கதையாசிரியர் தொகுப்பு: அய்யப்ப மாதவன்

5 கதைகள் கிடைத்துள்ளன.

வள்ளல்

 

 முருகனுக்கும் சோமுவுக்கும் சேமிக்கும் பழக்கம் வரவேண்டும் என்பதற்காக ஆளுக்கொரு உண்டியலை வாங்கிக் கொடுத்திருந்தார் அப்பா. தனக்குக் கிடைக்கும் காசை தம்பி சோமு உண்டியலில் சேமித்தான். முருகனோ கோலிகுண்டுகள் வாங்கி, தினமும் பள்ளி விட்டதும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடி வந்தான். வண்ண வண்ண கோலி குண்டுகளை வீட்டுப் பரணில் ஒரு கொட்டானில் போட்டு வைத்திருந்தான் முருகன். தேடித்தேடி சின்னதும் பெரிதுமாய் நிறைய சேர்த்திருந்தான். அப்பா கந்தன், கூலி வேலை செய்பவர். இரண்டு பையன்களையும் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தார். முருகனுக்கும்


நீச்சல்

 

 பால்காரர் முருகனிடம் எருமை ஒன்றும் நான்கு பசு மாடுகளும் இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் பாலை விற்றுவந்தார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து தொழுவத்தைச் சுத்தம் செய்வார். மாடு கன்றுகள் குடிப்பதற்குத் தண்ணீரும், சாப்பிட வைக்கோலும் வைப்பார். பாலைக் கறந்தவுடன் குடத்தில் எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பார். முருகனின் மனைவி வள்ளியும் அதிகாலையிலிருந்தே தன் கணவனுக்கு உதவி செய்வாள். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் முருகன். அதனால் கிராமத்து மக்கள்


விபத்து!

 

 விரைவாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் முருகன். இன்னும் பத்து நிமிஷத்தில் பள்ளியில் இருக்கவேண்டும். சாலையில் நெரிசலாக இருந்தது. முருகனோ கிடைத்த இடைவெளிகளில் புகுந்து வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருந்தான். திடீரென்று போக்குவரத்து தடைப்பட்டுவிட்டது.முருகன் நெரிசல் தொடங்கிய இடத்திற்கு வந்துவிட்டான். அங்கே இருபது வயது மதிக்கதக்க ஒருவன் விபத்தில் அடிபட்டுக் கிடந்தான். சுற்றி இருந்த கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. டிராஃபிக் போலீசையும் காணவில்லை. ‘என்ன மனிதர்கள் இவர்கள்? யாரும் இவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச்செல்லாமல் இருக்கிறார்கள்’ என்று வேதனையோடு நினைத்துக்கொண்டிருந்தான். ‘‘இவன்


ஓணான் வேட்டை

 

 சோமுவும் முருகனும் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்தார்கள். முருகன் ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகளைப் பார்த்தபடி வந்தான். ஒரு ஓணான் முட்செடியின் கிளையில் மண்டையை ஆட்டிக்கொண்டு நின்றது. ‘‘முருகா, ஓணான் பிடிப்போமாடா?’’ என்று ஆவலுடன் கேட்டான். ‘‘சரிடா, போய் கடையில பத்து பைசாவுக்கு நரம்பு வாங்கிட்டு வா, நான் ஓணானைப் பார்த்துக்கிறேன்’’ என்று முருகனை அனுப்பினான். ஒரு நீளமான குச்சியை எடுத்து வைத்துக்கொண்டான். ஓணான் சற்று நகர்ந்தது. ஓடி விடுமோ என்று பயந்தான். அது கண்களை உருட்டி உருட்டி


பச்சைக் கிளியும் கருப்பு காகமும்

 

 ‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது. ஒரு நாள் அந்த வழியே வந்த ஒரு காகம், அந்த மரத்தைப் பார்த்தது.‘இவ்வளவு பசுமையான மரமா?’ என்று ஆச்சர்யப்பட்டது. அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்தது. இனிமேல் இங்கேயே குடியேறிவிட வேண் டியதுதான் என்று முடிவுசெய்தது. தன் பழைய கூட்டைக் கலைத்துவிட்டு, இந்த மரத்தில் கூடு கட்டியது. அப்போது கிளி எங்கோ வெளியே போயிருந்தது. திரும்பி வந்த கிளி, காக்கையின் கூட்டைப்பார்த்து,