கதையாசிரியர் தொகுப்பு: ஆனந்த் ராகவ்

18 கதைகள் கிடைத்துள்ளன.

நீச்சல் குளம்

 

 அந்தச் சிறிய அறையில் இருபது பேர் போட்ட இரைச்சலில் எனக்கு லேசாகத் தலையை வலித்தது. கமிட்டி மீட்டிங். நடப்பது எங்கள் ‘பெனின்சுலா அபார்ட்மெண்ட்ஸ்’ குடியிருப்பில். ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை, வீட்டு உரிமையாளர்களின் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு காணும் மாதாந்திர சந்திப்பு. இந்த கமிட்டி மீட்டிங் ஒன்றும் தலைபோகிற மாநகராட்சி மீட்டிங் இல்லை என்றாலும் அந்த ஆக்ரோஷமும், அடிதடியும் எங்கள் ‘பெனின்சுலா அபார்ட்மெண்ட்ஸ்’ கமிட்டி மீட்டிங்கில் தெரியும். பிரச்சனைகளைச் சரிக்கட்ட சரியான தீர்வு மட்டுமல்ல சரியான


டாக்ஸி டிரைவர்

 

 ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டுக் கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். குளிர் எங்களை விரோதத்துடன் எதிர்கொண்டது. ஆரம்பமே கோளாறு. மும்பையிலிருந்து ஃப்ராங்ஃபர்ட் வந்த எங்கள் விமானம் தாமதமாய் வர, ஃப்ராங்ஃபர்டிலிருந்து வியன்னா வரும் இணைப்பு விமானத்தைத் தவறவிட்டுவிட்டு அடுத்த விமானத்தில் நாங்கள் தாமதமாய் வந்ததால், எங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லவேண்டிய பீட்டர் க்ராஸ் இரண்டு மணிநேரக் காத்திருத்தலுக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிப் போய்விட்டார். நாங்களே ஒரு டாக்ஸி பிடித்து அவர் வீட்டுக்குப் போக வேண்டும்.


விலை

 

 மருத்துவமனை போய்விட்டு மகேஷ் அலுவலகம் வந்து சேரும்போது அலுவலகம் துவங்கி, அன்றைய பிரச்சனைகள் சேர்ந்து போய் மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. அவன் மேஜை முழுக்க நிறைந்திருந்த காகிதங்கள், தொலைபேசிப் பேச்சுகளும் கம்ப்யூட்டர் பிரிண்டர்களும் பரபரக்கும் பின்னணியில் ‘ஏம்ப்பா லேட்டு’ என்று விசாரித்தன. அதுவரை மனதில் படர்ந்திருந்த அப்பாவின் உடல்நலக் கவலை விலகி சட்டென்று அலுவலகச் சுமை ஏறிக்கொண்டது. நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்த மசாலா கம்பெனிக்குக் குறுக்குவாட்டில் சதா கரம் மசாலா வாசனை முகர்ந்துகொண்டு இயங்கிய


அகதி

 

 சுழித்துக்கொண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே நீண்டிருந்த ஈரமான மூங்கில்களின் மேல் கால் பதித்து நடந்து கடக்கும்போது எதிர்ப்புறம் கைநீட்டி அழைக்கும் அந்த அழகான இளைஞன் மேல் கண் பதிந்து கவனம் சிதற கால் லேசாகச் சறுக்குகிறது. நதியில் காத்திருக்கும் முதலைகள் இடறிவிழும் அவளை விழுங்க வாய் பிளக்கும்போது அந்த இளைஞன், “மிம்மி வெய் எழுந்திரு , போலீஸ்….” என்கிறான் பதற்றத்துடன். ததும்புகிற பெரிய மார்பகங்களோடும், சிவந்த முகத்தோடும் குனிந்து அவளை உலுக்கி எழுப்பிய மாலதியம்மாள் கண்களை நிறைத்தபடி


நடுநிசி நட்சத்திரங்கள்

 

 மேகங்களின் குறுக்கீடு இல்லா வானத்தில், வைரத் துகள்களாக இறைந்துகிடந்தன நட்சத்திரங்கள். படுத்து உறங்கும் வசதிகொண்ட, சொகுசான அந்தக் குளிர் பேருந்தின் படுக்கையில் இருந்து இயற்கையின் அந்த கேன்வாஸை நகர்ந்துகொண்டே ரசிப்பது… பரவச அனுபவம். மூன்று நாட்கள் வேலைக்குப் பிறகு உடல் சோர்வாக இருந்தாலும், நட்சத்திரச் சிதறல் வானத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு வரும் ஆர்வத்தில் தூக்கம்கூடப் பிடிக்கவில்லை. கேமராவும் கையுமாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றும் எனக்கு, நட்சத்திரங்கள் மட்டும் இல்லாவிட்டால் பயணங்கள் சலிப்புற்றுவிடும். வனவிலங்குக் காப்பகங்களிலும், அடர்ந்த


தேங்காய்

 

 ஜெர்மானிய அகராதியை வைத்துக்கொண்டு உம்லாவ்ட் இருக்கிற எழுத்துக்களை சொல்லிப்பழகிக் கொண்டிருந்த போதுதான் மனைவி, “உடைச்சிண்டு வாங்க. அரைச்சு விட்ட சாம்பார் பண்ணணும்” என்று கையில் தேங்காயோடு வந்து நின்றாள். நான் சலிப்புடனும் கவலையோடும் அவளைப் பார்த்தேன். உடை உடுத்துக்கொள்ள வேண்டுமென்பதால் சலிப்பு. உடைக்கும்போது சப்தம் வரும். அதனால் கவலை. தேங்காய் உடைக்க எதற்கு ட்ரஸ் மாத்தணும்? சப்தம்பற்றி என்ன கவலை என்று பனி படர்ந்த இந்த இமாலயப் பிரச்சனையை அசட்டையாய் அணுகுபவர்களுக்குச் சின்ன விரிவுரை. உடைக்கப்பட வேண்டிய


மடி நெருப்பு

 

 தெருவோரத்தில் தெரிந்தது அந்தப் போலீஸ் வண்டியும் ஆம்புலன்ஸும் அதைச் சுற்றி நின்ற கூட்டமும். செய்தித்தாளை எடுத்துக்கொண்டு யதேச்சையாய் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்த சிவசங்கரன் கதவைத் திறந்து வெளியே வந்து நின்றார். “மாசிலாமணி வீடு மாதிரி தெரியுதே!” எதிர்ப்பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு வருகிற ஒரு சைக்கிள்காரரைக் கேட்டார். “அந்த வூட்டு ஐயாவைவும் அம்மாவையும் யாரோ கொன்னுட்டாங்களாம். போலீஸ் கேஸு” ஒரு கால் வைத்து ஊன்றி போகிற வாக்கில் சொல்லிவிட்டுப் போனார் அவர். பனியன் வேட்டியுமாய் செருப்பில்லாமல் அரையாடையிலிருந்ததைப் பொருட்படுத்தாமல் அதிர்ச்சியில்


காத்திருப்பு…

 

 வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று போயின. தங்கதுரைக்கு தெரியும் ரேணுகாவும் அவன் மாமனாரும் தன்னைப் பற்றிதான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று. மூன்று வருடங்களாய் அவ்வப்போது எழுந்து அடங்கிப்போகிற பேச்சு. “வாங்க மாப்ள” என்றார் அவர். எழுந்து கதவருகில் இருந்த ஒற்றை இருக்கையை அவனுக்குக் காண்பித்துவிட்டு எதிர்ப்புறம் இருந்த சோஃபாவில் இடம் பெயர்ந்து அமர்ந்துகொண்டார்.


ஜனவரி 26

 

 விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ் என்ற தன் குடியிருப்பின் வாசலில் கைனடிக் ஹோண்டாவைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.. குஜராத்தின் காலடியில் பூமி நித்திரை கலைந்து ஸீஸ்மிக் உதறலில் லேசாக சோம்பல் முறிக்க அந்தப் பிரதேசம் நில நடுக்கத்தில் உதற ஆரம்பித்தது. மெலிதான அதிர்வு தொடங்கி.. அலை அலையாய் கூடி… முன்னும் பின்னும் உலுக்கும் பேயாட்டம் ஆடியது. சட


கோப்பை

 

 அப்பா உள்ளே நுழைந்தபோது உடைகள் பரப்பிக்கிடந்த கட்டிலும் மூலையில் வாய்பிளந்து கிடந்த பெட்டியும் அறையை நிறைத்திருந்தன. படுக்கையறையை ஒட்டிய குளியலறையில் தண்ணீர் இறைத்துக் கொட்டும் சப்தத்துக்கு மேலே அருணின் பாட்டு சப்தம். வெளியூரில் பொறியியற் கல்லூரியில் படிக்கும், விடுமுறை கிடைத்தால் அம்மாவின் சாப்பாட்டையும், அப்பாவின் அன்பையும், ஊர் நண்பர்கள் நட்பையும் தேடி வருகிற பிள்ளை. ஆறு மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த பிள்ளை. கனத்த மனசும், கண்ணில் பிரிவும் மிதக்க விடுமுறை முடிந்து திரும்பிப் போகிற ஒரே