கதையாசிரியர் தொகுப்பு: ஆதவன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்

 

 கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் – ஒரே கணம் – பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தான். கைலாசம் தம்ளரை மறுபடி மேஜை மேல் வைத்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். நீலவானம், ஓரிரு மேகங்கள்,


சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்

 

 ‘சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்’ தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனத்தில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது. வயது இருபத்திரண்டு; பெண் குழந்தை. வீட்டில் வரன் பார்க்கத் தொடங்கி விட்டிருந்தார்கள். ஜாதகம், பூர்வீகம், குலம் கோத்திரம், பதவி, சம்பளம் இத்யாதி இந்த முயற்சிகளும் அதன் பின்னிருந்த பரிவும் கவலையும் அவளுக்கு ஒருவிதத்தில் பிடித்துத்தான் இருந்தது. என்றாலும், இது சம்பந்தமாக அவள் இளம் மனத்திலும் சில அபிப்பிராயங்களும் கொள்கைகளும் இருக்கக்