கதையாசிரியர் தொகுப்பு: ஆத்மார்த்தி

13 கதைகள் கிடைத்துள்ளன.

கன்னித்தீவும் கவித கோபாலும் – கதை

 

 ராஜகோபால் தன் வாழ்க்கையை எண்ணி வியந்துகொண்டு இருந்தான். அவனை ‘ராஜகோபால்’ என்று அழைப்பதைவிட ‘கவித கோபால்’ என்று அழைப்பதுதான் சரி. ஒரு மனிதன் தன் அன்றாடங்கள் அனைத்தையும் கவிதைகளாக்கிக்கொள்வது, ‘என்ன இசம்’ என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் கோபாலின் திறமை. அவன் ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதிதான். ஆனால், அவனுக்குள் இருப்பவனோ ஒரு மகாகவி! காலையில் எழுந்ததில் இருந்து படுக்கையில் விழுகிற வரைக்கும் கோபாலால் குறைந்தது 500 கவிதைகள் எழுதிவிட முடியும். இந்த உலகத்தின் கவிதை பற்றிய


வினோதனின் காதல்

 

 ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் மிக பிரம்மாண்டமானதாயிருந்தது. அந்த நகரத்தின் அடையாளமே அந்தக் கட்டிடம் தான்.அதன் பெயர் வியா. அந்த நகரத்திற்கு அன்றாடம் வருகிறவர்களில் பெருமளவினர் அந்த வியா என்னும் வியாபாரஸ்தலத்துக்கு வருகை புரிவதற்குத்தான் வருகின்றனர் என்பது திண்ணம்.அதன் உரிமையாளன் பேர் வினோதன்.அவன் தன் வினோதமானபலசெய்கைகளுக்காகஉலகப்புகழ்அடைந்திருந்தான்.என்றாலும் கூடஅவன் குறித்து உலாவிய கதைகளைத் தாண்டிலும் வியா-வின் புகழ் நாளுக்கு நாள் கூடியபடி இருந்ததே ஒழிய குறையவில்லை. அதன் முதற்தளத்தில் இந்த உலகத்தில் புழக்கத்தில் இருக்கிற அத்தனை பொருட்களும்


சந்தானத்தின் மாடி வீடு

 

 புருஷோத்தமன் தெருவில் சந்தானத் தின் வீடு எது என்று கேட்டால், உடனே கை நீட்டும் அளவுக்குப் பிரசித்தம். காரணம், சந்தானத்தின் கேரக்டர். தன்னுடைய வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சந்தானம் முன்வைக்கிற கண்டிஷன்களாலேயே, சென்னையில் பிரபலமாகி இருந்தார். சந்தானம் வாடகைக்கு விடுவதாக இருப்பது அவர் குடியிருக்கும் வீட்டின் மாடி போர்ஷன். சந்தானம் எப்போதுமே நாளையைப் பற்றி சிந்திக்கிறவர் இல்லை. அதற்கு மறுநாளை மட்டுமே சிந்திக்கிறவர். ஊரே சாலையில் பயணித்தால், சந்தானம் மட்டும் இருப்புப் பாதையில் பயணிப்பார். இதில் என்ன


1/2 நண்பன்

 

 “வாங்க சார்…உங்களுக்காகத் தான் காத்துக்கிட்டு இருந்தேன்.இதை சலூனா பாக்காதீங்க சார்.இதான் எனக்கு ஹைட் அவுட்டே.உக்காருங்க…உக்காருங்க…எப்டி ஆரம்பிக்கலாம்.” “தேவராஜனை எங்கூட தங்குறதுக்கு அனுமதிச்சது மட்டும் தான் என் வாழ்க்கையோட ப்ளெண்டர் மிஸ்டேக் சார்.தேவ் என்னோடு கல்லூரியில் படிச்சவன்.சத்தியமா சொல்றேன்..சொந்த ஊர்க்காரன்,சொந்தக்காரன், தெரிஞ்சவன் புதுசா பழகுனவன் இப்பிடி எந்த ரூபத்துல யார் வந்திருந்தாலும் ஒரு பிரச்சினையுமில்ல எனக்கு.இந்த ஒருத்தன் என்னைப் படுத்துன பாடு இருக்கே…நான் ரொம்ப பாவம் ஸார்.நான் தங்கியிருக்குறது ஒரு வீட்டோட மாடி போர்ஷன்.கீழே வீட்டுக்காரர் குடும்பம் இருக்காங்க.எனக்குத்


டைரி வாசகம் – நம்பிக்கையே வாழ்க்கை

 

 எனது அறை கலவரபூமியாய் காட்சியளித்தது. ஒரு டைரியை அறை முழுக்க தேடிக்கொண்டே இருக்கிறேன். பொங்கலுக்காக ஒரு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறேன். ஆனால் விடுமுறையையும் ஊருக்கு வந்ததையும் கொண்டாட முடியாதவனாய் டைரியைத் தேடுகிறேன். தேடுகிறேன். காலையிலிருந்து, இன்னமும் அகப்பட்ட கதையாயில்லை. அது ஒரு பச்சை நிற டைரி. மெத் மெத்தென்று இருக்கும். என்னுடன் பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்த செல்வம் பயல் எனக்கு பரிசளித்தான். இந்த வருடமில்லை. மூணு அல்லது நாலு வருடமிருக்கலாம். இப்போது அந்த டைரியின்


தொட்டிமீன்கள்

 

 என்னைப் பின் தொடர்வது தான் லட்சியமெனில் முயன்று பார்க்கலாம். நான் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதை விமர்சிக்கப் போவதில்லை என்றால் மட்டும். அறையின் மூலையிலிருந்த எழுத்து மேசையில் கவிழ்த்து வைக்கப்பட்ட புத்தகங்களின் இடையிலிருந்த செல்பேசி அலறியது. படுக்கையிலிருந்து எழுந்து நகரும் பொழுது அவிழ்ந்திருந்த தனது கைலியை சரி செய்து கொண்டு மேசையை அடையும் பொழுது சரியாக அழைப்பொலி துண்டிக்கப்பட்டிருந்தது. திலீபன் செல்பேசியை எடுத்து தன்னை அவ்வளவு அதிகாலையில் அழைத்தது யாரெனப் பார்த்தான். மனோகரி. அவளைத் திரும்ப அழைப்பதை


இரண்டு செய்திகள் – ஒரு தொடர்புமில்லை

 

 செய்தித்தாளை எப்பொழுதும் வாசிக்கிறவர்களுக்கு இந்த கதை வேறொரு கோணத்தில் முன்பே அறிமுகமாயிருக்க கூடும்.போன வருடமும் இந்த வருடமும் நாளிதழ்களில் வெளிவந்த இரண்டு செய்திகள்,ஒன்றுக்கொன்று எந்த விதத்திலும் சம்மந்தமற்றவை. ஆனால் இந்த கதை அந்த இரண்டு செய்திகளைப் பற்றியது என்பதால் அந்தச் செய்திகள் இதனுள் சம்மந்த படுகின்றன.அவை இரண்டையும் நாம் தேவைப்படும் பொழுது பார்ப்போம். பலூன் காரன் வரிசையாய் சிலிண்டரிலிருந்து காற்றை எடுத்து பலூன்களுக்குள் அனுப்பிக்கொண்டிருக்கும்,படகு மறைவில் எந்த கோணத்திலிருந்தும் எவர் பார்த்தாலும் தம்மை அடையாளம் கண்டு கொண்டு


சின்னான்

 

 சின்னான் ஊர் மந்தையை அடைந்தபோது பொழுது சாயத் தொடங்கி இருந்தது. அந்த நேரம் தான் பஸ் நிறுத்தத்துக்கு எதிரிலிருக்கும் மஹபூப் பாஷா டீ கடையின் உரிமையாளரும் அந்த ஊரின் ஏக போக அறுசுவை அரசுமான ரகீம் பாய் சூடான பஜ்ஜி வகைகளை எண்ணையிலிருந்து விடுவித்து அதற்கென வருடக்கணக்கில் இருக்கும் கண்ணாடி பெட்டியினுள் கொட்டத் தொடங்கினார். அதை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்க சின்னானுக்கு பிடிக்கும். அவர் பஜ்ஜியை எடுத்து கொட்டுவதை தூண்டிலில் மீன்களைப் பிடித்து தொட்டியில் மாற்றுவதை போல


சித்திரக்காரன் கதை

 

 சற்றேறக்குறைய அந்த ஊரில் வசிக்கும் அனைவரையும் நனைத்துவிட்டு அப்போது தான் அடங்கியிருந்தது மழை. அந்த மழைக்கு அதுவரைக்கும் ஒதுங்கியிருந்த நகரவாசிகள் மீண்டும் நடைபோடத் துவங்கியிருந்தனர். எனக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த ஒரு முதியவர் பின்னால் பார்க்காமலேயே தனது குடையை மடக்க முற்பட “பார்த்து… பின்னால் ஆள் வருவது கவனம்…” என்றேன். அவர் திரும்பி என்னைப் பார்த்து “வயசாயிடிச்சி தம்பி…. கவனம் சிதறுதுப்பா மன்னித்துக்கொள்” என்றார். அந்த நேரத்தில் என் காலடித்தடங்களை அவரை முன்னே போகச்செய்யும் நோக்கில் மெதுவாக்கினேன்.


டுபாக்கூர் ராஜாவும் டயமண்ட் ராணியும்

 

 சென்னையில் போன வருடம் பெய்த அடைமழையின் ஞாபகங்கள் மற்றவர்களிடமிருந்து எனக்கு முற்றிலுமாக வேறுபட்டது. அதுவரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த அறையை காலி செய்து விட்டு வடபழனி கோயில் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வீட்டில் இருந்த முத்தண்ணன் உடன் நான் போய் சேர்ந்திருந்தேன். முத்தண்ணன் என் வருகையினை ரொம்பவும் விரும்பவே செய்தார் என்பது அவர் என் மீது காட்டிய பாசமான அணுகுமுறையிலேயே தெரிந்தது. மதுரையில் முதலில் பரிச்சயமான பொழுது அவர் காட்டிய அதே அக்கறை,