அவள் அழகான பெண் என்பதையும் மீறிக் கோபம் வந்தது.
இடம் நார்ட்ஸ்டார்ம் பார்.
பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். ஸ்பென்ஸர் ப்ளாஸா மாதிரியான பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சின் ஒரு மூலையிலிருக்கும் காபிக்கடை. நாளெல்லாம் கம்ப்யூட்டரை முறைத்து முறைத்து போர் அடித்தால் அங்கே காபி சாப்பிடப் போவோம்.
வழக்கமாய் ” ஹலோ ” – சொல்லும் காபிக் கடை அமெரிக்க அழகி அன்றைக்கு, ” நமஸ்தே ” என்றதும்தான் கோபம் வந்தது. ஆச்சரியப்பட்டுப் போய் அவளைப் புகழப் போகிறேன் என்று எதிர்பார்த்தவளுக்கு என் முகம் போன போக்கைப் பார்த்து திகைப்பு.
இங்கேயும் இந்தித் திணிப்பா !
” நமஸ்தேன்னா உங்க பாஷைல ஹலோதானே ? ”
குமுறலோடு அவளிடம் சொன்னேன். ” இல்லே, அது வேற பாஷை. ”
” நீ இந்தியன் இல்லையா ? ”
” இந்தியன்தான். ஆனா இது என் பாஷை இல்லை. எனக்கு என் பாஷைல ஹலோ சொல்லணும்ன்னா வணக்கம்ன்னு சொல்லணும். ”
” வனக்கம் ? ”
” இல்லை. வணக்கம். நாக்கை நல்லா அழுத்தி சொல்லணும். ”
” வநக்கம்? வணக்கம்? ”
” ஆங் ! கரெக்ட். வணக்கம். ”
” உன் பாஷை கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ”
” எழுதி வெச்சுக்கோ. சுலபமா இருக்கும். இனிமே யாராவது இந்திய மூஞ்சியைப் பார்த்தா நமஸ்தே சொல்லக் கூடாது. வணக்கம் சொல்லணும். ஓக்கே? ”
” ஓக்கே. ”
யாரோ ஒரு இந்திக்காரனை பழி வாங்கிய திருப்தியோடு காபியை உறிஞ்சிக் கொண்டு திரும்பினேன்.
அடுத்த நாள் அங்கே சென்றபோது, ” இன்னொரு வார்த்தை பழகிட்டேன். இது உன் பாஷைதான். ” சொல்லிக் கொண்டே கீழே குனிந்து எழுதி வைத்த வாக்கியத்தை வாசித்தாள்.
” மீரு பாஹ உன்னாரா ? ”
- ஏப்ரல் 27, 2004
தொடர்புடைய சிறுகதைகள்
'மதிப்பிற்குரிய அணு ஆராய்ச்சிநிலைய சேர்மன் அவர்களுக்கு...
உங்களுக்காக ஒரு சைலன்ஸர் பிஸ்டல் தூசு துடைக்கப்பட்டுக் கொண்டுடிருக்கிறது.காரணம் உங்களுக்கே தெரியும்! ஆகையால் - அடுத்த நிமிஷத்திலுருந்தே இறப்பதற்குத் தயாராகவும்.
இப்படிக்கு,
'ரேடியேஷன்' எதிர்ப்பு குழு.
சேர்மன் ராகவராவ் முகத்துக்கு, வியர்வை முத்து, முத்தாக மேக்கப் போட்டு விட்டிருந்தது. முற்றிலும் ...
மேலும் கதையை படிக்க...
” மூணு வயசாச்சு. ” – ஸ்கூல்ல சேர்க்கிறப்ப பிரின்சிபல் மேடம் கிட்டே அம்மா அப்படித்தான் சொன்னா.
ஸ்கூல்ன்னா எனக்குக் கொள்ளை இஷ்டம்.
” அஸ்மிதா, நீ படிக்கப் போற கான்வென்ட் இதான். ” ஸ்கூட்டர்ல முன்னாடி நிக்க வெச்சுக் கூட்டிட்டுப் போறப்ப அப்பா ...
மேலும் கதையை படிக்க...
சந்திரிகா கோபத்தில் சிவந்திருந்தாள்.
ஏர் கண்டிஷன் குளிர்ச்சியையும் மீறி அவள் முகத்திலுருந்து வெளிப்பட்டன உஷ்ணக்கதிர்கள். அவளுடைய பரந்த மேஜையின் மேல் அவள் கோபத்துடன் விசிறியடித்த ஃபைல் தவிர ரத்தச் சிவப்பில் இண்டர்காம், அதே நிறத்தில் கார்ட்லெஸ் டெலிபோன், மேஜை காலண்டர், மார்க்கர் பேனாக்கள், ...
மேலும் கதையை படிக்க...
நாக்கில் நரநரவென்று உறுத்தல். பூஞ்சோலை சுவரோரமாய் இருந்த தொட்டியில் உமிழ்ந்தாள். எச்சில் கறுப்பாய் ரசாயன மண் கலந்து வந்தது.
சற்று தள்ளி ஜோல்ட்டிங் இயந்திரத்தின் அருகே நிற்கிற பதினெட்டு வயது இளைஞனுக்குக் குரல் கொடுத்தாள்.
” ரத்தினம். கடைசி பேட்ச் பெட்டிங்க வருது பாரு. ...
மேலும் கதையை படிக்க...
இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்.
" கண்டிப்பா நாம நியுஜெர்ஸியிலிருக்கும் உன்னோட அண்ணன் குடும்பத்தோட ஒரு வாரம் தங்கியிருக்கப் போறோம். இந்தியக் குடும்பப் பழக்க வழக்கங்களை எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
இண்ட்ஸ்டாக்-2 இந்திய விண்வெளிக் கலம் மூன்றடுக்கு ராக்கெட்டின் க்ரையோஜெனிக் வீச்சில் அசுர வேகத்தில் வாயு மண்டலத்தைக் கடந்தது. முட்டை வடிவ சாளரத்தைச் சுற்றிலும் அடர்த்தியாய் அண்டவெளி இருட்டு. சிலுசிலுத்த நட்சத்திரப் புள்ளிகள்.
” திட்டமிட்ட உயரத்தை திட்டமிட்ட வினாடியில் கடந்து கொண்டிருக்கிறோம். இந்த ...
மேலும் கதையை படிக்க...
வராந்தா முழுவதும் விரக்தியான முகங்கள். "மக்கள் குறை தீர்க்கும் நாள்" வெள்ளை நிறப் பின்னணியில் நீலவர்ண எழுத்துக்களோடு பேனர் காற்றில் நெளிந்தது. எல்லோருமே கலெக்டரிடம் கொடுப்பதற்காகக் கையில் மனு வைத்திருந்தார்கள்.
'......உயர்திரு கலெக்டர் சமூகம் அவர்களுக்கு, எனது கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டுப் ...
மேலும் கதையை படிக்க...
ஈரக் கோழி மாதிரி வெடவெடவென நடுங்கிக் கொண்டிருந்தான் அனந்து.
அவ்வப்போது விலுக் விலுக்கென்று உடம்பு தூக்கிப் போட்டது. சிவந்த கண்களும், உலர்ந்த உதடுகளும் ஒரு மாதிரி கோணிக் கொண்டிருக்க, போர்வைக்குள் சன்னமாய் அனத்திக் கொண்டிருந்தான்.
இரண்டு மாதங்களாகத்தான் அவனை எனக்குத் தெரியும். அமெரிக்காவுக்குப் புதுசு ...
மேலும் கதையை படிக்க...
மேலாடை இல்லாத பெண்கள்.
ரத்தீஷ் உற்சாகத்தில் துள்ளினான். அவனைக் கூட்டி வந்தது இமாலயத் தவறு என்பதை தாமு தாமதமாய் உணர்ந்தான்.
நரிக்கொம்பு ஃபாரஸ்ட்டின் மையத்தில் காட்டிலாகா ஜீப் குலுங்கி்க் குலுங்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரிய வெப்பம் விழாத அடர்த்தியான காட்டுப் பிரதேசம்.
ரத்தீஷ் படபடத்தான்.
” தாமு, ...
மேலும் கதையை படிக்க...
நாற்றம் குடலைப் புரட்டியது. விரல் நரம்புகள் அறுந்து விழும் போல வலி. இந்த கண்றாவியின் பெயர் ட்யூனா என்றார்கள். ஆழக்கடலில் அகப்படும் ஏதோ ஒரு மீனின் வகை. பதினொரு மணிக்குள் இதை மாவு மாதிரி பிசைந்து வைக்க வேண்டும்.“சுமிதா, முடிஞ்சதா?” – ...
மேலும் கதையை படிக்க...
ஒரு பிஸ்டல் தூசு துடைக்கப்படுகிறது!