ஜக்கம்மா சொல்றா…

 

(நந்து சுந்து நடத்தி விட்டலாச்சாரியா கதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.)

வழக்கம்போல வீட்டுக்கு வெளியே புளிய மரத்தடியில் அமர்ந்து மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார் அப்பாசாமி.

“ஷ்ஹ்ஹ்க்க்யூவ்வ்வ்…!!!” விகாரமான அப்பாசாமியின் கத்தலால் ஓடோடி வந்தாள் மனைவி .

பதறிய அம்மாமணி கணவர் நெற்றியில் புறங்கையை வைத்தாள். காய்ச்சல் இல்லை. ‘குப்’பென வேற்காததால் ஹார்ட் -அட்டாக்குமில்லை.

கை கால்கள் நடுங்க கண்கள் செருக வாய் குழறிய அப்பா சாமியை “என்னங்க” என்று உலுக்கினாள் அம்மாமணி.

“ஷ்..ஷ்..ஷ்..ஷ்…..ஊ…ஊ..ஆ..ஆ..ஆ…….. ” என்ற முனகலும் ஓய்ந்து கிலி பிடித்தாற்போல் இருந்தார்.

“அந்தீலே புளியமரத்தடீல படிக்காதீங்கனு தலபாடா அடிச்சுக்கிட்டெனே. காத்து கருப்பு அடிச்சிருச்சே” என்று நாட்டு வைத்தியர் நாடி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது மாமியார்காரி புலம்பினாள்.

“காத்து கருப்பேதான்.” என்று உறுதி செய்து மாந்திரீகம் மாணிக்கம் தான் இதுக்கு ஒரே வழி என்றாள் சாமியாடி சரசு.

“கரோனா வந்து நாளிலிருந்தே புளியமரத்தடியிலதானே பேப்பர் படிப்பாரு.. இன்னிக்கு மட்டும் காத்து கருப்பு, காட்டேரியெல்லாம் எப்படி..எனத் தொடங்கி மந்திரவாதியிடம் விவரமாக சொன்னாள் அம்மாமணி..”

கருப்புத் துணியணிந்து, பன்றித்தோல் போர்த்தி, முப்பத்தாறு கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி, தொடுக்கப்பட்ட குருத்தெலும்பு மாலை, எருக்கம்பூ மாலையுடன் கண்கள் சிவந்து, கோரைப் பற்களுக்கு இடையே தொங்கிய மாமிசப் பிண்டம் கக்கும் ரத்தத்துடனிடமிருந்த ஜக்கம்மா உருவத்தின் முன்- கபாலம் மயான சாம்பல் முடி கயிறுகள் தாயத்துகள் மை தடவிய வெற்றிலை, கண்டங்கத்தரி குளிகன், செப்புத் தகடுகள், உருவாரங்கள் இத்யாதிகளுடன், மிளகாய் புகை மூட்டத்தின் நடுவில் இருந்த மந்திரவாதிக்கு காரணம் தெரிந்து விட்டது. உடுக்கையொலியோடு “ஓம்…ஐம்…ஹ்ரீம்…க்லீம்….ஹம்….ஹிம்…ஜிம்…ரம்…….ஜய் ஜக்கம்மா…என்று இடிபோல 120 டெசிபலில் முழக்கமிட்ட மந்திரவாதி மாணிக்கம்…”ஜக்கம்மா சொல்றா…” என்று எல்லோரையும் வெளியேற்றிவிட்டு அப்பாசாமி வாத்தியாரின் காதுகளில் 30 டெசிபலில் ஏதோ முணுமுணுத்தார்.

அடுத்த நொடி “அப்படியா சந்தோஷம்” என்று குதித்து ஒரு நடனமே ஆடிவிட்டார் அப்பா சாமி.

“வாத்தியார் சாரை நியூஸ் பேப்பர் படிக்க விடாதீங்க” என்று பரிகாரம் சொல்லி அனுப்பிவிட்டார் மந்திரவாதி.

“கரோனாவால பள்ளிக்கூடப் பக்கமே போகாத அப்பாசாமிக்கு “ஜனவரி 19ல் பள்ளித்திறப்பு” ன்னு தலைப்புச் செய்தியை படிச்சதும் கிலி பிடிச்சுகிச்சு.

“ஸ்கூல் இப்போதைக்கு திறக்கமாட்டாங்கன்னு ஜக்கம்மா சொல்றா” ன்னு சொன்னதும் சுய நினைவுக்கு வந்துட்டார் வாத்தியார்”என்று மந்திரவாதி சிஷ்யனிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே…

போன மச்சான் திரும்பி வந்த கதையாய் அப்செட் அப்பாசாமியோடு வந்த கூட்டம் “வாட்ஸ்அப் பார்த்தாரு பழையபடி ஆயிட்டாரு” என்றார்கள்.

“இப்போது என்ன செய்வது?” மனசுக்குள் கேட்டுக் கொண்டான் மந்திரவாதி. 

தொடர்புடைய சிறுகதைகள்
வருகிற பொங்கலன்று அயல் நாட்டில் தொழிற் பயிற்சி பெற்ற மகனிடமும் மருமகளிடமும் கம்பெனிப் பொறுப்பை கொடுத்துவிட தீர்மானித்துவிட்டார் தொழிலதிபர் மோகனசுந்தரம். தென்னகத்திலேயே சிறந்த ‘ஆர்க்கிடெக்ட்’டை வரவழைத்து பழைய மோஸ்த்தரில் இருந்த வீட்டை ‘மாடர்ன்’ ஆக்கும் பணி விறுவிறுப்பாய் நடந்துகொண்டிருந்தது. வீட்டின் முன் பகுதியில் இருந்த ...
மேலும் கதையை படிக்க...
கங்கா மிகவும் டென்ஷனாக இருந்தாள். சமீபத்தில் பிரசவத்தின் போது இறந்த வாணி கண் முன் தோன்றினாள். தலைப் பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் என்று தன் மாமியார் கூறியது நினைவில் நிழலாடியது.. “டாக்டர்...ஒண்ணும் பயமில்லையே…” கங்காவின் உடல் நடுங்கியது. “நார்மல் டெலிவரிதான் ஆகும். ...
மேலும் கதையை படிக்க...
"ஏண்டீ வைஷ்ணவீ சோகமா இருக்கே...?" கேட்டாள் தோழி உரிமையுடன். வைஷ்ணவியின் கண்கள் கலங்கின. "சொல்லுடீ..! பிரச்சனையைச் சொன்னாத்தானே தீர்க்கலாம்..?". "என் புருஷன் விக்னேஷ் கோபிச்சிக்கிட்டு எங்கேயோ போயிட்டாருடீ...?"- கண்ணீர் பெருகியது. "கவலையை விடு..!" என்ற தோழி, அரும்பாடு பட்டு, துப்பறிந்து நேரில் சந்தித்து விக்னேஷைச் சமாதானப் படுத்தி ...
மேலும் கதையை படிக்க...
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் செயல்முறைகள் – ந.க.எண்... நாள் ... பொருள்... பார்வை... என முறைப்படி சுற்றறிக்கை தயாராகி ‘ஹார்டு காப்பி’, டாக்டர் மணிவண்ணன் மேசைக்கு வந்து அவர் அங்கீகரித்ததும், ‘சாஃப்ட் காபி’யில் ‘ஒப்பம் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்' ...
மேலும் கதையை படிக்க...
மணி இரவு 9.30. அமைச்சர் அமலனின் கார் ஊருக்குள் நுழைந்தது. பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு, வாழ்க கோஷம், கட்சிக்காரர்கள் ஷால் போர்த்தல், பத்திரிகையாளர் சந்திப்பு என எல்லா சம்பிரதாயங்களும் சமுதாயக்கூடக் கட்டடத்தில் முறைப்படி விமரிசையாக நடைபெற்றன. எல்லா வழக்கமான சடங்குகளும் முடிந்தபின். அவர் ...
மேலும் கதையை படிக்க...
சிவன் கோவில் ஸ்பீக்கரில் 'திருநீற்றுப்பதிக' சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது. "திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும். இதனால் மன்னர் நோய் நீங்கி நலம் பெற்றார்" என்றார் ஆன்மீகப் பேச்சாளர். "அப்ப... ஐந்து வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
தீபாவளி சீசன்..கடை கட்டவே நடு நிசி ஆகிவிட்டது வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது மணி 1.00. சோர்வு போக குளித்து பின் படுக்கையில் சாய்ந்தபோது மணி 2.00. எட்டு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி,டிபன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாராய் வந்தான் பூர்விகாவின் கணவன் ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று. கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
அருணும் தன் தாய்மேல் பாசத்தைக் கொட்டினான்..! கொட்டுகிறான்..! கொட்டுவான்..! இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டு வந்த பூமிகா தன்னை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கிறாள் என்பதை ஒரு சதவீதம் கூட அறியாதவன் அருண். அன்னபூரணியம்மா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள். துளசி ...
மேலும் கதையை படிக்க...
டிடக்டிவ் ஹரனுக்கும் ஹரிணிக்கும் இது தலைப் புத்தாண்டு. இரவு பதினோரு மணிக்கு ஒரு போன் வந்தது ஹரனுக்கு. "உடனடியாக ஓட்டல் அசோக், ரூம் நம்பர் 8 க்கு வா, ஒரு ஹனி ட்ராப் செய்யணும்”. போன் செய்தவன் ஹரனுடன் பணி புரியும் அவன் ...
மேலும் கதையை படிக்க...
பொங்கல் வேலை
அரைகுறை ஆன்லைன் அறிவு
கவலை – ஒரு பக்க கதை
பயிற்சிப் பட்டறை
இட்லி
விபூதிக்காப்பு – ஒரு பக்க கதை
மடிப்பு – ஒரு பக்க கதை
பூமி இழந்திடேல்
ஷெல் ஷாக்!
ஹாப்பி ஹனி ட்ராப் நியூ இயர் – ஒரு பக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)