தென்றல் சுடும் நேரம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 299 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கையிலே இருந்த கடைசி யூரோவும் முடிந்து விட்ட நிலையிலே இனி என்ன செய்வது என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தது. கோப்பையிலே இருந்த தேனீரை உறிஞ்சிக் கொண்டான். உடலை நடுங்க வைத்த குளிருக்கு அந்த சுடு நீர் இதமாகவே இருந்தது. தங்கியிருந்த வீட்டுக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை. கடன் பட்டார் நெஞ்சன் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் எனும் தொடருக்குரிய அர்த்தம் இப்போதுதான் விளங்கியது.

முதலாம் திகதியாகியும் கூட வீட்டு வாடகையைகட்ட முடியாமல் அகல்யா சிரமப்படுவது தெரிந்தது. அரச உதவிப் பணத்திலே சீவியம் நடாத்தும் அகல்யாவுக்கு இவர்கள் அங்கிருப்பது கடினமானதே. வருணனும் இதை உணராமல் இல்லை. நெருப்புச் சுடும் என்பதை தீயின் விரல்கள் வந்து சொல்லித் தான் தெரியவேண்டியதில்லையே.

“அப்பா தீபனுக்கு பசிக்குதாம்.” மூத்தவன் வந்து காதிலே இரகசியமாகச் சொன்னான்.

“இஞ்சை வாங்கோ தீபன்…. இன்னும் கொஞ்ச நேரத்திலை சமைச்சு முடிஞ்சிடும் தீத்து விடுறன்”

“அப்ப கேக் தாங்கோ அப்பா”

“ம் கும்… கேக் சாப்பிட்டா மத்தியானம் வடிவா சாப்பிட மாட்டியள். சரி இருங்கோ போட்டுக் கொண்டு வாறன்” என்றபடி சமையலறைப் பக்கம் எழுந்து போனான்.

வருணனும் நான்கு பிள்ளைகளும் பிரான்ஸுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டிருந்தது. ஒற்றைச் சக்கரத்திலோடும் ஒரு வண்டிலாகவே இவனது இப்போதைய வாழ்க்கை இருக்கிறது. இதற்குக் காரணம் அவனது மனைவியை ஜேர்மன் அரசானது மனிதாபிமானம் அற்ற முறையிலே திருப்பி அனுப்பி விட்டிருந்தது.

குடும்பத்தோடு அனைவரையும் திருப்பி அனுப்புவதே ஜேர்மனியக் காவல்துறையினரின் திட்டமான போதிலும் காவலர்கள் வீட்டுக்கு வந்த வேளையிலே அவன் மனைவி மட்டுமே அங்கிருந்ததால் அவளைத் தனியாகப் பிடித்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள். வானம் பிளந்து இவனது தலைக்கு மேலே பெரும் இடி யொன்றை இறக்கிக் கொண்டது போல உணர்ந்தான். அவ்வளவு தூரத்திற்கு பெரும் இடைஞ்சலை எதிர் கொண்டான்.

அதனாலேதான் வருணனும் பிள்ளைகளும் நாடு நாடாக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. தனி ஒருவனாக நின்று இத்தனை சுமைகளையும் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறான். கடும் தவம் புரியும் இந்தச் சிறு படகு கடலை எதிர்த்தபடி எப்படி கரை சேரப்போகிறது. இந்த வினாவே எல்லாரிடமும் துளிர் விட்டது. அவற்றை எல்லாம் முறியடித்த படி ஒரு வருடமாக பயணிக்கிறது பேரலையை எதிர்த்தபடி இந்தப் படகு.

அங்கிருந்து கொண்ட அந்த ஒரு வாரத்திலே அகல்யா எனும் சமூகப் பறவை சிறகை விரித்து வானத்திலே எழுதிய கவிதை வரிகளை வாசிக்கவும் அவளின் மனதிலே இருந்து தெறித்த நெருப்பை தகிக்கவும் அவனாலே முடிந்தது.

இப்போதைய இவளது வாழ்க்கை என்பது பாழடை ந்த இராஜ மாளிகையிலே பூத்த ரோசா போன்றதே. முன்னை நாளிலே கிளையாக ஒட்டிய வாழ்வும் சரி அகல்யாவுக்கு பொருத்தமாக அமையவில்லை. அவளது சந்தோசக் கனவுகள் மீது ஒருவன் வந்து கல்லெறிந்து போய்விட்டான்.

வழுக்கும் பாறை மீது நிற்கும் போதே கூறை சூடிய மணப்பெண் ஆனவள். பதினெட்டு வயதிலேயே ஆண்பிள்ளைகள் இரண்டுக்குத் தாயாகிப் போனவள்.

கணவன் என்று வந்த அந்தத் தென்றலோ இம் மூவரையும் தவிக்க விட்டு வேறொரு பூவுக்கு மகுடம் சூட்டிக் கொண்டதால் தாய் தகப்பன் உட்பட அவளைச் சுற்றியிருக்கின்ற சமூகம் அதை ஒரு இழிவாகவே எண்ணி இன்று வரை மறக்கவில்லை. அதைப் போல அவளும் அந்த தழும்பை யாருக்கும் மறைக்கவுமில்லை. நியாயமான இவளது கருத்தெல்லாம் கூட கூட இருந்தவர்களால் புறக்கணிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டன. உச்சிக்கு வரமுன் உதிர்ந்து போன சூரியன் போல ஆகியது இவள் ஆசைப்பட்ட வாழ்க்கை. பிரான்ஸின் புறநகர்ப் பகுதியிலே கடந்த நான்கு வருடங்களாக இந்தத் தனித்த வாழ்க்கையில் தனது இரண்டு குழந்தைகளூடாகவே இழந்து போன சொர்க்கத்தை தரிசிக்க முயன்று கொண்டிருந்தாள்.

“நாளைக்கு ஒருக்கா பாரிசுக்குப் போக வேண்டி இருக்கு” கழிவ விட்ட றையைக் கழுவியபடியே அகல்யா கேட்டாள்.

உடனை திரும்பிடுவீங்களோ? ஒடிவந்தான். சங்கடத்துடனான வர்ணனின் வினா “ஒம் ஒம் உடனை வந்திடுவன். சமைச்சு வச்சிட்டுப் போனா நாளைக்கு மட்டும் ஒருக்கா சமாளிப்பிங்களோ”.

“உங்களுக்கு எதுக்கு சிரமம் நாளைக்கு வேணுமெண்டா இரகு வீட்டை போய் நிண்டிட்டு வாறம்.?

இதிலை என்ன சிரமம் இருக்கு உதை மாதிரி பிரச்சினை எங்களுக்கும் வரலாம் தானே வருணன்.

சின்னவன் சிணுங்கித் கொண்டே தகப்பனிடம் ஓடிவந்தான்.

“என்ன ஜயா” என்று தலையை கோதிவிட்டான்.

“என்டை விளையாட்டுச் சாமானை அண்ணா எடுத்திட்டான்…”

சிணுங்கலை நிறுத்தாமலே தொடர்ந்தான் தீபன்.

“அம்மாட்ட எப்பப்பா போறம்”

சமாதானம் செய்வதற்காக வாயைத் திறந்தவன் மகனிடமிருந்து அடுத்த வந்த கேள்விக்கு விடை தெரியாததால் பொங்கி வரும் கணைகளைக் கண்டஞ்சிய ஒரு போர் வீரனைப் போல பின் வாங்கினான்.

வர்ணனனப் பொறுத்தவரை இலங்கைத் மாதிரி ஒரு இனமாகவே தோன்றியது. இல்லாவிடில் நாளொரு நாடும்பொழு தொரு கண்டமுமாக ஓடிக் கொண்டிருப்பானா தவறின் சிவப்புக் கடலிலே நாள் தோறும் நீந்திக்கொண்டிருப்பானா.

பல்லாண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த குடும்பங்களை தனித்தனியாக உடைத்தும் வேறுவேறாக முகாம்களிலே அடை த்தது முரட்டுத் தனமாக ஜேர்மனிய அரசு. அப்படியான இக்கட்டான சூழ்நிலையொன்றிலே தான் வருண ணின் மனைவி ஜேர்மனியை விட்டு வெளியேறியிருந்தாள். கடந்த ஓரா ண்டு காலமாக தாயில்லா குறையை பிள்ளைகளுக்கு தீர்த்து வைத்திருக் கிறான் இந்தத் தாயுமானவன். முதுகிலே வீட்டைக் காவித் திரியும் நத்தை போல நெஞ்சுக் கூட்டுக் குள்ளே கனவுக் கோட்டைகளோடு அலைந்து கொண்டிருக்கும் இவன் எல்லாச் சுமைகளையும் சுகமாகவே ஏற்றிருக்கிறான்.

ஏதோ அலுவல் நிமித்தம் வெளியே போனவன் குளிருக்காக அணிந்திருந்த தடித்த மேலா டைகளை கழற்றி கூசரிலே கொழு வினான். அறை முழுவதையும் சூடேற்றிக் கொண்டிருந்த சூடேற் றிக்கி அருகிலே கதிரையை இழுத் துப் போட்டபடி ஊதல் காய்ந்து கொண்டிருந்தான். இரவுச் சாப் பாட்டை தயாரித்து கொண்டிருந்த அகல்யா ஒரு அடுப்பிலே நாகிட்சை போட்டு பொரித்துக் கொண்டு மற் றய அடுப்பிலே வர்ணனுக்கு தேநீர் தயாரித்துக் கொண்டாள். வரவேற் பறையிலே இருந்து கொண்டே அவளிடம் பேச்சுக் கொடுத்தான். “பிள்ளைகளோட நான் இலங்கைக்குப் போகலாம் என்று யோசிக்கிறன் அகல்யா?”

ம் எதுக்கு அவசரப்படுறீயள், சண்டை நடக்கிற இடத்தில சின்னப் பிள்ளைகளோட போய் எப்படிச் சமாளிப்பியள். அதைவிட அங்க விலைவாசிகள் என்டது சிற்தெறும் பின்ட தலையில இமய மலையை வைச்சமாதிரி முட்ட பதினெட்டு ரூபா, பாண் நாற்பது ரூபா, மீன் முன் னூறு…. இப்படி இருக்கேக்க எப்படி வாழப் போறியள்? அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். குட்டிகளைக் காவித் திரியும் கங்காரு போல எத்தனை நாளைக்கு தன் பிள்ளைகளோட அலையிறது. உள்நாட்டுப் பிரஜை யாக ஊர் சுற்றித்திரிந்திரிந்தால் மகிழ்வாக இருந்திரிக்கும். ஒரு அகதி யாக அல்லவா இவன் திரிகிறான். யாத்திரையெனில் கெளரவம் கிடை த்திருக்கும். நாடு கடத்தலெனில் எப் படி அது சாத்தியமாகும். விண்மீன் களையெல்லாம் மண்ணிலே விதை த்தது போல இரவுகளுக்கு அழகு தரும் ஜேர்மனி நிலாவுக்குத் தூண் டில் போடும் பாரிஸின் ஈபிள் கோபுரம்.

அதன் அகன்ற சாம்ராஜ்ஜித்தை இழந்திருந்தாலும் இன்று வரை அத ற்கு சாட்சிகளாக விளங்கும் விளை யாட்டு அரங்குகளையும், அரச மாளிகைகளையும் வைத்திருக்கும் ரோம் நகரம் இருந்தும் என்ன செய்வது? கட்டிக்காத்த பண் பாட்டை ஐரோப்பிய அமிலத் திலே கரையாமல் காப்ப தென்பது கடினமாக இருக் கிறது. இங்கே வாழ்க்கை யென்பது வித்தியாசமானது. ஆயிரம் பேர் குடியிருக்கும் அடுக்கு மாடியில் கூட அடுத்த வீட்டில் குடியிருப்பவர் யாரெ ன்று தெரியாத வாழ்க்கை. சில வேளைகளில் ஒரு வீட்டுக்குள் ளயே அந்நியர் போல வாழ் கின்கிறார்கள். நம்மூர் கிராமங் களில் இப்படியா இருந்தோம். தூரத்தே வாழ்ந்தாலும் கண் ணியமான அந்நியோன்யத் தையே அல்லவா கடைப் பிடித்தோம். அழகைத் தரிசிக் கும் விழிகளுக்கு ஜரோப்பிய நாடுகளிலே விருந்து கிடைக்கும். ஆடம் பரத்தை விரும்பும் மனி தர்கள் பறப்பதற்கு இங்கே இறகுகள் பொருத் தப்படும். இருந் தும் இவனுக்கு இதிலே உடன் பாடில்லை.

– இருக்கிறம் 2008.09.20

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *