கில்லாடி பூனையின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 9,151 
 
 

அமெரிக்காவில் உள்ள ஜான் என்பவரின் செல்லப் பூனையான கார்ஃபீல்டும், லண்டனில் உள்ள ஒரு பணக்கார ஸ்வீட்டுப் பூனையான ப்ரின்ஸ§ம் இடம் மாறுவதால் ஏற்படும் கலாட்டாக்களே கதை. நம் தமிழ் சினிமாவில் வருவது போலத்தான். இருந்தாலும் இடம் பெயர்வது பூனைகள் என்பதால் சுவாரஸ்யம் அதிகம்.

ப்ரின்ஸ், லண்டனில் உள்ள ஒரு கோடீஸ்வரியின் செல்லப் பூனை. அவர் இறந்த பிறகு தன் வளர்ப்பு மகன் டர்கீஸ§க்கு எந்த சொத்தையும் எழுதி வைக்காமல் ப்ரின்ஸ§க்கு எழுதிவைக்கிறார். இதனால் கோபமடையும் டர்கீஸ் ப்ரின்ஸைக் கடத்திக் கொண்டுபோய் ஆற்றுக்குள் போடுகிறார்.

லண்டனுக்கு வரும் ஜானுக்குத் தெரியாமல் அவனது பையில் உட்கார்ந்து கொள்கின்றன அவனது வளர்ப்பு நாயும், கார்ஃபீல்டு பூனையும். இரண்டையும் பார்த்த பிறகு அவற்றுக்கு உணவு கொடுத்துவிட்டு அறைக் கதவைப் பூட்டிவிட்டுச் செல்கிறான் ஜான். லண்டனை சுற்றிப் பார்க்கும் ஆசையில் அங்கிருந்து வெளியே வருகிறது கார்ஃபீல்ட்.

ப்ரின்ஸை கார்ஃபீல்ட் என்று நினைத்து ஜான் தூக்கிச் செல்ல, கார்ஃபீல்டை ப்ரின்ஸ் வீட்டு வேலைக்காரர் தூக்கிச் செல்கிறார்.

ப்ரின்ஸின் வீட்டில் உள்ள செல்வச் செழிப்பில் ஆட்டம் போடுகிறது கார்ஃபீல்டு. டர்கீஸ் அந்த வீட்டில் உள்ள நாய், கிளி, மாடுகள் என எல்லா உயிரினங்களையும் துரத்த வேண்டும் என்று நினைக்கிறான். இந்தக் காரணத்தால் கார்ஃபீல்டை ப்ரின்ஸ் இல்லை என்று தெரிந்தும்கூட விட்டுவைக்க முடிவு செய்கின்றன மற்ற மிருகங்கள்.

டர்கீஸ் கார்ஃபீல்டைக் கொல்ல மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் என்ன பிரச்னை என்று தெரியாமலேயே தோல்வி அடைய வைக்கிறது கார்ஃபீல்ட்

ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து அங்கே உள்ள மற்ற உயிரினங்களும் தன்னை ‘பலிகடாவாகப் பயன்படுத்துவதைப் புரிந்து கொள்ளும் கார்ஃபீல்ட் அங்கிருந்து செல்ல நினைக்கிறது.

அதே நேரத்தில் ஜானை ஏமாற்றி ப்ரின்ஸ் தன் கோட்டைக்கு வருகிறது. இரண்டும் சந்தித்த பிறகு டர்கீஸை எதிர்க்க எல்லா விலங்குகளும் ஒன்றுபடுகின்றன. கார்ஃபீல்டைத் தேடி ஜானும் அங்கு வர டர்கீஸை துரத்தி அடிக்கிறார்கள்.

ஜிம் டேவிஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் உருவாக்கிய பிரபலமான கதாபாத்திரம் இந்த கார்ஃபீல்ட். 25 பூனைகளுடன் ஒரு பண்ணை வீட்டில் வளர்ந்த ஜிம் 1978&ம் ஆண்டு உருவாக்கிய ‘காமிக் ஸ்ட்ரிப்’ தொடரின் நாயகன் இது. ரொம்ப செல்லமாக, நிறைய சோம்பேறியாக வளரும் அழகுப் பூனை இந்த கார்ஃபீல்ட். இப்போது கிட்டத்தட்ட 2,500 பத்திரிகைகளில் கார்ஃபீல்ட் கார்ட்டூன் வெளி வருகிறது.

வெளியான தேதி: 16 நவம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *