அது ஒரு பெரிய மால்.மேற்குப் பகுதியில் ஆள் நடமாட்டம் சுத்தமாக இல்லை.
ஒவ்வொரு தளத்திலும் அந்த லிப்ட் நின்று நின்று இறங்கிக் கொண்டிருந்தது.அதில் புதிதான திருமணமான இளம் தம்பதியர் மட்டும் கொஞ்சி குலாவியபடி.
………..9
………..8
………..7
………..6
………..5
………..4
………..3
………..2
………..1
………..G
கதவு திறந்ததும் யாரோ ஒரு இளைஞன் கொடூரமான கருப்புக் கலர் பேய் மாஸ்க் அணிந்து “பே…பே….பே..பே….ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா ஹா ஹ்ஹாஹா…. ஹிஹிஹிஹிஹி பே பே பே பே பே….”கொடூரமாக கத்தி பயமுறுத்திவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தான்.
மனைவி நடுநடுங்கி கைகால் உதறி வயிற்றைப் பிடித்தபடி (இரண்டு மாதம் கர்ப்பம்) மயங்கி லிப்டில் சரிந்தாள்.கணவன் வேர்த்து வெடவெடத்துப்போய் (பேய் அறைந்தால் போல்???) ஒன்றும் புரியாமல் அவளைப் பிடித்தபடி இருக்க லிப்ட் கதவு மீண்டும் மூட இடது கையால் தவறுதலாக நான் – ஸ்டாப் பட்டனை அமுக்க,
………1
………2
………3
………4
………5 (ஒருவாறு இருவரும் சகஜ நிலைக்கு வந்தார்கள்.ஆனால் லேசனா நடுக்கம் இருந்தது)
………6
………7
………8
………9
கதவு திறந்தது.கணவனின் செல்போன் அடித்தது.ஆன் செய்தான்.
“டேய்…. நாயே.. பொறம்போக்கு…எப்படி இருந்தது என்னோட கேண்டிட் ஷாக் ஷோ? ஞாபகம் இருக்கா.ஆறுமாசம் முன்னாடி ரோட்ல போற எங்க அப்பாவ மலர் டிவி கேண்டிட் ஷோன்னு திடீர்ன்னு நடுரோட்ல நாதாரி நீ பயமுறுத்தி..அவரு பயந்து போய் ஹார்ட் அட்டாக் வந்து நாலாவது நாள் இறந்துப் போனார்.அவரை நம்பி இருந்த எங்க குடும்பம் தெருவுக்கு வந்தது.”
போன் கட் ஆகியது.