கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 11,015 
 

“மத்தளங்கள் கொட்டுங்கள்,
மந்திரங்கள் சொல்லுங்கள்.
பெட்டை மாட்டைக் கொண்டுவந்து
தாலி ஒன்று கட்டுங்கள்.”

அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாக தெரிந்தாலும், முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை. ஆழம் காணமுடியாத சோகம் நிழலாடியது.

மாமியார் தர்ம சங்கடத்துடன் அவளைப் பார்த்தாள். மாமிக்கு வயது எழுபது ஆகப்போகிறது.

அவளுக்கு, அதுதான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம்.

மாமிக்குப் பெயர் திருமதி திருச்சிற்றம்பலம். அவளுக்கு என்று ஒரு பெயர் எப்போதோ இருந்திருக்கலாம். ஆனால் ஊருக்கும் உலகத்துக்கும் அந்தக் கிழவி திருமதி திருச்சிற்றம்பலம்தான்.

மருமகளுக்கும் பெயருண்டு. மஞ்சுளா என்று பெயர். மஞ்சளும் குங்குமமுமாக திருமதி. திருச்சிற்றம்பலத்தின் மருமகளாக வந்தவள்.

“பெண்மை என்று பேசுங்கள்,
தாய்மை என்று முழங்குங்கள்
தாலி கட்டி முடியவிட்டு
போலியாக வாழுங்கள்”

“மஞ்சுளா சும்மா இரு” மாமியார் கடுமையாகச் சொன்னாள். மாமியாரின் வாரிக்கட்டிய கொண்டையை மருமகள் தட்டிவிட்டுச் சிரித்தாள்.

மாமியும் மருமகளும் காரில் இருக்கிறார்கள். கார் லண்டனில் ஒரு நெருக்கமான றோட்டில் போய்க்கொண்டிருக்கிறது. மஞ்சுளா கொஞ்ச நாளாக ஒரு மாதிரி இருந்தாள்.

கல்யாணமாகிப் பத்து வருடமாகிறது. மஞ்சுளா எப்போதும் ஒரு “மாதிரியாகத்தான்” இருப்பாள். அதைப்பற்றி ஒருத்தரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

கட்டிய கணவன் தாலி கட்டிய கையோடு லண்டனுக்கு வந்ததிலிருந்து மஞ்சுளா “ஒரு மாதிரியாகத்தான்”; இருந்தாள். ஆனாலும் அதை ஒருத்தரும் பெரிதாக எடுத்துக்; கொள்ளவில்லை.

கார் ஒரு ஒரு சிவப்பு லைட் சந்தியில் நின்றது. வாழ்க்கை பிரயாணம், பல சந்திப்புகள், சந்திகள் இப்படிப் பல லைட்டுகள்.

“மேடை ஒன்று கட்டுங்கள்
மேளம் ஒன்று தட்டுங்கள்
தாளம் போட்ட நடையைக் கட்டி
சங்கிலியாற்; பிணையுங்கள்.”

மஞ்சுளா இப்போது முணுமுணுத்தாள். மாமியார் பேசுவாள் என்பதை உணரும் நிலையில் இருந்தாளோ இல்லையோ அவள் மெல்லமாக முணுமுணுத்தாள்.

காரை ஓட்டி வந்தவன் கிழவியின் சொந்தக்காரப்பையன். கிழவி மறைக்க வைக்கும் உண்மையை எப்போதோ உணர்ந்து கொண்டவன். அவனுக்கு இப்போது முப்பது வயதாகிறது, இருபது வயதில் அவன் திருமதி திருச்சிற்றம்பலம் வீட்டருகில்தான் கொழும்பில் வசித்து வந்தான்.

கொழும்பில் தனியார் கொம்பனி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மஞ்சுளா அக்காவையும் சாடையாகத் தெரியும். அவளுக்கு லண்டனிpலிருந்து மாப்பிள்ளை வந்ததும் அவனுக்குத் தெரியும்.

அதன்பின் கல்யாணமாகி இரண்டுவருடம் வரை ஏன் மஞ்சுளா அக்கா லண்டனுக்குப் போகவில்லை என்று தெரியாது, எண்பத்திமூன்றாம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் அமைதியான வாழ்க்கை தொடர்ந்த காலத்தில் வாழ்வின் முன்னேற்றத்தை தேடியலைந்த தமிழ் இளைஞர்களில் அவனும் ஒருத்தன்.

