கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,575 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

நாட்டிற்குரிய பாதுகாப்புகள்

பாரி அரசுசெய்த பறம்பு நாட்டின் அரண், பரந்த இடத்தை உடையதாய்ப் பகைவர் உள் நுழையாதவாறு காக்கும் இடம் சிறியதாயும் அமைந்திருந்தது. இவற்றால் – இவ்வரணைச் சூழ்ந்த வலிமையுள்ள சேர சோழ பாண்டியர் ஆகிய மூன்று பகைவரும் உள்ளே செல்ல முடியாமையால் தம் மனக்கிளர்ச்சி குன்றினர். “இவ்விதம் வல்லமை பொருந்தி, பகைவரின் மனக்கிளர்ச்சியை அழிப் பதே அரணாகும்” என்று வள்ளுவரும் கூறினார்.

சிறு காப்பிற் பேரிடத்ததாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண். (56)

சிறுகாப்பின் = காக்கவேண்டும் இடம் சுருங்கியதாயும்

பேர் இடத்தது ஆகி = பரந்த இடத்தை உடையதாய்

உறுபகை = தன்னைச் சூழ்ந்த பகைவரது

ஊக்கம் = மனஎழுச்சியை

அறிப்பது = கெடுப்பதே

அரண் = மதிலாகும்.

கருத்து: காக்குமிடம் சிறியதாய்ப் பரந்த இடமுடையதாய்ப்பகைவர் வலிமையைக் கெடுப்பதே அரணாகும்.

கேள்வி: எவைபொருந்திய அரண் சிறந்த அரணாகும்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *