கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2014

89 கதைகள் கிடைத்துள்ளன.

எய்தவன்

 

 பெசன்ட் நகரில் ஒரு வீடு – டிசம்பர் 4, 1995… சுந்தரலிங்கம் காலையில் தன் வீட்டு வாசலிலேயே குத்தப்பட்டார். கோர்ட் விடுமுறை நாள்… பெசன்ட் நகர் வீட்டில் காலை நிதானமாகவே எழுந்திருந்து தோட்டத்துக்கு நீர் இறைத்து காபி சாப்பிடுகையில் ‘ஹிண்டு’வில் விளையாட்டுப் பக்க ஓரத்தில் யார் இறந்தார் கள் என்பதை முதலில் பார்த்துவிட்டு முன் பக்கத்துக்கு வந்தார். பொடி எழுத்தில் காலமான வர்களின் வயதையெல்லாம் தன் வயதுடன் ஒப்பிடுவது வழக்கம். காபி குடித்துவிட்டு வராந்தா பிரம்பு நாற்காலியில்


ப்ரைவசி

 

 ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள். சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து


ஷுகர் 103 மில்லி கிராம்

 

 சனிக்கிழமை என்று யார் முட்டாள்தனமாகப் பெயர் வைத்தார்கள்? சந்தோஷக்கிழமை என்று வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த சென்னைக்கு வந்து, பல ‘மன்னார் அண்டு மன்னார்’ கம்ப்யூட்டர் கம்பெனி களில் வேலை பார்த்த பிறகு, சனிக்கிழமை மட்டும்தான் நமக்குக் கை, கால், மூளை தவிர்த்து மற்ற சில உறுப்பு களும் இருப்பதே தெரியும். அப்படி ஓர் இனிய சனிக்கிழமை காலைப்பொழுதில் ஏ.சி. குளிரில் போர்வைக்குள் புதைந்திருந்தபோது தான் அந்த அசம்பாவிதம்… ”என்னங்க… எந்திரிங்க… மறந்தாச்சா?” என என் சகதர்மிணி


சித்ரா

 

 சித்ராவின் கணவனாம் ! இன்று தான் பார்க்கிறேன் இவனை. எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு பலகாலம் ரொம்ப சிநேகம் போல அவனது தோளைத் தட்டி கைகளைப் பற்றிக் கொண்டும் விட்டுக் கொண்டும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார் . தலை முழுக்க மங்கி நிறமிழந்த பேப்பர் கூழ் பெட்டியை வைத்துக் கவிழ்த்தார் போல ஒரு ஹேர் ஸ்டைல் அவனுக்கு ,அந்த முடி வெட்டும்,முழி வெட்டும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது எனக்கு


பிரிவு

 

 நொடிக்கு ஒருமுறை மணியை பார்த்துக்கொண்டிருந்தேன்.இரயில் மிக மெதுவாக போவதாக மனதுக்குப்பட்டது.என் மனதின் வேகத்தை ஈடு செய்ய முடியாமல் இரயில் திணறி திணறி சென்று கொண்டிருந்தது.அழுது அழுது வீங்கியிருந்த என் கண்களையும்,என்னையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு வந்தார்கள் சக பயணிகள்.இவர்களுக்கு எப்படி தெரியும் என்னுடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று.இன்றைய பொழுது ஏன் இப்படி விடிந்தது.காலையில் 6 மணிக்குதான் அந்த கொடுமையான செய்தியை அப்பா போன் செய்து சொன்னார்கள்.இரவு உறக்கதிலேயே என் பாட்டியின் உயிர் பிரிந்துவிட்டதாக.எந்த ஒரு


போச்சு போச்சு எல்லாம் போச்சு

 

 சௌம்யாவிற்கு கோபம் கோபமாய் வந்தது. இன்னிக்கு வசந்த் ஆஃபீஸிலிருந்து வரட்டும். நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டிரணும். எத்தனை நாள்தான் பொறுத்துக்கறது. ஸௌமியாவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. எல்லாம் மாலையில் மாமியாரிடம் பேசிய பிறகுதான். அவர்கள் பேசியது எல்லா நாளும் முன்னே பின்னே நடக்கிற அதே பேச்சுதான். வழக்கம்போல் இன்றும் மாமியாருக்கு ஃபோன் செய்தாள். வழக்கம் போல் விசாரணைகள். மாமியார் : குழந்தைகள் ஸ்கூல் சமர்த்தாய் போனார்களா? ஸௌமியா: ஆமாம்மா போனார்கள் (மனதிர்க்குள் : பத்தாவது, எட்டாவது


மனிதம்

 

 என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக இருந்தது.என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை.அடுத்த நொடி நடக்க போகும் அதிசயங்கள் சொல்லி மாளாது.விணு அதற்குள் மறுபடி என்னை செல்லில் அழைத்தான். “யமுனா,கிளம்பிட்டியா,சீக்கிரம் போ..நான் ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன்.பத்து நிமிஷத்துல வந்துடுவேன்”.அவன் குரலில் பதட்டம் இருந்தது. “ஏன் விணு என்ன ஆச்சு நேத்து நல்லாதான இருந்தாங்க..எனக்கு ஒன்னுமே புரியலயே”. “நெஞ்சு வலியாம்.திடீர்னு தான்,ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்றதுக்குள்ளயே உயிர்


கவந்தனும் காமனும்

 

 ஒரு நகரத்திலே… இரவு மணி எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். நாகரிகத்தின் உச்சியைக் காணவேண்டும் என்றால், அந்த நகரத்தை, ஏன் – எந்தப் பட்டணத்தையும் இரவில்தான் பார்க்க வேண்டும். நீங்கள் இரவு எட்டு மணிக்குமேல் சென்னை மாநகரில் சுற்றிப் பார்த்திருக்கிறீர்களா? சுற்றியிருந்தால் நான் கீழே சொல்லும் விஷயம் உங்களுக்குப் பிரமிப்பை உண்டாக்காது. கண்ணைப் பறிக்கும் விளக்குகள், உள்ளத்தைப் பறிக்கும் நாகரிகம்! மனிதனின் உயர்வையும், உடைவையும் ஒரே காட்சியில் காண்பிக்கும் நாகரிகச் சின்னங்கள்! இது கலியுகமல்ல, விளம்பர யுகம்


மனசு

 

 நெஞ்சு படபடக்கிறது. படபடப்பு அதிகமாகிறது. தன்னை அறியாமலேயே கண்ணீர் வழிகிறது. கைக்குட்டை துணியால் கண்ணீரைத் துடைத்தும் நீர் விழியில் நிரம்பி வழிகிறது. பக்கத்து இருக்கையில் இருந்த அமலா எழுந்துவந்து, “”வினோ ஏன் இப்படி இறுக்கமா இருக்கே? சி.இ.ஓ.கிட்டே அரைநாள் பர்மிஷன் சொல்லிட்டு, போயிட்டு வா…” என அவள் சொன்னதும் தெளிவு வந்தவளாய் முகத்தை துடைத்து நேரே என் மேலதிகாரியின் அறைக்கு சென்று அரைநாள் லீவு சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அமலா அருகில் வந்து, “”என்ன சொல்லி லீவு


பெண்கள்: நான் கணிக்கின்றேன்

 

 பயணம் நிச்சயமாகி விட்டது. .எப்படியாவது யன்னலருகிலுள்ள சீட்டை புக் பண்ணுங்கள் என்ற போது “என்ன கடைசி நேரத்தில இப்பிடி கேக்கிறீங்கள்” என்று அவன் சினப்பது தெரிந்தது.. “வரேக்க ஒரு பட்டு வேட்டி சால்வை வாங்கிக்கொண்டு வருவன்” என்றதும்.. வினோதமான ஒரு ஒலியுடன் அவன் சிரித்தான் அவ்வளவுதான்.. எனக்கான இருக்கை எண்ணை கத்திதமான ஒருத்தி சுட்டிக்காட்ட பட்டுவேட்டி சால்வைக்கு முழுக்குப் போட்டு உடலை நுழைத்துக்கொண்டேன்.. நெருக்கமாக இருந்தது.. இடதுபக்கத்தில் பின்னால் இருந்து யாரோ பின்னால் குத்துவதுபோல் ஒருவித ஒலியை