மிடில் கிளாஸ் பிரச்னைகளும் கார்ப்பொரேட் தீர்வுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2016
பார்வையிட்டோர்: 8,618 
 

ஆடி பொறந்தாலே வீட்டிலே ஒரே குழப்பம். இந்தக் குழப்பம் இன்று நேற்று வந்ததில்லை. கடந்த 20 வருஷமாக குழப்பம் வரும், போகும். நிரந்தர தீர்வு இதுக்கு கிடையாது. ஏனென்றால் அது பற்றி அடுத்த ஆடியில் தான் பேச்சு வரும்.

என் தந்தையார் வருடாந்திர திதி தான் இந்தக் குழப்பத்திற்கு காரணம். நானும், என் மனைவியும் சென்னையில் இருக்கிறோம். எனக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் பெங்களூர். மற்றொருவர் மதுரை. என் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பே போன் பண்ணி (இப்போது போன், முன்பெல்லாம் லெட்டர் போட்டு) அவர்களுக்கு, அவர்கள் தந்தையின் திதியை நினைவூட்ட வேண்டும். முதலில் சில வருஷங்கள் அவர்கள், மனைவி, குழந்தைகளுடன் வருவார்கள். ஆவணி அவிட்டத்தை ஒட்டி சில சமயங்களில் திதி வரும் போது, திதிக்கு வந்து, பின் பூணூல் தரித்து, காயத்ரி ஜபம் முடிந்து செல்வார்கள். என் தந்தையாரையும், நமது வழக்கத்தையும் நான் ஒவவொரு முறையும் வாழ்த்துவேன்.

இது மாதிரி வழக்கம் இல்லாவிட்டால் அண்ணன் தம்பிகள் சந்திப்பதற்கு வாய்ப்பே இருக்காது. ஸ்கூல், கோச்சிங், மனைவியின் ஒத்துழைப்பு, இதைத் தவிர இப்போது சொந்தக்காரர்களை சந்திப்பதைத் தவிர்க்க காரணம் தான் வேண்டும்.

தந்தை இறந்த சில வருஷங்களுக்கு தம்பிகள் குடும்பத்துடன வந்து போவது வழக்கமாக இருந்தது.

மூன்று வருஷத்திற்கு முன்பு திதியின் முதல் நாள்வரை தம்பிகள் இருவரிடமிருந்தும், வரும் விபரம் பற்றி போன் வரவில்லை. போதாக்குறைக்கு என் வீட்டு land line வேறு ரிப்பேர் ஆகிவிட்டிருந்தது. எனவே எப்படியும் வந்து விடுவார்கள் என்றிருந்தேன். திதி அன்று காலையில் தம்பி ஒருவன் வந்துவிட்டான். அவனுக்கு Office-ல் ஏதோ inspection-னாம். நேற்று இரவு வரை வேலை செய்துவிட்டு, இரவு பஸ் பிடித்து வந்து சேர்ந்திருக்கிறான். Inspection பற்றி programme இருந்ததால், எப்படி போவது, அவர்களை எப்படி அழைத்து வருவது என்று குழம்பிக் குழம்பி, கடைசியில் தனியாக வந்திருக்கிறான். அவன் வந்த அரை மணியில் அடுத்த தம்பியும் வந்து சேர்ந்தான். அவன் மனைவிக்கு லீவு மறுக்கப்பட்டதால் அவன் மனைவியும், குழந்தைகளும் வர இயலாமல் போய்விட்டது. அந்த வருஷத்திலிருந்து திதி அன்று தம்பிகள் மட்டும் வருவது வழக்கமாகிவிட்டது.

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறேன். எனது நிறுவனத்திற்கு சென்னையிலேயே நிறைய கிளைகள் உள்ளன. எனது மனைவி இல்லத்தரசி. ஓரளவு வசதியுடன் வாழும் நடுத்தர குடும்பங்களில் எங்களுடையதும் ஒன்று.

என் மனைவி இப்போது புலம்ப ஆரம்பித்துவிட்டாள். என்ன – இப்போதெல்லாம் உங்கள் தம்பி மனைவிகள் வருவதில்லை. சிரார்த்த காரியம் எவ்வளவு கஷ்டமானது தெரியுமா? என்னாலும் முடிவதில்லை. அவர்களும் வருவதில்லை என்று முடிவாகிவிட்டது. ஏன், சமையலுக்கு ஒரு ஆளைப் போடவேண்டியது தானே. பக்கத்து வீட்டில் சிரார்த்தம் என்றால் ஒரு மாமி வருகிறார். எல்லா வேலைகளையும் அவரே செய்துவிடுகிறார். சிரார்த்தத்திற்கு வேலையும் செய்து கொண்டு, வாத்தியார் கூப்பிடும் போதெல்லாம் வருவது என்பது சமாளிக்க முடியாமல் ஆகிக் கொண்டு வருகிறது.

இந்த வருஷ சிரார்த்தத்திற்கு ஆள் போட்டே ஆக வேண்டும், என்னால் முடியவே முடியாது – தீர்மானமாக சொல்லிவிட்டாள் மனைவி. வேறு வழியில்லை. பக்கத்து வீட்டு மாமியை விசாரித்ததில் 500 ரூபாய் கேட்கிறாங்க என்றார்.

கேட்டால் கொடுக்கவேண்டியது தானே. பக்கத்து வீட்டில் கொடுக்கிறாங்க. அவங்க என்ன பொ¢ய கலெக்டரா? அவரும் உங்களை மாதிரி கம்பெனியில் அக்கெளண்டண்டாகத்தானே இருக்கிறார். அவரே 1500 ரூ. கொடுத்து சமையலுக்கு ஆள் போடும் போது உங்களாலே கொடுத்து ஆள் போடமுடியாதா? என்னைத் துளைத்தாள்.

அடுத்தவர்களைப் பார்த்து நாம் வாழக்கூடாது. நம்மால் என்ன முடியுமோ அது மாதிரி வாழ்ந்தால் நமக்கு நல்லது – நல்ல உபதேசங்கள் அவள் காதில் ஏறவில்லை. ஒரே பிடிவாதமாக இருந்தாள்.

சரி, வேறு விஷயமில்லை. அடுத்த மாதிரி வேறே எப்படி சமாளிக்கலாம்.

நான் பக்கத்து வீட்டுக்காரா¢டம் அவங்க வீட்டிற்கு வந்த மாமியின் போன் நம்பர் வாங்கி போன் பண்ணினேன். நாம கேட்கிற நாளிலே அவங்களுக்கு வேறு வேலை இருக்காம். வரமுடியாது என்று சொல்லிவிட்டாங்க.

அந்த மாமியை விட்டால் வேறே யாருமேயில்லையா? நான் இன்னிக்கே விசாரித்து ஏற்பாடு செய்து விடுகிறேன். இப்போ எல்லாம் அந்த மாதிரி மாமி கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பே புக் ஆகிவிடுகிறார்கள.

சரி முயற்சி செய். மனைவியின் முயற்சி தோற்றால் 1500 ரூபாய் லாபம். அவள் வெற்றி பெற்றால் செலவு 1500 ரூபாய்.

அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த எனக்கு என் மனைவி எனக்கு ஷாக் கொடுத்துவிட்டாள். நான் என்னுடன் குழந்தையை ஸ்கூலுக்கு கொண்டுவிடும் லதாவிடம் பேசினேன். லதா, மாமியைத் தேடுவதற்கெல்லாம் இப்போ internet வந்து விட்டது. எங்க வீட்டிற்கு வா, நானே தேடித்தருகிறேன் என்று சொன்னார்கள். நான் அவர்களது வீட்டிற்கு நாளை சென்று புக் பண்ணிவிடுகிறேன்.

சரி என்பதைத் தவிர ஒன்றும் சொல்ல முடியவில்லை. இது எங்கே, எப்படி முடியப்போகிறதோ என்ற கவலைப் பற்றிக் கொண்டது.

மறுநாள் ஆபீஸிலிருந்து வந்த என்னை ஒரே சந்தோஷத்துடன் வரவேற்றாள். நான் இன்றைக்குத்தான் Net-ஐப் பார்த்தேன். நாமும் ஒரு computer வாங்க வேண்டியது அவசியம். Net-ல் எல்லாம் இருக்கு.

சமையலுக்கு மாமி என்று போட்டால் எவ்வளவு விலாசம் வந்தது தெரியுமா? Net-ஐப் பற்றி உற்சாகமாக பேசினது என்னவோ சந்தோஷமாக இருந்தது.

லதாவே எப்படி பார்க்கிறது, எப்படி புக் பண்ணறது எல்லாம் சொல்லிக் கொடுத்தாள்.

நானும் புக் பண்ணிவிட்டேன். பணம் கூட கொடுத்தாய்விட்டது.

பணம் கொடுத்தியா? எப்படி. புரியாதது மாதிரி கேட்டேன்.

லதா கிரெடிட் கார்டில் பணம் செலுத்திவிட்டாள். நாளைக்கு லதாவுக்கு 1500 ரூபாய் கொடுத்தால் போதும்.

வொ¢ குட். அவர்கள் phone number, விலாசம் எல்லாம் கொண்டு வந்திருக்கியா?

ஹ¥ம். இதோ பாருங்க. ஒரு கார்டில் விலாசம். போன் நெம்பர் எல்லாம் எழுதிக் கொண்டிருந்தாள்.

ஒரு பக்கம் மனைவிக்கு internet-ல் தேடத் தெரிந்ததே என்று சந்தோஷம். மறு பக்கம் computer வாங்கச் சொல்லி நிர்பந்திப்பாளோ என்ற பயம். பரவாயில்லை. மனைவி முன்னேறுகிறாள் என்ற சந்தோஷம் மற்ற பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளியது.

சிரார்த்தத்திற்கு முதல் நாள் என் மனைவி, லதாவிடம் அந்த மாமிக்கு போன் பண்ணி confirm பண்ணிக்கொள். மாமி நேரத்திற்கு வரலேன்னா நமக்குத் தான் கஷ்டம், பணமும் முன்னாடியே கொடுத்தாச்சு என்று எச்சரிக்கை செய்தாள்.

போனை எடுத்து உடனேயே ஹலோ மாலதி மாமியா, உங்களுக்கு சர்வீஸ் நாளைக்கு list-லே இருக்கு. Confirmed. வரும் மாமி பேர் சாரதா. அவர்கள் contact number 97925 00000. நீங்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

மாலதிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. காசு கொடுத்தாலும் இந்த மாதிரி சர்வீஸ் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கு.

சாரதா மாமிக்கு போன் செய்தாள். சாரதா மாமி “மாலதி மாமிதானே நீங்க. உங்க அட்ரஸ் 42, 1st Main Road, New Colony, Chromepet-தானே” என்று அட்ரஸை confirm பண்ணினார்.

உங்க வீட்டிலே எவ்வளவு பேர் சாப்பிட இருக்காங்க. எத்தனை கறி, பட்சணம் நிறைய பண்ணணுமா, எல்லாம் விசாரித்து, கடைசியில் நாளைக்கு காலை 6.00 மணிக்கு வந்துவிடுவதாகச் சொன்னார்.

அப்பா, இவ்வளவு வருஷங்களிலே இந்தத் சிரார்த்தத்திற்குத்தான் நான் வேலை அதிகம் செய்யாமல் இருக்கப் போகிறேன். இது மட்டும் சரியாக workout ஆகிவிட்டால் ஒவ்வொரு வருஷமும் இந்த ஏற்பாடு தான். நாம் ஏன் உடலை மாய்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தை தம்பி மனைவிகளிடம் உடனே சொல்ல வேண்டும் என்று துடித்தாள். அவர்களுக்கு போன் செய்து இந்த தடவை சிரார்த்தம் எப்படித் தெரியுமா. நான் ஒரேயடியா செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன். மாமி போட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடிச்சுச் சொல்லிட்டேன. அதைவிட வேடிக்கை என்ன தெரியுமா. நானே லதா – உனக்குத் தெரியுமே, நம் பிரசன்னா கூட படிக்கிறானே நாராயணன். அவன் அம்மா வீட்டிற்குப் போய் internet-ல் மாமியை புக் பண்ணிட்டேன். அப்பா, மாமி ஏற்பாடு பண்ணினேனோ, பொழைச்சேனோ, இல்லை என்றால் சிரார்த்தத்திற்கு முதல் நாள் இப்படி relax-ஆக பேச முடியுமா? ஒரே டென்ஷன். வேலை கொஞ்சம் ஜாஸ்தின்னா, டென்ஷன் ஆகி 3-times tired ஆக்கி விடுகிறது

வழக்கமாக சிரார்த்தத்தன்று காலை 4.00 மணிக்கே எழுந்திருக்க வேண்டியிருக்கும். ஏதோ மறதியாய் 4.00 மணிக்கு வைத்த மொபைல் அலாரம் ஒலிக்க சிறிது புன்முறுவலுடன் அதை அமர்த்தி மீண்டும் படுக்கையில் சரிந்தாள். ஐந்து மணி, அலாரம் அடித்திருக்க வேண்டும். கண் விழித்துப் பார்த்தபோது மணி 5.30 ஆகியிருந்தது.

அடடா. கொஞ்சம் அசந்துட்டேன். அதனால் என்ன, மாமி நேத்து போனில் நீங்கள் ஒண்ணும் பண்ண வேண்டாம். நான் வந்து காய் நறுக்கி, எல்லாம் செய்து விடுவேன். ஒண்ணும் கவலைப் படாதீங்க என்று சொல்லியிருக்கிறார்.

எழுந்து, வாசல் லைட்டைப் போட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

கணவர் எழுந்த “என்ன மாமி வந்தாச்சா?” கேட்டுக்கொண்டே வந்தார்.

6.00 மணின்னா, சரியாக 6.00 மணி தானா. காலை வேளை, பஸ் கிடைக்கணும். 10 நிமிஷம் பார்ப்போம்.

மணி 6.20-ஐ காட்டியபோது மாலதிக்கு டென்ஷன் பல மடங்கு கூடியது. எவ்வளவு வேலைகள் செய்ய வேண்டும். ஒழுங்காக நாமே செய்வது என்றிருந்தால் 5.00 மணிக்கே ஆரம்பித்திருக்கலாம். அந்த மாமி. “நீங்க ஒண்ணும் கவலைப் படவேண்டாம், 6.00 மணிக்கு வந்து விடுகிறேன், என்கு இதே வேலை தான், இந்த வேலை அத்துப்படி” என்று என்னமாய் சொன்னார். இப்போது நான் என்ன பண்ணப்போறேன். எதை முதலில் செய்வது, எதை எப்போ செய்வது. ஒரே குழப்பமாக இருக்கிறது. புலம்பித் தள்ளினாள்.

என்ன இப்படி உட்கார்ந்து கொண்டிருக்கீங்க. நான் எவ்வளவு டென்ஷனில் இருக்கிறேன் தெரியுமா? 6.00 மணிக்கு வரேன்னு சொன்ன மாமி இன்னும் வரவில்லை. போன் பண்ணினா, not reachable-ன்னு வருகிறது. நீங்க பாட்டுக்கு ஹாயாய் உட்கார்ந்திருந்தால் எனக்கு எப்படி இருக்கும். கூடமாட ஏதாவது உதவி செய்யுங்க – பொறிந்துத் தள்ளினாள்.

நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லு – அதைச் செய்கிறேன் – பொறுப்புடன் ஏதாவது பேச வேண்டுமென்று, வாய்குழறி வழிந்தேன்.

பாலை induction stove-ல் வைத்து இருக்கிறேன். சூடான உடனே பொங்கி வரும். கரெக்டாகப் பார்த்து ஆ•ப் பண்ணிடுங்க. நான் குளித்துவிட்டு வந்து காபி போட்டு கொடுத்து விட்டு வேலையை ஆரம்பிக்கிறேன்.

ஏதோ இந்தத் தடவை ஆள் போட்டாச்சே, டென்ஷன் free-யாக இருக்கலாம்னு நினைச்சா, இரண்டு மடங்கு டென்ஷன் ஆகிவிட்டது. எதுக்கும் ஒரு ராசி வேணும். நான் கஷ்டப்படறதுக்குன்னுட்டு பொறந்திருக்கேன். இன்னும் எவ்வளவு கஷ்டப்படணுமோ, அவ்வளவுக்கு கஷ்டப்பட்டுத்தான ஆக வேண்டும். புலம்பிக் கொண்டே டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் செல்ல எத்தனித்தாள்.

Calling bell ஒலித்ததைக் கேட்டு கதவைத் திறந்தாள். ஒரு மாமி, நல்ல தோரணையுள்ள மாமி தான், அங்கு நின்று கொண்டிருந்தாள்.

மாலதி திகைத்து நிற்கும் போதே “நீங்க தானே மாலதி மாமி. உங்க வீட்டு சிரார்த்தம் இன்று தானே. சாரதா மாமிக்கு ஒரு emergency. அதனால் பரவாயில்லை. நான் உங்களுக்கு எல்லா வேலைகளையும் செய்து கொடுத்து விடுகிறேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம்.” என்றார்.

மாலதிக்கு மூச்சு வந்தது. ஆனால் இந்த மாமி செய்வார்களா? ஆனாலும் பரவாயில்லை. கூட செய்வதற்கு ஒரு மாமி வந்துவிட்டாரே.

ஆமாம் மாமி. வாங்கோ, வாங்கோ. நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டேன். நீங்க வந்தது பொ¢ய relief-ஆக இருக்கு. அதற்குள் மாலதியின் கணவர் என்னவென்று கேட்டுக்கொண்டு அங்கு வந்தார்.

வந்த மாமியும் “இந்த வீடு தான். Confirmed.” நீங்க போகலாம் என்று வாசலுக்கு குரல் கொடுத்தாள்.

என்ன, மாமா வந்திருக்கிறாரா? உள்ளே வரலாமே. மாலதியின் கணவன் உபசாரம் செய்தார்.

பரவாயில்லை. மாமி சொன்னார்.

என்ன நியாயம் மாமி. வீடு வாசல் வரை வந்து, உள்ளே வராமல், சட்டைக்கூட போடாமல் வெளியே ஓடிக் காரில் உட்கார்ந்திருந்தவரைக் கண்டு திகைத்தார்.

என்ன சார். நீங்களா? Please உள்ளே வாருங்கள். முதல் தடவை என் வீட்டிற்கு வந்திருக்கீங்க. உள்ளே வரலேன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன்.

சரிப்பா. நான் வரேன். ரொம்ப emotion ஆகாதே.

மாலதி, சாருக்கு ஒரு coffee போடு.

அந்த மாமியும், நான் குளித்துவிட்டு காரியத்தைப் பார்க்கிறேன். கவலையேபடாதீங்கோ. சீக்கிரமே முடிச்சுடலாம்.

மாலதி, Sir-க்கு, coffee போட்டுக்கொண்டு வந்தாள்.

சார், என் wife-மாலதி. மாலதிக்கு திடுக்கிட்டது. என்னது. coffee போடுன்னார். இப்போ அறிமுகம் வேறே.

மாலதி, சார் யார் தெரியுமா? என் office Manager…… ரொம்ப நல்லவர். Perfect gentleman.

சரி, நான் இப்போ கிளம்பலாமா. Manager சிரித்துக்கொண்டே கேட்டார்.

Yes sir, சட்டையைப் போட்டுக்கொண்டு வாசல் வரை வழியனுப்பிவைத்தேன்.

கையோடு குளித்துவிட்டு “சொல்லுங்கோ மேடம். நான் என்ன பண்ணணும். நான் தான் வழக்கமாய் மாமிக்கு உதவியாய் காய் கறி நறுக்குவேன், அரைத்துக் கொடுப்பேன். மாலதியே எல்லாவற்றையும் செய்து முடித்து விடுவாள். கூடமாட ஒரு guidance-க்காகத் தான் நாங்கள் மாமியை வைப்போம்.”

மாமி கூட போகும் போது “என்ன எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டீர்கள். உங்கள் வீடு மாதிரி நாங்க போற எல்லா வீட்டிலேயும் உதவி செய்தால் எங்களுக்கு எவ்வளவோ சுலபமாக இருக்கும்”, வழக்கமாக சொல்வார்.

மாலதி பல்லைக் கடித்துக்கொண்டு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருந்தாள்.

அப்போ ரொம்ப நல்லலதாய் போச்சு. மாமி நீங்கள் கொஞ்சம் தேன்குழலுக்கு அரைச்சுக் கொடுங்கோ.

சார், நீங்க அதிரசத்திற்கு வெல்லம் தட்டிக் கொடுங்கோ. அவசரமில்லை. காய்கறி நறுக்கியவுடன் செய்தால் போதும்.

மாமியின் சாமர்த்தியம், மாலதியின் கணவர் காட்டிய பா¢வு, மாலதிக்கு எப்படியாவது சிரார்த்தம் முடிந்தால் தேவலை என்ற ஆதங்கம். சிரார்த்த சமையல் ஒரு வழியாக சாஸ்திரிகள் சமையல் ரெடியாகிவிட்டதா என்று கேட்பதற்கு முன்பே முடிந்து விட்டது.

மாலதி “அப்பாடா” என்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

மற்றபடி சாஸ்திரிகள் வந்து வழக்கம் போல் மந்திரம் சொல்ல, மாலதியின் கணவர் ஹோமத்தீயில் ஆகுதிவிட, சிரார்த்தம் முடிந்துவிட்டது. அவ்வப்போது மாமி சிரமப்படுகிறாரா என்று கவனிக்கத் தவறவில்லை.

சிரார்த்தம் முடிந்து, “மாமி நீங்க ஏதாவது சாப்பிடுகிறீர்களா?”, பாவம், வீட்டுக்குப் போய் சாப்பிட டயம் ஆகிவிடும் இல்லையா? பா¢வுடன் விசாரித்தார் மாலதியின் கணவர்.

இல்லை, பரவாயில்லை. நான் vitamin tablets, கொஞ்சம் veg. கொண்டுவந்திருக்கிறேன். நான் manage பண்ணிவிடுவேன்.

நீங்கள் எப்படி மாமி இங்க வந்தீங்க. நான் கேட்கவேண்டும் என்று இருந்தேன்.

எல்லோருமே tension-ல் இருந்ததால் கேட்க முடியவில்லை.

அது ஒண்ணும் இல்லை. Online-ல் சிரார்த்தத்திற்கு, சமையலுக்கு மாமி ஏற்பாடு செய்யலாம் என்று ஆரம்பித்தோம். ஒரு emergency-யில் நாங்கள் ஏற்பாடு செய்த மாமி வரல்லை. அதற்காக, நாங்கள் விட்டுவிட முடியாது. ஏற்பாடு செய்து தான் ஆக வேண்டும். அதனால் நானே வந்து விட்டேன். எனக்கும் சிரார்த்த சமையல் நன்றாகவே தெரியும். என் மாமியார் எனக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்.

Very good. நல்ல business. நான் எவ்வளவு கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே 1500 ரூ கொடுத்து இருக்கிறீர்கள். இப்போ ஆட்டோசார்ஜூ் ரூ 200 கொடுத்தால் போதும்

மாலதியின் கண்களில் நெருப்புப் பொறி பறந்தது.

மாமி போவதற்காக காத்திருந்தார்.

என்னங்க இதெல்லாம்.நாம காசையும் நிறைய கொடுத்து நாமே எல்லா வேலையையும் செய்து நல்லாவே ஏமாந்துட்டோம்.

சரி விடு.எங்க பாஸ் மனைவி இந்த மாதிரி அவதாரம் எடுப்பாங்க என்று கனவிலும் நினைக்கவில்லை.இது ஒரு பாடமாகி விட்டது.அவர் போற வரைக்கும் எனக்குஒரேஉதறல்.எதாவது ஏடாகூடமா மாட்டிண்டு அவர் பாஸ் கிட்ட போட்டுக் கொடுததிடுவாரோ என்று.அப்பா நல்ல விதமாய் போய் விட்டார்.

பாடம் எனக்குத் தான்.உங்களால் இவ்வளவு வேலை செய்ய முடியும் என்று இத்தனை வருஷமாய் தெரியாமல் இருந்திருக்கிறேன்.இனிமேல் சமையலுக்கு நீங்கள் தான் உதவியாய் எல்லாம் செய்யணும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *