கதையாசிரியர் தொகுப்பு: அந்தியூர் முருகேசன்

3 கதைகள் கிடைத்துள்ளன.

ஊக்கம்

 

 வழக்கம் போல் அன்று காலை ஆறரை மணிக்கு அன்றைய தினசரி நாளிதழ் பாலன் வீட்டின் காரைத் திண்ணையில் கிடந்தது. கிழக்குப் பார்த்த பழைய ஓட்டு வீடு அது. திண்ணைக்கு கீழ் மண் வாசல். லேசான காலை நேர இளங்குளிர் காரணமாக சிலுசிலுவென குளிர்ச்சிதட்டி திண்ணைக்கு கீழ் வாசலில் மேற்கு நோக்கி இருந்த நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழை விரித்து படிக்கத் துவங்கினான் பாலன். வீட்டின் எதிரில் இருந்த பச்சை செடிகளின் இலைகளில் பனித்துளிகள் காலை இளவெயிலில் மினுமினுத்தது.


ஒரே ஒரு அழைப்பு.!

 

 இரு வாரங்களாக ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடியற்காலையில் குளிர் நடுக்கியது. குளிரில் நடுங்கியபடியே தினசரி தான் மேற்கொள்ளும் பத்திரிக்கை விநியோகப் பணிக்காக முரளி தன் இருசக்கர வாகனத்தில் தன் ஊருக்கு அருகில் உள்ள டவுனுக்கு புறப்பட்டான். முரளி, வெளியுலம் பற்றி தெரிந்த ஒரு விவரமான கூலித்தொழிலாளி. தன் வேலையின் ஒரு பகுதியாக தினசரி காலையில் இருபதுபேருக்கு தமிழ் நாளிதழ்களை விநியோகம் செய்வது அவனது வழக்கமான பணியாகும். டவுனுக்கு சென்று பத்திரிக்கை ஏஜென்டிடம் கேட்டபோது தான்


தொழிலாளி வீட்டு தீபாவளி.!

 

 அன்று செவ்வாய்க்கிழமை மாலை நாலுமணி இருக்கும்! ரங்கன், அவசரமாய் டவுனுக்கு புறப்பட சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு, தன் பழைய ஓட்டு வில்லை வீட்டில் வெளித் திண்ணையில் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட கண்ணாடியை பார்த்து தலையை சீவினான். “ஏங்க, ரேசன் கடையில அரிசி போடராங்கலாம், வாங்கிட்டு அப்படியே இந்த கோதுமையை கொஞ்சம் அரைச்சுட்டு வந்தரலாமே.!” “நாளைக்கு தீபாவளி பசங்களுக்கு அரிசி ஊரவெச்சு ஆட்டி இட்லி தோசை இல்லைனா பூரிகீது சுட்டுக்கொடுக்கலாம்.!” என்று.. திண்ணைமேல் அமர்ந்து ஊசியில் துணிப்பூ கோர்த்துக்கொண்டு