(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பலகுணங்களாலும் நிறைந்து ஆளும் தன்மை
7-11-1873-இல் ஸ்ரீ மாணிக்கவாசக தேசிகர் 17-வது தலைவராகத் தருமபுர அருளாட்சியை நடத் தும் பெருமையைப் பெற்றார்கள். “இவர்களுக்குத் துன்பம் செய்து இப்பதவியிலிருந்து விலக்கவேண் டும்” என்று அருணந்தி சுவாமிகள் 1875-இல் வழக் குத் தொடுத்தார்கள். அவ்வழக்கில் அருணந்தி சுவாமிகள் தோல்வித் துன்பத்தையும், தேசிகர் அவர்கள் வெற்றி இன்பத்தையும் அடையும்படி சென்னை உயர் நீதி மன்றத்தார் தீர்ப்பு அளித்தனர்.
இவ்விதம் தமக்குத் துன்பம் செய்த சுவாமிகளுக்குப் பின் தேசிகர் அவர்கள் “நாம் இன்பம் தரும் செய லையே செய்ய வேண்டும்” என்னும் பெருங்கருணை கொண்டு தம்வசத்தில் இருந்து நடத்தப்பட்டு வந்த பிரெஞ்சு இலாக்காவிலுள்ள சேத்தூர் கிராம நிர் வாகத்தை அவர்களுக்குக் கொடுத்து அவர்களே அவைகளுக்குத் தலைமை வகித்து அரசு செய்து வரும்படியாகக் கருணை செய்தார்கள். இவ்விதம் தமக்குத் துன்பம் தரும் செயல்களைச் செய்தவர்க் கும், தாம் தமது நற்குண நிறைவால் இன்பம் செய் தார்கள். இக்கருத்தை உடையது இக்குறள்.
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (72)
இன்னா = (தமக்குத்) துன்பம் தருவனவற்றை
செய்தார்க்கும் – = செய்த வருக்கும்
இனியவே = (நற்குணமுடையவர்) இன்பம் தருவன வற்றை
செய்யாக்கால் = செய்யாவிட்டால்
சால்பு = (அவருடைய) நற்குணங்களுடைமை
என்ன பயத்தது = வேறு என்ன பயனையுடையது.
கருத்து: நற்குணம் நிறைந்தவர் துன்பம் செய்தவர்க் கும் இன்பம் செய்வர்.
கேள்வி: துன்பம் செய்தவர்க்கு எதைச் செய்தவர் சான்றோர் ஆவர்?
ஓ – அசை .
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.