கிழவிக்கு மூன்று மகன்கள் மூவரும் அப்போது வெளிநாட்டிலிருந்தார்கள். முதல் மகன,; சிங்களப் பெண்ணொருத்தியை செய்தபின் திருமதி. திருச்சிற்றம்பலம் அடுத்த மகனும் அப்படி ஏதும் பிழையான விடயம் செய்து தொலைக்க முன் உடனடியாக ஒரு தமிழ்ப்பெண்ணைச் செய்து வைத்தாள். கிழவின் கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களின் பின்னும் கடைசி மகனின் கலியாணம் நடக்கவில்லையே என்று தெரிந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்ததையும் இந்த இளைஞன் கேள்விப்பட்டிருக்கிறான்.

அந்தக் காலத்தில் மஞ்சுளா அக்கா மிக அடக்கமான பெண்ணாக வீணை பழகி Nகுhயிலுக்குப் போய், விரதங்கள் பிடித்து, சீதனம் சேர்த்து ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு காத்துக்கொண்டிருந்தாள்.அதை விட மஞசுளா கதை,கவிதையும் எழுதுவாள் அவனிடம் அவள் எழுதிய கவிதைகளைக் கொடுத்து சிலவேளை கொடுத்து அவனின் அபிப்பிராயம் கேட்டிருக்கிறாள். ஆனால் அவள் எழுதிய எதையும் பிரசுரிக்க அவள் விரும்பவில்லை; தயக்கமும் கூச்சமுமானவள் மஞசுளா.

“டொக்டர் என்ன சொல்வாளோ தெரியாது”

கிழவி யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியாது.

மஞ்சுளாவுக்கு கிழவி சொல்வது புரியுமோ இல்லையோ என்றும் அவனுக்குத் தெரியாது.

“உலகம் என்ன சொல்லும்”

கிழவி பெருமூச்சு விட்டாள்.

உலகமா?

அவன் தன் கார்க் கண்ணாடியில் பின்னாலிருக்கும் கிழவியைப் பார்த்தான். அவனுக்கு நல்ல ஞாபகமிருக்கிறது கிழவியின் நாடகம்.

“இந்தப் பையன் லண்டனில்; என்ன கூத்து ஆடுகிறானோ தெரியாது” இப்படித்தான் இந்தக் கிழவி இன்று அவர்களை வைத்துக் கொண்டு காரோட்டும் அவனின் தகப்பனிடம் வந்து சொன்னதாக ஞாபகம்.

அவனின் தகப்பன் கிழவியின் தூரத்துச் சொந்தம். கிழவியின் இரண்டு பையன்களும் கல்யாணமாகி ஒரு சில வருடங்களிலேயே குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

கடைசி மகனைப்பற்றி ஏதோ பேச்செல்லாம் அடிபடுவதாகக் கேள்விப்பட்டதும் கிழவி துடிதுடித்தது இவனுக்கு ஞாபகமில்லையா என்ன?

“லண்டனில் எந்தத் தேவடியாள் வலையில் என்ர மகன் விழப்போகிறானோ தெரியாது,”

கிழவி கோபத்தில் வார்த்தைகளை வெடித்ததை இவனின் அம்மா தர்மசங்டத்துடன் சகித்துக்கொண்டான்.

“ஏன் லண்டனில் யாரும் கேர்ள் பிரண்ட் இருக்கினமா?” இவனின் அம்மா கிழவியை மெல்லமாகக் கேட்டாள். கொழும்பில் லண்டன் மாப்பிள்ளைக்கு நல்ல விலை. மஞ்சுளா மாதிரி எத்தனையோ பேரின் குடும்பம் தங்களிடம் உள்ளதெல்லாவற்றையும் கொடுத்து ஒரு லண்டன் மாப்பிள்ளை எடுக்க துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தொடர்ந்து நடக்கும் பிரச்சினைகளால், காலத்துக்குக் காலம் கத்தரிக்காய்க்கும் ஆட்டுக்கும், மாட்டுக்கும் விலையேறுவதுபோல,கல்யாண வயதுக்கு வந்த தமிழ் ஆண்களுக்கும் விலையேறிக்கொண்டிருந்தது.

மஞ்சுளா ஒரு சாதாரணபெண். சுமாரான தோற்றம் அருமையான குரல். கதை, கவிதைகளில் மிக, மிக ஈடுபாடு. வீணையோடு தானிணைந்து தெய்வீகக் குரலில் பாடுவாள். தனியார் கொம்பனியொன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெள்ளவத்தைக் கடற்கரையில் சிலவேளையில் தன் அக்காவின் குழந்தைகளுடன் காற்று வாங்கும்போது அவளை அவளின் குடும்பத்துடன் காணுவான் இவன் அப்போது விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். கிழவி வீட்டுக்கு வருவதும் கல்யாணம் பேசிக் கொண்டிருந்ததும் இவனுக்குத் தெரியும்.

கிழவியின் மகன் திடீரென்று கொழும்புக்;கு வந்ததும் மஞ்சுளா அக்காவிற்கு கல்யாணம் நடந்ததும் ஏதோ கனவில் நடந்தது போலிருக்கிறது.

தான் இறக்கும் தறுவாயிலிருப்பதாகவும், மகனை உடனடியாக வரும்படியாகச் சொல்லி கிழவி தந்தியடித்ததாகவும் மகன் வந்தவுடன் தான் பார்த்து வைத்திருந்த பெண்ணைக் கல்யாணம் செய்யாமல் திரும்பிப் போனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கிழவி பயமுறுத்தியதாகவும் இவன் கேள்விப்பட்டான்.

எதையும் கண்ணீராலும் கட்டளையாலும் நிறைவேற்ற சில பெண்கள் தயங்க மாட்டார்கள் என்று இவன் அப்போதுதான் அறிந்து கொண்டான்.

கார் இன்னொரு ட்ரவிக் லைட்டின் சிவப்பு லைட்டில் ஸ்தம்பித்து நின்றது. லண்டன் முழுவதும் கார்கள். கார்களிலிருந்து புகை. கண்களைக் கசக்கும் குழந்தைகள்.

அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மஞ்சுளா அக்கா காரின் பின்னாலிருந்து கொண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் நீலக் கடலைக் கற்பனை செய்வாளா? நிலவுடைந்து பிரதிபலிக்கும் கடலலைகள் அவன் கற்பனையில் விரியுமா? பசும் தரையில் பாய்ந்தோடும் நதியும் அவள் பார்வைக்குத் தெரியுமா?

மஞ்சுளா அக்காவின் பார்வை பரபரப்பானது. வுpளக்கமில்லாத கலவரமடைந்த கண்கள்.

கலவரமடைந்த கண்களா?

அவன் காரைச் செலுத்தினான். குடும்பத்துக்குள் உறவுகளுக்குள் மறைத்து வைக்கப்படவேண்டிய ரகசியங்களை அவன் பகிரங்கப்படுத்தலாமா?

மஞ்சுளா அக்கா கல்யாணமாகியும் இரண்டு வருடங்கள் கொழும்பில் இருந்தாள். 83 ஆம் கலவரத்தின் சிங்களப்;Nபுரினவாதிகள் தமிழர்களை மிருகவேட்டையாடியபோது ஓடிய தமிழர்களில் கிழவியும் ஒருத்தி. மருமகளும் மாமியும் ஒரேயடியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். இவனும் வந்து சேர்ந்தான்.

லண்டனுக்கு வந்த மஞ்சுளாவின் கணவர் வேறு யாரோ பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்ததை மஞ்சுளா எப்படித் தாங்கியிருப்பாள் என்று அவனுக்குத் தெரியாது,

சிங்கள இனவாதம் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்களின் பெண்மையைப் பலிகொண்டது. அவர்கள் அந்தக் கொடுமையை என்னென்று தாங்கியிருப்பார்கள்?

மஞ்சுளா அக்கா லண்டனுக்கு வந்ததும் பழைய மாதிரியே கோயிலுக்கும் பிரார்த்தனைகளுக்கும் போய் வந்துகொண்டிருந்தாள்.

“கோயிலுக்குள் வெறும் சிலைகள்
கோபுரத்தில் பெண் சிலைகள்
பெரியவர்கள் தர்மவான்கள்
பெண்களெல்லாம் பலியாடுகள்”

மஞ்சுளா அக்கா சத்தம் நமுட்டுச் சிரித்தாள். அவன் சந்தியில் காரைத் திரும்பினான்.

கிழவி தன் மருமகளை ஒரு மனநிலைப் பிரச்சினைகளைப் பார்க்கும் வைத்திய நிபுணரிடம் கூட்டிக் கொண்டபோவதாகச் சொன்னாள்.

