கதையாசிரியர் தொகுப்பு: அருண் சரண்யா

7 கதைகள் கிடைத்துள்ளன.

பட்சி

 

 பிறர் எழுதுவதை எட்டிப் பார்ப்பது அநாகரீகம். என்றாலும் ரயில் பயணத்தின்போது அருகில் இருக்கும் ஒருவர் சுற்றுப்புறத்தை மறந்து எதையோ எழுதும்போது, அதுவும் ‘பட்சி’ என்ற தலைப்பிட்டு அதை எழுதும்போது – ஒரு சிறு ஆர்வம் ஏற்படத்தான் செய்தது. ஒரு வழியாக அவர் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலைநிமிர்ந்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ‘‘‘ஒரு மணி நேரமா எதையோ மிகுந்த ஈடுபாடோடு எழுதறீங்க. கதையா? கட்டுரையா?’’ என்றபோது அவர் முகத்தில் ஒரு சிறு மலர்ச்சி உண்டானது. ‘‘கதைதான்…’’ என்றார். தொடர்ந்து


கலவரக் குழி

 

 ரயில் துரித கதியில் பயணம் செய்து கொண்டிருந்தது. விந்தியாவின் மனதில் ஒரு சின்ன நெருடல் தோன்றி அது பெருகிக்கொண்டே வந்தது. மனதில் ஓர் அமைதியின்மை தோன்றியது. குழந்தையை அவனிடம் கொடுத்திருக்கக் கூடாதோ? எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் ‘‘ஏம்மா, குழந்தையைக் கொடுத்தனுப்பினீங்களே… அவர் உங்களுக்குத் தெரிஞ்சவரா?’’ என்று கேட்டார். ‘‘இல்லை அங்கிள்…’’ என்று விந்தியா பதிலளிக்க அவர் முகத்தில் ஒரு சிறிய எரிச்சல் தோன்றியது. ‘‘இப்படி அஜாக்கிரதையா இருக்கலாமா? இந்தக் காலத்திலே யாரையும் நம்பிடக் கூடாது…’’ என்று அவர்


யாரையும் பகைக்காமல்…

 

 வசந்தனுக்குப் பாடங்கள் பிடிக்கும். விளையாடப் பிடிக்கும். வீட்டுவேலை செய்யப் பிடிக்கும். அவனுக்குப் பிடிக்காதது ஒன்றே ஒன்றுதான், யாரிடமும் பகைமை கொள்வது. தன்னைப் பற்றி ஒரு முறை ஆசிரியரிடம் ராமு கோள் மூட்டினான் என்பதை அறிந்தபோது “அவ்வளவுதானே… சொல்லிட்டுப் போகட்டும்’’ என்றான் சிரித்துக்கொண்டே. இதற்குப் பிறகும் ராமுவிடம் நட்புடனேயே இருந்தான். அவ்வளவு ஏன்? ஒரு நாள் அவன் பேனாவை பாஸ்கர் திருடியதைப் பார்த்தபோதுகூட “என்னடா, நண்பனோடதுதானே என்று உரிமையாக எடுக்கிறாயா? தப்பில்லை. இனிமேல் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடு”


மோசமான ஆமை!

 

 சோமு அந்த ஊருக்குப் புதிது. அவன் அப்பாவுக்கு போன வாரம்தான் வேலை மாற்றலாகி இருந்தது. அவன் தெருவில் நடந்துகொண்டு இருந்தபோது நாலைந்து சிறுவர்கள் பக்கத்தில் வந்துகொண்டு இருந்தார்கள். புதிய பள்ளியில்நேற்று சேர்ந்தபோது அவர்களை அங்கே பார்த்திருந்தான். சோமுவைப் பார்த்த சிறுவர்கள் நட்பாகச் சிரித்தார்கள். பிறகு சேர்ந்து நடந்தார்கள். ‘‘ சோமு, போன வாரம் நம்ம ஸ்கூலில்லே கலைவிழா நடந்தது தெரியுமா? அதிலே ‘புத்திசாலி’னு ஒரு நாடகம் போட்டாங்க’’ அதில வரும் ஒரு காட்சியை சொன்னா நீயும் சிரிப்பே’’


அழகிய கண்ணே..!

 

 எட்டாம் வகுப்பு படிக்கும் கண்ணனுக்கு மிகவும் அழகான, பெரிதான, துறுதுறுவென்ற கண்கள். அவன் கண்களைப் பார்த்து, அம்மா கோமதியிடம் சொல்லி ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது. அன்று வீட்டுக்குள் வரும்போதே அப்பாவின் முகம் பரபரப்புடன் இருந்தது. ‘’அப்பா’’ என்றபடி உள்ளே இருந்து ஓடி வந்தான் கண்ணன். அவன் தன் அப்பாவிடம் பேசுவதற்குள் வீட்டில் போன் ஒலித்தது. ‘‘சாரி சார். தலைவலி அதிகமாக இருந்தது. அதனால்தான் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிட்டேன். ஆபீஸ் வேலையை வீட்டுக்கு எடுத்து வந்திருக்கேன். கண் விழித்தாவது


குறை ஒன்றும் இல்லை..!

 

 தங்கவயல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார் ஒரு பெரியவர். மக்களை உற்சாகப் படுத்தும் வகையில் பேசுவார். கோயில் மண்டபத்தில் அவரது பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நேரத்தில் பேசத் -தொடங்கினார் -பெரியவர். அங்கு வந்திருந்த சிறுவர், சிறுமிகள்கூட அவரது பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள். கொஞ்ச நேரம் பக்திக் கதைகளை கூறியவர், பிறகு மைதாஸ் கதையைச் சொன்னார். ‘‘தொட்ட-தல்லாம் -பொன்னாகும் வரத்தைப் பெற்றான் மைதாஸ். அவன் மகளே தங்கச்சிலை ஆனவுடன் மனம் உடைந்தான். பேராசை கூடாது என்பதை இந்தக் கதை


போரில் பயப்படுபவர்களுக்கு…

 

 அன்பழகன் பாடங்களில் கெட்டி. வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்க் எடுத்து வருபவன். இதற்காக ஒவ்வொரு வருடமும் அவனுக்கு கோப்பை, சான்றிதழ் கிடைக்கும். அவற்றை எல்லாம் பெருமையாக வீட்டு ஷோகேஸில் வைத்திருந்தான் அன்பழகன். ஒருமுறை அவன் வகுப்பு ஆசிரியர் ‘‘ஜெர்மனியிலிருந்து சில கல்வி அறிஞர்கள் சென்னைக்கு வந்திருக்காங்க. சில பள்ளிகளிலிருந்து மாணவர்களை அழைத்து அவங்களோட பேசப் போறாங்களாம். நம்ம பள்ளியிலே இருந்து அன்பழகனையும் இன்னொரு மாணவனையும் அனுப்புவதாக இருக்கிறோம்’’என்றார். அன்பழகனுக்கு நியாயமான கர்வம் ஏற்பட்டது. அன்றிரவு தன் அம்மாவிடம்