சிங்கை தமிழ்ச்செல்வம்

 

நூலாசிரியர் பற்றி… – மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005

இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம்

அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து பணியாற்றிக் கைகொடுக்கின்றார்.

சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களிடம் நான் காண்கின்ற சிறப்பு. அவர் பேணிப் போற்றுகின்ற மனிதநேய நல்லிணக்கப் பண்புகளே. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் இருந்து வெளிவருகின்ற மிகுதியான ஏடுகளில் பல்வேறு சமயத் திருநாள்களின் சிறப்புகளை விளக்கி அவர் படைத்த எழுத்தோவியங்களைப் படித்துச் சுவைத்து நெகிழ்ந்திருக்கிறேன். அவர் எடுத்து அளித்த ஒளிப் படங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களின் இலக்கிய, சமூகப் பணிகளைச் சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் இருந்து இயங்கி வருகின்ற தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோரும், அறிஞர் பெருமக்களும் பாராட்டிச் சிறப்பித்துப் பெருமைப் படுத்தியிருக்கின்றனர்.

கீழை நாட்டுக் கவிதை மஞ்சரி என்ற நூலுக்குப் பின்னர், எழுத்தாளர்கள் பலரிடமும் சிறுகதைகளைக் கேட்டுக் பெற்று “மனங்கவர் மலர்கள்” என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலைப் பதிப்பித்து, மீண்டும் தொகுப்பு நூலாசிரியர் என்று பெருமையைப் பெறுகிறார். இதுகாறும் பற்பல தமிழ் நூல்களை பெருமை சேர்த்திருக்கின்றார்.

நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, என்றும் வாழ்கின்ற வளர்கின்ற மொழியாகவும், செழித்துத் தழைக்கவும், நிலைபெ தமிழ்ச்செல்வம் அவர்களின் உழைப்பு, உண்மையிலேயே விளங்குகின்றது.

சிங்கை. தமிழ்ச்செல்வம் மேலும் பல நல்ல நூல்களை இன்றைய இளைய தலைமுறையினர்க்கு வழி காட்ட வேண்டும் வேண்டுகோள். பல்லாண்டு வாழ்க சிங்கை. தமிழ்ச்செல்வம்! வளர்க!

கவிஞரேறு அமலதாசன்,
தலைவர்,
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

நூலாசிரியரின் பிற வெளியீடுகள்

  • கீழை நாட்டுக் கவிதை மஞ்சரி I ஜனவரி – 1995
  • குறள் விளக்கக் கதைகள் டிசம்பர் – 1996
  • கவரிமான் (சிறுகதைகள்) டிசம்பர் – 1996
  • வாழப்பிறந்தவள் (புதினம்) டிசம்பர் – 1998
  • ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைகள்) ஆகஸ்டு-2002
  • சிந்தனை முத்துகள் (கட்டுரைகள்) டிசம்பர் – 2004
  • பெஞ்சமின் ஃபிராங்கிளின் டிசம்பர் – 2004
  • கீழைநாட்டுக் கவிதை மஞ்சரி II டிசம்பர் – 2005
  • செவ்வந்திப் பூக்கள் (சிறுகதைகள்) டிசம்பர் – 2005

நூல்கள் கிடைக்குமிடம்

சிங்கை தமிழ்ச்செல்வம்,
அஞ்சல் பெட்டி எண். 1678,
இராபின்சன் சாலை,
சிங்கப்பூர் 903328