‘இந்தப் பெட்டை கண்ட பாட்டுக்குக் கவிதை சொல்லத் தொடங்கி விட்டாளே’ கிழவி முணுமுணுக்கிறாள்

ஆண்கள் ஏதும் பொழிந்தால் அது கவிதை,காவியமாகிவிடும்.
பெண்கள் கவிதை சொல்லத் தொடங்கினாற் பைத்தியப் பட்டமா?

மஞ்சுளா அக்கா லண்டனுக்கு வந்து,தனது ‘திருமண’ விடயத்தின் உண்மை நிலையைத் தெரிந்து கொண்டபோது அவளின் பிரார்த்தனைகள்,வேண்டுதல்கள்,கெஞ்சுதல்கள் ஒன்றும் அவளைத் தாலிகட்டிய கணவனிடம் ஏறவில்லை.

அவனால் எடுக்கப் பட்ட விவாகரத்து முயற்சிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தபோது, அவளுக்குச் சொந்தமான ஒரு மாமா மிகவும் உருகி விட்டாரே, பெரிய முதலைக்கண்ணீர் வடித்தாரே எதற்கு?

‘பட்டங்கள் படிப்புக்கள்,
சட்டங்கள் சம்பிரதாயங்கள்,ஆணினத்தின் சொத்துக்கள்,
அவர்கள் தொட்ட பெண்கள் பலர்,
குரங்கு தொட்ட பூமாலைகள்’

மஞ்சுளாவின் சொந்தக்கார மாமா மிகவும் பக்தியானவர். கடவுள் பிரார்த்தனைகளை முறையாக நடத்துபவர்.தமிழ் அரசியல் விடயங்களில் மிகவும் முக்கியமானவர்..பலரின் மதிப்பைப் பெற்றவர்.

இவர்கள் எல்லாம்,குட்டியாடு நனைகிறதாய் குமுறியழும் ஓநாய்கள்.

அவன் இன்னொரு தரம் சிவப்பு லைட் வந்த சந்தியிற் காரை நிறுத்துகிறான்.லண்டன் மத்தியில் ஒரு கல்யாணவீடு;. கூட்டம் நிரம்பி வழிகிறது. தெருமுழுக்கப் பல வகைக் கார்கள். அந்தத் தெரு ஓரத்தில் படுத்திருக்கும் வீடற்ற வெள்ளைக்காரப் பிசசைக்காரர்கள்,அவர்களிற் சிலர் பெண்கள்.;.அவர்களைக் கடந்து போகும்,ஒரு மணித்தியாலத்துக்குப் பல நூறு பவுண்ஸ் உழைக்கும் ஒய்யாரிகள்.

பெண்கள்,பெண்கள்!

மஞ்சுளா அக்கா அவர்களைப் பார்த்து ஏதோ சொல்லிச் சிரிக்கிறாள்.

மஞ்சுளா அக்காவின் மாமிக் கிழவி போன வருடம் சுகமில்லாமல் வைத்தியசாலையிற் சில கிழமைகள் தங்க நேர்ந்தது. அப்போது அடிக்கடி சொந்தக்கார மாமா அவர்கள் வீட்டுக்கு வந்தாராமே?

மாமிக்கிழவி, வருத்தம் சுகமாகி வீடுதிரும்பியபோது, மஞ்சுளா தீர்க்க முடியாத விதத்தில் மனமுடைந்த நோயாளியாகி ஒரு மூலையிற் சுருண்டு கிடந்தாள்.

அதன் பிறகுதான் மஞ்சுளா அக்கா பேயடித்த, பெண்ணாகப் பித்தம் பிடித்து தனக்குத் தானே பேசத் தொடங்கனாளா? கிழவிக்கு மருமகளின் மாற்றம் அதிர்ச்சியைத் தந்திருக்கவேண்டும். கொஞ்சநாள் எல்லாம் குழப்பமாகவிருந்தது.

வீட்டுப் பெட்டகத்தில் பூட்டிவைத்த செல்வத்தை விருந்தாளியாக வந்தவன் கொள்ளையடித்தசை; சொல்ல முடியாத கவுரமா அது?

பத்து வருட வாழாவெட்டித் தன்மைக்குள் பத்திரமாகக் காத்து வைத்த பெண்மையைப் பாசம் காட்டி வந்த ‘மாமா’; என்ற காட்டு மிருகம் மோசம் செய்து விட்டானா,

மனம் மட்டும்தானா உடைந்தது,

‘கல்யாணப் பிரச்சினையால வந்த துக்கத்தில் அந்தப் பெண் குழம்பிப் போச்சுது’.கிழவி பலருக்கும் சொல்லிக்கொண்டு வந்தது.

மஞ்சுளா தற்காலை செய்ய முயன்று அதுவும் தோல்வியில் முடிந்தது.

நல்லதோர் வீணைசெய்தே அதை நலம் கெடத் தெருவில் எறிந்து விட்டார்கள்.

மஞ்சுளாவின் தமக்கை,தங்கையின் நிலைக்கு விதியிற் பழியைப் போட்டாள்.கடவுளை நொந்தாள.; மஞ்சுளாவுக்குத் தாலி பாக்கியம் இல்லையென்று ஒப்பாரி வைத்துக் கொண்டாள்.

மாமா,சுகமில்லாத மஞ்சுளாவைப் ‘பார்க்க’ வந்தபோது அவள் பயங்கரமாக வீரிட்டுக் கத்தியதை அவர்கள் வேறு விதமாக எடுத்துக் கொண்டார்கள்.

தன்னை விட்டுச் சென்ற கணவனில் உள்ள கோபத்தில் மஞ்சுளா உலகத்து ஆண்களையெல்லாம் பார்த்துப் பயப்படுவதாக மாமி பவ்யமாச் சொன்னாள்..

ஆண்களிடம் மனிதம் எங்கே? அவர்கள் என்ன மிருகங்களா? மஞ்சுளாவிற்கு கேள்வி கேட்கத் தெரியவில்லை.
அமைதியான அவள் சுபாவமெங்கே? அடக்கமான பாவமெங்கே? தெய்வீக ஒலி எழும்பும் அந்த இனிய குரலுக்கு என்ன நடந்தது ?

“மாமா” மஞ்சுளாவில் மிகமிகப் பரிதாதபப்பட்டார். அளவுக்கு மீறிப் பெருத்த தன் மனைவியுடனும் அழகிய இரண்டு மகள்களுடனும்; அடிக்கடி மஞ்சுளாவைப் ‘பார்க்க’வந்து மிகவும் துக்கப்பட்டுக்கொண்டார்.

அவன் டொக்டர் சேர்ஜரிக்கு முன் காலை நிறுத்தினான். மஞ்சுளா அக்கா இறங்க மாட்டேன் என்று பிடிபிவாதம் பிடித்துச் சத்தம் போட்டதை ஒரு சிலர் நின்று Nவுடிக்கை பார்த்துக் கொண்டார்கள். லண்டனில் ஏராளமான ஆசியப் பெண்களுக்கு பைத்தியம் வருகிறது, அவர்களின் மஞ்சுளாவும் ஒருத்தி என்று சொல்லப்படலாம்.

“அவள் எழும்பி ஓடினாலும்.. நீயும் உள்ளே வாயேன்.” கிழவி இவனைப் பார்த்துக் கேட்டாள்.

“டொக்டர் சரியாகப் பார்த்துக்கொள்வார்தானே” அவன் வேண்டா வெறுப்பாகச் சொன்னான். அவன் அவர்களுடன் உள்ளே போகவில்லை.

டாக்டரிடம் போன அவர்கள் நீண்ட நேரமாக வெளியில்; வரவில்லை. டொக்டர் என்ன சொல்லிக் கொண்டிருப்பார், மஞ்சுளா அக்காவை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பாளோ?

அவன் களைப்புடன் தலையைச் சாய்த்துக் கொண்டான். அவனுக்குக் கல்யாணம் பேசுகிறார்கள். நிறையச் சீதனம் சரிவரும் வரைக்கும் அம்மா ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறாள்.
இவனுக்கும் ஒரு காலத்தில் ஒரு “மஞ்சுளா” வருவாள். இவனும் ஒரு நாளைக்கு தாளம் போட்ட நடையை ஒரு சங்கிலிக்குள் பிணைப்பானா? இசை பதித்த இதழ்களில் விஷம் எடுத்துப் பூசுவானா?

மஞ்சுளா வெளியே வருகிறாள் பெரிய அட்டகாசமான சிரிப்பு.

ஆண்டவனே நீயெங்கே?
…ஆழ்கடலில் அமிழ்ந்தாயோ
…. பெண்மை துடிப்தெல்லாம்
….பூகம்பமாய் வெடிக்காதோ

மஞ்சுளா சிரிக்கிறாள்.அவன் அவர்களை அழைத்துக் கொண்டு, அவர்களின் பழைய வாழ்க்கைக்குத் திருப்பக் காரைச் ஸ்ராட் பண்ணினான்.

– லண்டன் 1986

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *