கிரகணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 17, 2017
பார்வையிட்டோர்: 4,513 
 

கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் வாழும் நகர். கடும் மழையின் போது அடிக்கடி வெள்ளத்தில் அந்த நகர் மூழ்கும். அந்நகரை சுற்றியுள்ள கிராம மண்ணில் இரத்தினக்கற்கள் விளைந்தன.

சுண்ணாகத்தை பிறப்பிடமாகக் கொண்ட சின்னத்தம்பி அரசாங்கத்தில் சாதாரண கிளார்க்காக வேலை செய்தவர். அவரோடு கொழும்பு சஹிரா கல்லூரியில் படித்த காசிமின் தந்தை ஹனீபா பேருவளையில் வைரவியாபாரி. அவர் மறைவுக்குப் பின், காசிம் தந்தையின் வியாபரத்தை எடுத்து நடத்தினார்.

இரத்தினபுரி கச்சேரியில் கிளார்க்காக வேலை செய்த காலத்தில் சின்னத்தம்பிக்கு, ரணவீர என்ற சிங்களவரின் நட்பு கிடைத்தது அவரின் தொடர்பால் சின்னதம்பிக்கு இரதினகற்கலில் ஆர்வம் ஏற்பட்டது ரணவீரவோடு, இரத்தினபுரிக்கு அருகில் உள்ள இடங்கொட (Idangoda) கிராமத்தில் வயல் காணியில் நிலத்தை தொண்டியபோது விலை உயர்ந்த நீலமாணிக்கக் கல் (Blue Saphire) ஓன்று சின்னதம்பிக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து தனது’ அரசு வேலையை’ உதறித் தள்ளிவிட்டு ரணவீரவோடு’ சேர்ந்து ரத்தினகற்களை தேடி இரத்தினபுரிக்கு அருகே
உள்ள இடங்கொட கிராமத்தில் வயல் காணிகளில், கூலிகளை வைத்து இரத்தினக் கற்களைத் தேட ஆரம்பித்தார். அவர் கண்டேடுத்த மாணிக்கக் கற்களை காசிம் தனது கடைக்கு வரும் அரேபியர்களுக்கும் வெளி நாட்டவருக்கும் விற்றுப் சின்னத்தம்பிக்கு பணம் கொடுத்தார். அதிர்ஷ்ட தேவதையின் பார்வை சினத்தம்பியின் பக்கம் திரும்பியது. வெகு விரைவில் இரத்தினபுரியில் மாணிக்க கல் வியபரம் செய்யத் தொடங்கினர்’.

அவரின் மகன் பிறக்க இரு வருடங்களுக்கு முன், பல மாணிக கற்ளைக் கண்டு எடுத்து லட்சாதியானார். அவரின் இரத்தினக்கல் வியாபாரத்துக்கு அவரின் சஹாரா கல்லூரி நண்பன் காசிம் பெரிதும்’ உதவினார். 1955 இல் பிறந்த தன் மகனுக்கு தன் வியாபாரம் நினைவாக நவரத்தினம் எனப் பெயர் வைத்தார்

சினத்தம்பி கொடுத்த நவரத்தினத்தின் ஜாதகத்தை பல தடவை பார்த்து விட்டு தன் உதட்டைப் பிதுக்கினார். ஊரெழு சோதிடர் சாம்பசிவம் சுண்ணாகத்தை பூர்வீமாக.. கொண்ட சின்னதம்பியின் குடும்ப சோதிடர் அவர். சாம்பசிவம் பெயரை ஊரெழு சுற்றி உள்ள கிராமங்களில் தெரியாதவர் இல்லை. செம்மண் பகுதியான இந்த ஊர், நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ளது. சோதிடர் சாம்பசிவத்தின் பூட்டனார் நல்லசிவம் நல்லுரை ஆண்ட சங்கிலி அரசனின்’ ஆஸ்தான சோதிடரும், ஆலோசகரும். மன்னன் அவரின் சேவைக்க்காக ஊரெழுவில். கொடுத்த முப்பது பரப்புக் காணியில் அவரது பரம்பரை வாழ்ந்து வருகிறது,

“ சாத்திரியார் என்றை மகனின்; சாதகம் எப்படி இருக்கு? அவன் பிறந்த நட்சத்திரம் எப்படி?. அடிக்கடி மூக்குக்கு மேல் கோபம் வரும்.. படித்து டாக்டர் ஆவானா?. எவ்வளவு செலவானாலும் பராவாயில்லை” சின்னத்தம்பி கேட்டார்.

“ ம்… உமக்கு சொல்லுறதுக்கு யோசிக்க வேண்டி இருக்கு”

“ என்ன அப்படி ஏதும் சாதகத்தில் பிரச்சனையா”?

“உம்முடைய மகன் பிறந்தது 1955 ஆம் ஆண்டு ஜுன் 20. அது திங்கள் கிழமை இல்லையா”?

“ ம் . அதுக்கு இப்ப என்ன?”

“ அதுவும் அமாவாசையில் திருவாதிரை நட்சத்திரத்’தில் பிறந்தவன். திருவாதிரை கள்ளன் என்று சிலர் சொல்வார்கள். அவன் சொல்வதை நம்ப முடியாது என்று ஒரு வாக்குண்டு,”

“ அவன் எனக்கு ஒரே மகன். என்னிடம் போதிய பணம் இருக்கு” சின்னத்தம்பி பதில் சொன்னார். அவருக்கு சோதிடர் சொன்ன வார்த்தை மனதை உறுத்தியது

“ உம்டைய மகனுடைய சாதகத்தில். சந்திரன் சூரியனை மறைத்து’ விட்டது. சொல்லப்போனால் ராகு சூரியனை விழுங்கிய நேரத்தில் இவன் பிறந்திருக்கிறான். சூரியபகவானின் பார்வை’ இவன் பிறந்த போது இவன் மேல் விழவில்லை. எட்டிலை செவ்வாய் வேறு. அதுவும். தோஷம் ”

“ சாஸ்திரி கொஞ்சம்’ விளக்கமாய் தான் சொல்லுங்கோவன்”

”உமக்கு நினைவிருகிறதா 15 வருஷத்துக்கு முந்தி இலங்கையிலை ;பூரண சூரிய கிரகணம் வந்தது 1955 ஜூன் 20 ஆம் திகதி என்று?

“ ஒம் நினவிருக்கு என் மகன் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் பிறந்தவன். கிரகணம் அன்று அவன் பிறந்தவன். சிசிரியன் ஒப்பரேசன் செய்து அவனை டாக்டர் வெளியே எடுத்தவர்.. அந்த கிரகணம் நடந்த நாள் இரத்தினபுரியை சுற்றி உள்ள சில கிராமங்களில் தாங்கள் வெள்ளையாக, வெள்ளைக்கார பெண்களைப் போல் வர வேண்டும் என்பதற்காக மடச் சனங்கள் வரக்கா என்ற பிலாக்காயில் கூழ் தயாரித்து அருந்தி பலர் ஆஸ்பத்திரிகளுக்கு போக வேண்டி இருந்தது. அந்த சம்பவத்தை வைத்து ஒரு பைலா பாட்டு இயக்கப் [பட்டு பிரபலமானது. அது என் நினைவில் இன்றும் இருக்கிறது” சின்னத்தம்பி சொன்னார்.

“அதாவது கிரகணம் அன்று அமாவாசை. சுமார் ஏழரை நிமிடங்களுக்கு சூரிய வெளிச்சம் இலங்கை தீவில் விழாத நேரம் உம்முடைய மகன் பிறந்திருக்கிறான்”.

“ அது எப்படி சாத்திரி சரியாக சொல்லுகிறீர்’?

“சாதகத்தில் கிரங்கள் இருக்கும் வீடுகள் சொல்லுதே. எங்கடை இந்து மதத்தில் சொல்லுவினம் ராகு என்ற பாம்பு சூரியனை விழுங்கியதால் சூரிய கிரகணம் தோன்றுகிறது என்று. ராகு. சூரியன்.. சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வீடான மிதுன ராசியில் இருந்த போது உம்முடைய’ மகன்’ காலையிலை பிறந்திருக்கிறான். சூரியனும்’ ”சந்திரநும் ஒரே வீட்டில்’ இருந்தால் அன்று’ அமாவாசை. எதிர் வீடுகளில் இருந்தால் பூரண சந்திரன். உம்முடைய மகனின் வாழ்வு இருண்டு இருக்கும். காரணம் அவன் பிறந்தது கிரகண நாள். அதாலை…..”சாமபசிவம் வார்த்தைகளை ,இழுத்தார்

“அப்ப சூரிய கிரகணத்தின் விளைவு என்ன”?

“ ஓன்று மட்டும்’ எனக்கு’ நினவிருக்கு சூரிய கிரகத்தின் பின் 1958 இல் இனக்கலவரம் நடந்தது. பிறகு 1959 இல் பிரதமர் பண்டாரநாயக்கா புத்த பிக்கு ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப் பட்டார் என்று சிங்கள் ஊரில் சனங்கள் கதைப்பினம்.”

“அது எனக்குத் தெரிந்த விஷயம். என் மகனின் வருங்காலத்தைப் பற்றி சொல்லும்”

“அவனின் வருங்காலம் சூரிய கிரகணத்தில் பிறந்ததால் பிரகாசமாக இருக்காது. இப்படித் தான் ஓவர்சியர் நடராஜாவின் மகனும் சந்திர கிரகணத்தில் பிறந்தவன். அவனுக்கு மூளை தட்டிப்போட்டுது. பாவம் பெடியன். இப்ப அவனுக்கு கிட்டத் தட்ட உம்முடைய மகனின்டை வயது இருக்கும். அங்கொட மன நோய் மருத்துவ சாலையில் மூன்று வருடமாக இருக்கிறான். எதுக்கும் உமது மகனை கவனித்துக் கொள்ளும்”

“இதுக்குப் பரிகாரம்’ இல்லையா சாஸ்திரியார்”?.

“ஏன் இல்லை கொஞ்சம் செலவாகும். அவ்வளவு தான். எனக்குத் தெரிந்த உரும்பிராய் அம்மன் கோவில் ஐயர் இருக்கிறார். அவர் இந்த பிரகாரத்துக்கு சூரியன், சந்திரன், ராகுவுக்கு சாந்தி செய்வார். அவர் சாந்தி செய்வதில் கெட்டிக்கரன்.”

”எவ்ளவு செலவாகும்”?

“என்ன உமக்கு அது பெரிய தொகை இல்லை. ஒவ்வொரு கிரகத்துக்கும், சாந்திசெய்ய ஒரு கிரகத்துக்கு பத்தாயிரம் வீதம் முப்பதாயிரம் ரூபாய் மட்டில் வரும். என்ன சொல்லுறீர்??

“எண்டை மனுசியோடு கதைக்துப் போட்டு முடிவு சொல்லுறன். இந்தாரும் இரு நூறு ரூபாய்,. என் மகனின் ஜாதகம் பார்த்து சொன்னதுக்கு”.

“ அது’ சரி உமது மனைவி பற்றி கேள்விப் பட்டனான் அவ ஒரு பௌதிக பட்டதாரி ஆசிரியை என்றும்,. முற்போக்கான எண்ணங்கள் கொண்டவ என்றும். அவ இதுக்கு என்ன சொல்லுவாவோ தெரியாது” சாம்பசிவம் சொன்னார்

சின்னத்தம்பி பதில் சொல்லவில்லை.

“என்ன அத்தான் உங்களுக்கு பைத்தியமா? உங்களிடம் காசு இருக்கிறது என்று இந்த மூட நம்பிக்கையுள்ள பூஜை, சாந்தி அன்னதானம் என்று செலவு செய்ய வேண்டுமா?. அந்த பணத்தை அனாதை இல்லத்துக்கு கொடுங்கோவன். அவன் நவரத்தினத்துக்கு படித்து டாக்டர்ராக முடியாவிட்டால். நீங்கள் செய்யும் தொழிலை காட்டிக் கொடுங்கள். நீங்கள் கூட கிளார்காக இருந்து மாணிக்க கல் வியாபாரத்தில் இறங்கி இலடச்சாதிபதி ஆனீர்கள். சுண்ணாகத்திலும், கொழும்பு, இரத்தினபுரியில் மூன்று வீடுகளுக்கு சொந்தக்காரன் பூனகரியில் இருபது ஏக்கர் வயல் காணி. பளையில் பத்து ஏக்கர் தென்னம் தோட்டம் இனி என்ன வேண்டும்”? சின்னத்தம்பியின் மனைவி வைதேகி கேட்டாள்

“ அப்ப வைதேகி நீர் சாமபசிவத்தார் சொன்னதில் உண்மை இல்லை என்கிறீரா”

“ இந்த ராகு, கேது. பாம்பு சூரியனை விழுங்குது என்ற கதையேல்லாம் எல்லாம் மரபு வழி வந்த கதைகள். ராகும் கேதும் கிரகங்கள் இல்லை கேது பொதுவாக “நிழல்” கோளமாக குறிப்பிடப்படுகிறது. … வானியலில், ராகு மற்றும் கேது சூரிய மண்டலத்தில் நகரும் சூரியன் மற்றும் சந்திரன் பாதைகள் குறுக்கு புள்ளிகளை குறிக்கிறது. எனவே, ராகு மற்றும் கேது ஆகியவை முறையே வடக்கு மற்றும் தெற்கு சந்திர நாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன வானியலில் அழைக்கப் படுகின்றன. பழங்கால மேற்கத்திய ஜோதிடரைப் போல, கிரகங்கள் கிரணங்களை நல்லது கேட்டது செய்கின்றன ராகு (வடக்கு நோட்) மற்றும் கேது (தெற்கு நோட்) ஆகிய இரண்டும் ஆண்மையற்றவை. அவர்கள் “சாயா கிரகங்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது “நிழல் கிரகங்கள்” என்று பொருள்படும்.

“ அப்போ ஒரு வருஷத்துக்கு எத்தனை கிரகன்னங்கள் தோன்றும். சொல்லுமென்”

“இது நல்ல கேள்வி. எண்டை மனுஷன் இப்பத்தான் சிந்திக்க தொடங்கி இருக்கிறார். முந்தி நான் பௌதிகம் பற்றிப் பேசினால் எழும்பிப் போய் விடுவீர். இப்ப மகன் என்று வந்தவுடன் பொறுமையாக இருந்து கேட்கீறிர் ஒவ்வொரு 1000 ஆண்டுகளில் 840 பகுதியளவு (Annular) கிரகணங்கள், 791 வருடாந்திர கிரகணங்கள், 635 மொத்த கிரகணங்கள், (Total Eclipse) மற்றும் 114 கலப்பின கிரகணங்கள் (Hybrid Eclipse) ஆகியவை உள்ளன. ஒவ்வொரு வருடமும் 2-3 வகையான கிரகணம் ஏற்படும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 2 சூரிய கிரகணம் ஏற்படும். 1955 இல் ஏற்பட்ட கிரகணம் சுமார் 7.3 நிமடங்கள் நீடித்தது. அந்த நேரத்தில் நவரத்தினம் எங்களுக்கு பிறந்தான். அது அவன் குற்றமில்லை. கிமு 1375 மே மாதம் சூரிய கிரகணம் நடந்ததாக பபிலோனியன் வரலாற்றில் பதிவாகி உள்ளது.அதோடு வால் நட்சத்திரம்’, எரிகல் மழை, சூரியச் சுடர் (Solar Flare) அடிக்கடி தோன்றும். இவை’ பிரபஞ்சத்தில் நக்கும் நிகழ்ச்சிகள். அதை வைத்து ’ சிலர் பிழைக்கிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை”

“நான் சாந்தி ஒன்றும் செய்ய போவதில்லை. எனது தொழிலை நாவரத்தினதுக்கு’ காட்டிக் கொடுக்கப் போறன். நீர் என்ன சொல்லுறீர் வைதேகி.

“நல்ல முடிவு அப்படி செய்யும். பிறகு நடப்பதைப் பார்ப்போம்” என்றாள் வைதேகி…

இந்த உரையாடல் நடந்து’ மூன்று நாட்களில் தன் மகனை இடங்கொட இரத்தினக் கற்கள் தேடித் தோண்டும்’ இடத்துக்கு அழைத்துச் சென்றார்

சின்னத்தம்பி. அவரின் மகன் நவரத்தினம் வேலை செய்பவர்களோடு வேலை செய்த சில மணி நேரத்தில் குழிக்குள் வேலை’ செய்பவர்களின் கூக்குரல் கேட்டது”

“ஐயா முதல் நாளே உங்கள் மகன் ஒரு பெரிய நீல மாணிக்கக் கல்லும்,’ சிவப்பு ரூபியும் கண்டு பிடித்துவிட்டார்.” என்றார் மேற்பார்வை’ செய்தவர்.

“அப்படியா. இனி நவரத்தினத்துக்கு அவன் வாழ்க்கையில் விடிவு காலம் தான்’ என்றார் சந்தோஷத்தில் சின்னத்தம்பி.

வானில் சூழ்ந்திருந்த கரும் மேகங்கள் நீங்கின.

(யாவும் கற்பனை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *