சுட்ட கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 150,481 
 

ஐயா, விசாரனைக்காக எனச் சொல்லி அழைத்து வந்து இருக்கோம், நீங்க ஏதாவது பண்ணிடாதிங்க! என பயம் காட்டினார், பள்ளிக்கரனை காவல் நிலைய சிறப்பு எஸ்ஜ சிங்காரம்.

எஸ் பியே ஆசைப் படறாருனு, டிஎஸ்பி இன்ஸ்ட்ரெக்சன் கொடுத்து இருக்கார்,அப்புறம் என்ன? நமக்கும் நல்லதுதானே?

இருந்தாலும் தப்பு தானே? வழக்கு, விசாரனைனு .வந்தா, நாமதான் அலையனும், அவங்க ஒதுங்கிடுவாங்க! என இழுத்தார்..சிங்காரம்.

தப்புதான்! ஆனா, அவங்களே செய்யச் சொல்றாங்க,

நமக்கென்ன? நான் பார்த்துக்கிறேன். நீங்க என் கூட மட்டும் வாங்க.

அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா?

பஸ்ஸடான்டிலே, பட்டப் பகலிலே நாடமாடுவான், என் கண்ணிலே பட்டுட்டான் அதான் தூக்கிட்டேன், அவனை இன்னியோட முடிச்சு அனுப்பிட வேண்டியதுதான்.

நீங்க ஜீப்பை ரெடு பண்ணுங்க! அந்த லோக்கல் ஐட்டத்தை எடுங்க! லோடு பண்ணிக் கொடுங்க! என உத்தரவிட்டார்.

நிலைய ஆய்வாளரும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான அலெக்ஸ்.

அதிகாலை 4.30 மணி…

வா. வா, அப்துல், ஏறு வண்டியிலே!

அவ்வளவு அதுப்பா உனக்கு? கைப் பக்குவமாமில்ல உனக்கு?

கைப் பக்குவம்.

ஸ்கெட்சு போட்டா அப்படியே ரசிச்சு செய்வீங்களாமே?

அப்போ நாங்கொல்லாம் எதுக்கு? இன்றைக்கு இருக்கு உனக்கு.

ஐயா, நீங்க நினைக்கிற மாதிரி இல்ல நானு, இப்போ அதெல்லாம் செய்யறதில்லைங்க!

யாரோ தவறா தகவல் சொல்லி இருப்பாங்க, என்னைய விட்டுடுங்க, எனக் கெஞ்சினான்.

இன்னிக்குத் தெரியும் உன் வேலையால என்ன பாதிப்பு வரப் போகுதுன்னு பாரு.

கிளம்பும்போது உன் வீட்ல எல்லாம் சொல்லிட்ட இல்லே, முரட்டு காவல் துறை அதிகாரிகள் தன் தினவை குறைக்க, அந்த அப்பாவியிடம் காட்டத் துணிந்து .. ஆளில்லா காட்டுப்புதர் பக்கம் அழைத்துச் சென்றனர்.

ஐயா! இந்தப் பக்கம் ஜனங்க வருவாங்க!

அதிகாலை நேரம் நடைபயிற்சி செய்வாங்க! பயந்துடப் போறாங்க!

கொஞ்சம் தள்ளிப்போனா ஆள் நடமாட்டம் இருக்காது, அங்கே போயிடலாம்..

விடியறதுக்குள்ளே முடிச்சிடனும்.

நேராக போங்க! இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம்…

இந்த லெப்ட் எடுங்க.. அந்த புதர் மண்டியிருக்கு பாருங்க, அங்க வண்டியை மறைச்சு நிப்பாட்டிடுங்க!

நாம நடந்து போவோம், எனக் கூறி அப்துலை அழைத்துக் கொண்டு அடர்ந்து நிறைந்த காடு போல் வளர்ந்த மரத்தினூடே நுழைந்தனர்.அலெக்ஸ் மற்றும் சிறப்பு எஸ்ஐ சிங்காரம்.

அப்துல் உடல் மெத்தமும் வியர்த்து இருந்தான், என்ன கெஞ்சியும் பலனில்லை. அவர்களும் தங்கள் லட்சியத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

அப்துல் முன்னே செல்ல, இருவரும் அவனை பின் தொடர்ந்தனர்.

அடர்ந்த பகுதியில் நின்று, அப்துல் ஓடு, சீக்கிரம் என்றார்.

சார் கடைசியா ஒரு தடவை மனிதாபிமானத்தோட யோசித்து செய்யுங்க! என்றார் எஸ்ஐ.

நான் என்ன செய்ய? நாம் நமது கடமையைதானே செய்றோம். என்றார் அலெக்ஸ்.

சீக்கிரம். ஓடு..அப்துல்.

சார் வேணாம் சார்.. பாவமாத் தெரியலையா சார்..நான் புள்ளைக் குட்டிக் காரன் சார்.. எனக் கெஞ்சினான்.

நோ, சீக்கிரம் ஓடு..நேரம் ஆகுது. என விரட்டினார்.

ஓடினான் அப்துல், கையை தூக்கிக் கொண்டே அடர்ந்த புதருக்குள் ஐம்பது அடி ஓடியிருப்பான்..

ஓடும் போதே நிறைய பறவைகளும், மயில்களும் பறக்க ஆரம்பித்தன.

குறி பார்த்து சுட்டார் அலெக்ஸ்.

கதை முடிந்தது.

மக்கள் அச்சத்துடன் பார்த்தனர். நமக்கேன் வம்பு என ஒதுங்கிக் கொள்ள..

போங்க சிங்காரம் ! போய் அதை தூக்கி வண்டியிலே போடுங்க.

இந்தாங்க துப்பாக்கியை எடுத்த இடத்திலேயே, துடைத்து வச்சிடுங்க. லோக்கல குண்டு்தான்! காணலைனு எழுதிடுங்க,
நான் போய் மத்த வேலையை பார்க்கிறேன்.

சார் முடிச்சுட்டேன் சார். என்று தகவல் பறந்தது. டிஎஸ்பிக்கு.

குட் ஜாப், என்றார். நீங்க எதுவும் ஃபீல் பண்ணலையே? எனக் கேட்டார். எஸ் பி.

அதெல்லாம் ஒன்றும் இல்ல சார். இந்த எஸ் ஐ தான் கொஞ்சம் பயந்தாரு.

மத்த பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிங்க, நாங்க ஒரு மணிக்கு வந்துவிடுவோம். என்றார்.

ஓகே சார். வண்டி பறந்தது. நேராக ஓய்வு இல்லத்திற்கு

வா..அப்துல், இதுதான் நம்ம ஓய்வு இல்லம். நல்லா இருக்கா?

இதோ இருக்கு வேண்டிய சாமான்..

அதை நல்ல பக்குவமா பிரியாணி , சூப்பு எல்லாம் செஞ்சு உன் திறமையை காட்டிடு.

என்ன பன்றது, அப்துல்! மேலதிகாரிங்க ஆசைப்படறாங்க! மயில் பிரியாணி சாப்பயிடனுமாம், ஏதோ வியாதிக்கு நல்லதாம், அதுலே நீதான் பண்ணனும்னு ஆர்டர் வேற!

நல்லா பண்ணிடுங்க. நாங்க ஒரு மணிக்கு வருவோம், ஓகே எனக் கூறி விட்டு.. ஓய்வெடுக்கச் சென்றார் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் அலெக்ஸ் தனது வீட்டுக்கு.

Print Friendly, PDF & Email

ஈ.எஸ்.பீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2023

கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)