விரும்பிய சந்திப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 23,483 
 
 

ஞாயிற்றுக் கிழமை,’கொஞ்சம் நேரம் நித்திரைக் கொள்வோம்’எனக் கிடந்தவனை,காலை ஒன்பது மணி போல தொலை பேசி எழுப்பியது.அண்ணரின் குரல்”டேய் திலகு,முக நூலில் முபாரக் அண்ணை தட்டுப்பட்டார்.பேர்ச்மெண்ட் அன்ட் லோரண்ஸ்சிலே இருக்கிறார்.இப்ப தான் தான் போனிலே கதைச்சுப் போட்டு அடிக்கிறேன்.பின்னேரம் போல போய் பார்ப்போமா?”கேட்டான்.”எந்த முபாரக்?”தூக்கக் கலக்கத்தில் கேட்டான்.”ஆச்சி வீட்ட ரவியிட நண்பர் செட்டிலே வருவாரே?”

அட,கிருஸ்துக்கு முன்னான‌ அண்ணர்.

அவனுக்கு பத்து,பதினொன்று வயசிலே…அவனுடைய அக்கா இருவருக்கு டியூசன் பாடம் எடுத்தவர்.துள்ளி எழுந்தான்.அவர் தாவரவியலிலும்,விலங்கியலிலும் எ. பிரிவிலேயும்,இரசாயனவியல் பி.தரத்திலும்,பெளதிகவியலில் எவ்’ எடுத்து மண்ணை கவ்வியும் விட்டார்.கல்வியில், அமுலுக்கு வந்த தரப்படுத்தல் சட்டங்களில் அகப்பட்ட முதல் பட்ஜ்ஜினர்.அதிக புள்ளி எடுத்தால் தான் கம்பஸ்ஸில் படிக்கலாம் என்ற நிலையில் அதிக டென்சனில் மற்றப் பாடங்களில் கவனம் செலுத்தியதால் ,கணித அடிப்படைக் கொண்ட பெளதிகவியலில் தேற முடியவில்லை.ரவியும்,முபாரக்கும் இந்துக்கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். ரவியின் நிலையும் அது தான் .

அயலுக்க இருந்த‌ கேதீஸ்ஸும் முல்லையும் சென்றல் கல்லூரியில் படித்தவர்கள்.எல்லாருமே இரண்டு மூன்று பாடங்களில் …உயர் தரத்தில் தேறியும்,ஒரு பாடம் சாதாரணத் தரத்தில்,அல்லது அதற்கும் கீழே…போய் விழ‌,யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்ட புள்ளிகளைப் பெறத் தவறி விட்டவர்கள். ஒன்றாய் வாழ்வே மாயம் பாடிய பட்ஜ். அதற்குப் பிறகே கூட்டாய் திரிய வெளிக்கிட்டவர்கள்.

நல்ல காலம்.கோபம்,ஆத்திரம்.சதா குமைந்து கொண்டே இருந்தது தவிர‌ மனநிலை பாதிக்கப்படவில்லை.

நாம் என்ன தான் செய்ய முடியும்?

இயற்கை வளம் கொழிக்கிற அழகிய தீவான இலங்கையை முழுமையாக‌சொந்தம் கொண்டாட நினைத்த மிலேச்சவர்களால்…கர்மபூமியாகி விட்டது..

சிங்கள‌ கர்மக்காரையர்கள் இலங்கை மீது பதித்த கொடுக்கை எடுத்து விட்டார்களானால்…எல்லோரும் பிழைப்பார்.இல்லையானால்…ஒரு மண்ணு கூட மிஞ்சாது போலப் படுகிறது.

சிறிமாவின் தரப்படுத்தலால் பையித்தியமாகிக் கிடந்த பெடியள்களிலி ருந்து சிலரே மீண்டு வந்தார்கள்..சிலர் மீளவே இல்லை இலவசக் கல்வி ஒன்றும் நல்லதில்லை போலவே படுகிறது.அது சிங்கள மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது என்பதாலே…பிரச்சனைப்படுகிறது,‘விவகாரம்’ பிடித்ததாக உருவெடுக்கிறது. பிரித்தானியக் கல்வியைக் கற்பது மட்டுமே வாழ்க்கையாகி சீரழிந்திருக்கிறோமா, என்ற போக்கிலும் சந்தேகங்கள் ஏற்படத் தொடங்கி இருக்கின்றன‌.கற்றப் பிறகும், என்ன அதன் தொடர்ச்சியாகவா வேலை கிடைக்கிறது?

எங்களுகென்று சுயமான பாரம்பரியமான கல்வி முறையும் இருந்திருக்கிறதே! டிஜிற்றல் இல்லாத காலத்திலேயே கடலையும் கலக்கி, திரிந்து இருக்கிறோமே கப்பல்கள் கட்டுவதிலும் திற‌மையாக இருந்திருக்கிறோம். அதாவது தொழிற்கல்வியிலும் சிறப்புற்றிருக்கிறோமில்லையா ஒரு பார்வையில் பார்க்கிற போது,சாதி முறைகள்,தொழில்களை வளர்க்க ஏற்படுத்தப்பட்ட சங்கங்கள் போலவும் தோற்றமளிக்கவில்லையா?பிறகு,அவ‌ற்கு பேதங்களைப் புகுத்தி குழப்பியடித்தது போலவும் இருக்குதல்லவா?காண்டில்யன்,கல்கி…முதலான எழுத்தாளர்கள் எழுதுகிற சரித்திரக் கதைகளில் சாதிகளிற்கு உயர்வு,தாழ்ச்சி …இல்லாதிருப்பது போல காணப்படுகிறதே…!வள்ளியை மண‌முடித்த முருகன் வேடன்,நாயன்மார் கதைகளில் வருகிற அடியார்கள் பலதரப்பட்டவர்கள்,எல்லாருமே பிராமணர்கள் இல்லை.!

கிருஸ்து பிறக்கிறதுக்கு முதலே இலங்கையிலே மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள் பாளி மொழியில் எழுதிய.மகாவம்சம், 6ம்,7ம் நூற்றாண்டுகளில் நிறைய தவறுகளுடன் சிங்களத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அது பெளத்த சமய வரலாறு.சிகல என்பது பாளியில் சிங்கம்.அந்த சொல்லே இரண்டே இரண்டு இடங்களில் மட்டும் தான் அதில் எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.அது சிங்களவருடைய காப்பியமே கிடையாது.

சிங்களவர்களின் கதாநாயகனான கைமுனு,பேசிய மொழி சிங்களமும் இல்லை,பாளியும் இல்லை,அவன் ஒரு தமிழ்ப் பெளத்தன் என்கிறார்கள். அவனோட சண்டை போட்ட எல்லாளன் தமிழ்ச் சைவன்.யாரோ சண்டை போட்டதை எல்லாம் எடுத்து யார்யாரோ அரசியல் செய்கிறார்கள்.

நீண்ட காலங்களிற்குப் பிறகே சிங்களம் பெளத்தில் ஒட்டியது , அவ்வளவே.வாய்மை பேசிய தேரர்களின் வாய்யில் பொய்மை மாட்டிக் கொண்டதால்… ஏற்பட்டதே தற்போது மகாவம்சம் பற்றிப் பேசப்படுபவை. நிறைய பிளேன்ற் ஸ்பொட்டுஸ் உடன் பயணிக்கிற‌ சிங்கள எழுத்தாக்கங்கள் குறைப் பிரவேசங்ககாகவே கிடக்கின்றன புத்தரின் சிஸ்யர்களிடம் ஆசைகள்…புகுந்ததால் வந்த வினை, விபத்து, புத்தகோடிகள் , புத்தரே தலை குனியும்படி ஆட்டம் போட்டு விட்டா றார்கள்.

பர்மாவில் இனப்படுகொலையில் முக்கிய வகிப்பங்கு,,இலங்கையில் இனப்படுகொலைகளில்… முக்கிய பங்கு …என்ன?, புத்த சமயத்தை பின்பற்றுகிறார்களா?, இல்லை, இனப்படுகொலைகளில்,. தேர்ச்சி பெற போட்டி போடுகிறார்களா? சமாதானக் கருத்துகள் கூடவா தோற்றுப் போய் விட்டன‌ ?? உலக சமாதானத்தில் சம்பியனான பெளத்த பிக்குகள்,சிங்களத்தால் தலை குனிந்து நிற்கிறார்கள்.

ஞான சார‌தேரோ..இனக் கருத்துக்களைக் கொட்டுகிறார் என்று .. பார்த்தால், சமயத்தில் தெளிவாகப் பேசுகிறார்.சிங்களத் தேரோக்களில் புத்தரும் ஒளிந்து கிடக்கவே செய்கிறார் போல மயக்கமும் ஏற்படுகிறது.இலங்கையின் இன அடிப்படைவாத அரசியல்முறைகளே அவர்களையும் மூழ்கடித்துக் கொண்டு செல்கிறது போலவும் படுகிறது ;தோன்றுகிறது.இனத்துவேசி சிறில் மத்தியூவை விட இவர்கள் பரவாய்யில்லை போலவும் தெரிகிறது. ஒரே மயக்கமாகக் கிடக்கின்றன‌ இந்த போக்குகள்.

இலங்கை நமது நாடு.நாம் ஈழவர்.இதை உண்மையிலே புரிந்து கொண்டிருக்கிறார்களா?இல்லையா? நாம் மிருகங்களிலிருந்து வந்திருக்கலாம்,பறவைகளிலிருந்து வந்திருக்கலாம்,இல்லை ஏலியன்களிலிருந்து கூட வந்திருக்கலாம்…,ஆனால், நாம் இப்ப இலங்கையர்.நாம் ஈழவர்.புரிகிறதா? எவருக்கும் புரியாமலும் இல்லை.ஆனால்,மனம் தான் நல் இதயமாக மாற மறுக்கிறது..

கொழும்பு.மட்டகளப்பைச் சேர்ந்த முஸ்லிம்களிற்கு சிங்களவர்கள் எதைச் சொன்னாலும் அவையும் குர்ரானைப் போல இன்னொரு வேதப் புத்தகமாகி விடுகின்றது.

சுய தேடலற்று எப்படி தான் ஜால்ராக்களை தப்பாமல் போட முஸ்லிம்களால் முடிகிறதோ??”வசதி,வாய்ப்புகளைப் பெறுவதற்காக சில சிறுபான்மையினர்… அதிகாரம் மிக்கவர் கால்களில் ஓரேயடியாய் வீழ்ந்து விடுகிறார்கள்” என கம்யூனிசமும் அப்பப்ப நல் முத்துக்களையும் உதிர்த்திருக்கின்றன‌.

இந்த சிறிலங்காவிலே, வேதப் புத்தகங்கள் அதிகமாகி விட்டன.‌அடுத்தவன் நிலத்திற்கு ஆசைப்பட்டு, ஆசைப்பட்டு அந்த மண்ணின் சொந்தக்காரர்களை விரட்டுவது உலகில் நிற்கிறதாய் இல்லை ‌ .

சிங்கள பட்டதாரிகளே “வேலை வேண்டும் “என ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் அவ்வி (இ)ளைஞர்கள் வேலையில்லாப் பிரச்சனையில் தான் அரசைக் கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சியிலேயே இறங்கினார்கள். இனவாதப் போக்கில் பொருளாதார வளர்ச்சியற்று மேலும் மேலும் பிரச்சனைகளே அதிகமாகின்றன.எல்லாத் துயர்களிற்கும் அடிப்படை ஆசைகளே,இங்கே நிலவிறதோ பேராசைகள்..

சிங்கள மாணவர்களிற்குக் கூட‌ ந‌ம் இனப்பிரச்சனை புரியவில்லை.

அரசின் அனைத்துக் கொள்கைகளோடும் ‌ இனவாத நஞ்சும் கலந்து கிடக்கின்றதால் பொருளாதாரம் மீள முடியாத ஆழத்தில் கிடந்து தவிக்கிறது.

சிறுமையில் கிடக்கிற‌வையிற்கு எல்லாமே குறுகிய பார்வையிலும்,சுயநலத்திலுமே இருக்கும்.இவர்களைப் பிடித்த சாபம் இது!

இங்கே பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு கானல் நீர்.அதனால் வேலை வாய்ப்புகளும்.. அருகின‌. பத்தாக்குறைக்கு அரசியலில் சுய பொருளாதாரத்தை வளர்ப்பவர்களுக்கான கதவுகளையும் மற்றவர்களிற்கும் அடை த்து வைத்திருக்கிற முட்டாள்தனமான அரசியல்.எனவே தான் இங்கேயிருக்கும் அரசியல்வாதிகளும் கிட்லரைப் போலவும்,இஸ்ரேலியர் போலவுமாகி உருமாறி கொண்டிருக்கிறார்கள் .

சர்வமத சமரசக் கருத்துகளை ரூபவாகினியில் நிகழ்த்தி நேசக் கரங்களை நீட்டிய‌ முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, ஒரு கவிஞரும் கூட.அவர் உயிரோடு இருந்திந்தால் வாய்ச் சொல்லில் வீரரான மகிந்தாவை விட இன ஒற்றுமையிற்காக‌ சிலதை செய்திருப்பார் என திலகனுக்கு சமயங்களில் தோன்றுவதுண்டு..

அவரைப் போய் விடுதலைக் குழுக்களில் ஒன்றான இந்த‌ கழுகு…கொன்று விட்டிருக்கிறதே. இந்தியன் ஆமி நின்ற போது அவருடன் கை குலுக்கத் தெரிந்தவர்களிற்குப் பிறகு அவருடன் அரசியல் நடத்தத் தெரியவில்லை.முழம் வெட்டினால்,முழம் சறுக்கிறது.பிறகு, ராஜிவ்காந்தி கொலை, அவர்கள் வெட்டிய பெரிய‌,புதைகுழி …!எல்லாத்தையும் நியாயப்படுத்த முட்டாள் தனமான சமூகங்கள் இருக்கின்றன.

சுயபுத்தியில் தான் இவர்கள் இயங்குகிறார்களா??? நிச்சியமாக அல்லி இயக்கத்திற்கெதிரான சம்காரமும் யாரோ ஒருவரின் கட்டளையை சிரம் மேல் ஏற்றி செய்த செயல் தான், சரியான‌ சொல்புத்திக் காரர்கள்.

இலங்கையின் அனைத்துப் படைகளுமே மீள்ளமைக்கப்பட வேண்டிய கட்டாயத் தேவையாகக் காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. இலங்கையில் நடந்த அனைத்து கலவரங்களிலும்படையினர் கூலாக பங்களித்திருக்கிறார்கள், (படையினரின் பங்களிப்புகள் இருந்திருக்கின்றன‌).அவர்களின் பலரை தமிழர்களால் இன்றும் கூட‌ அவர்களை அடையாளம் காட்ட முடியும்.தென்னிந்தியச் சினிமாவில் வாரது போல ,தெனாவட்டாக தெரியத்தக்கனராக ஆட்டம் போட்டவர்கள்

அவர்களை பதவிகளிலிருந்து இறக்கி வீட்டை அனுப்பினாலே முதல் நல்லிணக்கச் செயற்பாடாக இருக்கும் ..

போர்க் குற்றவாளிகள் அனைவருமே களையப்பட்டாக‌ வேண்டும்.

முழுமையாகத் தண்டிக்கப்பட‌ வேண்டும் என்றில்லை.குறைந்த பட்ச தண்டனையாக அவர்களாகவே பதவி விலகி விட வேண்டும் என்றே சொல்கிறோம்.இனிமேல் ,குற்றவாளிகள் அதிகாரிகளாக பதவி வகிக்கவோ,அரசியலில் பயணிக்கவோ வேண்டாம்.புதிய தடத்தில் புதியவர்களாக பயணியுங்களே,அகிம்சை வழியில் நீங்களாகவே திருந்தி விடுங்களன்.

சிறிலங்கா ஜனாதிபதிகள் உங்களுக்கு வழி காட்டவே மாட்டார்கள்.

முஸ்லிம்கள் விசித்திரமானவர்கள் , காலைப் பிடிக்கிறார்களா? காலை வாறுகிறார்களா என எவருக்குமே தெரிவதில்லை.

உலகில் ஜனநாயத்தின் பேரில் அடக்குமுறைக் கரங்களால் ‌ நிலங்களைப் பறிப்பது, உரிமைகளைப் பறிப்பது… ஒரு நீளும் துயரம்…. தொடர் கதையாகவே போய்க் கொண்டேயிருக்கின்றது.சொல்லுதரமன்று.வளர்ர சமாச்சாரமாக கிடக்கின்றன‌.

தற்போது சிறிலங்காவிற்கு இறமை என்பது கிஞ்சிற்றும் கிடையாது. முந்தியும் கிடையாது தான். அது வேற விசயம்.

சிங்களவர்களும் களப்பிரர் போன்ற நிலை தான். தற்போதைய‌ இலங்கை கொள்ளையரின் விளைநிலம்.

சிங்களவர் தம் வாய்யாலே தம்மை ‘தாம் வந்தேறியர்கள்’என்பதையும் வெட்கமில்லாதும் கூட‌ சொல்கிறவர்கள்.”நாம் ஆரியர்,வட இந்திய அடியைக் கொண்டவர்கள்”. என்றும் மார் தட்டுறவர்கள் .அதிலும் உண்மை இருக்கவே செய்கின்றன. பாளி மொழி பேசியவர்கள் எவருமே தென்னிந்தியாவில்அடியாக‌ இருந்ததில்லை பாளி மொழியை அடியாகக் கொண்ட சிங்கள இனம் எப்படி இங்கே பூர்வீகக் குடிகளாக முடியும்?

வந்தேறியர்களாக இருந்தாலும், சிலவேளை இவர்களில் கணிசமானவர்கள் பூர்வீகக் குடிகளாகவும் கூட‌ இருக்கலாமோ என்ற சந்தேகமும் எட்டிப் பார்க்காமல் இல்லை.தென்னிந்தியாவில் இருண்டகாலம் என அழைக்கப்பட்டக் 500,600… ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த களப்பிரர்களின் பேசிய மொழியும் பாளி தான் . ஆனால்,யார் இந்த களபிரர்கள்???

.தமிழ் நாட்டுக்காரர்களா?இல்லை,வேற இடத்திலிருந்து வந்தவர்களா?புரியாத புதிராகளாவே வரலாற்றில் இருக்கின்றார்கள். அவர்களின் பக்கங்களையும் இப்ப இருக்கிற நீசர்களைப் போல அப்ப இருந்த நீசர்கள் எரித்திருக்கிறார்கள்.அந்த வரலாற்றுப் பக்கங்களைக் காணவில்லை நீசர்கள் எரித்து அழிக்கும் வரலாற்றுச் சுவடிகளால் ஏற்படுற நட்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.

வவுனியா காட்டில் இருக்கிற வானரகங்களைப் போன்று சிங்ளவர்கள் எவ்வளவு குதியம் போட்டாலும் கூட‌மகாவம்சத்தின் நிறுவல்களை சரி வர நிறுவ முடியுமா என்பது தெரியவில்லை.

இல்லை ,பாளிமொழி’‌ மொழி பேசுற ஒரு கூட்டம் இருந்ததால் தான் தான் கலிங்கர்கள், தம்மவர்களை பெரும்மளவில் இங்கே கொண்டு வந்து இறங்கினார்களோ? கிருஸ்துக்கு முன் சுமார் 300,400…ஆண்டுகளில் நிகழ்ந்த அசோகனின் போர் தான்….,இலங்கையில் சிங்கள இனம் ஒன்று உருவாக வழி கோலியது.எல்லாளன்,கைனுமு போர் இல்லை வழி கோலியது.”கைமுனு ஒரு தமிழ்ப் பெளத்தன்”என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்(என்ன ஜனநாயக நாடு இது,தேர்த்தலை நடத்தாமல் இழுத்தடித்துக் கொண்டு….,எப்படி இழுத்ததடித்தாலும் புதிய முதலமைச்சர் தெரிவாகி ஒரு கிழமையோ,ஒரு மாசமோ…,பதவியைக் கையளிக்கும் வரையில் பழையவர் தான் முதலமைச்சராக,அவரின் அவையின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருக்க வேண்டும்.இப்படி சட்ட மூலம் இல்லாவிட்டால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது ஜனநாயக ஆட்சியிற்கு அவசியம்.கவர்னர் ஆட்சி,அந்த,இந்த ஆட்சி முறைகள் எல்லாம் இருக்கக் கூடாது.என்று தான் எம் தலைவிதிகள் நேராகுமோ?..எந்தக் கடவுளையும் இரைஞ்சக் கூடாது என்ற ஆத்திரம் தான் வருகிறதுவரலாற்றை தம்மிஸ்டபடி எழுதியவர்களிடமிருந்து எடுத்து….உண்மையான வரலாறுகளை யார் தான் எழுதுவார்கள்? லசந்தா போன்ற ஊடகவியலாளர்கள் மறுபடியும்காண முடியுமா, பிறப்பார்களா?

மக்களும் தூக்கம் கலைந்து எழும்புவார்களா? இல்லை,மேலே வாசம் செய்கிற‌கடவுள்கள் தான் நேர்மையை விதைக்க அவதாரங்களாக‌ கீழே இறங்கி வர‌ வேண்டுமோ?

அரசியல் குளறுபடிகளில் சிக்கிக் கிடக்கிற நாட்டைக் காப்பாற்ற யார் தான் வரப் போகிறார்கள். ஒரு சுப்பர்மான் வர மாட்டானா?அவனுடைய கழிவிரக்கம் ஒருநாளும் தீரப் போவதில்லை ?திலகன் என்ன பெரிய மாமனிதனா?சாகாவரம் பெற்ற‌ பிஸ்துவா? ஒரு கொசுவின் வாழ்நாளை கொண்டவன். இன்னும் எவ்வளவு நாட்கள் இருப்பான் என்பது அவனுக்கே தெரியாது. புத்தர் இறந்தது ஐம்பது வயதில் இருக்குமா,அறுபதில் இருக்குமா?அதுவே சிங்களவருக்குத் தெரியாது.கட்டுறார்களாம் மணற் கோட்டைகளை..வடபகுதியில் கோட்டைகளை கொட்டேல்களாக மாற்றுற ஜாலம் மட்டும் தெரியும்.

இங்கே, நீதிபதிகளே இல்லாத இலங்கையில், ,நீதிப் பார்வை உடையவர்களும் குறைவு தான், கிடையாது என்றே சொல்லலாம்.

எத்தனை,எத்தனை குறுக்குமறுக்கான கேள்விகளை எல்லாம் போடுகிறான்.பதில் கிடைக்கும் என்ற நோக்கமில்லாமல்…கணக்கு போடுற மாதிரி…பலருக்கு கண்டு பிடித்த கணக்குகளையே போட வராது.!

ஆனால்,இவர்களின் முன்னோர்கள், நிச்சியமாக‌ இனவாதிகள் கிடையாது..( களப்பிரர்களும்,கலிங்கர்களும்)கடலை ஆண்ட பரம்பரையினர்.குறைவான நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட நிலங்களில் வாழ்ந்ததால்…நீர்ப்பாசன தொழிற்நுட்பங்களில் கரை கண்டிருந்தவர்கள்.இலங்கையையும் வளம் கொழிக்கும் பூமியாகவும் மாற்றிய கரங்களை உடையவர்கள்.

பல நூறு ஆண்டுகளாக சகோதரர்களாக வாழ்ந்த இவர்கள் மனதில் ஆசைகள்,பேராசைகள் ;யார் இந்த‌ இன வாதத்தை புகுத்தினார்கள்? ஏனோ தெரியவில்லை ,மத வாதம் மக்களிடம் அழுத்தியே புகட்டப்படுகின்றன‌. ஏதோ ,கடவுளைப் போல வாழ்கிறவர்கள் , கடவுளாகவே மாறி விடுகிறவர்கள் போல‌,நித்திய அழிவில்லாதவர்கள் போல, சொர்க்கம் என்ற ஹொட்டேல் இவர்களிற்காகவே ‌ திறந்து அறைகள் ஒதுக்கி வைத்திருக்கிறது போல கற்பனையில் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிற ஞானசூனியங்கள்.

கொஞ்சமாவது மனிதனாக‌ மாற முயலுங்களே

இன்று கண்ணெதிரே இருக்கும் உறவுகளை நாளை தேடினாலும் கிடைக்கவே மாட்டார்கள் !. நிலையாமையை புரியாதவர்களாக சிங்களவர்கள், தாம் மாமனிதர்கள் என்று என்ன ஆட்டம் போடுகிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாதவர்களாக நாமும் கூடத் தான்.,சிங்கள இனவாதிகள் நாளை மனம் மாறுவார்கள் என வேறு நம்பிக் கொண்டிருக்கிறோம்.

இவர்கள் இந்த நாட்டை தமது தாயகமாக்கிக் கொள்ள வேண்டும்”என்ற வெறியில்,நஞ்சு வேரிட’புத்த மத அடிப்படைவாதிகளை பர்மாவிலிருந்து வரவழைத்தாக வும் ஒரு வரலாறும் சொல்கிறது. அன்றிலிருந்து,இன்று வரை இவர்கள் மனித இரத்தத்தை குடிப்பவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் (இ)றகுளாக்கள் !

இவர்களிற்கு கொஞ்சம் குரூர நகைச்சுவை வேறு கிடக்கிறது .’தாம் சிங்கத்திலிருந்து வந்த, சிங்களவர்கள்’என்று கலாய்க்கிறார்கள்.

அவர்களின் பொய்மையும்,உண்மையும் கலந்த வரலாற்றுப் புதினமே லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது.

கடந்த சந்ததியில்.ஆக்கிய நன்மைகளை எல்லா வற்ரையும் பிறகு வருகிற ஒரு சந்ததி நாசம் செய்து விடும் என சாத்திரம் சொல்கிறது. இவர்கள் ,வடக்கில் செல்களை கொட்டிய போது இயற்கை வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டியவை என்ற சிந்தனை சிறிதளவாவது கிடந்ததா? ஒரு சந்ததி கோலோச்சி வாழ்ந்தால்,இன்னொன்று தலை ,கீழாக்கி “பிச்சை எடுக்கும் என்பது எவ்வளவு உண்மை…!

“சிங்கள சிறிலங்காவிற்கு “வாழ்க,வாழ்கவே.”.” என்ற‌ தேசிய கீதம் வேறு தமிழருக்குத் தான் ஒரு தேசிய கீதம் இல்லாமல் போய் விட்டது.

எமது விவசாயப் பூமியையும் கந்தகப் பூமியாக்கி விட்டார்களே.எங்கு பார்த்தாலும் புதைகுழிகள்,அழுகுரல்கள். காணாமல் போனோர்களைப் பற்றிக் கேட்டால்”எமக்குத் தெரியாது”என்ற திமிரான பேச்சுக்கள் .ஜனநாயகம் கேலிக்குரியதாகி விட்டது..இஸ்ரேலைப் போல பிடித்தால் அழுங்குப் பிடி .. நிலத்தை விட்டு அகலாத‌ அட்டைப் பிறவிகள். சரியான‌ மெண்டல்கள்!

தமிழர்கள் ‘ஜனநாயகத்தின் கேலிக்குரிய ஒரு நாளையும் கட்டாயமாக‌’ கொண்டாடியாக‌வே வேண்டும்

.அரச முறையிலிருந்து மீட்சியைக் கொண்டு வந்த ஜனநாயகமும் இன்னொரு செல்லரித்துப் போகிற‌ ‌ அலுப்பு பிடித்த ஆட்சி முறை தான்! “பெரிய ஜனநாயக நாடுகள்.சமாதானத்தை கொண்டு வாரார்கள்”எத்தனைப் பெரிய பொய்களைச் சொல்கிறார்கள்

சிறிமாட காலத்தில் ,கல்வி அமைச்சராக இருந்த பதியுதின் மொகமட் ,கிழக்கில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை கம்பஸ் செல்ல வேண்டும் என்ற நோக்கில் தயாரித்த ஒருவித பக்கச் சார்ப்பான கல்விக் கொள்கைகளே ‘தரப்படுத்தல்முறை’ என்ற பேச்சும் உண்டு.

சிங்களவர்களிற்கும் உகந்ததாக இருக்கவே அதை அரசு சட்டரீதியாக அமுலுக்கும் கொண்டு வந்து விட்டார்கள் என்ப‌ர்

சிங்களவர்களிற்கும் அவர்களிற்கு அயலிலிருந்த‌ முஸ்லிம்களிற்கும் எப்பவும் வடக்கின் மேல் ஒரு கறள்கள் என்றென்றும் இருந்து கொண்டே இருந்தன.

ஆனால், யாழ் முஸ்லிம்கள் நாகலாந்து முஸ்லிம்கள் போல, அப்துல்கலாம் பரம்பரையினர் போல முற்போக்கு அம்சங்களுடன் வேறுபட்டிருந்தார்கள். இரண்டும் வெவ்வேறு வேர்களிலிருந்து வந்தவர்களோ? என்று சமயங்களில் திலகன் நினைப்பான்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் (யாழ் முஸ்லிம் மாணவர்கள் கூட) தங்களிற்குக் கிடைக்காத ‘வாய்ப்பை’ எப்படியும் மற்றவர்களிற்கு பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என்ற கோபம்,வெறியில் பலருக்கு டியூசன் (சொல்லி) கொடுக்கத் தொடங்கினார்கள். அதாவது தரப்படுத்தலை தங்களுக்கு முன் விழுந்திருக்கிற ஒரு சவாலாக எடுத்து எதிர்த்து இறங்கிய முதல்ச் செயற்பாடு. முபாரக்கின் பேச்சில் முஸ்லிம் பேச்சு வழக்குகள் காணப்படவில்லை.எங்களைப் போலவே பேசினான்.பேச்சு வழக்கும் கூட யாழில் பிறகு தான் புகுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். திலகன் மூளை ஒரு துப்பறிவாளன் போலவும் அசை போடுகிறது.

இப்படி பல இளைஞர்கள் வீடு வீடாய்ப் போய் டியூசன் கொடுப்பது பரவலாக எல்லா இடங்களிலும் ஏற்பட்டிருந்தன.யெஸ், இவர்கள் தான் முதல் டியூசன் வாத்திகள் !. அதிலே முபாரக்கும் ஒருத்தனாக இருந்தான்.

ஆனால் யாழ்ழினர் பணக்காரர்கள் கிடையாது.ஏற்கனவே இனவாத அடிப்படைவாதத்தால் ஒதுக்கப்படுறவர்கள்,புறக்கணிக்கப்படுறவர்கள்,தவிர ஜனநாயக உரிமைகளை எல்லாம் பறிக்கப்பட்டவர்கள்,சட்டம் இயற்ற முடியாதவர்கள்,வரிகள் அறவிட முடியாதவர்கள்,நிலம் ,நீர்ப்பரப்புகளில்…சுதந்திரமாக ராஜநடைப் போட்டு,கலக்க முடியாதவர்கள்.சரி ,ஆள்கிறவர்களாவது சுயாதீனமானவர்களாக இருந்தார்களா? என்றால்?என்றால்,அதுவும் இல்லை. அவர்கள் யார் யாருக்கோ எல்லாம் அடிமை.

காலனி ஆட்சி செய்தவர்கள் விட்டுச் சென்றதை தலையில் வேதவாக்காகக் கொண்ட வேற சரக்குக்கள் இல்லாதவர்கள்.பத்தாதுக்கு இன அடிப்படை வாதம் வேற.

இந்த கதியில் டியூசனுக்கு யார் சரியாய் பணம் கொடுப்பார்களா? பெறுகிறது பொக்கற் மணியாகக் கூட திரளாது.நண்பர்கள்,சிறிதோ,பெரிதோ கையிலே கிடைத்த பண த்தை…எல்லோருக்குமாக செலவழிப்பார்கள்.திலகனுக்குக் கூட தேனீர்,வடை கிடைக்கிறதே.முபாரக்கிற்கு ஜவுளிக்கடை அண்ணன் சலிம் சமயத்தில் கையில் காசு கொடுப்பான்.அவன் மணம் முடித்திருந்தான்.

ஆனால் ஒரு நாள் கூட கடையிலே வந்து நில்லன்ரா”என கூப்பிட்டதில்லை. ஆனால் சின்னக்கடையில் (பெரிய சந்தையில்)இருக்கிற கடைத் தொகுதியிற்கு போற போதெல்லாம் குட்டிக்கடைகளையும்,வெளிவாரியாக ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாக கிடக்கிற அவனுடைய ஆட்கள் வைத்திருக்கிற தையல் கடைகளையும், ,ஆச்சரியமாக உள்ளே மீன்களை விற்க்கிற இரண்டொரு கடைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு போவான்.

பெரும்பான்மை அவனுடைய ஆட்களின் கடைகள் தான்.

நகரசபை, முஸ்லிம்களிற்கு ஏதுவாக குறைந்த வாடகையையே அறவிட்டது.நல்லூர்க் காணிகளிலிருந்து …எழும்பி முஸ்லிம் காலனி என்கிற இந்த சோனக் தெருப் பகுதிக்கு வந்த நன்றிக்கடனாகவே ,நகரசபை,பிரித்தானியர் காலத்தில் கோட்டைக்கும் பண்ணைக்கடலுக்கும கிட்ட யாழ்நகரில் இருந்த அந்த பெரிய பண்டகசாலையை சிறிய கடைகளாக்கி வியாபாரம் பண்ணக் கொடுத்திருக்கிறார்கள்’

.யாழிலிருந்த ஒரே சுப்பர் மார்க்கட் அது தான்.பாய் ஒருவர், கூட‌ அவர் கடையில் குழந்தைப் பிள்ளைச் சாமான்களிலிருந்து எல்லா வகைச் சாமான்களும் வைத்திருந்தார். முபாரக், ஒலைத் தொப்பி ஒன்று அங்கே வாங்கியும் இருக்கிறான்.

அவனோடு கூட நண்பர்களும் வருவார்கள்.ரவி அடிக்கடிச் சொல்லுவான்.”உங்கட பொருளாதரமே இங்கே தான் இருக்கிறதடா”.அது.இவர்களை மட்டும் கவர்ந்ததில்லை.பிரபல ஈழத்துக் கவிஞனான வ.ஜெ.ஜெயபாலனின் இதயத்தையும் கவர்ந்தச் சந்தை ,இந்த அரசு மட்டும் ஒரு ஜனநாயக‌அரசாக இருந்திருக்கக் கூடாதா?நாமும் வாழணும்,எல்லோரும் வாணும் என்ற புத்தரின் பண்பை , மாண்பைப் பெற்றிருக்கக் கூடாதா? முபாரக் நினையாத நாளே இல்லை. அங்கே இருந்த தையல் கடைகளில் நிறைய சிறுவர்களும் இருந்தார்கள்.அண்ணை ,’அவனை ஒரு நாள் கூட கடையைப் பாரடா’கூப்பிட்டு வைத்திருந்ததில்லை.

எல்லாத்திலும் அடிப்படைவாதம். எந்த‌அடிப்படைவாததிற்கும் அழிக்க மட்டும் தான் தெரியும்,ஆக்கத் தெரியாது. என்ன ஜென்மங்களோ?, எத்தனை நாளைக்குத் தான் வீட்டை,கடை கண்ணிகளை,மனிதர்களை எரித்துக் கொண்டிருப்பார்கள் ! கூட , அவர்களிடம் கிடக்கிற மனிதத்தையும் அல்லவா சேர்த்து எரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரியான‌ பூதக் கணங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆச்சி வீட்டாருக்கு ரவியைத் தான் முதலில் நன்கு தெரியும்.திலகனின் ஜானகி சின்னம்மாவின் சினேகிதி பத்மா அக்காவின் மூத்த மகன் ரவி. பத்மாவும் சின்னம்மாவும் ஒன்றாய் இந்து மகளிர் கல்லூரியில் படித்தவர்கள்.அவர் மூலமாகவே முபாரக் அறிமுகமாகி அந்த வீட்டில் டியூசன் கொடுக்கத் தொடங்கினார்.

காந்தி போலில்லாமல் சிறிது வட்டம் குறைந்த மூக்குக் கண்ணாடி,கனிவான பார்வை…காசிற்காக இல்லாது கம்பஸ் எண்டர் பண்ண வைத்து விட வேண்டும்…என்ற‌ ஒர்மம்.திலகனும்,அண்ணர் குலமும் என்ன கேட்டாலும் விளக்கமாக பதில் அளிக்கிற பாங்கு. “படிக்கிறதில் உங்களிற்கெல்லாம் நிறைய தடைகள் கிடக்கின்றன.இயல்பாக படித்தால் உங்களால் எல்லாம் தடைகளை வெல்லவே முடியாது.எக்ஸ்ரா…படிக்கவேண்டும்”என்பார்.அவர்களிற்கு ஒன்றுமே விழங்குவதில்லை.

அவனுக்கும் அண்ணருக்கும் முபாரக் அண்ணையை நிரம்பவே பிடிக்கும். தேனீர் வாங்கித் தருவார்.இனிப்பு வாங்கித் தருவார். ரவி அண்ணையும் நிரம்ப பிடிக்கும்.இவர்களோடு இருக்கிற போது தான்,”டேய் ,திலகய்யா,உனக்கு இனிப்பு பிடிக்குமா?தேனீர் பிடிக்குமா?”என்று கேட்பார்கள்.”இவன் கள்ளன் அல்லவா.”இரண்டும் பிடிக்கும் “என்பான்.சிரித்துப் போட்டு வாங்கித் தருவார்கள்.ஒன்றில் இவர் எல்லாருக்கும் காசு பே பண்ணுவார்.அல்லது ரவி அண்ணை பே பண்ணுவார். அவர்களோடயே காங்கேசன் வீதியிலிருந்து வடக்கிலே இறங்கிற கில்னர் ஒழுங்கையில் வட கிழக்கு மூலையில் பிரித்தானியர் விட்டுச் சென்ற கில்னர் கொலிஜ் என்கிற விளையாட்டுக் கிளப் ,வளவுடன் கூடிய பெரிய தேவாலயம் போன்ற கட்டிடத்தில் இருக்கிறது.அங்கே,பட்மிண்டர் போட்டிகள்,ஆண் அழகன் போட்டிகள் எல்லாம் நடை பெற்று வருபவை.இவர்களுடன் சேர்ந்து அந்த போட்டிகளை எல்லாம் இவனும் அண்ணரும் ,மற்றும் மச்சான் குமார்,அவரிட நண்பர் செட் என….பார்த்திருக்கிறார்கள்.அண்ணர்,குமாரிட செட் தான்.அவனுக்கு

அதற்கு முதல் திலகன்,’கோர்க்’ என்கிற பறக்கிற செட்டைப் பந்திலே விளையாடுற விளையாட்டு,ஏன்” ஐ” ப் படத்தில் விக்ரம் போல எண்ணெய் வழியும் உடம்பை முறுக்கிக் காட்டுறதெல்லாம் பார்த்ததில்லை. கில்னர் வளவிலே ஒரு நெசவுசாலையும் பிறிம்பான கட்டிடத்தில் இயங்கியது போல இவனுக்கு மயக்கமான ஞாபகம் இருக்கிறது.குட்டிப் பையனின் மூளையில் கனக்க எதிர் பார்க்காதிங்கள்.

இதே போல எரிக்கப்பட்ட பிரபலமான‌ யாழ் நூலகத்திற்குப் பக்கத்திலே இருக்கிற டெனிஸ் கிளப்பிலே ,இவர்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த ஜெயராஜ் என்கிற இந்துக் கல்லூரி பழைய மாணவன் ஒருத்தன் சம்பியன் அடித்துக் கொண்டிருந்தான்.அந்த விளையாட்டு வீரன் ஆச்சி வீட்ட இடைக்கிடை வருவார்.இவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நிற்பார்கள்.அவருக்கு ஆச்சியைப் பிடிக்கும்.”கிறான்மா, எப்படி இருக்கிறீங்கள்”எனக் கதைப்பது வேடிக்கையாக இருக்கும்.

அந்த கில்னர் ஒழுங்கையிலே ரவியும் இருந்தவர்.

தேனீர்க் கடையில் “டேய்,முபாரக் நீ முஸ்லிம் தானே”என் று ரவி கேட்க‌,

“இப்ப தான் உனக்கு அது தெரிந்ததா?”முபாரக் சூடாக பதிலளித்தான்

கேதீஸ்,”உன்னுடைய சித்தப்பாவோ,மாமாவோ…மட்டக்களப்பில் இருக்கி றாரே,,நீ அங்க போய் மாமாவோட இருந்து…,மாமா , தான் அங்கே நீ மூன்று வருசத்திற்கு மேலே இருந்த‌தாக எல்லாத்தையும் மாத்தி விடுவாரே,எ.லெவலையும் எழுதலாமே. உன் கனவும் ஈசியாய் பலித்திடுமே”சீண்டுவான்.

மேலே கையைக் காட்டி”அல்லா பொய்யாகவும் வாழாதே எனச் சொல்லி இருக்கிறாரே.”என்பான்.

“எல்லாரும் சதி செய்கிறார்கள்,அதை விடு”என்று ரவி சொல்ல பேச்சு இயல்பான தடத்தில் தொடரும்.முபாரக் மட்டுமில்லை,யாழ் இந்துக்கல்லூரியில் ஜமால்டீண் என்ற மாணவனை எல்லாரும் செல்லமாக குதிரை என்று அழைப்பார்கள்.ஓட்ட விளையாட்டுப் போட்டிகளில் அவன் ஓட்டத்தைப் பார்க்கவே எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இருந்தும் பெடியள்கள் விளையாட்டுப் போட்டிக்கு வருவார்கள்.நேரில் பார்க்க வேண்டுமே.அம்பிலிருந்து விடுபட்டவன் போல அவனின் இடைவெளி நீண்டு கொண்டு போறதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அருட்சினனின் அம்பு போல அவனுடைய ஓட்டம் கண் கொள்ளாக் காட்சி.

இந்துக் கல்லூரியிற்குப் போய் பழைய பதிவுகளில் பாருங்கள்.இன்னமும் அவனுடைய ரெக்கோர்ட்ஸ்ஸை யாரும் உடைக்கவில்லை எனத் தெரியும்.இதைப் போலவே யாழ்லிலிருக்கிற பல பாடசாலைகளிலும் பல முஸ்லிம் பெடியள்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு இவர்கள் மட்டும் காரணமில்லை. பல முஸ்லிம் பெரியார்களும் காரணம் தான். இன்று, மலைநாட்டுப் பகுதியில் இருக்கிற முஸ்லிம் குடும்பங்களைப் போலவே அன்று யாழிலும் முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் நல்லூர் அருகில் வரலாற்றுச் சிதைவுகளுடனிருந்த காணியில் இருந்த சில முஸ்லிம் குடும்பங்கள்…”இந்த சிதைவுகளை பேணிப் பராமரிக்க வேண்டும்” என்று கோவில்க் காரர்கள் கேட்ட போது ,தாராளமாக…என எழும்பியவர்கள்

“எங்களிற்கு வேற இடம் ஒன்றைத் தாருங்கள்”என்ற போது,அச்சமயம் மேயராக இருந்தவர் சிறிலங்காவின் ஆளுங்கட்சியின் ஆதரவாளராக இருக்க வேண்டும்,.உடனேயே அமைச்சரிடம் கேட்க,முஸ்லிம் கொலனி என்கிற தற்போதைய முஸ்லிம் தெருப் பகுதியில் முதல் குடும்பமாகக் குடியேற உதவி செய்யப்பட்டிருக்கலாம். யாழ் முஸ்லிம்கள் தம் புலம் பெயரப்பட்ட வரலாற்றை மட்டுமில்லை,அதற்கு முதல் இருந்த யாழ் வரலாற்றையும் எழுத முயல வேண்டும்.பார்த்தீங்களா? இங்கே மாகாண நிலத்தை ஒருவருக்கு எடுத்துக் கொடுக்க‌ எங்கையோ இருக்கிற கொழும்பிலுள்ள அலுவலகத்திற்குப் போய் ,அனுமதி கிடைத்தே பிறகே கிடைக்கிறது இங்கே ஜிடக்கிற இரு கல்லும் சுயமா அசைய முடியாது.சிறிலங்காவில் ஜனநாயகம் கேலி செய்யப்படுவதற்கு ஒரு அளவே இல்லை.

அந்தக் காலத்தில் இவர்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் இனப்பிரச்சனையை விளங்கியவர்களாக ,பலரோ.சிலரோ ..தமிழரசுக் கட்சியுடனும் கூட சேர்ந்தும் முழங்கிக் கொண்டிருந்தார்கள் போல தெரிகிறது.அவர்களின் நேர்மையான பேச்சுக்களில் மனதை பறி கொடுத்தவர்களாக யாழ் மக்களும் இருந்தார்கள் என்பது பொய் இல்லை.

ஒரு தடவை யாழ் மேயராக கூட‌ ஒரு முஸ்லிம் பெரியவர் தெரிவாகி இருக்கிறார்.

இணையத்தில் எழுகிற முஸ்லிம் எழுத்தாளர்கள் யாழ் வரலாறையும் ஆய்வு செய்து பாருங்கள் .பல ஆச்சரியங்களைக் காண்பீர்கள்.

அந்நேரம் ,பத்தாம் வகுப்பை கடக்கிறதும் பெரிய தொந்தரவாகக் கிடந்தது.பொன்ட் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பலரிற்கு டியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு எ.லெவல் பாடங்களை கொடுக்கிற ஆசிரியர்களையும் தம்மோடு சேர்த்துக் கொண்டு

ஓலைக் கொட்டில்களை அமைத்து யாழிலே ‘முதல் பெரிய பொன்ட் டியூற்றரி’யை திறந்து வைத்தார்.

முபாரக்கின் அப்பா ஸ்டான்லி கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர்.உம்மா பல்கலைப் படிப்பை முடித்தவர். அவர் வேலைக்குப் போகவில்லை வீட்டிலே இருந்தார்.

படித்தக் குடும்பம். எனவே,அவர் வீட்டில் பிள்ளைகள் அனைவரும் படிப்பில் கரிசனையுடையவர்களாக இருந்தார்கள்.முபாரக்கின் அண்ணர் சலிம் ஒரே ஒரு தடவை .ஒ.லெவலை எழுதினார்,கடக்க முடியவில்லை. கல்யாணம் கட்டிக் கொண்டு வியாபாரத்தில் இறங்கி ‌ விட்டார். அவர்க்கு இப்ப குட்டி மகள் ஒன்றும் இருக்கிறது. என்ன பேர் எனத் தெரியவில்லை.

முபாரக் ரம்லான் கடைசி நாள் அன்று நண்பர்களையும் உபவாசம் இருக்க வைத்து…இரவு போல முஸ்லிம்களின் உணவை ஒரு கை பார்க்க கூட்டிச் செல்கிறவர்.உபவாசம் என்றால் நம் விரதம் போல இல்லை.அதிகாலையிலிருந்து பச்சைத் தண்ணிர் கூட அருந்தாமல்…,முஸ்லிம்கள் ஒரு மண்டல நாட்களை கடக்கிறார்கள்.

முபாரக்கும்,தங்கச்சி ச யிராவும் தேறி எ.லெவல் பரீட்சை யும் எழுதினார்கள்.சிறிமா அர சின் கல்வித் தரப்படுத்தும் முறை வந்தது,இருவருக்கும் நல்ல ரிசல்ட் தான் வந்திருந்தன,தரப்படுத்தலால்…பல்கலைக்கழகத்தில் படிக்க கிடைக்கவில்லை.”இப்பத்தையக் காலம் எங்கடக் காலம் போலவா கிடக்கிறது இல்லையே”. என்று பெற்றோர் வருந்தினார்கள். என்ன செய்வார்கள்?

பிள்ளைகளை நேர்மையாக வேறு வளர்த்து விட்டிருக்கிறார்கள். சலிமைப் போல முபாரக்கும் வியாபாரம் என்னத்திலும் இறங்க வேண்டும்.அல்லது சிறிலங்காவின் காலைக் கையைப் பிடித்தாவ‌து ஏதாவது வேலையைக் எடுத்துக் கொடுக்க வேண்டும். அது அவர்களிற்கு சரிப்பட்டு வராது. சிபார்சு பிடிக்காத விசயம்.

எல்லா உரிமைகளையும் கொழும்பிலே வைத்திருப்பதால் சிங்கள அதிகாரிகளிற்கும் கொழுப்பு மெத்திப் போய் விட்டன.ஒவ்வொரு வேலையைப் பெறுவதற்கும் இன்ன ரேட் தொகை மேசைக்கு கீழேயாக செலுத்தப் பட வேண்டும். என்ற நிலை ஏற்பட்டு விட்டிருக்கின்றன‌.வேலை எடுத்த தமிழரும் கூட அறவிடுற நிலைக்கு தாழ்ந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது.லஞ்ச ஒழிப்புத் துறை என்ற ஒரு கண் துடைப்பு துறையாய் இருந்ததால் பணம் கொடுக்கப்படும் முறை பல வர்ணங்ககளில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஒரு தடவை முபாரக் அங்கால வந்த போது உம்மாவையும்,தங்கச்சி சயிராவையும் கூட்டிக் கொண்டு ஆச்சி வீட்ட வந்தார். உம்மாவிற்கு ஆச்சியை ரொம்ப பிடிக்கும்.”நாங்கள் கிழக்கிலே இருந்திருந்தால் இன்னேரம் இவன் ஒரு வேலை எடுத்திருப்பான்.இவனுக்கு கம்பஸ் எண்டர் பண்ணுறது தான் கனவாய் இருந்தது. எல்லாமே கனவாய் போய் விட்டது.”என்று கவலைப்பட்டுக் கதைத்தார்.

ஆச்சி”நல்லது நடப்பதற்காக இப்படி நடக்கிறது இருக்கும்.கவலைப் படாதீங்கள்”என ஆறுதல் சொன்னார்.

இந்த தரப்படுத்தல் இளைஞர் அனைவரையுமே குழப்பி தான் விட்டிருந்தன.அதை பாய்ந்து விட்ட பிறகும் கூட‌ கம்பசிலே படித்த மாணவர்கள், “இதை எதிர்த்து போராடத் தான் வேண்டும் என தமக்குள் மனக்குரலை கட்டுப்படுத்த முடியாதவர்களாகவே இருந் திருக்கிறார்கள்.

மாண‌வர் அணியின் தலைவராக இருந்த சத்தியசீலன்,அணியில் இருந்த சிவக்குமார் போன்றவர்கள்…இனவாத அடிப்படைவாத அரசுக்கெதிராக இனி ஆயுதம் ஏந்தி போராடினால் தான் எல்லாம் சரி வரும் “”இவர்களிட தொல்லைகள் குறையும்” என்ற சிந்தனைகள் பட்டாம்பூச்சிக் கணக்கில் பறக்க‌ புரட்சியில் நாட்டம் கொள்ளலானார்கள்.

அவனுக்கு அவரின் தற்போதைய குடும்ப நிலமைகள் தெரியாது அக்காமார்களிற்கு கொஞ்சம் தெரியும்.அவர்களிற்கு உம்மா, தங்கச்சி சயிராபானு சினேகிதி….என தொடரும் நட்பு வட்டம் இருந்தது.திலகனுக்கு முபாரக் அண்ணையை பிடிக்கும் என்பதால் வசந்தி அக்காவிடம் அடிக்கடி கேட்பதன் மூலம் அவரைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டிருந்தான்.

இவர்கள் டியூசன் வகுப்புகள் என காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தாலும் அண்ணருக்கு ஜவுளிக்கடை வியாபாரம் ஒகோ என்றுநல்லபடியாய்யே போய்க் கொண்டேயிருந்தது.

யாழ்ப்பாணத்தில்(வடபகுதி முழுதுமே)ரெடிமேற் ஆடைகள் பெரிதாக எந்தக் கடையிலும் கிடையாது. தவிர,,அதிலே குறிப்பிடப்படும் அளவு…. பெடியள்களிற்கும், எவருக்குமே பொறுந்துவதில்லை.எனவே உள்ளாடைகளிலிருந்து அனைத்தையுமே தையல்காரர்கள் தான் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்..

முஸ்லிம்கள் இரத்ததிலேயே வர்த்தகம் ஊறிக் கலந்திருந்தது. எந்தத் தொழிலையும் இளக்காரமாக அவர்கள் பார்த்ததில்லை.வடமராட்சி ஆட்களைப் போல உறுதியாய் இருந்திருப்பார்கள்? என்றால் இலக்குகளைத் தொட்டிருப்பார்கள் மேலே இருக்கிறவன்,முன்னேறுகிற வழியில் தடைகளைப் போட்டு பரீட்சை வைத்துக் கொண்டல்லவா இருக்கிறான்?இவர்களிற்கும் அல்லா பரீட்சைகள் வைக்கிறார் போல கிடக்கிறது.

அவர்களிடம் நிலவிய ,சிறு வயதிலேயே மணமுடித்தல்,மணமுடித்தால்…அவசியம் உருப்படியான வேலை ஒன்று அவசியம்.ஆனால்,ஒரு நேர்மையான ஜனநாயக நாட்டிலே,முக்கால்வாசிப் படிப்பே ஒரு நல்ல வேலையை எடுத்து கொடுத்து விடும்.இந்த நாடு மாறுகை வாங்கிற நாடாகவல்லவா திரைந்து போய்க்இருக்கிறது.

ஆனால் அதிகப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிற சூழலில் இனவாத அடிப்படைவாத பிரிவினையை வைத்திருக்கிற நாடு சிறுபான்மையினரை ஆட்டிப் படைக்கிற அரசியலைக் கையாளுவதை,வைத்திருப்பதை தலைவிதி எனச் சொல்லவதையும் ஏற்க முடியாது.

முபாரக்,முஸ்லிம்,சோனகர்.ஆனாலும் தமிழன் தான்.ஆனால்,சிறிலங்கா அரசு,”நீ முஸ்லிம்,ஈழத் தமிழன் இல்லை,ஈழத்தமிழன் என்றால் ஏறத்தாழ சிங்களவர்களிற்கு கிடைக்கிற வழங்கல்கள் உனக்கு கிடைக்க மாட்டாது”உன்னுடைய பிள்ளைகள் நிறைவாக‌…..வாழ வேண்டுமா,இல்லையா?,வசதியாய் வாழ வேண்டுமல்லவா.படிப்பறிவில் பின் தங்கிய நிலமை வேற , உன் சமூகத்தை உதைக்கிறதல்லவா?

எனவே “நீ முஸ்லிமா? ஈழத்தமிழனா?… என்பதை நீயே முடிவு செய்” என்கிறது ”

இங்கே அந்த தத்துவம் பொறுந்தவில்லை.வழமைக்கு மாறாக, ஏற்கனவே முஸ்லிம்களிற்கு இருக்கிற எல்லாப் பிரச்சனைகளும்,வறுமையும் இவர்களுக்கும் இருந்த போதிலும் யாழ் சோனகரோ, “நாம் ஈழத்தமிழர்,ஈழவர்”என இழைந்து வாழந்து கொண்டிருந்தார்கள்

நாமிருவர்,நமக்கிருவர்…போல சில கட்டுப்பாடுகளை கூட தமக்குள்ளே சுயமாக ஏற்படுத்திக் கொண்டு வாழ முற்பட்டு இருந்தார்கள்.குறிப்பாக இவர்களிற்கு இனப்பிரச்சனை மற்றவர்களை விட கொஞ்சம் அதிகமாகவே விளங்கும்.

குறைவான குடும்பங்களை கொண்டிருந்த இவர்களிற்கு.. தமக்கென்று பிறிம்பான கல்லூரியை நிறுவ முயலவே இல்லை.

எல்லா மூக்கணங் கயிறுகளையும் தன் கையிலே வைத்திருக்கிற சிங்கள அரசு , குறிப்பாக‌ தமிழ்ப் பள்ளிக்கூடங்களிற்கு வேண்டிய தேவைகளை,வசதிகளை சரிவர செய்து கொடுப்பதில்லை.யாழ்ப்பாணத் தமிழர் ஆளுங்கட்சிகளிற்கு ஆதரவாளர்களாக இருந்த சமயங்களில் ‌ சில கல்லூரிகளிற்கு வேண்டிய தேவைகளைப் பெற்று,வசதிகளைப் பெற்று திறம்பட இயங்க வைத்திருந்தார்கள் தான்.அப்படி இயங்கியவை தாம் நகரத்திலிருக்கிற பிரபலமானக் கல்லூரிகள்

இவர்களின் சனத்தொகை சிறியது,பெரியது என்பதைப்பற்றி எல்லாம் கவலைப்ப ட்டதில்லை.குவாலிட்டி.தரமானவர்களாக பரிணமிக்க வேண்டும்.அதுவே அவர்களுடைய‌ அவா !

அதனால்.இவர்களிற்கும் யாழ்ப்பாணத்தாரின் குணம் தொத்தி இருந்தது.”நாமும் படித்தவர்களாக இருக்க வேண்டும்,எம் பிள்ளைகளும் நல்லபடியாய் படிக்கவேண்டும்.நகரத்திலிருந்த அனைத்துப் பள்ளிகூடங்களிலும் சோனகர்களின் பெடியள்கள் படிக்கிறதுக்கான கதவுகளைத் திறந்து வாய்ப்புகளை வழங்கியிருந்தன‌.

முபாரக் போல பல பெடியள்களும் நன்றாக‌ படித்துக் கொண்டுமிருந்தார்கள்.

முஸ்லிம் எம்.பி பதியியூதீன்…”மட்டக்களப்புப் பெடியள்கள் அதிகமாக பல்கலைக்கழகம் சென்று படிக்க வேண்டும்” என்பதற்காக தரப்படுத்தல் போல‌ சித்து விளையாட்டுகள் சிலதைச் செய்ய போக‌, யாழ்ப்பாணப் பெடியளோடு சோனகர் பெடியள்களையும் அது பாதித்தது.பத்தாக் குறைக்கு யாழ்ப்பாணத்தாரோடு சோனகர் இழைகிறார்…, அதை தடுக்க வேண்டும் என்பதற்காக‌ யாழ் மசூதிகளிற்கு மட்டக்களப்பிலிருந்து உல்மாக்களும்,மெளளவிகளும் இறக்கப்பட்டார்கள்.ஆட்கள் தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்பதில்லை.இரண்டு பேரை இறக்கினாலும்..கூட போதும் தான்.

சோனகர்க்கு என்று ஒரு ஒஸ்மானியாக் கல்லூரி1960 ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு ,எழும்பி பத்தாம் வகுப்பு வரையில் வளர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு.பள்ளியின் தரம்,அங்குள்ள மக்களுக்கு கட்டாயம் தெரியும்.

அத‌னால்,சோனகர் அனைவரையும் ஒஸ்மானியாவில் தான் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை.மற்றப் பள்ளிக் கூடங்களின் அனுமதிப்போட்டிப் பரீட்சைகளில் பங்குபற்றி படிக்கச் சென்றிருக்கிறார்கள்

கை விட்டு எண்ணக்கூடியள‌விற்காவது பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி படித்து வெளிவருபவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.,அட்டமத்தில் சனி போல தரப்படுத்தல் வராமல் இருந்திருந்தால்…?முபாரக் கூட …படித்து யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகி இருப்பான். நகரப்பள்ளிக்கூடங்கள்,சோனகருக்கான‌ கதவுகளை மூடவில்லை.உலமாக்கள் தான் யூதர்களைப் போல முஸ்லிம் பள்ளிக்கூடத்தி லே தான் படிக்க வேண்டும் என பிறகு மூடியவர்கள் போலப் படுகிறது .

ஆனால் ஒரு கல்லூரிக்கு திறமையான ஆசிரியர்..எக்ஸ்சிற்றா ,எக்ஸ்சிற்றாக்கள்…எல்லாமே வேண்டுமே. தனிய நின்று எதுவும், அதுவும் தமிழ் பகுதியில் ஆகவே ஆகாதே.

மற்றக் கல்லூரிகளோடு ஒன்றாய் நின்றே….,. போராட வேண்டும் .அதுக்குப் பிறகும் கூட‌ சரிவுக் காலம் வரலாம் தான், பிறகு, ,சோனகர்களில் இருந்து எந்த ஸ்டார்களும் எழவில்லை.சிங்கள அரசு தனது நலனுக்காக‌ இவர்களை பிறிம்பாக்கினாலும் கூட இவர்களையும் பிடிக்காது தான்!.

படிக்கா விட்டாலும் கூட இவர்கள் உடம்பில் தான் வர்த்தகம் ஊறி போய் உள்ளதாச்சே.நிறைய தையல்காரர்கள் சிறுபையனாக இருக்கிற போதே ,பட்டன் தைப்பதிலிருந்து தொடங்கி , பயிற்சியால் வேலைகளில் சுத்தமும்,திறமை படைத்தவர்களாகவும் விளங்கினார்கள்..இவர்கள் அனைவரும் அனைத்து யாழ் மக்களுக்கும் நண்பர்கள்.

பெருகிய மக்கட் தொகையை…முஸ்லிம் அமைச்சர்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உதவியைப் பெற்று ‘லயன்’ கணக்கில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்ட பொம்மைவெளியில் குடியேற்றப்படுவது நிகழ்ந்தது.

எலி வளை என்றாலும் சொந்த வளை சிறப்பு அல்லவா. பொம்மைவெளியில் கொடிய வறுமையிலிருந்த‌ கணிசமான சோனகப் பெடியள்,யாழ் பெரிய பஸ்நிலையத்தைச் சூழ சிறிய சாக்குக் கூடுகளில் குடை திருத்தல்,செருப்பு தைத்தல்..என செருப்புக் கடைகளை பேமெண்ட் வழியே ஏற்படுத்திக் கொண்டார்கள்.சிலர், பழைய பேப்பர்கள்,நெளிந்த ,அலுமினியப் பானைகள் சோப்பு,சீப்பு,போன்ற அலங்காரப் பொருட்களைக் கொடுத்து பெறுகிறதும்,சிலர்,சைக்கிளிலில் பின்னுக்கு பெட்டி கட்டி ஐஸ்கட்டியில் மீன்களை வைத்து மீன் வியாபாரமும் கூடச் செய்தனர்.அதை விட தற்போதைய இணையவலைத் தளங்களில் சொல்லுற மாதிரி கடலிலே கரைவலைப் போட்டு மீன் பிடித்ததும்,விறகாலை வைத்திருந்ததெல்லாம் திலகனுக்கு தெரிந்திருக்கவில்லை. தற்போது,யாழ்ப்பாண சோனகர்களைப் பற்றி எழுகிறவர்கள் உண்மையில் யாழ்ப்பாண சோனகர்களே இல்லை என்றே படுகிறது.தவறான பல‌ தகவல்களைச் சொல்றார்கள்.

அதே மாதிரியே சிங்களவர் பூர்வக்குடியினர்,அவர்களுக்கே முழுநாடும் சொந்தம் என வேற ஜால்ரா போடுறதும் நட‌க்கின்றன‌.சிறிலங்கா,சிங்களவர்களின் தாயகமே கிடையாது.அவர்களும் முஸ்லிம் மக்களைப் போல வந்தவர்களே.பெரும்பான்மையாகிக் கிடப்பதால் மாத்திரம் எல்லாம் சொந்தமாகியும் விடவும் முடியாது.

ஒரு இனத்தார்கள்,கைப்பற்றியதை இழந்து விடுவோம் என்ற பயம் எழுகிற போதே கோழையாகி விடுகிறார்கள்.பயம் அதிகமாக, அதிகமாக வீரம் குன்றி முரட்டுத்தனமும் ,அழித்து விட வேண்டும் என்ற வெறியும் அவர்களிற்கு அதிகமாகி விடுகின்றன.‌ ‘நித்திலவல்லி’என்ற களப்பிரரின் சரித்திர நாவலில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி குறிப்பிடுவது, இங்கே இருக்கிற சிங்களவர்களிற்கும் பொறுந்துகிறது.

கடைசியாக நடந்த மகிந்தாவின் வெற்றிகரமான போருக்குப் பின்னால் பல நாடுகள் நேரடியாகவே திரை மறைவில் பங்குபற்றி இருப்பதாகச் சொல்லப்படுகின்றன. சாட்சியமில்லாதது நிகழ்ந்த கோழைத் தனமான‌ போர்.

போர் முடிந்த பிறகும் கூட ஊடகங்களை பார்வையிடுவதற்கான அனுமதியை நீண்ட காலம் வழங்காதிருந்திருக்கிறது.வெளிநாடுகளின் தடயங்களை அகற்றுவதற்காக அவர்களின் கட்டளையை சிரம் மேல்க் கொண்டு , இவர்கள் அறிவித்தது…என இப்படி மர்மங்கள் பல அவிழாமலேயே கிடக்கின்றன.அதற்கான விலைகளைக் கொடுப்பதிலே சிறிலங்கா , தற்போது மோசமாகத் தத்தளிக்கின்றது.

அன்று , பெண்களின் சாரி வகைகள் ஒன்றே கடைகளில் ரெடிமேற்றாக‌ இருந்தன,மற்றபடி எல்லாமே துணிகளை மீற்றர் கணைக்கில் வாங்கி தையல்காரர்களால் கத்தறித்து தைக்கப் பட்டுக் கொண்டிருந்தன.பெண்களிற்கானவற்றை ஊர்கள் தோறும் சில பெண்கள் தை த்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர் கிராமங்கள் தோறும் மகளிர் மன்றங்கள் தோன்றி,தையல் வகுப்புகள் வைப்பதும்,பிறகு அவர்கள் தைப்பதுமாக இருந்தன..ஆண்களுக்குரியவை தைப்பதற்கு இந்த சின்னக்கடைக்கே வந்தார்கள்.

பதினைந்துக்கு மேற்பட்ட தையல்கடைகள் பக்கத்தில் ,பக்கத்திலாக இருந்த போதிலும் எல்லாவற்றுக்கும் நல்ல யாவாரம் சூடாக‌வே நடந்தன. சிறு வயதில் அம்மாவுடன் வருகிற திலகன் கனக்க தையல்கடைகள் அப்படி இருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்திக் கொண்டு நிற்பான்.தையல்காரர்களும்,இனிப்பு,டொபி..என சந்தோசமாகக் கொடுத்து வரவேற்பார்கள்.அவனுக்கான காற்சட்டை,சேர்ட்டுகள் எல்லாம் அங்கேயே தைக்கப்பட்டன.

வடபகுதியான வடமராட்சி,தென்மராட்சி,வலிகாமம் மூன்றுக்குமான‌ டவுண் இந்த “யாழ்ப்பாணமே”.அச்சமயம் பெரிய பஸ்நிலயத்தைச் சுற்றி வர இருந்த பல ரகப்பட்ட சிறிய,பெரிய தனித் தனியான கடைகள்,தியேற்றர்கள்,பெரிய பொதுசன நூலகம்,ஆஸ்பத்திரி …எல்லாமே கிட்ட கிட்டவாகவே இருந்தன. யாழ்ப்பாணத் டவுண் கொழும்பைப் போலில் இல்லாட்டியும் பரபரப்பாகவே விளங்கியது.

வடக்கு,கிழக்கிலிருந்த நகரக்காவல‌ர் பிரிவுகளிலும் இனவாத அடிப்படைவாதம் வேரோடிப் போய்யிருந்தன‌. யாழ்ப்பாண பாதாள உலகக் கிரிமினல்களே பெரும்பாலும் இவர்களுடைய நண்பர்களாக இருந்து அட்டகாசம் புரிந்துகொண்டிருந்தார்கள்.

அப்போதிருந்த சொல்லடை,”ஒருப் போத்தல் சாராயமும்,ஊர்க் கோழிக்கறியும் …கொடுத்து , காவலர்களை மடக்கி, எப்படியும் ஆட வைத்து விடலாம்”. நீதி, நியாயங்கள் என்றைக்குத் தான் ….அவர்களிற்குத் தெரிந்திருக்கின்றன‌?

அரசு எவ்வழி,அவ்வழியே குடிப்படைகளும்.!

நிறைவெறியில் இருக்கிற நகரக்காவலர்கள் எந்த சேவையும் செய்வதில்லை என்பதே நிஜம் . கொழும்பிலேயே லஞ்சலாவண்ணியம் கொடி கட்டிப் பறக்கிறது வடக்கு,கிழக்கு சற்று தூர உள்ள ஊர்கள். சொல்லத் தேவையே இல்லை.

சலிமும் சட்ட விரோதமாக வியாபாரம் செய்ய முயல‌வில்லை.இங்கே இருந்து கொஞ்சபேர்களை மன்னாரிலிருந்து கப்பல் மூலம் அனுப்பி இந்தியாவிலிருந்து அவர்கள் மூலமாக பலவித சாரிகள்,துணிகளை இறக்கியே ..வியாபாரம் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட அளவு சாமான்கள் கொண்டு வரலாம். ரிஸ்க்கான வியாபாரம்.முத லிலே(போட்ட முதல்’லே) ஓடிக் கொண்டிருந்தது. சில தனி மனிதர்களும் இந்த இந்திய வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தார்கள்.ரூபன், சிங்கபூர் வியாபாரி. அங்கிருந்து கசேட்டுகள்,வீடியோ கொப்பிகள்…எல்லாம் இங்கத்தைய கடைகளிற்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.ஒரு ஓடியோ கசேட் 25,30 ரூபாவிற்குப் போய்யின.பிறகு,திலகன் தொழினுட்பக்கல்லூரியில் படிக்கிற போது,அவனுடைய நண்பன் …ஒருத்தன் தவறாமல் ஜேசுதாசின் பாட்டுக் கசேட்டை புதிதாய் வார போது வாங்கி விடுபவன்.அவனிடமிருந்து இரவலாக (ஓசியிலே)பல தடவை வாங்கி பாட்டுகள் கேட்டிருக்கிறான்.ஜேசுதாஸ்சின் பாட்டுகள் அவனையும் கவர்ந்திருந்தன.

தையல்காரர்களிற்கும் பெரிய குடும்பம்.சின்னஞ் சிறிசுகளை எல்லாரும் கடையிலே பட்டன் தைப்பதிலிருந்து பழகிக் கொண்டுமிருப்பார்கள்.இவர்களுடைய பொருளாதாரமே சின்னக் கடைகளிலேயே(சின்னக்கடை என அழைக்கப்படுற அந்த‌ சுப்பர் மார்க்கட்டிலேயே) இருந்தது.

சிங்கள அரசுக்கு யாழ் சோனகர்கள் யாழ்ப்பாணத்தாரோடு இழையிறது பிடித்திருக்கவில்லை.மற்ற இடங்களில் எல்லாம் தனித்து நிற்கிற போது இங்கே மட்டும் ஒட்டுதல் ஏன்? இப்படியே இருக்க விடக்கூடாது என்பதற்காகவே… தனிமைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்கள்

புதிய அரசியமைப்பு அமைப்பு மாற்றம்,கல்வியில் தரப்படுத்தல்,தமிழ்த் தலைவர்களின் குரல்கள் புறக்கணிப்பு,அமைதிவழிப் போராட்டங்கள் அவமதிக்கப்பட்டமை…எல்லாம் தமிழ்த் தலைவர்களை நான்காம் தமிழாராட்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்த ஓர்மம் கொள்ள வைத்தன.அந்த நேரம் பிரதம மந்திரியாய் இருந்த சிறிமா,கொழும்பில் நடத்துப்படி கேட்டார்.தமிழ் மாநாட்டை சிங்களப்பகுதியில் நடத்துவதா?சம்மதிக்கவில்லை.பாவம் சிறிமா,அவர்க்கு வடக்கு,கிழக்குப் பகுதியிலுள்ள காவலர் படைகளிடம் இன அடிப்படைவாத நஞ்சு பரவி பரந்துப் போய்க் கிடக்கின்றது தெரிந்திருக்கவில்லையோ,அல்லது தெரிந்து தான் வாளாயிருந்தாரோ?தெரியவில்லை.

குழப்பம் விளைவிக்கும் நோக்கத்துடன் மாநாட்டு நாளில் பிரவேசித்த காவல்துறையைச் சேர்ந்தவர்கள்…தமிழ் இளைஞர்களுடன் கொளுவல்களை வளர்க்க, உணர்ச்சிகரமான நிலை உருவானது.அதில் ஒரிருவர்,துவக்கை உருவி மேல்வெடி வைத்தார்கள். குருவி இருக்க பனம் பழம் விழுந்தது போல,மேலே ஓடிக்கொண்டிருந்த உயிர் மின்சாரக் கம்பி ஒன்றின் மீது சூடு பட்டு அறுந்து விழுந்ததில் மக்கள் இருந்த பகுதியில் ஒன்பது பேர்கள் உடனடியாகவே மின்சாரம் அடித்து இறந்து போனார்கள்.

பொலிசிற்கும் வடபகுதியிற்கும் எப்பவும் நல்லுறவு இல்லாததால்…பொலிஸ் மீது தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும்.ஓரே களேபரம்.மாநாடு குழப்பப்பட்டது.ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படை உடையிலும்,சிவில் உடையிலும் இருந்த படையினர் மக்களை நோக்கிச் சுட்டனர்.பொலிஸ் பிரிவினருக்கு சின்னக்கடைத் தொகுதியை சோனகர் நடத்துகின்றனர் என தெரியும். ஊரடங்கில்….காவல்துறையினர் காவல் நிற்க சிவில் உடையில் இருந்த மற்றைய படையினர் சின்னக்கடைத் தொகுதிக்கு தீ . வைத்தனர்.

எரிய முதல் தமது பெறுமதியானப் பொருட்களை எடுக்கவும், தீயை அணைக்க முயற்சித்தவர்களையும் பொலிஸ் கிட்ட நெருங்க விடாது தடுத்தது..

ஊரடங்கு நிலையிலும் முஸ்லிம்கள் என்றபடியால் இவர்களை சுடவில்லை போல இருக்கிறது பொலிஸுடன் இவர்களால் வாதாட மட்டுமே.முடிந்தது.ஆனால் அவர்களது பொருளாதாரம் கண்ணெதிரே எரிந்து அழியிறதை கண்ணீர் மல்க‌கையறுநிலையில் நின்று பார்த்து கேவத் தான் முடிந்தது.

இதே போலவே பிறகும் நூலதிற்கும் தீவைத்த போது, பொலிஸ் தரப்பு தீயை அணைக்க நெருங்க‌ விடவே இல்லை.இன அடிப்படைப் பேய்களாக,நந்திகளாய் இரக்கமற்று. தடுத்துக் கொண்டு நிற்கின்றார்கள். கெக்கலித்தார்கள் வேறு

.ஒரே நாளிலே .., . இதுவரை காலமும் பழம் ஏட்டுச் சுவடிகள் உட்பட,கிடைக்க முடியாத அரிய பல நூல்கள்…அனைத்துமே சாம்பராகி விட்டன.இதே போல இந்தியாவிலும் பிரித்தானியர் கால் வைத்த போது,கடலையே கலக்கிய சோழர்களின் கப்பல்கள் பற்றிய சுவ‌டிகளை ….எல்லாம் தீ வைத்து எரித்ததாகச் சொல்லப்படுகிறது.பிறகு விடுதலைப் பெற்ற இந்தியா,கூட காஸ்மீரிலிருந்த நூலகம் ஒன்றை எரித்திருக்கிறார்கள்.இவர்களால்,”டெவில்”என விமர்சிக்கப்படுற ஜேர்மனிய தலைவர்,கிட்லர்,”நூல்களை,நூலகங்களை …பாதுகாகுங்கள்”என கடுமையாக தனது படையினருக்கு கட்டளை இட்டிருக்கிறான்.பிரான்சின் ,நெப்போலியனும் ..அப்படியே இருந்திருக்கிறான்.” சின்னக்கடை எரிப்பால் பல சோனகர்களின் பொருளாதாரம் போண்டியாகி பிச்சாண்டியாய் போய், போயே விட்டன.

அண்ணரின் “முதலே” கடையிலே தான் இருந்தது. அவர் மனம் உடைந்துப் போனார். தையல்காரர்களின் தையல் மெசின்கள் அனைத்துமே, முதல்கள் அனைத்துமே,எரிந்து கண்ணீரானது.

ஒரு விதத்தில் அன்றாடப் பிழைப்பை வைத்தே காலத்தை ஓட்டி இருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை.எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் திரைப்படம் எடுத்தது போல,அவர் மன்னராகி விட்டார்.இவர்கள் பிச்சாண்டியாய் ஆகி விட்டார்கள்.நிவாரணம் என எதுவுமே அரசிட மிருந்து , அதுவும் யாழ்ப்பாணத்தவர்களிற்கு, தமிழருக்கு… கிடைக்கவே மாட்டாது. சிறிலங்காவின் ஜனாதிபதிகள் சிங்களவர்களிற்குத் தான் கடவுள்கள்.அவர்களிற்குத் தான் பொது மன்னிப்பு,எக்ஸ்சிற்றா,எக்ஸ்சிற்றாக்கள் எல்லாம்.மற்றவர்களிற்கு இல்லை.

நகரசபையிற்கு வரி அறவிடும் உரிமையே இல்லை. அதை எரித்ததிற்காகவே பிறகு, புதிய சந்தைக் கட்டிடம்(நியூமார்க்கட்)கட்டப்பட்ட போது,அதன் அதிகாரம் மாநகரசபைக்கு வழங்கப்பட்டதால், சின்னக்கடையில் அதிகமானக் கடைகள் வைத்திருந்த சோனகர்களிற்கு முன்னுரிமை அளித்து பெரும்பாலானக் கடைகள் அவர்களிற்கு கொடுக்கப்பட்டன.ஆனால் அதன் வாடகை, சின்னக்கடையை விட அதிகமானது.இணையத் தளத்தில் அதில் “மூன்றில் இரண்டுப் பங்கு முஸ்லிம்களின் கடைகளாக இருந்தன”என எழுதப்படுகிறது.

அது உண்மை தான் .

சின்னக்கடையில் முதலையே இழந்து விட்டார்கள்.அரச நிவாரணம் கிடைத்திருந்தால் ஓரளவு நிலைத்து இருந்திருப்பார்கள் , முடியாமையால் கடைகளை மற்றவர்களிற்கு கொடுத்து விட்டு ஒதுங்கிப் போனார்கள்.

தற்போதைய குண்டு வெடிப்பின் பின் “படையிலிருந்த மகாசேனப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிவில் உடையில் முஸ்லிம்களின் கடை கண்ணிகளை எல்லாம் அடித்து ,உடைத்து எரித்தார்கள்”என இங்கத்தைய பத்திரிகைகளில் வாசிக்கக் கிடைக்கிறது.இதே போலத் தான் அன்றும் நடந்திருக்கிறன .இன்றையதில்,சாதாரணச் சிங்கள‌வர்களோ,ஏன் ,சண்டியர் எனப்படுற காடையர்களோ கூட பங்கு பற்றி இருக்கவில்லை எனப் போகிறது.

மாகாணவரசு என்று ஒன்று அப்ப இருந்திருக்கவே இல்லை.இப்ப கூட பேர்க்குத் தானே கிடக்கின்றது.முஸ்லிம் அமைச்சர்களிற்கும் யாழ் முஸ்லிம் என்றால் ஒரு இளக்காரம் இருந்திருக்கலாம் எனப் படுகின்றது . பிறகும் நிவாரணமோ, நட்ட ஈடோ எதுவும் கிடைக்கவில்லை. தமிழர்களிற்கு கலவரங்களின் போது கிடைத்த ஆறாக் காயங்களே இவர்களிற்கும் கிடைத்தன.அரசே குற்றவாளியாய் கிடக்கிற மிக மோசமான நிலமை அப்படியே கிடக்கின்றது. என்ன, இவர்களை உலகம் இப்படியே இருக்க விட்டு விடுமா?பார்ப்போம்.

வர்த்தக ரத்தம் அவர்கள் உடலில் ஓடுற ஒன்றாச்சே.அண்ணர்,முதலுக்காக தான் இருந்த‌ வளவுடன் இருந்த வீட்டையே விற்றார்.

இலங்கை தீவில் இன்னொரு குட்டித் தீவாய் இருந்தவர்கள் மிக மோசமான வறுமையிலிருந்து சின்னக்கடைத் தொகுதி,மற்றும் சிறிய கடைகள்,படிக்கிற கூட்டம் என சிறிது சிறிதாக எழுந்தவர்கள்.வசதிகளைப் பெற்று வாழ்ந்தது ஒரு கனவாய் போய் விட்டன‌. கடற்றொழில் செய்யவும் முதல் வேண்டும்.ஆனால் யாழ் கடலில் இவர்கள் கால் வைக்கவே முடியாது. என்பது இன்னொரு பெரிய மறுப்பு.அது இன்னொரு உலகம். அதை,கடல் மல்லர்களைப் பற்றி ஆராய்கிறவர்கள் ஆராய்யுங்கள். இன்று இவர்களையும் கடற்படையினர் கையாலாகதவர்களாக்கி விட்டிருக்கிறது.

முதல்கள் அற்று…நிறைய பேர்கள் விரக்தியில் இருந்தார்கள்.ஒஸ்மானியாவால் ‘படிக்கிற‌ சிறிய தொகையும்’ கூட‌ அருகிப் போய்க் கொண்டிருந்தது .

தமிழ் இளைஞர்களின் பாழும் தலைமறைவு இயக்கங்கள் தோற்றம் கொண்டன. பாழும் வறுமை,படையினர் பணம் கொடுக்க சோனகர் சிலரை உளவாளிகளாக மாற்றி விட்டது.பெருகிய பிள்ளைக் குட்டிகள் இவர்களை விரட்டிக் கொண்டேயிருந்தன.உல்மாக்களின் பேச்சுக்களால் பொம்மை வெளிக்கு காரைவீதியிற்கு அப்பால்(அடுத்தப்பக்கம்)இருந்த புல்லுக்குளம் இருந்த பகுதியில், இன்னமும் பயிர் பச்சைக்கு தயாராகாததாக நிலையில் இருந்த நிலக்காணிகளிலும் அத்துமீறிக் குடியேற முடிவெடுத்தார்கள்.

யாழ் விவசாயிகள் கடின உழைப்பாளிகள் என்பதை ஒப்புக் கொள்ள‌வே வேண்டும்.கல்லுண்டாய் வெளி நெற்காணிகள் முதலில் வல்வைவெளியைப் போல மழைக்காலங்களில் கடல் நீர் பரந்து வெள்ளம் போடுறதாகவே இருந்திருக்க வேண்டும்.சிப்பி தோண்டி எடுத்த நிலத்தை தூர்ப்படுத்தி மெல்ல ,மெல்ல தான் நெற்காணியாக்கி இருக்க வேண்டும்.இப்பவும் சுடலைப் பகுதியில் சிப்பி தோண்டுறது இருக்கிறது.வீடுகளிற்கு வெள்ளை அடிக்க அந்த சிப்பிகளே பயன்படுத்தப்பட்டன.தவிர மண் மலைகள் போன்ற குன்றுகள் பல கிடந்து, தரை மட்டமாக்கி விட்டிருக்கிறார்கள்.உப்பளத்திற்கு கிட்டவாக காரை வீதியில் கடல் பக்கமாகவே ஒரு இரண்டு ஏக்கர் காணியில் ஒரு குடும்பம் வீடு கட்டி தோட்டம் செய்து வாழ்கிறது.உப்பு மண்.அடிக்கடி வெள்ளம் போடுறது வீதியிற்கு கடலிற்கு எதிர்பக்கமாகவே நெற்காணிகள் வரைக்கும் கிடக்கின்றன.மாட்டொழுங்கைப் பகுதியில் பெரும்பாலும் நெற்காணிகள் கிடக்கின்றன.அதற்கு கிட்ட தான் வீதியில் கடலைப் பார்த்த புறமாக அந்த குடும்பம் இருக்கிறது. இவர்கள் குடியேற இருந்த நிலமும் விவசாயிகளின் தயார் படுத்தலில் இருந்ததாக இருக்க வேண்டும்.அவசரமில்லாது நிதானமாக முன்னேறுற போக்கு அவர்களுடையது.இப்படியான தரவை நிலங்களில்,கோவில்க் காணிகளில் தாழ்(குடிமைச் சாதியினர்) சாதியினர் அத்து மீறி குடியேறி,வாள் வெட்டுக்குள்ளாகி…,காயங்களைக் சுமந்து ,பிறகு,நட்ட ஈடுப் பிரச்சனைகளால் குடியேறி குறிச்சிகளாகி இருக்கின்றன தான்.

ஆனால்,இவர்கள் வேற மத‌த்தினர்.எந்த மதமும் இப்படியான குழப்பத்தில் இறங்குவதில்லை.மேலும்,மேலும் குழப்பமே அதிகமாகும்.அப்படி குடியேறியவர்களாகத் தான் இருக்க வேண்டும்.பல கொட்டில்கள் போட்டு குடியேற்றம் நடந்து விட்டதாகப் படுகிறது.வீட்டை விற்ற அண்ணணை “சலிம் ,நீ எங்களோட வந்து இரு.பெரிய வீடு தானே,, வந்து இரு இந்த குடியேற்றத்திற்குப் போகாதே”என முபாரக் தடுத்துப் பார்த்தான்.

அண்ணணிற்கு தன்மானம் தடுத்தது.உல்மாக்களில் பெரும் நம்பிக்கை வைத்திருப்பவன்.”சே,சே,அவர்கள் பிழையாக நடக்க மாட்டார்கள்”எனப் பெயரைக் கொடுத்து குடியேறி விட்டான்.25,30 குடும்பங்களில் அவனுடையதும் ஒன்று.

“அண்ணை,நான் பணம் தந்தால் வாங்குவே தானே,நான் கப்பலிற்குப் போய் உனக்கு காசு அனுப்புகிறேன்.நீ இந்த குடியிருப்பிலிருந்து வெளிய வந்து விட வேண்டும்,என்ன”என்றான்.”சரி “என்று சிரித்தான்.கப்பலுக்கு போறதை சிம்பிளாகச் சொல்கிறான்.அந்த‌ பணத்திற்கு இவன் எங்கே போவான்? அல்லா,எல்லாத்திற்கும் கணக்கு வைத்திருப்பார்.

அப்பர் ,இளைப்பாரிய போது கிடைத்த புரவிடண் பணத்தை முபாரக்கின் கப்பல் பயணத்திற்கு கொடுக்க குடும்பத்திலிருந்தவர்கள் அனைவரும் சம்மதித்தனர்.குறிப்பாக சயிரா மும்முரமாக நின்றாள்.அவளுக்கான…. பணம்.ஆனால்,அது போதாதே.பக்கத்து வீட்டிலே இருந்த சயிராவின் தோழி பாத்திமாவிற்கு முபாரக்கை நிரம்ப பிடிக்கும்.அவளின் இரண்டு அண்ணர்மார் அபுதாபியில் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் இருந்தார்கள்.தங்கச்சியின் விருப்பத்தை அறிந்த அவர்கள் கப்பலுக்குப் போற மிச்சப் பணத்தை தருவதற்கு சம்மதித்தார்கள்.அவனுக்கும் பாத்திமாவிற்கும் ஆடம்பரமில்லாமல் நிக்காய் நடந்தது.ஒரு மாதிரி பாத்திமா வயிற்றில் ஒன்று கரு தரிக்க ,அவன் கப்பல் ஏறுறதும் நடந்தது.

“யாழ்ப்பாணரோடு சேர்ந்திருந்ததால் தான் சின்னக்கடை … எரிப்பு நிகழ்ந்தது”என புதிய உல்மாக்கள்,மெளலவிகள் மசூதிகளில் பேசினார்கள். ஆனால் ,அவர்களால் சோனகர்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்த முடியவில்லை.எல்லா இயக்கங்களிலும் சோனகப் பெடியள்கள் சிலரும் இருந்தார்கள்.கழுகு,அல்லியை தடை செய்து …துரத்தி ,துரத்தி வேட்டையாடியது.அல்லியில் இருந்தவர்கள்,பொம்மைவெளியில் ஓட,கழுகும் ,அந்த குறிச்சியில் நுழைய,முதல் தடவையாக…இயக்கங்களைப் பிடிக்காமல் போனது.படையினருக்கு வாய்ப்பாகிப் போனது.இச்செயலால் கழுகில் இருந்த தோழர்கள்,விலகப் போறதாக தெரிவித்தார்கள்.கழுகு ,ஏற்கவில்லை.தலை மறைவாக ஓட‌ நேரிட்டது.படையினரிடம் சரணடைய,அவர்கள் பாதுகாப்பு கொடுத்து,அவர்களால் உருவாக்கப்பட்ட ஜிகாத் குழுவான ..ஊர்காவல் படையில் சேர்க்கப்பட்டார்கள்.உயிர் ஆபத்து?,வேற வழி இருக்கவில்லை.யாழ் சோனகர்,வசதியானவர்களாக இருந்திருந்தால்…வெளிநாடுகளிற்குப் அனுப்பி இருப்பார்கள்.விதியும் ,எங்கையோ இழுத்துச் செல்கிறது. கழுகு,அல்லி மோதலுக்கு முதல்,சமூகப் பிரச்சனைகளை எல்லாமே இயக்கங்களிடமே தீர்த்து வைக்கச் சொல்லி கொண்டு வந்தனர்.வடக்கு,கிழக்கில் பொலிஸ் செத்து கற்காலமாகி கிடந்தது.தமிழர்கள் எவருமே பேருக்கு இருக்கிற பொலிஸை நாடுவதில்லை.பெரும்பாலான இயக்கங்களில் போராடும் பிரச்சனை இருந்ததால் சமூகப் பிரச்சனைகளை மக்கள் குழுக்களிடமே தீர்த்துக் கொள்ளும்படி திருப்பி அனுப்பின‌.

தாம‌ரை இயக்கமே, பெரும்பாலும் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தது.இது தான் சாட்டு என மற்றவியக்கங்களும் தம்மிடம் வருகிறவர்களை,தாமரையிடமும் செல்லுங்கள் என கையைக் காட்டியது.”போராடுவதில்லை”என்ற விமர்சனத்தை தாமரை எதிர் கொண்டிருந்தாலும் வடக்கு,கிழக்கிலிருந்த தமிழ் காடையர் தலைவர்களை களை எடுத்து,அவர்களை ஒடுக்கியது தாமரையே.

சிங்கள அரசு,சிங்கள காடையர்களை வளர்த்து,தமிழ்,முஸ்லிம் கலவரங்களில் சிவில் உடையில் படையினருடன் சேர்த்து இறக்கி…கடை உடைப்பு,வீடு உடைப்பு,எரிப்புகளுடன்,உயிர்ப்பலிகளையும் எடுத்துக் கொண்டிருக்கின்றது.புதுப்புதுக் குழப்பங்களை எல்லாம் நிகழ்த்துகிற அநாகரீகங்கள் அங்கே கொடி கட்டிப் பறக்கின்றன.கிரீஸ் மனிதர்கள்,குள்ளர்கள்….என பல விநோதங்கள் வேறு !என்ன அரசு இது??

முஸ்லிம்களின் அத்து மீறிய குடியிருப்புப் பிரச்சனையும் இயக்கங்களிடம் வந்திருக்கலாம்.கோவில் காணிகள்,சோனகர் பகுதிப் பிரச்சனைகளில் இறங்கு வதை எல்லாம் ‌தவிர்த்க்து கொண்டிருந்தன.முந்திய மாதிரி பேசக் கூடிய சோனகர்த் தலைவர்கள் வேறு அருகி விட்டிருந்தனர்.

ஐந்து வருச ஒப்பந்தத்தில் கப்பல் ஏறிய முபாரக்கை கப்பலில் இருந்தவர்களிற்கு பிடிக்காமலா போகும் மனைவி,பிள்ளையைப் பார்க்க முடியாது பிரிந்திருக்கிற‌ சோகம் அவரை வாட்டியது.பாத்திமாவின் அன்பு தான் அவர் வாழ்வையே அர்த்தப் படுத்தியது.முதல் வேலையாக அண்ணரை சோனகக் காலனியில் வளவு ஒன்றை வாங்கி கொட்டில் வீட்டையாவதைக் கட்டி குடியேறச் செய்தான். அண்ணரும் கொழும்பில் இருந்த அவருடைய நண்பரான மேமன் வர்த்தகருடன் சேர்ந்து ஜவுளி வர்த்தகம் செய்யத் தொடங்கி இருந்தார்.

அத்து மீறியப்பகுதியிலிருந்து வெளியேறிய அண்ணர் ஏற்படுத்திய மன நிம்மதி கொஞ்சநஞ்சமில்லை. காலங்கள் உருண்டோடின. இனப் பிரச்சனையை தீர்க்கும் என எதிர்பார்ப்புடன் வந்திறங்கிய இந்தியனாமியும் ,சிறிலங்காப் படையினர் போல மாற்றம் பெற்று வருகிறதா…என முபாரக்கிற்கும் சந்தேகமாக இருந்தது.

அவ்விடத்திற்கு அயலில் இந்தியனாமியில் இருந்த சிக்கியர்ப் படைப் பிரிவு, ஒரு நாள்,அத்துமீறிய குடியிருப்புகளிலிருந்த(ஓலையால் வேய்ந்த வீடுகள்)சோனகக் குடும்பங்களை எல்லாம் துரத்தி விட்டு,இருந்த பொருட்களைக் கூட எடுக்க விடாது தீ வைத்து விட்டது.உயிரிழப்புகள்…நிகழ வில்லை என சந்தோசப்படுவதா?இல்லை சோனகரில், ஒரு பகுதியினர் மறுபடியும் அதுவரையில் பாடுபட்டு வளர்த்த பொருளாதாரத்தையே இழந்து விட்டதை நினைத்து அழுவதா?.

பாழும் விதி கொடியது !

ஏன், சீக்கியப் பிரிவு சிங்களப் பொலிஸைப் போலவே …எதையுமே எடுக்க விடாது எரித்து சாம்பராக்கியது?திலகனுக்கும் புரியவில்லை.முபாரக்கிற்கும் கூட‌ புரியவில்லை. திலகன்,புலம் பெயர்ந்த தற்போதைய நிலையிலே,இணைய வலைத்தளங்களில் மேய்ந்ததில் ஒரு விடையைப் பெறுகிறான்.இந்தியாவில் சீக்கியருக்கும் ,முஸ்லிம்களிற்கிடையில் மோசமாக கலவரம் நடந்திருக்கிறது.முஸ்லிம் தரப்பு பல தார மணமுடித்தலைக் கொண்டது.பெடியளிடம் அந்த குணம் வியாபித்தே இருக்க வேண்டும்.பல சீக்கியப் பெண்களை….அழ வைத்து கொன்றிருக்கிறார்கள்.சீக்கியர்கள்,பெண்களைத் துன்புறுத்தாதவர்கள் .கலவரத்தின் போது பெண்களை , சிறுவர்களை இலக்காக்கவில்லை.அந்த காயங்கள் அவர்களிற்கு இன்னமும் ஆறாது கிடக்கின்றன.அந்த கோபம் தான்,அந்த எரிப்பாக இருக்கும் எனப் படுகிறது.எந்த ஒரு அரசாங்கமும் எந்த மதத்திற்கும் முன்னுரிமை அளிக்கக் கூடாது.அரசாங்கம் என்பது ஒரு நடுநிலையானதாக இருக்க வேண்டும்.இந்த விசயத்தில் ஜனநாயக அரசுகளை விட க‌ம்யூனிச அரசே சிறப்பாக இருக்கிறது.பலதார மணத்திற்கு ஆதரவு,ஆலவட்டம் பிடித்தல் எல்லாம் இல்லை.பல தார மணம் அன்றைய மன்னர் ஆட்சியில் நிலவிய ஒன்று.முஸ்லிம்கள் அதை தம் மதத்துடன் சேர்த்து இன்னமும் வைத்திருக்கிறார்கள். சாதிப் பிரச்சனைகளின் மூலாதாரமும் இந்த பெண்களை அவமதிப்பதாகவே இருக்கின்றன.மாகாணவரசுகள் அதிகாரமிக்க அரசாகிற போது இவற்றை ….. எல்லாம் களைந்து விடலாம் எனவே படுகிறது.

…………………………………………………………………………………………………………………………………………………………..

வேலையால் வந்த பிறகு திலகன் ,அண்ணன் வீட்டுக்குச் சென்று அண்ணனையும் ஏற்றிக் கொண்டு முபாரக்கைச் சந்திக்கச் சென்றான்.

போடன் அன்ட் லோராண்ஸ்.அண்ணருக்கு கிட்ட தான் இருந்திருக்கிறார்.புலம் பெயர்ந்து,இந்த மண்ணிலே கால் வைத்து பத்து,பதினைந்து ஆண்டுகள் சென்றிருக்குமா?சே!இவ்வளவு நாட்கள் தெரியாமல் அயலுக்குள்ளே இருந்திருக்கிறோம்.இந்த முக நூல் ஏற்பட்டு ஒரு ஐந்து வருசம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? எதற்கும் ஒரு காலம் இருக்கிறது போல இருக்கிறது.

தமிழர் விடுதலைக்கும் கூட காலம் கிடக்கிறது போல இருக்கிறது.இந்த அல்லா என்னென்னெவெல்லாம் வைத்து விளையாடுகிறார்.இந்த அல்லாவைத் தொழுதாலே எல்லாமே விடிந்து விடுமே! என்கிறார்கள். எங்களுக்காக முபாரக் அண்ணை நிச்சியம் தொழுது கொண்டு தான் இருப்பார்.

தலை ஏறத்தாழ வழுக்கையாகி விட்டிருந்தது.எழுபது வயசைக் கடந்து விட்டிருந்தார்.அதே மூக்குக் கண்ணாடி.அதே அருள் விளையும் பார்வை.அண்ணரோடு ஏற்கனவே பேசியிருந்ததால் ஓரளவு தெரிந்திருந்தார்.அவர் மனைவி பாத்திமா ஆச்சி போல இருந்தார்.அவரும் பாத்திமாவுமே தனியவே இருக்கிறார்கள்.

“இங்கே தான் சாயிரா குடும்பமாக (வேற)… மாகாணத்திலே இருக்கிறார், அவவிற்கு இரண்டு பிள்ளைகள்” என்றார்..பள்ளி விடுதலை நாட்களில் இங்கே வந்து போகிறார்கள்.. அவர் மகள் ஆயிசாவும் மணமாகி சயிரா இருக்கிற மாகாணத்திலே வசிக்கிறாள் முபாரக் அண்ணை உரமானவர்.அறுபத்தைஞ்சு வயசு மட்டும் வேலை செய்திருக்கிறார்.

இப்ப, இளைப்பாரிய பிறகு “மசூதிக்குப் போறதும் மோலில் திரிவதும்…என காலம் போகிறது”என்று சிரித்தார். திலகனை , அண்ணனை எல்லாம் வாரப்பாடாக விசாரித்தார்.”அல்லா என்ன,உங்கட கடவுளும் எல்லாரையும் காப்பாற்றுறார்.இது தான் வாழ்க்கை”என்கிறார்உண்மை தான் .

“இங்க வந்த பிறகே நல்லா பழகின சில நண்பர்கள் அற்ப வயசிலே என்ன, (எல்லா வயசிலேயும் தான்)தவறிப் போய் விட்டிருக்கிறார்கள்.யார் இருப்பார்கள் ,யார் இருக்க மாட்டார்கள்…என்பது முதலே தெரிவதில்லை?” கரைந்தார்.

“கப்பலிற்குப் போனீர்களே,எத்தனை வருசம் இருந்தீர்கள்”என திலகன் கேட்டான்.”அட ,உனக்குத் தெரியுமா?”ஆச்சரியமாகக் கேட்டு கண்கள் மின்னச் சிரிக்கிறார்.”வசந்தி அக்கா மூலமாக அறிந்தேன்”என்கிறான்.அவர், டியூசன் குடுத்தது ஞாபகம் வந்து விட்டது.அவருக்கு திலகனைப் பற்றிய நினைவுகள் மெல்ல வருகின்றன.”அட,அட உன்னைத் தெரியுது.நீ குட்டியன் இல்லையா?உன் கொண்ணை இவன் கொஞ்சம் வளர்ந்தவன்.இவனை ஞாபகம் இருக்கிறது.நீங்க எல்லாருமே மிச்சம் சிறிய பட்ஜ்.”

“ எத்தனைப் பிரச்சனைகள்,சலிம்முக்காகத் தான் நான் கப்பலிலேயே ஏறினேன்”அவர் நீண்ட பெருமூச்சு விட்டார்.”ஓரளவு அண்ணரும் பிரச்சனைகளிலிருந்து மீண்டார்.” புலம் பெயர்ந்த‌ அண்ணர் குடும்ப மும் யாழ்ப்பாணத்திற்கே திரும்ப போய் விட்டது. அண்ணரின் மகள், மணமாகி இங்கே தான் …ஒரு மாகாணத்தில் நல்லாய் இருக்கிறார்கள் “என்று கூறினார். இவர் தான் எடுப்பித்திருப்பார். “அண்ண ரும் மவுத்தாகி ஒரு நாலைஞ்சு வருசம் இருக்கலாம்” என்கிறார்.

ரவி அண்ணை லண்டனில் இருப்பதாகக் கூறி முகநூலில் காட்டுகிறார்.ரவி அண்ணை இதுவரை அகப்படவில்லை.இனி அவரோடும் எங்களிற்கும் நட்பு வள‌ ரும்..திலகன் தலையை சிலிப்பிக் கொள்கிறான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *