கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 18,920 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முருகனின் தந்தை பள்ளி ஆசிரியர். அந்தக் கிராமத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான், மாற்றலாகி வந்திருந்தார். எட்டாம் வகுப்பு வரை உள்ள அந்தப்பள்ளியில் முருகள் ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.

முருகன் படிப்பில் முதல்மாணவன். ஒழுக்கத்திலும் கூட அவன்தான் முதல் மாணவன்.

முருகனுக்கு பொய் பேசுபவர்களையும் பிறரை ஏமாற்றுபவர்களையும் கண்டால் கொஞ்சங்கூடப் பிடிக்காது.

அந்தக் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் கடை வைத்திருந்தார். அவரது கடையை விட்டால் அக்கிராமத்தில் வேறு கடைகளே கிடையாது. எந்த சாமான்கள் வாங்க வேண்டும் என்றாலும் 15 கல் தொலைவில் இருந்த டவுனுக்குத்தான் செல்ல வேண்டும்.

பொன்னுசாமி கடையில் மளிகை சாமான்கள் முதல், காய்கறி, எண்ணெய் மற்றும் ஷாப் சாமான்கள் வரை அனைத்தும் கிடைக்கும். அவர் கடையில் இல்லாத சாமாள்களே இல்லை எனச் சொல்லலாம்.

கிராமத்தில் ஒரே கடை என்பதால் அவர் கடையில் எப்போதும் கூட்டம் இருக்கும்.

பொன்னுசாமி பேராசைக்காரர். படிக்குப் பாதி இலாபம் வைத்துப் பொருள்களை விற்று வந்தார். போட்டிக்கு வேறு கடை ஏதும் கிராமத்தில் இல்லாதது அவர் காட்டில் மழைதான்.

அதிக இலாபம் வைத்து விற்பதோடு பொன்னுசாமி நிறுத்திக் கொள்ளவில்லை. பொருளில் கலப்படம் செய்து விற்றார். அரிசியில் ஏராளமான கல். மக்கிப் போன ரவை. சிக்கு வாடை வீசும் எண்ணெய், உளுத்துப் போன தானியங்கள், சொத்தையும் முற்றலுமான காய்கறிகள்.

சாமான்களில் உள்ள குறைபாடுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களிடம் எரிந்து விழுவார் பொன்னுசாமி. “இந்த பொட்டல் காட்டில் இதுனாச்சும் கிடைக்கிறதேன்னு சந்தோஷப்படுங்க” என்பார் என்னவோ இலவசமாகக் கொடுப்பது போல!

அப்படித்தான் ஒரு தடவை முருகன் வெண்டைக்காய் வாங்க பொன்னுசாமி கடைக்குச் சென்றான். வெண்டைக்காய் குவியலில் இருந்து முற்றல் இல்லாது நல்லதாகப் பொறுக்கி எடுத்து வைத்து, அரை கிலோ கொடுக்கச் சொன்னான்.

அவ்வளவுதாள். பொன்னுசாமிக்கு வந்ததே கோபம் முருகன் பொறுக்கி வைத்திருந்த வெண்டைக்காய்களை அள்ளி அப்படியே மீண்டும் குவியலுடன் சேர்த்தார்.

“தம்பீ இந்தப் பொறுக்கற வேலை யெல்லாம் இங்கே வேண்டாம். அப்படியே அள்ளிப் போட்டு அரைக் கிலோ வாங்கிக்கத் தயாராயிருந்தா, வாங்கிக்க இல்லே, நடையைக் கட்டு” என்றார் கடு கடுப்புடன்.

“ஐயா! சொத்தையும் முற்றலுமாக இருப்பதை வாங்கிச் சென்று எப்படி உபயோகிப்பது? அதனால்தான் கூடிய வரை நல்லதாகப் பார்த்து எடுத்து வைத்தேன்” என்றான் முருகன் பணிவோடு.

“வெண்டைக்காயை நான் ஒன்றும் தயார் பண்ணலே! செடியிலிருந்து கிடைக்குது. முற்றல் சொத்தைன்னு பூதக் கண்ணாடி வைச்சுப் பார்த்து தான் வாங்கலை சும்மா போலியா” என்று கடுமையாகப் பேசினார் பொன்னுசாமி.

முருகன் மனம் வெதும்பினாள். பொன்னுசாமியைப் போல் உள்ள ஏமாற்றுக்காரர்களைத் தட்டிக் கேட்போர் யாருமே இல்லையா? அவர் செய்வது தவறு என்பதை அவரே உணர்வதற்கு என்ன வழி?

நீவிர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தால் முருகள். தனக்கு உதவியாக அக்கிராமத்துப் பெரிய மனிதர்கள் நால்வரைத் துணைக்கு அழைத்துக் கொண்டாள். அவர்களைப் பொன்னுசாமி கடைக்குச் சற்று அருகேயுள்ள மரத்தடியில் நிற்கச் சொல்லிவிட்டு, தான் மட்டும் பொன்னுசாமி கடைக்குச் சென்றான். தேவைப்படும் போது முருகனுக்குத் துணை வரத் தயாராக அந்தப் பெரிய மனிதர்கள் காத்து நின்றார்கள்.

முருகனைக் கண்டதும், “தம்பீ! காலை வேளை, தகராறு ஏதும் பண்ணாமல் உனக்கு வேணுங்ககிற சாமான்களை வாங்கிக்கிட்டு போ! குத்தம் குறை சொல்லாதே. கடையிலே கூட்டம் ஜாஸ்தியாயிருக்கு” என்றார் பொன்னுசாமி.

“ஐயா, வெண்டைக்காய் அரைக் கிலோ கொடுங்கள்” என்றான் முருகன்.

பொன்னுசாமி முற்றலும், சொத்தையும், வாடலுமான வெண்டைக்காயை நிறுத்தி முருகன் வைத்திருந்த பையில் கொட்டினார். “நாலு ரூபாய் கொடு” என்றார்.

முருகன் தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு, இரண்டு ரூபாய் நோட்டுக்களைப் பொன்னுசாமியிடம் கொடுத்து விட்டு கடையிலிருந்து சற்றே நகர்ந்தான்.

“தம்பீ, தம்பீ! இந்தா இந்த நோட்டுக்கள் செல்லாது. வேறு நோட்டு கொடு” என்ற பொன்னுசாமி, முருகன் கொடுத்த நோட்டுக்களை அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.

“ஐயா என்னிடம் வேறு ரூபாய் நோட்டு இல்லையே” என்றான் முருகன்.

“இல்லையென்றால் காயை எடுத்து வை. நீ கொடுத்த நோட்டு எண்ணெய் படிந்து லேசாகக் கிழிந்திருப்பதால் அது செல்லாது. செல்லாத நோட்டை என் தலையில் கட்டி ஏமாற்றலாம் என்று பார்க்கிறாயா?” என்றார் கடைக்காரர் கடுமையாக.

“என்னங்க அரசாங்கத்தில் அச்சடிச்ச நோட்டு, நானா இதைத் தயார் செய்கிறேன்? இதைப் போய் பூதக் கண்ணாடி வைத்துப் பெரிசு பண்ணலாமா?” என்று பணிவாகக் கேட்டான் முருகன்.

“இத பாரு காலங்கார்த்தாலே தகராறு வைச்சுக்காதே! வெண்டைக்காயை வைத்து விட்டு இடத்தைக் காலி பண்ணு” என்று முருகனை மிரட்டினார் பொன்னுசாமி.

முருகன் பயப்படவில்லை. “ஐயா! செல்லாத சாமான்களையும் காய்கறிகளையும் எங்களைப் போன்ற அப்பாவிகள் தலையில் கட்டலாமா? செல்லாதது என்று இந்த ரூபாய் நோட்டுக்களை நீங்கள் வாங்க மறுத்து வேறு நல்ல ரூபாய் நோட்டுக்களை கேட்கும் போது, நாங்கள் கொடுக்கும் பணத்திற்கு நல்ல தரமான சாமான்களைத் தருமாறு கேட்பதில் என்ன தவறு? உங்களுக்கு உள்ள அதே நியாயம், எங்களுக்குக் கிடையாதா? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்” என்றான்.

மரத்தடியில் நின்று கொண்டிருந்த கிராமத்துப் பெரியவர்களும் மெதுவாக வந்து முருகனோடு சேர்ந்து கொண்டார்கள்.

பொன்னுசாமி ஒருகணம் திகைத்துப் போனார். முருகன் வயதில் மிகவும் சிறியவனாக இருப்பினும் அவளது கூற்றில் உள்ள நியாயத்தைப் பொன்னுசாமி உணரத் தொடங்கினார். அன்று முதல் பொன்னுசாமி கடையில் தரமான பொருள்கள் நியாயமான விலைக்குக் கிடைத்தன.

முருகனை கிராமத்து மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

– 1991-12-01

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *