கதையாசிரியர் தொகுப்பு: அவனி அரவிந்தன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

ரயிலென்னும் பெருவிருட்சம்

 

 அவனுக்கு வீடு செங்கல்பட்டுப் பக்கம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பக்கத்து மில்லில் கூலி வேலை. கூடப் பிறந்தவர்கள் இல்லை. அவனுக்கு முன் ஒரு பையன் பிறந்து ஆறு நாளில் ஏதோ பெயர் தெரியாத காய்ச்சல் வந்து இறந்ததாக ஒரு சொந்தக்கார அக்கா சொல்லியிருக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் தண்டவாள பாதைக்கு அருகில் அவர்களுக்கு சொந்தமாகச் சிறிய வீடு இருந்தது. அவனுக்கு ஆறு வயது ஆகும் வரை தான் அங்கு இருந்தார்கள். அப்போதெல்லாம் அவன் ஆயா வாசலிலேயே உட்கார்ந்திருப்பாள். அப்பாவும் அம்மாவும்


ஒரு பகல் ஒரு இரவு

 

 ஒரு பகல். சுண்டு விரல் கனமே ஆன கம்பிகள் அவன் அறையின் சன்னலுக்கு வாய்க்கப் பெற்றிருந்தன. துருப்பிடித்த ஹைதர் அலி காலத்துக் கம்பிகளாக இருந்தாலும் காலையில் சூரியன் துணிச்சலுடன் உள்ளே வந்து வணக்கம் சொல்லியது. அது வரும் போது நிச்சயமாக அவன் கண்விழித்திருக்கவில்லை. வேறு வழியில்லை. அவன் வணக்கத்திற்கு கதிரவன் காத்திருக்கத் தான் வேணும். எழுந்தவுடன் கண்ணைக் கசக்கிவிட்டு வணக்கம் சொல்வதற்கு யத்தனித்தான். தூக்கக் கலக்கத்தில் மங்கலாகத் தெரியும் சன்னலுக்கு நேரெதிர் இருக்கும் சுவற்றைப் பார்த்தான். பழைய