“போய் வருகிறேன் அம்மா” என்றான் வீரன். “போய் வா, ஆனால், கொள்கையை மறந்துவிடாதே” என்று சொல்லிக் கொண்டே வழி கூட்டி அனுப்பினாள் தாய்.
கூரிய வேலை கைப்பிடித்தான். புலி போன்று போர்க்களம் புகுந்தான். பகை வீரர் பெருங்கடல் போல் சூழ்ந்தனர். முன்னணிப் படையைப் பிளந்து ஊடறுத்துச் சென்றான். பகைக் கூட்டம் பிணக் குவியல் ஆனது. ஐயோ, அந்த மறவனும் பட்டு வீழ்ந்தான். பகைவரால் சிதைக்கப்பட்டான்.
போர்க்களம் சென்றாள் மறத்தி. சிதைந்து கிடந்த மகன் உடலைக் கண்டாள். தன் கொள்கை தவறாத குமரனுடைய தாய் என்பதாலே பெருமிதம் கொண்டாள். மகிழ்ச்சிப் பெருக்கால், வற்றிய மார்பில் பால் சுரந்தது.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்