். இருபுறமும் நாற்று நெகுநெகுவென வளர்ந்திருந்தது. மாலைக் காற்றில் தலையை அசைத்தன. சாலாச்சிக்கு நினைவெல்லாம் பெருமாளைப் பற்றித்தான். பால்பண்ணை நடத்தும் அவரை இன்னும் அரை மணி நேரத்துக்குள் பார்த்தாக வேண்டும். இல்லாவிட்டால் ரவைக்குத்தான் வருவார். பால்கேனை வண்டியில் கட்டினாரென்றால் பத்து