கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 9,469 
 

ஷீராவஸ்தி என்ற ஊரில் ஒரு சமயம் புத்தர் தங்கியிருந்த போது அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உண்ண உணவின்றி மக்கள் வாடினர். அந்த ஊரில் பெரும் செல்வந்தர்கள் இருந்தும் உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

பஞ்ச காலத்தில் அனைத்தையும் தானம் செய்துவிட்டால், இறுதியில் நாம் பஞ்சத்தில் சிக்கித் தவிக்க நேரிடுமோ என்று நினைத்து சுயநலத்துடன் வாழ்ந்து வந்தனர்.

http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-3.jpg

ஒரு நாள் புத்தர் தன் முன்னே கூடியிருந்த பல செல்வந்தர்களைப் பார்த்து, “”கனவான்களே! பஞ்சத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களில் யாருக்குமே கிடையாதா?” என்று கேட்டார். அவர் பேசியதைக் கேட்ட செல்வந்தர்கள் அனைவரும் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தனர்.புத்தர் மீண்டும், “”ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்? உங்களில் ஒருவருக்குக் கூட பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கிடையாதா?” என்று சற்றும் உரத்த குரலில் கேட்டார்.

அப்போது —
அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி வெளிப்பட்டு, “”ஏன் இல்லை! இதோ… நான் இருக்கிறேன் சுவாமி,” என்றாள்.
புத்தர் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அந்தச் சிறுமியைப் பார்த்தனர்.
“அருகில் வா! உன்னால் என்ன செய்ய முடியும் குழந்தாய்?” என்று கேட்டார் புத்தர்.
“இவ்வூர் மக்களுக்கு என்னால் உதவ முடியும்!”
“எப்படி?”
“என் தந்தை பெரிய கோடீஸ்வரர். ஆனாலும், யாருக்கும் உதவமாட்டார். நான் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து இவ்வூர் க்களின் பசியைப் போக்குகிறேன். பிச்சைப் போடும் தர்மவான்கள் இவ்வூரில் உண்டு,” என்றாள் அச்சிறுமி. அவளது பேச்சையும், தர்ம சிந்தனையுள்ள உள்ளத்தையும் கண்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் புத்தர்.

சொன்னபடியே அச்சிறுமி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்தாள். ஒரு கோடீஸ்வர வீட்டுச் சிறுமி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுக்கிறாளே என்ற விஷயம், அத்தனை செல்வந்தர்களின் உள்ளத்தையும் தொட்டது. அவர்கள் உணவுகளையும் தானியங்களையும் அவ்வூர் ஏழை மக்களுக்கு வாரி வாரி வழங்கினர். அவர்களது தர்ம சிந்தனையால் விரைவிலேயே அந்த ஊரில் பஞ்சம் நீங்கியது. அதற்காக பாடுபட்ட அச்சிறுமி மிகவும் போற்றப்பட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *