கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 21,006 
 

அரசபுரம் என்ற ஊரில் பசுமையான வயல்களும், செல்வ செழிப்போடும் மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய குளத்தில் என்றுமே மீன்கள் நிறைந்து இருக்கும். அந்நாட்டு அரசன் ஒரு நாள் அந்த குளக்கரைக்கு வந்தான். சோர்வு மிகுதியால், அக்குளத்திற்கு சென்று முகம் கழுவினார்.

உடனே அவன் கையில் ஒரு தங்கமீன் வந்தது. அந்த மீன் பார்ப்பதற்க்கு அவ்வளவு அழகாக இருந்தது.

அந்த மீன் அரசனைப்பார்த்து பேசத் தொடங்கியது, “அரசே நான் இங்கு இருக்கப் பயமாக இருக்கிறது, யாரவது என்னை பிடித்து கொன்று விட்டால்,அல்லது பெரிய மீன்கள் என்னைத் தின்று விட்டால்,அதனால் நீங்கள் எனக்கு அடைகலம் தருவீர்களா அரசரே” என்று மீன் அரசரிடம் கேட்டது.

உடனே அரசர், “சரி நீ என்னுடன் இரு உன்னை நான் காப்பாற்றுகிறேன். இந்த ஊர் மக்களைக் பார்க்கும் எனக்கு உன்னை பார்க்க தெரியாதா? என்று சிரித்துக்கொண்டே அரசன் சத்தியம் செய்து கொடுத்தான்.

(அரசன் அந்த தங்கமீனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து ஒரு சிறிய குவளையில் போட்டு விட்டான்.)

அந்த அரசன் மிகுந்த பலசாலி, இருப்பினும் அந்த அரசனுக்கு தான்தான் அனைத்திலும் சிறந்த அரசன் என்ற கர்வம் இருந்தது.

அடுத்த நாள் அரசன் தங்கமீனைப் பார்க்க வந்தான்.

அங்கு அந்த தங்கமீன் அந்த குவளையில் இருந்து சிறிது வளரத் தொடங்கி இருந்தது. அரசன் அதனைப் பார்த்துவிட்டு “அட அடடா இந்த மீன் நேற்றை விடப் பெரிதாகக் காணப்படுகிறதே, வளர்கிறது போல சரி இந்த மீனைப் பெரிய குவளைக்கு மாற்றிவிடலாம்.” என்று நினைத்து காவலாளிகளைக் கூப்பிட்டு அம்மீனை வேறு பெரியப் பாத்திரத்தில் மாற்றி வைத்தனர்.

“ஒரேநாளில் எப்படி, இப்படி பெரிதாக வளரமுடியும்” என்று யோசித்தப்படியே அரசன் அன்று இரவு தூங்கினான்.

இராண்டவது நாள் அம்மீனைக் காண வந்தான்.

அங்கு அந்த மீன், அந்த பெரிய குவளை விடப் பெரிதாக இருந்தது. அரசனுக்கு ஓரே ஆச்சிரியம் கலந்த அச்சம். “இது ஏதோ பெரிய ராட்ஷாச மீனாக இருக்குமோ இது நம்மை அழிக்க வந்து இருந்தாள், இதனை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் யோசித்தான்.

“சரி அந்த மீனை இருந்த குளத்திலே விட்டு விடலாம்” என்று யோசித்து அதனை அந்த ஊர் குளத்திலே விட்டு விட்டு காவலுக்கு, இரண்டு காவலாளியும் வைத்து விட்டு சென்றான்.

அரசன்,” இனி நிம்மதியாக தூங்கலாம் “என்று நினைத்து உறங்கினான்.

மூன்றாவது நாள் காவலாளிகள் அரண்மனைக்கு அவசரமாக ஓடி வந்தனர்.

அரசே, அரசே அந்த பெரியக் குளத்தில் விட்டிருந்த அந்த தங்கமீன் குளத்தை விட பெரிதாக வளர்ந்து விட்டது. அந்த மீன் உயிருக்கு போராடுகிறது. மூச்சு விட முடியவில்லை உடனே குளக்கரைக்கு வாருங்கள். என்று அழைத்தனர்.

அரசன் அந்த குளத்திற்க்கு சென்றான். அந்த மீனைப்பார்த்து ஆச்சிரியப்பட்டான்.

தங்கமீனைப் பார்த்து அரசன், ‘’நீ ஏன் இவ்வளவு பெரிதாக வளர்ந்து வருகிறாய். நீ ஏதாவது பூதமா?’’ என்று கேட்டான்.

இல்லை அரசே, “என்னை காப்பாற்றுவேன் என்று எனக்கு வாக்கு அளித்து விட்டு இருக்கிரீகள் ஆனால் இப்படி என்னை காப்பாற்றாமல் யோசிப்பது சரியா! இது தான் உங்கள் சத்தியமா? என்று கேள்வி கேட்டது.

அரசன் யோசித்து, பெரிய பெரிய மீன்கள் அனைத்தும் கடலில் தான் வாழ முடியும். அங்கு இதனை விட்டு விடலாம் என்று நினைத்து கடலில் விட்டு விட்டான்

அரசன் வாக்கையும் தன் கர்வத்தையும் நினைத்து பார்த்தான். “ஒரு வேலை நாளை அந்த மீன் கடலைவிடப் பெரிதாக வளர்ந்தால், நான் என்ன செய்வது என்று” நினைத்து, குழப்பதுடன் இருந்தான்.

மறுநாள், அரசன் கடலுக்குச் சென்றான். அந்த மீன் அரசன் நினைத்தப்படியே கடலை விடப் பெரிதாக மாறி இருந்தது. அரசன் பயந்து போய், தன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

உடனே அந்த தங்கமீன் ஒரு தேவதையாக மாறி அரசன் கண்முன் தோன்றியது. அந்த தேவதை, “அரசே நான் உனக்கு பாடம் புகட்டவே இப்படி செய்தேன். கர்வத்துடன் எந்த அரசனும் ஆட்சி செய்யகூடாது” என்று கூறி, அரசன் தன் தவற்றை உணர்ந்ததால் வாழ்த்தி ஆசிர்வாதமும் அளித்தது.

கரு: கர்வம் நிறைந்த அரசனுக்கு பாடம் புகட்டவே அத்தேவதை, தங்கமீன் வடிவில் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *