கதையாசிரியர் தொகுப்பு: அலெக்ஸ் பாண்டியன்

1 கதை கிடைத்துள்ளன.

ஜெகனின் வீடு!

 

 அது ஒரு ரயில்வண்டி அமைப்பு கொண்ட குடியிருப்பு காலனி. மாரிமுத்துப்பிள்ளை ஸ்டோர் என்றால் ஊரில் பலருக்கும் தெரியும். அதுவும் அந்த விபத்துக்கு பின்னால் ஊரில் ஏறக்குறைய எல்லாருக்குமே தெரிந்துவிட்டது. மாரிமுத்துபிள்ளை ஸ்டோரின் மூன்றாவது எண் வீடுதான் ஜெகனுடையது. நீண்ட நாட்களுக்கு பிறகு.. அதாவது சில மாதங்கள் ஆகியிருக்கும். இப்போதுதான் வீட்டுக்கு போகிறான். திருப்பஞ்சலி முடக்கில் பஸ் இறங்கி, வானத்தையே சதா பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சாக்கடையை குதித்துத் தாண்டி, தண்டபாணி தாத்தா கடையை கடக்கும்போதுதான், அவனுக்கு நியாபகமே வந்தது…