கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 17,358 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருத்தி மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் கொடுத்து முடித்தார்.

“இந்தக் காலாண்டுத் தேர்வைப் பொறுத்தவரை நமது வகுப்பின் முதல் மாணவன் என்ற தகுதியை பால்ராஜ் பெறுகிறாள். இரண்டாவது இடத்தைப் பெறுபவள் பரிசுத்தம். எங்கே, இருவருக்கும் உங்கள் வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்” என்று ஆசிரியர் கூறியது தான் தாமதம், மாணவர்கள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

“பால்ராஜ், எனது வாழ்த்துக்கள்” என்று கைகொடுத்தான் பரிசுத்தம்.

“நன்றி பரி. உனக்கும் எனது வாழ்த்துகள்” என்று நண்பளைப் பாராட்டிய பால்ராஜ் “உன் மொத்த மார்க் எவ்வளவு?” என்று கேட்டான்.

“எழுநூற்றி முப்பத்தெட்டு”

“என்னுடைய மார்க் எழுநூற்று நாற்பது. இரண்டு மார்க்தான் நான் கூட. அவ்வளவுதான்” என்று தனது நண்பனின் திறமையைப் பாராட்டி மகிழ்ந்தான் பால்ராஜ்.

வீட்டுக்கு வந்த பரிசுத்தம், வழக்கப்படி விளையாடப் போகாமல், தன் அறைக்குச் சென்று விடைத்தாள் மடித்த கட்டை எடுத்தான். அறிவியல் தாளை உருவி முதலில் எடுத்தான். நூற்றுக்கு அறுபத்திரண்டு மார்க் அதில், இன்னும் மூன்று மார்க் அதிகமாக வாங்கி விட்டால் வகுப்பில் அவன்தாள் முதல், பால்ராஜ் இரண்டாவதுதான்.

பரிசுத்தத்தின் தந்தை ஞானசேகர், “இந்த அரையாண்டுத் தேர்வில் நீ முதல் மாணவனாக வந்து காட்டு, கிறிஸ்துமஸுக்கு, உனக்கு நீ கேட்ட புது சைக்கிளை உடனே வாங்கித் தந்து விடுகிறேன்” என்று உசுப்பி விட்டிருந்தார்.

பரிசுத்தம் நன்றாக உழைத்துப் படிக்கக்கூடியவன்தாள். எப்படியும் மூன்று அல்லது நான்காவது இடத்தைப் பிடித்து விடுவான். அவனுக்குப் போட்டியாக வரக் கூடியவன் பால்ராஜ் தான். தந்தை சைக்கிள் ஆசையைக் காட்டி உசுப்பி விட்டதும், பரிசுத்தம் எப்பாடுபட்டாவது முதல் இடத்தைப் பெறுவது என்று உறுதி எடுத்துக் கொண்டுதான் கடுமையாகப் படித்தான். ஆனால், அறிவியல் அவன் காலை வாரி விட்டது.

விடைத்தாளைக் கையில் வாங்கிப் பார்த்ததுமே பரிசுத்தத்திற்குத் தெரிந்து விட்டது தன்னால் முதல் இடத்தைப் பிடிக்க முடியாது என்று. இரண்டு வினாக்களுக்கு அவனால் விடை எழுத முடியவில்லை.

சைக்கிள் ஆசை மனதை அடிமை கொண்டிருந்ததால், பரிசுத்தம் ஒரு மோசமான காரியத்தைச் செய்தான். தனக்கு விடை தெரியாத இரண்டு அறிவியல் கேள்விகளுக்கும் உரிய எண்களைக் கொடுத்து, விடைத்தாளில் விடை எழுத இடம் விட்டு வைத்து, மடித்துக் கொடுத்து விட்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே ஆசிரியர் அந்த இடங்களைத் தொடாது மற்ற விடைகளுக்கு மார்க் போட்டு, மொத்தமாகக் கூட்டிப் போட்டிருந்தார்!

விட்டு வைத்திருந்த இரண்டு இடங்களிலும் இப்பொழுது ‘பரபர’வென்று விடையை, குறிப்பேட்டைப் பார்த்து எழுதி முடித்தான் பரிசுத்தம். ஆசிரியர் வீடு அவனுக்குத் தெரியும். உடனே எடுத்துச் சென்று ‘சார், மார்க் போட இரண்டு வினாக்களுக்கு மறந்து விட்டீர்கள்’ என்று கேட்டு, மார்க்கை வாங்கிக் கொண்டு, முதலிடத்தைப் பெற்று தந்தையிடமிருந்து கிருஸ்துமஸ் பரிசாக புது சைக்கிளை வாங்கிவிட வேண்டியதுதான் என்று கிளம்பினான்!

தத்தை அளித்த பிறந்த தினப்பரிசை, ஏழு ஏழை மாணவர்களோடு பகிர்ந்து கொண்ட போதும், ‘சர்ச்’ ஆண்டு விழா விருந்தின் போது, மெழுகுவர்த்தி விற்கும் காலில்லாத ஏழைச் சிறுமி லில்லியை முதுகில் தூக்கி வந்த போதும் பாதிரியார் அவனை மனம் நெகிழ்ந்து வாழ்த்தி இருக்கிறார்.

“பரிசுத்தம், சில பேர்களுக்குத்தான் பெயர்ப் பொருத்தம் சரியாக அமையும். உனக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது குழந்தாய்! உன் பெயர் மட்டுமல்ல, உன் செயல்களும் கூடப் பரிசுத்தமே! கர்த்தர் உன் அருகில் இருந்து உன்னைக் காப்பார்!”.

‘அப்படிப் பல பேராலும் நல்லவனாகப் பாராட்டப்பட்ட நாம், இப்பொழுது இப்படி அசுத்தமான செயலைச் செய்கிறோமோ! இது கர்த்தருக்கு மகிழ்ச்சியைத் தருமா? அவரை மனம் வருந்த வைக்காதா?’ என்று பரிசுத்தம் தயங்கினான். ஆனாலும் மனதில் பிரும்மாண்டமாக வளர்ந்து விட்ட சைக்கிள் ஆசை எல்லாவற்றையும் விழுங்கி விட்டது! வாசல் அறையை நெருங்கியதும் ஒரு தயக்கம்.

அந்த அறையில்தான் பரிசுத்த இதயம் கொண்ட ஏசுபிரானின் கனிவு கனியும் படம் மாட்டப்பட்டிருந்தது. மார்பில் ஒளி இதயத்தோடு மிளிர்ந்த அந்தத் திருவுருவைப் பார்த்து வீட்டை விட்டு வெளியே செல்கையிலெல்லாம் அவள், “ஏசு பிரானே! உங்கள் பரிசுத்த இதயத்திற்கு அருகில் இருக்கும் தகுதி எனக்கு இருக்கிறது” என்று அருகே சென்று சிலுவைக் குறியிட்டுக் கொள்வான். இப்பொழுது அந்தப் படம் மாட்டியிருந்த அறையைக் கடக்கவே அவன் தயங்கினான்! அறிந்தே பாவமல்லவா செய்யப் போகிறான். அந்த அறை வழியாகப் போகாது, பின்பக்க வழியாக வந்து, தோட்டப் பக்கமாக சுற்றிக் கொண்டு போனான்! குற்றம் செய்யப் போகும் பாவ உணர்வு மனதை முள்ளாய் உறுத்திக் குத்தினாலும், சைக்கிள் ஆசை எல்லாவற்றையும் துரத்தி விட்டது!

அவன் போன போது ஆசிரியர் வீட்டில் இருந்தார்.

“வா பரிசுத்தம்,” என்று வரவேற்ற அவர், “இப்பத்தாள் பால்ராஜ் வந்து விட்டுப் போகிறான். நீ கூட எதிரில் பார்த்திருப்பாயே?” என்று கேட்டார்.

“இல்லையே சார்” என்றான் பரிசுத்தம்.

“பரிசுத்தம்…உனக்கு என் நல் வாழ்த்துக்கள்! ஆமாம், நீதான் முதல் மாணவன்”

புரியாமல் ஆசிரியரைப் பார்த்தான் பரிசுத்தம்.

“கூட்டிப் போடும் போது, தமிழ் விடைத்தாளில் மூன்று மார்க் அதிகம் போட்டு விட்டேனாம்! அதைக் கொண்டு வந்து காட்டி திருத்திக் கொண்டு ‘நீதான் முதல் மாணவன்’ என்பதை உறுதி செய்து விட்டுப் போனான் பால்ராஜ்.”

‘மனசாட்சிக்குப் பதில் சொல்லி முதல் இடத்தை விட்டுக் கொடுத்து தேவனுக்கு அருகே இடம் பிடித்துக் கொண்டு விட்டாள் பால்ராஜ். ஆனால் நானோ, சைக்கிள் ஆசையால் தேவனுக்கு அருகே இருந்த இடத்தைப் பறிகொடுத்து வகுப்பில் முதல் இடம் பிடிக்க வந்திருக்கிறேனே’ என்று அழுத பரிசுத்தம், மண்டியிட்டு சிலுவைக் குறியிட்டான்.

“தேவனே நான் உமக்குப் பிரியமுள்ள பரிசுத்தமாகவே இருக்க வேண்டும். சாத்தானிடம் என்னைத் தள்ளி விடாதீர்கள்”

ஆசிரியர் புரியாமல் அவனைப் பார்த்தார்.

– 1991-12-01

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *