இரவு பத்து மணி இருக்கும், கடைசி வேலைக்காரனும் விடைபெற்று சென்று விட்டான், வாசலில் ஒரு கூர்க்கா மட்டுமே நின்று கொண்டிருந்தான், பங்களாவில் புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி மாதவன் தூங்குவதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார்.
அப்பொழுது மணிஏறக்குறைய பதினொன்று இருக்கலாம், போன் மணி அடித்தது, அதை எடுத்தவுடன் சார்.. நான் தற்கொலை பண்ணிக்கொள்ளப்போகிறேன்..என்று விசும்பும் ஒரு பெண் குரல்…சிறிது பதட்டமானார் மாதவன்.
ஹலோ.. கொஞ்சம் அவசரப்படாதீர்கள், நீங்கள் யார் என்று சொல்லுங்கள், நான் சியாமளா..உங்களுடைய மாணவி..சியாமளா..சியாமளா..கொஞ்சம் பொறு அவசரப்படாதே, நீ எதற்கு தற்கொலை செய்து கொள்ளப்போகிறாய்? உன் பிரச்னை என்னவென்று சொல், நான் தீர்த்து வைக்கிறேன், என்னுடைய பிரச்னையை இனி யாராலும் தீர்க்க முடியாது, என்னோடு இந்த பிரச்னை முடியட்டும் குட்..பை, நில்..நில் போனை வைக்காதே நீ எங்கிருக்கிறாய்? நான் அங்கு வருகிறேன் அவசரப்படாதே, நான் வந்தவுடன் மேற்கொண்டு பேசலாம் அதன் பின் நீ என்ன முடிவு எடுத்தாலும் சரி, ப்ளீஸ் எனக்காக காத்திரு, இதோ வந்து விட்டேன், உன் தங்குமிடத்தை சொல், ஓட்டல் வைபவ் ஓகே ரூம் நமபர் 303,,இதோ வந்து கொண்டே இருக்கிறேன் படக்கென போனை வைத்தவர் மள மள வென தன்னை தயார்படுத்திக்கொண்டு கீழ்த்தளத்திலிருந்த தன்னுடைய காரை எடுக்க விரைந்தார்.
கூர்க்கா தனக்கு வைத்த சல்யூட்டை கூட கவனிக்காமல் ஓட்டல் வைபவ் நோக்கி தன் காரை செலுத்தும்போது சியாமளாவைப்பற்றி அவர் சிந்தனை விரிந்தது, சேலத்திலிருந்து சென்னைக்கு எப்பொழுது வந்தாள், அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளாள், ஆராய்ச்சி படிப்புக்கான மாணவியாக தன்னிடம் வந்தவள், ஒரு வகையில் உறவுப்பெண் கூட, இப்படி பைத்தியக்காரத்தனமாக செய்வாள் என் எப்படி எதிர்பார்க்கமுடியும்?
அதுவும் சென்னை வந்து இப்படி செய்வதற்கு என்ன காரணம் இருக்கமுடியும் என்று தெரியவில்லை? அவர் எண்ணம் அவரை விட வேகமாகச் சென்றது, ஓட்டல் வைபவ் வந்தவுடன் அவசர அவசரமாக காரை பார்க் செய்துவிட்டு ரிசப்சனில் ரூம் எண்ணை விசாரித்துக்கொண்டு வேக வேகமாக லிப்டை நோக்கிச்சென்றார்.
ரிசப்சன் சொன்ன மூன்றாவது தளம் அமைதியாக இருந்தது, ஓரிரு விளக்குகள் மட்டுமே அந்த வராந்தாவில் எரிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு அறை எண்ணாக தேடிக்கொண்டே வந்தார், அட சட் …அறையின் அமைப்பு பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணாக போகும் போலிருக்கும் போலிருக்கிறது.. சலித்துக்கொண்டார், 310..309..08..
அப்பாடா 03 வந்து விட்டது. மெதுவாக கதவை தட்டினார், பதிலில்லை, அதற்குள் ஏதாவது செய்து கொண்டாளா?…மனது பதைத்தது…மெல்ல கதவைத்தொட அது திறந்து கொண்டது உள்ளே ஒரே இருட்டு, ஹலோ.. கூப்பிட்டு பார்த்தார் யாரும் இருப்பதாக தெரியவில்லை, கொஞ்சம் முன்னேறி உள்ளே சென்றார், உள்ளே ஒரு அறை இருந்தது அதையும் எட்டிப்பார்த்துவிடலாம் என நினைத்து எட்டி உள்ளே சென்றார்.வெளியே ப்ளக்..என யாரோ ரூம் கதவை பூட்டும் சத்தம் கேட்டது, யார் யார் ? பூட்டுவது வேகமாக சென்று கதவை தள்ளிப்பார்க்க கதவு பூட்டப்பட்டுவிட்டது என்பது தெரிந்தது, பயத்தில் வேர்வை வழிந்தது.
சே ..அவசரப்பட்டுவிட்டேனோ ! யார் செய்தது இது? முதலில் பதட்டப்படக்கூடாது, தன்னை நிதானப்படுத்திக் கொள்ள வேண்டும் முயற்சித்தார்..முதலில் லைட்டை போட வேண்டும் நிதானமாக தேடினார், ஐந்து நிமிடத்தில் ஸ்விட்சை கண்டுபிடித்து போடவும் அறையில் பளீரென விளக்குகள் எரிந்தன. மின் விசிறியை சுழல விட்டு கீழிறிருந்த ஒரு சோபாவில் தன்னை இருத்திக்கொண்டு, தன்னை சமனிலைப் படுத்திக்கொண்டார். தன்னை அடைத்து வைப்பதால் யாருக்கு என்ன நன்மை?
யோசித்தார். வலது புறம் பார்வையை திருப்ப அங்கு போன் வைக்கப்பட்டிருந்தது. முகம் பிரகாசமானது, வேகமாக சென்று போனை எடுத்தார்க் ஞொய்…என்ற சப்தம் மட்டும் கேட்டது, போன் லைனையும் துண்டித்துள்ளார்கள்.செல்போன்.
இவர் தன்னைத்தானே திட்டிக்கொண்டார்.. காரில் வைத்தது ஞாபகம் வந்தது நன்றாக மாட்டிக்கொண்டேன்! இனி பதட்டப்படுவதால் எந்த பிரயோசனமில்லை, சோபாவிலேயே தன்னை சுருக்கி படுத்துக்கொண்டார்.
க்ளிக்…கதவு லாக்கர் திறக்கும் சத்தம் கேட்டவுடன் சோபாவில் படுத்த கிடந்த மாதவன் சட்டென விழித்து வாசலை பார்த்தார், எதிரில் ஆஜாபாவனாக இருவர் நின்று கொண்டிருந்தனர். சாரி சார் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துவிட்டோம், இவர் எதிரில் வந்து மணி எட்டு ஆகிவிட்டது நீங்கள் உங்கள் வீட்டுக்கு செல்லலாம், எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் அவர் தோளைதொட்டு விடைபெற்று சென்றனர்.
திக்பிரமை அடைந்து உட்கார்ந்திருந்த மாதவன் உடனே கிளம்ப ஆயத்தமானார், கதவை வெறுமனே சாத்திவிட்டு விறு விறுவென வெளியே வந்தார். கார் பார்க்கில் நிறுத்திவைத்திருந்த தன் காரை எடுத்து வெளியே வந்தார், தலையை வலித்தது இது அதிர்ச்சியினால் கூட இருக்கலாம்,எப்படியோ வீடு சென்றால் போதும் என்றிருந்தது. அவர் பங்களா முன்னால் வந்தபோது கேட் முன் இரு போலீஸ்காரர்கள் நின்றுகொண்டிருந்தனர், இவருக்கு ஒன்றும் புரியவில்லை, உள்ளே வந்தவர் அதிர்ச்சியாகி நின்று விட்டார், உள்ளே கண்ணாடி சிதறல்கள் சிதறிக்கிடந்தன, அங்கங்கு சுவர் உடைந்து காணப்பட்டது வேலைக்காரர்கள் வீட்டை சரி செய்துகொண்டிருப்பதை கண்டார்.
வெளியே ஹாரன் சப்தம்..அரசு முத்திரை செருகிய ஐ.ஜி யின் கார் உள்ளே வந்து கொண்டிருந்தது, அதிலிருந்து ஐ.ஜி இறங்கினார், ஐ.ஆம் வெரி சாரி சார் உங்களுக்கு மிகுந்த சிரமம் கொடுத்துவிட்டோம், ஆனால் வேறு வழியில்லை நேற்று இரவு தீவிரவாதிகள் உங்களை கடத்திச்செல்ல இருப்பதாக எங்களுக்கு இரவுதான் தகவல் கிடைத்தது, அது மட்டுமில்லாமல் அவர்கள் ஆயுதங்களுடன் வந்து இருப்பதாகவும் தகவல் வந்தது, அவர்களுடன் சண்டையில் ஈடுபடும்போது உங்களுக்கு ஆபத்து வர வாய்ப்பு உண்டு, அதனால் உங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த இந்த வழிமுறையை கையாள வேண்டியதாகிவிட்டது.
போன் ஏதாவது பண்ணி உங்களை நீங்களே காட்டி கொடுக்க கூடாது என்றுதான் ஓட்டலில் உங்கள் அறையில் போன் லைனையும் துண்டித்துவிட்டோம், நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் உங்கள் வீட்டிற்கு கொஞ்சம் சேதாரமாகிவிட்டது, அத எங்கள் ஆட்கள் சரி செய்து கொடுத்துவிடுவார்கள் சிரமத்துக்கு மன்னிக்கவும், மாதவனிடம் கை குலுக்கிவிட்டு விடைபெற்றுச்சென்றார்.
மாதவன் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நின்றார்.
aana kathai aasiriyar yosikra alvakku policekaranga yosipangalannu theriyala. but amazing story teller Dhamotharan.