அன்னம் செய்த உதவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 9, 2013
பார்வையிட்டோர்: 11,618 
 

பால்காரர் ஒருவர் இருந்தார்;;;;;;;. அவரிடம் நிறைய கறவைமாடுகள் இருந்தன. கறந்தபாலை அவர் தினமும் தான் வசிக்கும் கிராமம் மற்றும் அக்கம்பக்கம் ஊர்களுக்குக் கொண்டு சென்று விநியோகம் செய்துவந்தார். அவரிடம் வழக்கமாகப் பால்வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மனக்குறை இருந்தது. அவர் ஊற்றும்பால் தண்ணீராக இருக்கிறது என்பதுதான் அந்த மனக்குறை. உண்மைதான்;. பால்காரர் அதிகஇலாபத்திற்கு ஆசைப்பட்டு பாலில் நிறையத் தண்ணீர் கலந்து விற்றார். இதற்காக அந்த வாடிக்கையாளர்கள் அவரைத் திட்டுவார்கள்;. அடிக்கடி சண்டை பிடிப்பார்கள்;;;. பால்காரர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். காரணம் கறவைமாடுகளை வைத்து பராமரித்து பால்ஊற்ற அந்தப் பகுதியில் இவரை விட்டால் வேறுஆள் கிடையாது. தொழிலில் போட்டி கிடையாது. அதனால் அவர் இறுமாப்பிலிருந்தார்.

பால்காரரின் மனைவி புனிதவதி இல்லத்தரசி;. சிறந்த குணவதி. அவளுக்குத் தன் கணவரின் செய்கை அறவே பிடிக்கவில்லை. கொள்ளை இலாபத்திற்கு ஆசைப்பட்டு அவர் முறையற்ற வணிகம் செய்கிறார் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவள் அவருக்கு அடிக்கடி அறிவுரை சொல்வாள். பால்காரர் அந்த அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார். “தண்ணி கலக்காம பால்வியாபாரம் பண்ணுனா கிடைக்குற காசு மாடுகளை பராமரிக்குறதுக்கே பத்தாது! இதுல வீட்டுச்செலவுக்கு என்ன பன்றதாம்! இது வியாபார விசயம்! இதுல தலையிடாத!”- என்று சொல்லி அவளின் வாயை அடக்கி விடுவார். ஆனால் பால்காரர் சொல்வது உண்மை கிடையாது. வீட்டு வரவுசெலவு கணக்கு அனைத்தையும் நிர்வகிப்பது புனிதவதிதான்;. அவளுக்கு நன்றாகத் தெரியும்;. ஆரம்பகாலத்தில் அவள்கணவன் இந்தத்தொழிலை நேர்மையாகத்தான் செய்து வந்தான். அதில் கிடைத்த வருவாயைக் கொண்டுதான் இப்போது அவர்கள் குடியிருக்கும் இந்த வீடு வயற்காடு என்று அனைத்தையும் வாங்கினார்கள். ஆனால் இப்போது பேராசைத் தன் கணவனின் கண்களை மறைக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் அவள்.

ஒருநாள் புனிதவதி தனது கணவனை எண்ணி மிகுந்த மனவிசனத்துடன் தன்வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது அவள் அருகே அன்னப்பறவை ஒன்று வந்தமர்ந்தது. அது தேவதையின் அருள்பெற்ற அன்னம்;;;. மனிதர்களில் நல்லவர்கள் கண்களுக்கு மட்டும் அது காட்சி அளிக்கும்;. இப்போது அது புனிதவதிக்குத் தென்பட்டது. தனதருகே அன்னப்பறவையைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள் புனிதவதி. அது அவளிடம் கவலைக்கான காரணத்தைக் கேட்டது. அவளும் சொன்னாள். “கவலைப்படாதே! உன் கணவனை நல்வழிபடுத்த வேண்டியது என் பொறுப்பு!”- என்ற அன்னம் அவளது காதில் ஏதோ கிசுகிசுத்துவிட்டுப் போனது.

கறந்தபாலை கேனில் ஊற்றி வியாபாரத்திற்கு எடுத்துச்செல்லும் முன்னால் வாய்அகன்ற பாத்திரத்தில் தண்ணீரோடு கலந்துவைப்பது வழக்கம்;;. அவ்வாறே ஒருநாள் செய்துவிட்டு குளிக்கப்போனார் பால்காரர்;. வந்துபார்த்த போது பாத்திரத்தில் தண்ணீர் மட்டும் இருந்தது. பால்காரருக்கு அதிர்ச்சி. அது எப்படி கறந்தபால் காணாமல் போகும்? பிடித்துவைத்த தண்ணீர்மட்டும் அப்படியே இருக்கும்? ஒருவேளை புனை நாய் ஏதேனும் வந்து குடித்திருக்குமோ? அப்படிக் குடித்திருந்தால் பால் சிந்தியிருக்கும்;. ஆனால் ஒருதுளி பால்கூட சிந்தியதற்கான அறிகுறி தென்படவில்லை. அப்படியே அவைகள் குடித்திருந்தாலும் தண்ணீரையும் சேர்த்துதான் குடித்திருக்க முடியும்;. பாலைமட்டும் தனியே பிரித்துக் குடித்திருக்க முடியாது. அவருக்குத் தன்மனைவியின் மீது சந்தேகம் வந்தது. பாலில் அவர் தண்ணீர் கலப்பது பிடிக்காமல் அவள்தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று எண்ணினார்;. மனைவியிடம் கேட்டார்; தான் வாசல்பக்கம் வரவேயில்லை என்று சத்தியம் செய்தாள் புனிதவதி.

Annaparavaiஉண்மையில் நடந்தது இதுதான்;. அன்னப்பறவைகளுக்கு பாலையும்நீரையும் தனியேபிரித்து அருந்தும் ஆற்றல் உண்டு என்பார்கள். இது ஒரு வழக்கு. அதிலும் இது தேவதையின் அருள்பெற்ற அன்னம் அல்லவா? பால்காரர் குளிக்கச் சென்ற நேரத்தில் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் தனியேபிரித்து உறிஞ்சிவிட்டது. பால்காரர் தவறு செய்பவர் தீயவர் என்பதால் அன்னம் அவரின் கண்களுக்குத் தென்படவில்லை. அடுத்தடுத்த நாட்களிலும் அன்னம் இவ்வாறே செய்ய பால்காரர் குழம்பிப் போய்விட்டார்.

ஒருநாள் வழக்கம்போல் தண்ணீர் கலந்தபாலை வாசல் அருகே வைத்தார். குளிக்கச்செல்வது போல் பாசாங்கு செய்துவிட்டு ஓரிடத்தில் மறைவாய் நின்று கொண்டார். அவருக்குத் தன்மனைவியின் மீதுதான் சந்கேம். அவள்தான் ஏதோ செய்கிறாள் என்று உறுதியாக நம்பினார். புனிதவதியோ வாசல்பக்கம் எட்டிப்பார்க்கவேயில்லை. ஆனால் பாத்திரம் மட்டும் இலேசாக ஆடுவது போலிருந்தது. கையம்களவுமாய் பிடித்து விடுவது என்பதுபோல் ஓடிவந்தார் பால்காரர். பாத்திரத்தின் விளிம்பில் அமர்ந்து பாலைப்பருகிக் கொண்டிருந்த அன்னம் இவரைக் கண்டதும் விசுக்கென்று பறந்து போனது. இவருக்கு அன்னப்பறவை கண்ணுக்குத் தென்படவில்லை. ஆனால் தன்அருகில் காற்றில் சலனம் ஏற்பட்டதை தெளிவாக உணர்ந்தார். அது அன்னப்பறவை தனது இறகுகளை அசைத்ததால் உண்டான சலனம்;. பாத்திரத்தில் வழக்கம்போல் பால் காணாமல் போயிருந்தது; தண்ணீர் மட்டும் இருந்தது.

பால்காரர் பயந்து போனார். ஏதோ ஒரு சக்தி தன்தவறைத் தண்டிக்க பாலைமட்டும் தனியே எடுத்துக்கொண்டு போய்விடுகிறது. அன்னப்பறவைகள் அவ்வாறு பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் என்று சிறுவயதில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறார். ஆனால் நிஜத்தில் அத்தகைய ஆற்றல்கொண்ட அன்னப்பறவையை அவர் கண்டதில்லை. அப்படியானால் இது தெய்வசக்தியாகத்தான் இருக்க முடியும் என்று அவர் நம்பினார். மறுநாள் வியாபாரத்திற்குத் தண்ணிர் கலவாத பாலை எடுத்து வைத்தார். என்ன ஆச்சரியம்? ஒரு சொட்டுபால் கூட குறையாமல் இருந்தது. இனி தவறு செய்யக்கூடாது என்று நினைக்க ஆரம்பித்து விட்டார் அவர்.

கணவனின் மனஓட்டத்தை புரிந்துகொண்ட புனிதவதி அவரிடம் மெல்லப்பேச்சுக் கொடுத்தாள். “பாலுக்கு விலை கட்டுபிடியாகாதுன்னு நினைச்சீங்கன்னா வழக்கமா ஊத்துற வீடுகள்ல்ல போயி கூடுதலா விலை நிர்ணயம் பண்ணிக் கேளுங்க! கண்டிப்பா ஒத்துப்பாங்க! பொருள் தரமா இருந்தா யாரும் விலை கொஞ்சம் கூடுதலா இருந்தாலும் யோசிக்க மாட்டாங்க!”- என்றாள். பால்காரரும் தான் வழக்கமாக ஊற்றும் வீடுகளுக்குச் சென்று கறவை மாடுகளை வைத்துப் பராமரிப்பதில் உள்ள சிரமங்களை எடுத்துக்கூறி சற்று விலையேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார். என்ன ஆச்சரியம்? அநேகமாக எல்லா வீடுகளிலும் அதற்கு ஒத்துக்கொண்டார்கள். தரமான பால் நியாமான இலாபம் என்று நேர்மையாய் தன் வியாபாரத்தைத் தொடர்ந்தார் பால்காரர்;. தன்னைத் திருத்த மனம் தளராமல் போராடிய தன்மனைவிக்கு நன்றி சொன்னார் பால்காரர்;. தன் கணவரைத் திருத்த தனக்கு உதவிய அன்னத்திறகு நன்றி சொன்னாள் புனிதவதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *