கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 3,600 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

பிறர் இயல்பறிந்து அதற்கு ஏற்ப நடத்தல்

திருவாரூரில் இருந்த ஞானப்பிரகாசதேசிகரை, குருவாக அடைந்து உபதேசம்பெற்றுக் குருபணி விடை செய்து குருகுலவாசமாக இருந்தார் ஞான சம்பந்த தேசிகர். இவர்கள், பல சீடரோடு செல்லும் குருவுடன் அர்த்தசாம பூசைக்குச்சென்று திரும்பு கையில் கைவிளக்குப் பணிவிடைக்காரன் தூங்கி விட்டமையால் தாமே சென்று கைவிளக்கை எடுத்துக்கொண்டு இன்று இப்பணி தமக்குக் கிடைத்ததே’ என்று பெருமகிழ்ச்சியுடன் குருநாத னுக்கு முன் சென்சர். அப்போது உடன் வந்த பல மாணவரும் இவ்விதம் பணிசெய்யும் குணத்தில் நாம் தோற்று குருநாதர் மகிழும்படியான குணத்தில் ஞான சம்பந்தர் உயர்ந்தார். நாம் அவயவங்களாகிய கை, கால்களால் மட்டும் சமமாக இருக்கின்றோம்; இது உயர்வில்லையே என்று வருந்தினார்கள். பின் வரும் குறள் இக்கருத்துடையது.

உறுப்பொத்தல் மக்க ளொப்பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. (73)

உறுப்பு ஒத்தல் = (உயிரோடு ஒற்றுமைப்படாத) உடம்பால் ஒத்தல்
மக்கள் ஒப்பு அன்று = ஒருவனுக்கு நல்ல மனிதரோடு ஒப்பாகாமையால் பொருந்துவதன்று.
ஒப்பது ஆம் = பொருந்துவதாகிய ஒப்பாவது
வெறுத்தக்க = உயிரோடு ஒற்றுமைப்படத்தக்க
பண்பு ஒத்தல் = குணங்களால் ஒத்திருத்தல் (ஆகும்)

கருத்து: மக்கள் அவயவங்களால் அல்லாமல் குணங் களால் ஒத்திருத்தலே உயர்வாகும். –

கேள்வி: மக்கள் எதனால் ஒத்திருத்தல் வேண்டும்? ஏன்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *