(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
மன உறுதி உடையவர்கள் செயல்களைச் செய்யும் திறம்
“தமிழ் மன்னர்களை இகழும் கனக, விசயர்கள் சொல்லை, ஒற்றர் மூலம் அறிந்த செங்குட்டுவன் அவர்களை வென்று அடக்க வேண்டும்” என்று நினைத்தான். அச்சமயம் கண்ணகிக்குச்சிலை எடுக் கவேண்டும் என்ற அவசியமும் வந்தது. யானை யைக்காட்டி யானையைப் பிடிப்பதுபோலக் கண்ண கிச்சிலை எடுப்பதற்காகப் போய்க் கனக விசயர் களை வென்று அவர்கள் தலையிலே அந்தச் சிலை யைத் தூக்கிவைத்துத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபட்டான். இக்கருத்தைப் பின்வரும் குறளும் அறிவிக்கிறது.
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. (51)
வினையான் = செய்கின்ற தொழிலினாலே
வினை = அப்படிப்பட்ட வேறொரு தொழிலை
ஆக்கிக்கோடல் = முடித்துக் கொள்க.
நனை கவுள் = (மதத்தால்) நனைந்த கபோலத்தையுடைய
யானையால் = யானையினால்
யானை = அப்படிப்பட்ட வேறொரு யானையை
யாத்தற்று = (பிடித்துக்) கட்டியதோடு ஒக்கும்.
கருத்து: ஒரு தொழிலால் வேறொரு தொழிலை முடித்துக் கொள்ளுதல் ஒருயானையைக் கொண்டு மற் றொரு யானையைப் பிடித்ததற்குச் சமமாகும்.
கேள்வி: யானையைக் கொண்டு யானையைப் பிடிப் பதற்கு ஒப்பானது எது?
விளக்கம்: கவுள் = கன்னம். யாத்தல் = கட்டு தல். தொடங்கிய தொழிலோடு வேறொறு தொழிலையும் முடித்தற்கு உபாயமாகும் முறைகளை நினைத்துச் செய் தால் எல்லாத்தொழில்களும் எளிதிலே முடியும்.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.