கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2022

150 கதைகள் கிடைத்துள்ளன.

விபத்து

 

 அப்படி ஒரு விபத்து நடந்தபோது அந்த ஊர் மக்கள் நடந்து கொண்ட விதம் பற்றி என் நண்பர் வியப்பும் வேதனையும் அடைந்தார். எனக்கு அவர்கள் அப்படி நடந்து கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படா விட்டாலும் கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருந்தது. அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தை எனக்கு ஓரளவு தெரியும். அங்குள்ளவர்கள் கட் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு திருமணத்துக்குப் போயிருந்தேன். என் உறவினர் வீட்டுத் திருமணந்தான் அது. சாலையை ஒட்டிப்


பிரபலம்

 

 கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள பூந்தோட்ட வீதியிலிருந்து முளைத்துச் செல்லும் கிளை வீதியொன்றின் வழியாகப் பலர் மத்தியான உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது சென்றனர். அவர்களில் அநேகமானவர்கள் அரசாங்க அலுவலகங்கிலும், கூட்டுத்தாபனங்களிலும் வேலை பார்க்கும் உத்தியோகத்தவர்களாவர். வெய்யில் என்றால் வயிறு கேட்குமா? அந்தச் சிறிய வீதிலுள்ள கடையொன்றில் மத்தியானச் சாப்பாட்டுக்காக நடுத்தரக் குடும்பத் தலைவர்களும், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும் செல்வது வழக்கம். விலைவாசி உயர்ந்து விட்ட இந்த நாட்களிலும் சிக்கனச் செலவில் சிறந்த சாப்பாட்டை அங்கே பெற்றுக்


பொட்டு

 

 (1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பொட்டு வச்சிக்கிட்டு வாங்க….?’ ஷேவ் செய்து கொண்டிருக்கிறேன். குரலுடன் வந்த காற்று, ஒரு காதுக்குள் நுழைந்து மறுகாதால் வெளியேறியது. ‘பொட்டு வச்சிக்கிடட்டுமா….. வேண்டாமா……?’ இரண்டாவது தடவை வேகமாக வந்து வேகமாக நுழைந்து, வேகமாக வெளியேறியது. ஷேவ் செய்யும் உத்தியில் கன்னத்துத் தோலை மேலேயும் கீழேயுமாக இழுத்துக் கொண்டிருந்தால் காதின் துவாரம் சற்றே பெரிதாகி, குரலுடன் வந்த காற்றை விரைவாக உள்ளிழுத்து விரைவாக வெளியேற்றிவிட்டதாக


திறமை அறிந்தவர்களிடம்…

 

 “குருவே, எனக்கு ஒரு நல்ல வேலை அமையவில்லை’ என்று வருத்தத்தோடு சொன்ன இளைஞனை நிமிர்ந்து பார்த்தார் குரு. “என்ன பிரச்னை?’ என்று கேட்டார். “என்னிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லை’ என்றான் இளைஞன். வந்தவனின் பிரச்னை குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்லத் துவங்கினார். “ஒரு கிராமத்துக்கு பெரியவர் ஒருவர் அவரிடம் ஆசி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்ற ஊர் மக்கள் எல்லோரும் அவரிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினர். அந்த ஊரில்


நவராத்திரிப் பொம்மை

 

 (1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நவராத்திரி காலத்தில் ஸம்பாதிப்பது தான் உருப்படியாக நிற்கும். ராத்திரி பகலென்று பாராமல் உழைத்தால் பலனுண்டு. அவளுக்கு அவளுடைய கைதான் சொத்து. தன்னுடைய கைத்திறமையினால் அவள் ஜீவித்து வந்தாள். அவள் புருஷன் இருந்த காலத்தில் அவள் இருந்த நிலையே வேறு ; இப்போது இருக்கும் நிலையோ வேறு. ஆனால் இரண்டு காலங்களிலும் அவள் மனம் வைத்து உழைப்பதில் மாத்திரம் வஞ்சகம் செய்வதில்லை. மண் பொம்மைகளைச்


ஓர் இளைஞனின் புன்னகை

 

 நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில ஏழு மணிக்கு அவர் வீட்டில கொண்டாடிட்டு கிளம்பிடுவார். அதுக்குள்ள பாத்திட்டு ஒரு ஸ்டேட்மண்ட் வாங்கிடுங்க. போட்டோ நிறைய எடுக்கணும்.” பிறந்த நாள் கொண்டாடும் தலைவர் அரசியல்வாதி மட்டுமல்ல. நிருபர் கலாதரன் வேலை பார்க்கும் பத்திரிகையின் புதிய முதலாளியும் அவர்தான். ஆகவே அந்தக் கோரிக்கையை இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது. குளித்துச் சாப்பிட்டு மோட்டார் சைக்கிளைக் கிளப்பி பிரதான


கிராதார்ஜுனீயம்

 

 முதல் பாகம் | பாகம் இரண்டு (மகாபாரதத்தை எழுதிய வியாஸ பகவான் வனபர்வா பகுதியில் சிறுகதையாக எழுதியுள்ளார் வேடன் உருவத்தில்வந்த சிவபெருமானுக்கும் வில் விஜயனாகிய அர்ஜுனனுக்கும் இடையே நடந்த யுத்தம் பற்றியது. இந்த (கிராத = வேடன்) கதையினை கிராதார்ஜுனீயம் என்ற ஒரு பெரும் காவியமாக எழுதியவர் மிகவும் புகழ் பெற்ற கவி பாரவி ஆவார். இந்த காவியம் சமஸ்கிருத மொழியில் உள்ள ஐந்து பெரும் காவியங்களில் ஒன்று ஆகும். கிராதார்ஜுனீயம் காவியத்தில் அநேக அரச நீதிகள்


சிற்றன்னை

 

 ரெங்கநாயகி சமையல்கட்டில் பரபரத்துக்கொண்டிருந்தாள். சமையல்கட்டு வாசல்படியில் வந்து நின்ற ஷோபனாவிற்கு ரங்கநாயகி தன்னை கவனிக்காமல் சமையல் வேலையிலேயே மூழ்கியிருப்பது பாசாங்கு செய்வதாகப் பட்டது. ‘ஒரு வேளை உண்மையிலேயே தன்னை கவனிக்கவில்லையோ?’ என்ற சந்தேகமும் வர, ‘சித்தி குட்மார்னிங்,’என்று ஆரம்பிக்கலாமா..? அது ஏன், ‘குட்மார்னிங் அம்மா’ என்றே வாய் நிறைய அழைத்தால் என்ன? குழப்பம் வந்த்து. ‘அம்மா செத்துப்போய் இரண்டு வருஷம் கழித்து அந்த இடத்தை நிரப்ப இந்த ரங்கநாயகி வந்து மூன்று மாதம் முழுசாய் ஓடிவிட்டது. வந்த


சங்க இலக்கியத்தில் ஊறுகாய்

 

 வழக்கம்போல் உதவிப்பேராசிரியர் குப்பம்மாள் தனது கல்லூரிக்கு வாடகை தானியில் பயணித்துக்கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றிப்பெற்று அரசு அமைத்த இன்றைய முதல்வரின் புகைப்படம் சாலையோரப் பதாகையில் தெரிந்தது. அவரின் சிரித்தமுகம் குப்பம்மாவிற்கு ஒருவிதப் புத்துணர்ச்சியை அளித்தது. அந்த மாநகரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜவுளி வியாபாரிகளை உருவாக்கிய ஜவுளிக்கடையைக் கடந்து செல்கையில் அக்கடையின் பெயரைப் பார்த்த பின்பு குப்பம்மாவிற்குத் தன்னுடைய பெயர் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன. தன்னுடைய பெயருக்குப் பின்னுள்ள அரசியலில் இது வரை அவள் பட்டதுயரங்கள்


ஜக்கு

 

 (1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1. பட்டணம் போகிறான் | 2. பட்டணத்தில் | 3. மேலே பறக்கிறான் ஜக்கு மயிலாப்பூரிலுள்ள தன் மாமாவின் வீட்டில் மாடி அறையில் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தபோது டெலிபோன் மணி கிணு கிணு என்று ஒலித்தது. ஜக்கு எழுந்து உட்கார்ந்தான். இதுவரையில் அவன் டெலிபோனில் பேசியதே இல்லை. பட்டணத்தில் பெரிய பெரிய ஆபீஸ்களிலும் பெரிய பங்களாக் களிலும் வியாபார ஸ்தலங்களிலும் ஒருவரோடு ஒருவர்