கீரஞ் சாத்தன் ஒரு குறுநில மன்னன். அவனைப் பார்க்கச் சென்றார் ஆவூர் மூலங்கிழார். சாத்தன் பண்பு அவர் நெஞ்சைக் கவர்ந்தது.
கீரஞ்சாத்தன் உண்ணும் போது யாரேனும் போனால் இழுத்து உட்கார வைப்பான். இலை போடுவான். சோறு வைப்பான். உண்ணும்படி வற்புறுத்துவான். வந்தவர் உண்ட பின்னரே தான் உண்பான்.
போர்க் களத்தில் முன் நிற்பான். வீரர் சிலர் கள் குடிக்கும் போது வீரம் பேசி விட்டு களத்தில் புறங்காட்டி ஓட முயல்வர். கீரஞ்சாத்தன் அவர்களுக்கும் அரணாக நிற்பான். பகைவரையும் வெல்வான்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்