(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிறையில் திருமணம்| சாய்ந்த தாமரை | விடுதலை
அவன் கண்களை அவள் கண்கள் நிர்ப்பயமாகச் சந்தித்தன.”என் கணவரே! நான் ஜஸ்வந்தை அடித்த தால் சினமுற்றிருக்கிறீர்கள். அடிக்காவிட்டால் நம் கதி என்னவாகியிருக்கும் என்பதை யோசித்தீர்களா? உங்களிடம் வாளில்லை, அவனிடம் வாளிருந்தது. என்னை மணக்க முயன்றான், தந்தை மறுத்து விட்டார். மடக்க சமயம் பார்த்தான். சமயம் கிடைக்க வில்லை. நேற்றுதான் சமயம் கிடைத்தது. மற்ற ராஜபுதன அபலைகளைப் போல் நானும் இருந்திருந் தால் அவன் என்னை என்ன செய்திருப்பானோ சொல்ல முடியாது. ஆனால் எனது பலம் அவனுக்குத் தெரியும். தந்தையிடம் வாள்பயிற்சி பெற வந்தான். அங்கு என் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ள முயன்றான். என் கையிலிருந்த வாளினால் அவன் வாளைத் தட்டி எறிந்தேன். என் வாளைக் கொண்டு ஆட்டைத் துரத்துவதைப் போல இந்த நகரின் வீதிகளில் அவனைத் துரத்தினேன். அதனால் அவன் எனக்கு ராட்சஸிப் பட்டத்தைச் சூட்டினான். ஆனால் நான் கவலைப்படவில்லை. ராஜபுதனத்தின் நிலை யைப் பார்த்து என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். இந்துப் பெண்களுக்கு நாடு இன்றிருக் கும் நிலைமையில் தற்காப்பு வன்மை மிக மிக அவசியம். ஆதலால் வாள் பயிற்சி பெற்றேன். வேலையும் எறிய எனக்குத் தெரியும். இருபதடி தூரத்தி லிருக்கும் எந்தத் துஷ்டமிருகத்தையும், அது மனிதரா யிருந்தால் கூட, குறுவாளெறிந்து கொல்ல முடியும் என்னால். ராஜபுத்ரர்கள் ஆண்மையிழந்து மொகலா யருக்கு அடிமையாக இருக்கும் இந்தக் காலத்தில், ராஜபுத்ர ஸ்திரீகளுக்குத் தற்காப்பைத் தவிர வேறு வழியில்லை” என்று பேசினாள் சந்திரமதி. பேசப் பேச அவள் உணர்ச்சி அதிகப்பட்டது. “இந்தக் கோட்டை மான்சிங் வசத்திலிருக்கிறது. ஆனால் அதற்குத் தலைவன் அப்துல்லா. ஏன்? அவன் ஜிஹாங்கீருக்கு வேண்டியவன். எசமானர்களுடைய முகம்கோணாமல் நடந்து மான்சிங் பதவியில் இருக்கிறான். அந்த மாதிரி ராஜபுத்ரர்கள் இன்று அதிகம். அவர்களால் ராஜ புதனம் இதர இனத்தார்களுடைய பரிகாசத்துக்கு இலக்காகியிருக்கிறது. ராஜபுத்ரர்கள் பெண்களை அரசியல் சதுரங்கத்தில் விற்பனைப் பொருள்களாக்கி விட்டார்கள். ஆனால் ஆண்களில் ராணா பிரதாப் பைப்போல் பெண்களிலும் மானமுள்ளவர்கள் இருக் கிறார்கள். அவர்களில் ஒருத்தி நான். என் கணவரைத் தவிர வேறு ஒருவரும் என்னைப் பார்க்கவும் முடி யாது, என்னைத் தொடவும் முடியாது. தொட்டபின் பிழைக்கவும் முடியாது. நீங்கள் மட்டும் இல்லையேல் நேற்று கதை வேறாயிருந்திருக்கும். என்னைத் தொட முயன்றிருப்பான் ஜஸ்வந்த், ஆனால் மரணத்தைப் பிடித்திருப்பான். நீங்கள் மட்டுமென்ன? என்னை மணக்கவா வந்தீர்கள்? தூக்கிச் செல்ல வந்தீர்கள், இன்னொரு சோம்பேறி ராஜாவுக்கு” என்ற சந்திரமதி உணர்ச்சிப் பெருக்கத்தில் பெருமூச்சு விட்டாள்.
அவள் பேச்சு சத்ருஞ்சயனை அடியோடு உலுக்கி விட்டது. அவள் சொல்வதில் நியாய தர்மங்கள் நிரம்ப ருப்பதைக் கவனித்தான். அவள் ராட்சஸியா யிருப்பதே நியாயம் என்று எண்ணிக் கொண்டு அவளருகில் உட்கார்ந்தான். அவள் தோளைத் தன் இரு கைகளாலும் பற்றி, “சந்திரமதி! உன் நியாயம் எனக்குப் புரிகிறது. ஆனால் எல்லா நியாயங்களும் எல்லா சமயங்களுக்கும் பொருந்தா. உன்னை நான் தூக்கிக் கொண்டு போக வந்தது, தவறல்ல. முதலில் நீ மல்லிநாதர் மகளென்பது எனக்கும் தெரியாது, என் தந்தைக்கும் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், உன்னை எனக்கு மணமுடிப்பதை, நாமிருவரும் பிறப் பதற்கு முன்பு உன் தந்தையிடம் செய்த சத்தியத்தை மீறியிருக்கமாட்டார் என் தந்தை. நீ இருக்குமிடத்தை உன் தந்தையிடம் விசாரிக்கச் சொல்லித்தான் உத்தர விசாரிக்கத்தான் விட்டார். பின்பு வந்தேன். தான் உண்மை உணர்ந்தேன். முதல் நாள் மாலை உன் குழலோசை கேட்டபின் இரவில் உன்னைச் சந்தித்தேன். மனத்தை அடியோடு பறிகொடுத்தேன். இருப்பினும் மனம் ஒப்பவில்லை எனக்கு. மன்னனுக்கென்று நினைத்து வந்தவளை நான் விரும்புவது தவறு என்று நினைத்தேன். எனக்கு ராணா பிரதாப் விட்டுப் போன மேவாரின் முழு விடுதலை முக்கியம். அதை நினைக்காமல் சலவைக்கல் மஹாலைக் காட்டி அதில் சுகவசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முயலும் ராணா அமரசிம்மன் புத்தியைப் போருக்குத் திருப்ப உன்னைப் போன்ற வீர வனிதை அவசியம் என்று தந்தை நம்பினார். உன்னை முறைப்படி பெண் கேட்டுப் பார்த்தார். முதலில் நீ வளையல்களை அனுப்பினாயாம். ஆகையால் உன்னைத் தூக்கிவர என்னை தந்தை அனுப்பினார்” என்ற சத்ருஞ்சயன் சிறிது பேச்சை நிறுத்தி, “ஆனால் விதி விளையாடி விட்டது. உன்னைப் போன்ற உறுதியுள்ளவர்களை சுகவாசியான ராணாவுக்கு மணமுடிக்க எனக்கே இஷ்டமில்லை. தவிர உன் அழகு…” என்று வாசகத்தை முடிக்காமல் விட்டான்.
அவள் கண்களை மூடிக்கொண்டாள். சத்ருஞ் சயன் மங்கலான வெளிச்சத்திலும் நிகரற்று விளங்கிய அந்த ராஜபுத்ரியின் முகத்தை மறைத்த முக்காட்டை நீக்கினான். அவளை மெல்லத் திருப்பி தன்மீது சாத்திக்கொண்டான். அப்படியே மல்லாந்தும் படுத்துவிட்டான்.
அவள் அவன்மீது கிடந்தாள். அசைவற்ற சிலை போல. அவள் எழிலெல்லாம் அவன்மீது இணைந்தது. எப்படித் திரும்பினாலும், சிறிது புரண்டால்கூட ஏற்படக்கூடிய விளைவை நினைத்து அசையாமலே கிடந்தாள், அந்த வீரன் மீது சந்திரமதி. சத்ருஞ்சயன் கைகள் எழுந்து மேல்புறமாக அவள் மீது தவழ்ந்தன, துளைத்தன. எழுச்சிகளின் வளைவுகளில் புரண்டன.
உணர்ச்சிகள் அவளையும் உந்தியிருக்க வேண்டும். மெல்ல அவள் அசைய முற்பட்டாள். அசைந்ததால் லாவண்யப் பகுதிகள் அசைந்தன. அவன் தேக ஸ்பரிசத்தால் கெட்டியாகிவிட்ட மொட்டுகளிரண்டு அவன் மார்பில் புதைய முயன்று முடியாமல் தவித்தன. அவள் உடல் சிறிது நெகிழ்ந்து முன்னேறி யதால் அவள் கழுத்து அவன் முகத்தை மறைத்தது. அந்தக் கழுத்தில் புதைந்த முரட்டு இதழ்கள் அதில் தாவித் தாவி இம்சையை விளைவித்தன அவளுக்கு. அந்தச் சமயத்தில் அவளைத் தன்மீதிருந்து பக்க வாட்டில் புரட்டிக் கொண்ட சத்ருஞ்சயன் ஒரு கையைத் தலையில் ஊன்றி ஒருக்களித்து அவள் இதழ் களைத் தனது வலது கை விரல்களினால் தடவினான். கன்னத்தைப் பற்களால் கவ்வினான் கடினமாக. இரண்டு பற்கள் புதைந்த இடம் நன்றாகத் தெரிந்ததால் அந்த வடுக்கள் அவனுக்கு வெறியை அதிகமாக ஊட்டியதால் வேகமாக அவளை அணுக முயன்றான்.
அவள் உணர்ச்சிப் பெருக்கில் முனகினாள். அவன் மேற்கொண்ட செயல்களைத் தடுப்பதுபோல பாசாங்கு செய்தாள். “விளக்கை அணையுங்கள்” என்றாள் மெல்ல.
