கதையாசிரியர் தொகுப்பு: அபிமானி

4 கதைகள் கிடைத்துள்ளன.

வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்

 

 “”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கரகரப்புடன் ஒலித்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் மூன்று இளவட்ட திருநங்கைகள் நின்றிருந்தது தெரிந்தது. சிட்டுக்குருவிகளைப் போன்ற துள்ளலான உடல்கட்டுகள். ஆனால் அளவுக்கு மீறிய அழுத்தமான ஒப்பனைகள். எனக்கும் குழப்பமாக இருந்தது. யார் என்னை அழைத்திருப்பார்கள்? கண்டுகொள்ள முடியாமல் பேந்த பேந்த விழித்தேன். மூவரில் முன்னுக்கு நின்றிருந்த “பெண்தான்’ என்னைப் பார்த்து தீவிரமாக முறுவலித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவளே வாய் திறந்து என்னிடம் வார்த்தையாடவும் துவங்கினாள். “”என்னையத்


காட்சிப் பொம்மைகள்

 

 காலைத் தினசரியை ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் அவசரமாய் வந்து நின்ற வேதவல்லி அனுசரணையாய் சொன்னாள்: “”இன்னிக்கு மதியம் மாப்பிள்ள வீட்டுக்காரங்க வர்றாங்கம்மா… “நீட்’டா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு இருந்துக்க”. வாசிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டாள் நந்தினி. அவளின் இதயமும் தற்காலிகமாக சுவாசத்தை நிறுத்தியிருந்தது. பார்வை மட்டும் தொடர்ந்து தெறிப்பாய் நின்றது. அம்மாவை நேர்கோட்டில் பார்த்தாள். மனசுக்குள் குடம் உடைந்தது போலிருந்தது அவளுக்கு. “கவலை’ என்கிற குடம். வார்த்தைகள் வெள்ளமாக வெளிவந்து விழுந்தன. வெள்ளத்தின் வேகத்தில் கோபம் நுரைவிட்டுக் கொப்பளித்தது.


திசை அறிந்த கல்

 

 இப்போது இரண்டு நாட்களாகத்தான் அந்தப் பூனையைக் காணவில்லை. அது இல்லாதிருந்த இரவு வெறுமையாய்த் தெரிந்தது. மின்சாரம் தடைப்படுகிற குத்திருட்டில் கூட தன் கண்கள் பளிச்சிட நடு வீட்டுக்குள் வந்து நின்று கூர்மையாக விழித்துக் கொண்டிருக்கும் அது. அட்டைக் கறுப்பில் பளபளவென அதன் தேகம் மின்னினாலும் அதன் கண்கள் மட்டும் சாம்பலைப் பூசிவிட்டது மாதிரி மிதமான கறுப்பில் பளீரென்று துலங்கும். சில நேரங்களில் அவர்கள் பயந்திருக்கிறார்கள். “இதென்னடா, நடு வீட்டுக்குள் வந்து நின்று பழியாய் முறைத்துப் பார்த்து ஆட்களைப்


மனிதர்கள்

 

 சென்னை எழும்பூரிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட வேண்டிய நெல்லை எக்ஸ்பிரஸ் புறப்படுவதற்குத் தயாராய் இரைந்து கொண்டு நின்றிருந்தது. கால தாமதமாக ஓடிவந்து பயணிகள் சிலர் தங்கள் பெட்டிகளைப் பார்த்து அவசரம் அவசரமாக ஏறிக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்தவர்களை வழியனுப்ப வந்திருந்த உறவுக்காரர்களும் நண்பர்களும் நடைபாதையை நிறைத்துக் கொண்டு நின்று அவசரமாய் ஓடி வந்து ஏற முயற்சித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கு இடைஞ்சலைத் தந்தனர். “ப்ளீஸ்… கொஞ்சம் வழிவிடுங்க… வழி விடுங்க’ என்று கெஞ்சிக் கெரவி முன்னேறிய