கதையாசிரியர் தொகுப்பு: அல்லிநகரம் தாமோதரன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

நீர்க்குமிழி!

 

 தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும், அதிருப்தியுமே உண்டாகியிருந்தது சின்ராசுக்கு. கோபத்தில் அள்ளிப் போட்டவையில் கையிலிருந்து நழுவி விழுந்த ஃபேன் காற்றினால், மெதுவாக அசைந்தபடியிருந்த அந்த ஃபோட்டோவை எடுத்து, வைத்த கண் மாறாமல் பார்வையில் மேய்ந்த அவர், சட்டென்று முகத்தைத் திருப்பி, தரகரிடம் கேட்டார். “யோவ்… பலராமா.. யாருய்யா இந்தப்புள்ள? ஏஞ் சின்ன மகன் மாடசாமிக்கு ரொம்ப பொருத்தமாயிருப்பா போலிருக்கே. ஜீன்ஸ் பேண்ட்


ஒத்தக் கம்மல் காது

 

 “ஒத்தக் கம்மல் கோயிந்தனோடக் காத, அவன் குடிபோதை யில சாவடியில விழுந்து கெடந்தப்ப எவனோ ராத்திரியோட ராத்திரியா அறுத்துட்டுப் போயிட்டானாம்! காத அறுத்துட்டுப் போனவனக் கண்டுபுடிச்சு கசாப்பு போட்ற கொல வெறில அவெஞ் சொந்தக்காரய்ங்க மீசைய முறுக்கிக்கிட்டு இருக்காங்களாம். அறுத்தது யாருன்னுட்டு இன்னும் கண்டுபுடிக்க முடியலையாம்…” சம்பவம் நடந்து முடிந்து நான்கைந்து நாட்களாகியும்கூட ஊர்க்காரர்கள் வாய் முழுக்க இந்த வார்த்தைகளையே முணு முணுத்துக் கொண்டிருந்தன. கடைவீதி, சலூன்கடை, கிராமத்துக்குப் பொதுவான சாவடி என எல்லா இடங்களிலும் இதே