(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
அனுபவிக்கத்தக்க பொருள் யாவும் இல்லாமை
தருமபுர ஆதீன அடியாரில் ஒருவர் அட்சய லிங்க சுவாமிகள். இவர்கள் குருவின் சொற்படி வைத்தீஸ்வரன் கோயிலில் கட்டளை விசாரணை செய்யும் தலைவராக விளங்கினார். இவர் காலத்தில் கோவிலுக்கு உள்ள கொஞ்ச நிலத்தையும் உழ ஒரு மாடு உண்டு. மற்றொரு மாடு வாங்கப் பணம் இல்லை. பணம் இன்மையால், தாமே மற்றொருபக் கத்தில் தம்கழுத்தை மாட்டி ஏரை இழுத்தனர். யாத்திரைக்காக வந்த அரசன் நேரில் கண்டு சுவாமிகளின் சிவத்தொண்டை வியந்தான். சுவாமி களை அழைத்து இவ்விதம் செய்யக்காரணம் என்ன என்று வினாவினான். அப்போது சுவாமிகள் அரசே! மந்திர மருந்து வலிமையால் நெருப்பிலும் தூங்க எளியேனால் முடியும். இந்த வறுமைத் துன்பத்தில் தூங்கினால் கொஞ்ச நிலமும் விளையாது பாழாகுமே” என்று மாட்டிற்குப் பதிலாக நான் இழுக்கிறேன்; ஒருமாடுவாங்கப் பணமில்லாத காரணமே நான் இழுப்பது ஆகும் என்றார், இதைக் செவியுற்ற அர சன் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு, மேலும் நிலத் தையும் பொன்னையும் அளித்து வறுமையில்லாது வாழும்படியான ஏற்பாடுகளைச் செய்து சென்றான். இக்கருத்தையுடையது பின் வரும் குறள்.
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது. (78)
நெருப்பினுள் = (மந்திர மருந்துகளால் ஒருவன்) தீயினுள்
துஞ்சலும் = தூங்குதலும்
ஆகும் – = முடியும்.
நிரப்பினுள் = தரித்திரம் வந்த இடத்தில்
யாது ஒன்றும் = எது ஒன்றாலும்
கண்பாடு = தூங்குதல்
அரிது = இல்லை.
கருத்து: நெருப்பினுள் தூங்கினாலும் வறுமையில் தூங்க முடியாது.
கேள்வி : வறுமை செய்யும் துன்பத்தை வள்ளுவர் எவ்விதம் கூறியுள்ளார்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.