பர்ஸன்டேஜ்!

 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சர்மா கடத்த அரை மணி நேரமாகத் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

மானேஜர் நல்ல மூடில் இருப்பதாக அவர் அறையிலிருந்து வந்த ‘ஓஹோ …ஹோ..” என்ற சிரிப்பொலி தெரிவித்தது. உள்ளே பேசிக் கொண்டிருக்கும் ஆசாமிகள் வெளியேறியதும் போய் விஷயத்தைச் சொல்லி விடவேண்டும்.

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா? இத்தனைக்கும் அவர் யார்? எத்தனை வருஷ சர்வீஸ் அவருக்கு நேற்றைக்கு வத்தவனெல்லாம் அவரைக் கிள்ளுக் கீரையாக நினைத்து நடப்பதா?

kalki1980-01-27_0052-picமுக்கியமான ஃபைல்கள் விவகாரமாக அவரை நான்கு முறை தன்மை அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார்கள், அந்தப் பயணங்களுக்காக டிராவலிங் அலவன்ஸ் பில்லை ச் சமர்ப்பித்து ஒரு மாதம் ஆகியும் பணம் கைக்கு வந்தபாடில்லை. பில் கிளார்க் ஆபத்பாத்தவனை அணுகியதற்கு அவன், “அதுக்கென்ன சர்மா ஷார், பாஸ் செய்துட்டாப் போவுது. இன்னிக்கு தான் சாப்பாடு கொண்டு வரலை. முனியாண்டிக்குப் போகலாமா?” என்று கேட்டதுதான் சர்மாவுக்குக் கோபம் பிய்த்துக் கொண்டு வரக் காரணம்.

ஆபத்பாந்தவனைப் பற்றி அந்த ஆபீசில் முதுகுக்குப் பின்னாலும் முகத்துக்கு முன்னாலும் நிறையப் பேர் பேசினார்கள், ஆசாமி இரண்டு கையாலும் கூசாமல் கேட்டு வாங்குகிறானாம். ஒவ்வொரு பில்லுக்கும் ரேட் நிர்ணயித்து வைத்திருக்கிறானாம். டி.ஏ. பில், இன்கிரிமென்ட் பில் வகையறாக்களுக்குப் பத்து ரூபாய், லீவு சம்பளத்துக்கு இருபது ரூபாய், பிராவிடென்ட் பண்ட் லொன் பில்லுக்கு முப்பது ரூபாய்… இந்த நிர்ணயிக்கப்பட்ட ‘ரேட்’கள் கூட சம்பத்தப்பட்டவர்களின் தேவை அவசரங்களைப் பொறுத்து அதிகமாகுமாம். இப்போது அவன் சாமாவையே முனியாண்டி ஓட்டலுக்கு அழைக்கிறான். பிரியாணி வாங்கித் தந்தால் பில்லைப் பாஸ் செய்வானாம் – அதுதானே அதற்கு அர்த்தம்!

என்ன அநியாயம்?

மானேஜர் முன் சர்மா நின்றார். ஆபத்பாந்தவன் டி.ஏ. பில்லைப் பாஸ் செய்யத் தம்மிடம் லஞ்சம் கேட்பதாகப் புகார் செய்தார்.

“வாட் தான் சென்ஸ் – கூப்பிடு அந்தப் பில் கிளார்க்கை!” என்று மானேஜர் கத்தினார்.

ஆபத்பாந்தவன் சாதுப் பூனையாய் வந்து கையைக் கட்டிக்கொண்டு பவ்யமாய் நின்றான்.

“ஏன்யா பில் கிளார்க், நீ இவரோட டி.ஏ. பில்லை பாஸ் செய்ய லஞ்சம் கேட்கிறாயாமே, ஈஸ் இட்?”

ஆபத்பாந்தவன் கடகடவென்று சிரித் தான். “ஆமாம் ஸார்.., கேட்டது வாஸ்தவம் தான்”

சர்மா திகைத்துப் போய் அவனைப் பார்த்தார்.

“சர்மா ஸாரைப் பாருங்க ஸா., இன்னிக்குப் புது காட், புது பாண்ட் போட்டுண்டு வத்திருக்கார். அதுக்காக முனியாண்டியில் ஒரு பார்ட்டி, வைக்கணும்கிற அர்த்தத்தில் தமாஷாகக் கேட்டேனே தவிர, டி.ஏ. பில்லுக்காகன்னு நான் சொன்னேனான்னு கேளுங்க ஸார்… நம்ம ஆபீசில் யாராவது புது ஷர்ட் போட்டால் அன்னிக்குக் காப்பி சப்ளை அவருடையதுங்கறது பொதுவா உள்ள பழக்கம் உண்டா இல்லையான்று விசாரியுங்க சார்”

“என்ன மிஸ்டர் சர்மா?” – மானேஜர் சர்மாவைப் பார்த்தார்.

சர்மா மென்று விழுங்கினார். “நான் டி. ஏ. பில் பற்றிக் கேட்கறச்சே இவர் அப்படிக் கேட்டதைப் பார்த்து…”

“சரி சரி. நிறுத்துங்க. இதோ பார் மிஸ்டர் ஆபத்பாந்தவன்! உன் மேல் நிறைய புகார்கள் வந்திருக்கு. இன்னிலேர்த்து பில் செக்ஷனை ராமாச்சாரி பார்க்கட்டும். உன்னை ஸ்டோர்ஸ் செக்ஷனில் போடப் போறேன். பார்க்கலாம். இனிமேலாவது நீ ஒமுங்கா இருக்கியான்னு.”

“நான் ஒழுங்காத்தான் ஸார் இருக்கேன், நீங்க எந்த செக்ஷன் வேணாலும் கொடுங்க ஸார். பொறாமை பிடிச்சவங்க கோள் மூட்டிக்கிட்டும், மொட்டைப் பெட்டிஷன் போட்டுக்கிட்டும் தான் ஸார் இருப்பாங்க. இப்படியே எனக்கு செக்க்ஷன் மாத்தறதாக இருந்தால் நம்ம ஆபீசில் இருக்கிற அத்தனை செக்க்ஷனும் பத்தாது ஸார்…”

“டோன்ட் ஆர்க்யு மிஸ்டர் ஆபத்பாந்தவன்! நீ போகலாம்.”

***

ஆறு மாதங்கள் ஓடின. ஸ்டோர்ஸ் செக்க்ஷனைப் பொறுத்தவரை எந்தப் புகாரும் இல்லை, மானேஜருக்குத் திருப்தி.

அந்தத் திருப்தி குலையும் வண்ணம் தங்கமுத்து வந்து நின்றார்.

“ஸார் மன்னிக்கனும். உங்க நாலெட்ஜுக்குக் கொண்டு வரக் கூடாதுன்னுதான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன், முடியலை, ஸ்டோர்ஸ் செக்கனில் இருக்கிறாரே, மிஸ்டர் ஆபத்பாந்தவன் – அவர் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியல….”

மானேஜருக்குத் தூக்கி வாரிப் போட்டது. “ஏன் ஸார், என்ன ஆச்சு?” என்று பரபரத்தார்.

“நாங்க உங்க பீங்கான் ஃபாக்டரிக்கு சைனா களே சப்ளை பண்றோம் இல்லையா? அந்த விலைப் பட்டியல்களுக்கு இன்னும் பணம் வரலைன்னு அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் போய்க் கேட்டபோது அவர்கள், ‘உங்க இன்வாய்ஸே எங்களுக்கு இன்னும் வரவில்லை. ஸ்டோர்ஸ் செக்ஷனில் ஸ்டாக் எண்ட்ரியும், பாஸ் ஆர்டரும் போட்டப்புறம் தான் பேமெண்டுக்கு இங்கே வரும். அங்கே போய்ப் பாருங்க’ன்னு சொன்னங்க, ஸ்டோர்ஸ் செக்ஷனுக்குப் போய்க் கேட்டால், அர்ஜண்டா உங்களுக்கு பில்கள் செட்டில் ஆகணும்னா பர்சஸ்டேஜ் வெட்டுங்கன்னு பச்சையாகவே லஞ்சம் கேட்கிறார் ஸார், அந்த ஆபத்பாந்தவன்.”

மானேஜர் ஆபத்பாந்தவனை வரச் செய்தார். ஸ்டோர்ஸ் கிளார்க் வந்ததும், “இவங்க கம்பெனி பில்களைச் சீக்கிரம் ஆக்ஷன் எடுத்து அக்கவுண்ட்ஸ் செக்ஷனுக்கு டிரான்ஸ்பர் பண்றதுக்கு பர்சண்டேஜ் கேட்டாயாமே வாஸ்தவம் தானா?” என்றார்.

“அப்பட்டமான பொய் ஸார்!” – ஆயிரக்கணக்கான ரூபாய் வரவேண்டியிருக்கு. சீக்கிரம் ஆக்க்ஷன் எடுத்தீங்கன்னு பாசண்டேஜ் தரேன்னு இவர்தான் ஸார் வந்து என் காதைக் கடிச்சார். அதெல்லாம் முடியாதுன்னு நான் கண்டிப்பாக சொன்னேன். அதைத்தான் சார் உங்க கிட்டே வந்து மாற்றிக் கதை கட்டி என் மேல் அபாண்டமாக பழி சுமத்தறார்.”

மானேஜர் தலையைப் பிய்த்துக் கொண்டார். மணியை ஒலித்து ஸ்டெனோவை அழைத்தார். உடனே ஓர் உத்தரவை ‘டிக்டேட்’ செய்தார்.

***

மதிய வேளையில், ‘ஏன் மிஸ்டர் ஆபத்து! உங்கள் பில் செக்ஷனிலிருந்து ஸ்டோர்ஸுக்கு மாத்தினா, இப்போ ஸ்டோர்ஸிலிருந்து கூட மாத்தி டெஸ்பாட்ச் கிளார்க்கா டீப்ரொமோட் பண்ணிட்டாளாமே!… கொஞ்ச நஞ்சம் காசு வர்ற வழியும் குளோஸ் ஆயிடுத்து”

ஆபத்பாந்தவன் சிரித்தான். “எனக்கு அதைப் பத்தி யெல்லாம் கவலையில்லை ஸார். நான் எந்த செஷன்லேயும் தேமேன்று வேலை செய்வேன். டெஸ்பாட்ச் பண்றச்சே முக்கியமான இன்டென்ட், சாங்ஷன் உத்தரவுகள், பேமெண்ட் அட்வைஸ் போன்றவைகளை உடனுக்குடனே டெஸ்பாட் செய்துடுன்னு கம்பெனிக்காரங்க வந்து எங்கிட்டே தானாக லஞ்சம் கொடுப்பாங்க.. நான் தப்பாக விலாசம் எழுதி விட்டால் வேறு எங்காவது போய் முட்டி மோதி அலைஞ்சுக்கிட்டுத் தாமதமா திரும்பி வரக்கூடாதேன்னு பாத்து அவங்க தேடி, வத்து பர்சண்டேஜ் கொடுப்பாங்க. என்னைப் பற்றி எல்லாக் கம்பெனிக்காரர்களுக்கும் தெரியுமே! நான் வேண்டாம் வேண்டாம் னாலும் பணம் கொடுப்பாங்க. பின்னாலேயே மானேஜர் கிட்டப் போய் நான் லஞ்சம் கேட்டதாகப் பொய் சொல்லுவாங்க. என் கவலை இதுக்கு அப்புறம் என்னை மாற்றுவதற்கு நம் ஆபீசில் வேறு செக்ஷன் என்ன இருக்குன்னு மானேஜா கவலைப்படுவாரேங்கிறது தான்!…”

- 27-01-1980 

தொடர்புடைய சிறுகதைகள்
'ஹா' என்று இதயம் அதிர்ந்தது - கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து. ''மீனா!'' என்றபடி அருகில் வந்தவனை வியப்புடன் பார்த்தாள் அவள். ''நான் மீனா இல்ல அங்கிள். என் பேரு ராதா. மீனா என் ...
மேலும் கதையை படிக்க...
சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான் நாச்சான். பிறகு மெல்ல நடந்து யானை படுத்திருப்பதான தோற்றம் கொடுத்திருந்த மலைப் பாறையில் ஏறி உட்கார்ந்து மடியிலிருந்த பீடிக்கட்டை எடுத்தான். ...
மேலும் கதையை படிக்க...
``நீட்டு கையை!'' பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மீதே ஆத்திரம் எழுந்தது ...
மேலும் கதையை படிக்க...
``உம்... ஆரம்பிச்சுற வேண்டியதுதானே?'' நடுவளவு பெரிய தனக்காரர் தங்கசாமி ஊர்க் கூட்டத்தை நோக்கிக் கேட்டார். பஞ்சாயத்துத் தலைவர்களும், கூடியிருந்தவர்களில் பலரும் தலையசைத்துச் சம்மதம் தெரிவிக்க, தங்கசாமி செருமிக் கொண்டு, புங்கனூராரைப் பார்த்துச் சொன்னார்: ``ஏனுங்கோ, பிராது கொடுக்க வந்தவிய நீங்க. உங்க பிராதைச் சபையில சொல்லுங்க!'' தலை ...
மேலும் கதையை படிக்க...
சீறிச் சுழன்றடித்தது பேய் மழை. பளீர், பளீர் என்று வானத்தில் கோடிழுக்கும் மின்னல்கள், அண்டமே அதிர்கிறாற் போல இடிச் சத்தம்! நள்ளிரவில், கொட்டும் மழையில், சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு விருட் விருட்டென்று ஓட்டமும் நடையுமாக ஓர் இளம்பெண் செல்வதென்றால்..? எவ்வளவு ...
மேலும் கதையை படிக்க...
பள்ளிக்கூடத்திலிருந்து வேலை முழ்்து திரும்பிய நளினா காபி கூடச் சாப்பிடாமல் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்ததில் தாய் பங்கஜத்துக்கு மனம் தாளவில்லை; பதைத்துப் போனாள். ``என்னம்மா நளினா, தலை வலிக்குதா? தைலம் வேணாத் தடவி விடட்டுமா?'' என்று அருகில் சென்றாள். நளினாவின் ...
மேலும் கதையை படிக்க...
``நட, ஸ்டேஷனுக்கு! பெருமாள்சாமி முதலியாருக்கு அவமானமும் வேதனையும் தின்றன. ``காலையில் யாருடைய முகத்தில் முழிச்சேன்?'' யோசித்துப் பார்த்தார். ``இன்னாய்யா நா சொல்றேன், நின்னுகிட்டே இருக்கே? பொடரியில நாலு உட்டு இழுத்துட்டுப் போகணுமா?'' போலீஸ்காரர் உறுமினார். அந்த உறுமலில் முதலியார் அதிர்ந்து போனார். உள்ளூருக்கு அவர் ராஜா. ...
மேலும் கதையை படிக்க...
கூதல் காற்று சிலீரென்று முகத்தில் அறைந்தது. இருள் விலக இன்னும் வெகு நேரம் பிடிக்கும். மேல் துண்டால் காதுகளை மூடி முண்டாசு கட்டிக்கொண்டு பீடியைப் பற்ற வைத்தான் அம்மாசி. தம் உள்ளே போனதும் அலாதி சுறுசுறுப்புப் பெற்றவனாய் குடிசையின் படல் கதவைத் ...
மேலும் கதையை படிக்க...
`என்ன கொடுமை சார் இது?' - சினிமாவில் ஓர் நகைச்சுவை நடிகர் சொல்லும் வசனம் இது. அதை நானும் சொல்ல நேரும் என்று கனவிலும் நினைக்கவில்லை... பேருந்து செல்லும் மெயின் ரோடில் இருந்த பழக்கடைக்காரரிடம், ``சார், இங்கே ஒரு மசால்வடை, பஜ்ஜி விக்கிற ...
மேலும் கதையை படிக்க...
வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார் பத்துப் பேர் ஓவியத்தின் முன் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் ``ஹா!''என்றார்; இன்னொருவர், ``அடடா!'' என்று பிரமித்த பாவனையில் முகத்தில் வியப்பு ...
மேலும் கதையை படிக்க...
காத்திருந்து… காத்திருந்து…
வேட்டை
நெஞ்சில் ஒரு முள்
எழுதப்படாத தீர்ப்புகள்!
இதயம் இரும்போ!
வீரன் மகள்
செல்வாக்கு
அம்மாசியின் மனக் கணக்கு
மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்
மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)