கதையாசிரியர் தொகுப்பு: அபிராமி துர்காதாஸ்

1 கதை கிடைத்துள்ளன.

என் ராஜா

 

 ‘அம்மா’ என்று கூப்பிட்டவாறு தயங்கியபடி வந்தான் ராஜா. இரும்பு வாணலியிலிருந்த வடை களைத் திருப்பியவாறே மகனை நோக்கினாள் ஜானகி அம்மாள். சதா அடுப்படியில் வேலை செய்து ஒடுங்கிய அவளின் உருவமும், விதவைக் கோலமும் ராஜாவின் மனத்தை வருத்தின. ”நாளைக்கு எங்க ஸ்கூல்ல கண்காட்சிக்கு அழைத்துக்கொண்டு போறாங்கம்மா! நானும் போகட்டுமா?” ”நமக்கு எதுக்குடா அதெல்லாம்..?” ”காசு கூட வேண்டாம்மா. நடந்துதாம்மா போகப்போறோம்.” ”சரி, சரி… நாளைக்குதானே?” அம்மா அடுப்பைக் கவனிக்க ஆரம்பித்தாள். கண்காட்சியில் ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொள்வதாக