கதையாசிரியர் தொகுப்பு: ஆர்.சுமதி

2 கதைகள் கிடைத்துள்ளன.

‘ஆதி’லெஷ்மி

 

 ‘‘அம்மா.. நாங்க தனியா போயிடலாம்னு இருக்கோம்..’’ கோபால், ஆதிலெஷ்மியின் அருகே வந்து இதைச் சொன்னபோது ஆதிலெஷ்மி அப்படியே வெல வெலத்துப் போனாள். எதை நினைத்து ஆதிலெஷ்மி பயந்து கொண்டிருந்தாளோ, அதை கோபால் சொல்லி விட்டான். அவளுடைய அடிவயிறு சுருண்டு குழைந்தது. ‘‘யப்பா.. வேண்டாம்ப்பா..’’ -சட் டென்று எழுந்து அவனெதிரே நின்று கை கூப்பினாள். கண்ணீர் பொங்கியது. கோபால் அலட்சியமாக இடது கையை உயர்த்தி மறுப்பதைப் போல் காட்டினான். ‘‘இல்லம்மா! இனிமே இந்த வீட்ல என்னால இருக்க முடியாது.


குழந்தை உபதேசம்

 

 நான் முடிவு செய்துவிட்டேன். இனி உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. யாருக்காக வாழவேண்டும்? என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய முகமும் என் எண்ணங்களையே பிரதிபலித்தது. ‘‘நாம இனிமே உயிரோட இருக்கக் கூடாதுங்க. போயிட லாம்’’ வேதனையாக என் மார்பில் சாய்ந்துகொண்டாள். ஜவுளிக்கடை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது ஒரு காலம். பழம் நிறைந்த மரத்தை பறவைகள் தேடி வருவது போல் எப்போதும் உற்றார், உறவினர் கூட்டம் சூழ்ந்து நிற்கும். தடாலென ஏறிக்கொண்டிருந்த ஏணி சரிந்ததைப் போல் வியாபாரத்தில் பயங்கர