(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
தரிக்குடி என்னும் ஊரிலே நல்லியக்கோடன் என் னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவ னுக்குப் போதிய அளவு விளை நிலங்கள் இருந்தன. அவன் இளமைதொட்டே சோம்பேறியாகிப் பழகி விட்டான். நிலங்களை ஒழுங்காகச் சாகுபடி செய்வ தில்லை. அவைகளை எப்பொழுதும் வெறுமையாகவே போட்டுவைப்பான். நல்லியக்கோடனுக்கு உறங்கு வதில் மிகவும் விருப்பம் உண்டு. உறங்கியெழுந்தால் வீணர்களோடு அமர்ந்து ஊர்க் கதை வீண்பேச்சு முதலியவைகளைப் பேசுவான்.
நல்லியக்கோடனுடைய தந்தை ஊக்கத்துடன் விளை நிலங்களில் உழைத்து வந்தபடியால், தந்தை இருக்கிறவரையில் மைந்தனுக்குக் கவலையில்லாம லிருந்தது. பிறகோ வயிற்றுப்பாட்டிற்கே திண்டாட் டம் ஏற்பட்டுவிட்டது. ஆயினும், நல்லியக்கோடன் சோம்பேறித் தன்மையை விடவில்லை. நிலங்களை வெறுமையாகப் போட்டு வழக்கம்போல் காலங்கடத்தி வந்த அவன் இறுதியில் ஐயமேற்கத் தொடங்கிவிட் டான். ஐயமேற்றுண்பதும் உறங்குவதுமாக அவன் காலங்கழித்துக்கொண்டு இருக்கும் போது ஒருநாள் ஒளவையார் ஒரு வீட்டில் அமர்ந்திருந்தார்.
நல்லியக்கோடன் ஓர் ஏனத்துடன் உணவுக்கு வந்து நின்றான். அவனுடைய உடல் போர்மறவ னுடைய உடலைப்போல் மிக ஆற்றலமைந்ததாகக் காணப்பட்டது. ஒளவையார் நல்லியக்கோடனைப் பார்த்து, “நீ யார்? ஐயமேற்கவேண்டிய காரணம் யாது?” என்று உசாவினார். அப்பொழுது அங்கிருந்த வர்கள் நல்லியக்கோடன் சோம்பேறியாக இரந்துண்டு திரிதலையும் அவனுடைய நிலங்கள் தரிசாகக் கிடத்தலையும் கூறினார்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட ஒளவையார் அவன் மீது இரக்கங்கொண்டார். “உடலாற்றல் அமைந்தவ னாகிய நீ இவ்வாறு இரந்துண்டு திரிதல் ஏற்றதன்று. பிறரை வணங்கித் தொழுது உணவினை வாங்கி உண்பதைப் பார்க்கினும், நிலத்தை உழுது பயிர்செய்து வாழ்க்கையை நடத்துதலே மிகவுஞ் சிறந்ததாகும்,”
நச்சினார்க்கினியர் நற்றமிழ்ச் சங்கம் 47 என்று அவனுக்குப் பல அறிவுரைகள் கூறி இறுதியில், ‘பூமி திருத்தியுண்’ என்று கூறினார். அன்று முதல், ‘பூமி திருத்தியுண்’ என்னுஞ் சொல் மக்களிடையே வழங்குவதாயிற்று.
“பூமி திருத்தியுண்” (இ – ள்.) பூமி – உன்னுடைய விளைநிலத்தை , திருத்தி – சீர்த்திருத்திப் பயிர் செய்து, உண் – உண்பாயாக!
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955