கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

257 கதைகள் கிடைத்துள்ளன.

நகைத் திருடி

 

 (2012 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டிங் டாங்…டிங் டாங்… காலிங் பெல் ஒலித்தது. கேரோலின் போய்க் கதவைத் திறந்து, வாசலில் நின்ற வனிதாவைப் பார்த்து, “அக்கா வாங்க. சுகமாய் இருக்கிறீங்களா? உள்ளே வாங்க, சோபாவில் வந்து உட்காருங்க” என்று அன்போடுவரவேற்றாள் கேரோலின். அதற்கு வனிதா, “அக்கா, நீங்க சௌக்கியமா? வருகிற வழியில் உங்கள் பையன்கள் இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.” நேற்று கோயிலில் நீங்க முன்


நாகலோகக் காதல்!

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘அர்ஜூனா’ என்று அன்பர்க அழைத்தார் கிருஷ்ண பகவான். ‘ஸ்வாமி’ என்று மகிழ்வுடன் வந்தான் விஜயன். ‘பார்த்திபா! நீ கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று மாயவன் கேட்டார் புன்னகை புரிந்த வண்ணம். காண்டீபனுக்கு முதலில் ஐயம் எழுந்தது. ஒரு வேளை மாதவன் தன்னைக் கேலி செய்கிறாரோ என எண்ணினான். திக்விஜயம் செய்து அற்புத அழகிகளை மனைவியராகப் பெற்று இன்ப வாழ்வு வாழ்பவன் அவன். அவனிடம்


அகலிகா! நான் உன்னைக் காதலிக்கிறேன்…

 

 கௌதம முனிவன் நிஷ்டை கலைந்து கண்ணை விழித்தான். அந்த ஆரண்யம் மிக அடர்த்தியாக இருந்தது. எதிரில் அவனைச்சுற்றி மரங்கள் செடிகள். கொடிகள். மெல்ல யோசித்தான். தான் எங்கே இருக்கிறோம் தண்டகாரண்யம்? அல்லது மேருமலை? புரியவில்லை. கொஞ்சம் யோசித்தான். நீண்டகால தவத்தால் அவனுக்கு சக்தி பெருகி இருந்தது. தவவலிமை கூடியிருந்தது. ஆனால் அதுவெல்லாம் பிரயோக படுத்த அவன் மனம் ஒரு படவில்லை. தான் எங்கு இருக்கிறோம். எங்கே. எங்கே. எங்கே. மெல்ல யோசித்தான். நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக


அன்பின் வழியது உயிர்நிலை

 

 1 தமிழகத்திலிருந்து வந்த நாவாயிலிருந்து இறங்கிய வேலனிடத்தில் நசரேயனாகிய இயேசுவைக் காணும் ஆவல் அதிகமாய் இருந்தது. இயேசுவைக் குறித்து அவர் அதிகமாகக் கேள்விப் பட்டிருக்கிறார். இயேசு செய்த அநேக அற்புதங்களைப் பற்றிய செய்திகள் சேர நாட்டிலும் பேசப்படுகின்றது. அவர் கடவுளின் அவதாரம் என்று சிலரும் கடவுளால் அனுப்பப்பட்ட மகான் என்றும் சிலர் கடவுளின் மடியிலிருந்து இறங்கி வந்த இறை மைந்தன் என்றும் அவரால் குருடர்கள் பார்வையடைகிறார்கள் ; சப்பாணிகள் நடக்கிறார்கள் ; தொழுநோயாளிகள் குணமடைகிறார்கள்; மரித்தவர்கள் எழுந்திருக்கிறார்கள்


திருவடிச் சிறப்பு

 

 (1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவபெருமானுடைய அடியைப் பாடுவதில் அடியவர்களுக்கு ஆனந்தம் அதிகம். அவனுடைய திருவடியே பற்றுக் கோடென்று கிடப்பவர்களாதலின் அதன் அழகையும் ஆற்றலையும் பெருமையையும் நினைந்து நினைந்து இன்ப ஊற்றெழக் களித்திருப்பார்கள். திருநாவுக்கரசர் ஒரு திருத்தாண்டகப் பதிகம் முழுவதிலும் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடியைப் பாராட்டியிருக்கிறார். அப்பதிகத்துக்குத் திருவடித் திருத்தாண்டகம் என்று பெயர் வைத்து


பேசாத நாள்

 

 (1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனிதராகப் பிறந்தவர்கள் பேச்சு என்னும் பெரு வரத்தைப் பெற்றிருக்கிறார்கள். பெற்ற அதைத் தக்க வண்ணம் பயன்படுத்த வேண்டும். அறிவுடையவன் என்று பெருமை கொள்ளும் மனிதன் தனக்கு அகப்பட்ட எல்லா வற்றையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதுதான் முறை. வேறு பிராணிகளுக்குக் கிடைக்காத வாக்கை நன் முறையிலே பயன்படுத்தினால் அவர்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்று


கண்ணில் உள்ளவன்

 

 (1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இறைவன் எங்கே இருக்கிறான்? அவனைக் காண முடியுமா?” என்று கேட்கிறது மனம். “உன்னிடத்திலே இருக்கிறான். உனக்குத் தெரியாமலே ஒளிந்து நிற்கிறான்” என்கிறார் அப்பர். “எனக்குத் தெரியவில்லையே! எனக்குள்ளே உள்ளதைக் காண்பது அரிதுதான். எனக்கு அயலாக உள்ள இடத்தில் இருந்தால் காண்பது எளிது. அப்படி எங்கேயாவது இருக்கிறானா?” என்று உசாவுகிறது மனம். “எத்தனையோ


வந்து போனார்

 

 (1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோழி கேட்டாள்: “நீ இப்படி யாரையோ எண்ணி எண்ணி நைந்து புலம்புகிறாயே; உன்னிடம் உண்டான. இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன?’ என்று கேட்டாள். அந்த அழகிய இளம் பெண் உடனே விடை சொல்லவில்லை; சொல்ல வும் முடியவில்லை. தன்னுடைய உள்ளம் கொள்ளை கொண்ட கட்டழகனை முதல் முதலில் கண்ட காட்சியை நினைத்துப்


கருகாவூர் எந்தை

 

 (1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சோழ நாட்டில் பாபநாசம் என்னும் ஊருக்கு அருகில் வெட்டாறு என்ற ஆற்றின் கரையில் திருக்கருகாவூர் என்ற தலம் இருக்கிறது. இப்போது திருக்களாவூர் என்று அதை வழங்குகிறார்கள். அத்தலத்தில் அம்பிகை, கருவுற்றிருந்த பெண்மணி ஒருத்தியைப் பாதுகாத்து அவள் கருவைக் காத்து மருத்துவம் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. கருவைக் காத்த ஊராதலின் கருகாவூர்


தொடர்ந்து நின்ற தாய்

 

 (1954ல் வெளியான திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவர் எப்போதும் சிவபெருமானையே எண்ணிப் பேசி வாழ்கிறவர்; இனிய சொற்களையே பேசுகிறவர். ‘அவருடைய வாக்கிலிருந்து மட்டும் அத்தகைய இனிய சொற்கள் வரு வதற்குக் காரணம் என்ன?’ என்று ஒருவன் யோசித்தான். அவனுக்கு நல்ல வார்த்தைகளையே பேச வேண்டுமென்று ஆசை. முயன்றும் பார்த்தான். அவனால் முடியவில்லை. ஐந்து நிமிஷம் பல்லைக் கடித்துக்கொண்டு இனிமையாகப்