“சிறையிலிருக்கிறோம்” என்று அவன் மெதுவாகப் பேசினான். அவன் கை மட்டும் பலபடி அலைந்து கொண்டிருந்தது.
“சிறைப்பட்டிருக்கிறோம்” என்று அவள் திருத்தினாள்.
“சிறைப்பட்டிருக்கிறோமா?” என்று அவள் இதழ்களைத் தன் வசப்படுத்த முயன்றாள்.
அவள் இடங்கொடுக்கவில்லை. இதழ்களை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டாள். “ஆம். பரஸ்பரம் சிறைப்பட்டிருக்கிறோம், இஷ்டத்துடன்” என்றான்.
‘இஷ்டமில்லாவிட்டால்?” அவன் அத்தனை உணர்ச்சியிலும் வியப்புடன் கேட்டான்.
“இங்கு இருக்கமாட்டோம்,” என்றாள் அவள். சற்று வளைந்து அவன் உடலுடன் தனது உடலை இணைத்தாள்.
அவனும் அவளை இறுக்கிப் பிடித்தான். “இங்கு இருப்பதும் இருக்காததும் நமது இஷ்டமா?” என்று வினவினான்.
“ஆம்” என்ற சந்திரமதி, “எனக்கு வெட்கமாயி ருக்கிறது, விளக்கை அணைத்து விடுங்கள்,” என்றாள்.
“கதவு பூட்டியிருக்கிறது” என்றான் அவன்.
அவள் அவனது கையொன்றை எடுத்துத் தனது இடையில் சேலைக்குள் சொருகி, “எடுத்துக் கொள் ளுங்கள்” என்றாள்.
அத்தனை காம வேகத்திலும் திடீரென்று ஸ்தம் பித்தன அவன் உணர்ச்சிகள். இடைச் சேலைக்குள் கையில் அகப்பட்டது வழவழத்த வயிறு அல்ல. நீண்ட மெல்லிய குறுவாளொன்று கையில் தட்டுப்பட்டது. அதை எடுக்க முயன்றான் சத்ருஞ்சயன்.
“அப்படியே இழுக்காதீர்கள். என் வயிற்றைக் கீறிவிடும்,” என்றாள்.
“பின் எப்படி எடுப்பது?”
“சீலைப் பிரிவைச் சிறிது பிரியுங்கள். மடிப்பு களுக்குள் வைத்திருக்கிறேன்.”
அடுத்து அவன் துரிதமாக சீலையைப் பிரிக்கும் பணியில் இறங்கினான். மெதுவாகச் சீலை மடிப்பு களில் இரண்டை விலக்கிக் கத்தியை லேசாக எடுத்தான். எடுத்ததும் அந்தச் சேலையை மீண்டும் சரிப்படுத்த முயன்றான். “நீங்கள் கத்தியால் பூட்டை உடையுங்கள். சேலையை நான் சரிப்படுத்திக் கொள்கிறேன்” என்றாள் சந்திரமதி.
அவள் இதழ்களை ஆசையுடன் பருகிய சத்ருஞ்சயன், “சந்திரமதி! அந்தப் பணியும் எனக்கே இருக்கட்டும். நீ பேசாமலிரு” என்று கூறிவிட்டுக் குறு வாளை எடுத்துக் கொண்டு சிறைப் பூட்டை லேசாக மேலே எடுத்து அதன் வாயில் குறுவாளின் நுனியைக் கொடுத்து ஒரு திருகு திருகினான். உள்ளேயிருந்த இரும்பு நறநறவென்று மெல்ல சப்தித்து அடுத்து பூட்டு திறந்தது. மெல்ல கதவைத் திறந்துகொண்டு சிறை வழியிலிருந்த விளக்கை, திரியை இழுத்து அணைத்தான்.
எங்கும் மையிருள் சூழ்ந்தது. திரும்பி சிறைக்குள் வந்து, பூட்டை பூட்டியிருப்பதுபோல் மாட்டிய சத்ருஞ் சயன் சந்திரமதியை நாடி வந்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்து, “சந்திரமதி! சேலையைக் காட்டு. மடிப்பு களை மறுபடியும் விசிறிபோல் மடிக்கிறேன்” என்று கூறி அவள் இடைச் சேலையை நெகிழ்த்திச் சரி செய்ய முயன்றான். அவள் அவனை அப்படியே அணைத்துக் கொண்டு, “என் ராஜா! உனக்கு இதெல்லாம் ஏற்கனவே பழக்கமா?” என்று அவன் காதில் மிக ரகசியமாகக் கேட்டாள்.
“அடி சந்திரமதி! எனக்குப் பழக்கமில்லை. உன்னிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவள் காதில் அவனும் ஓதினான். சேலையைச் சரி செய்ய முயன்று முடியாமல் திண்டாடினான்.
சந்திரமதி அவன் கையைப் பிடித்து, “அப்படி அல்ல. இப்படி முடியுங்கள்” என்றாள். அவன் தொடர்ந்து திண்டாடினான்.
“ஐயையோ! மடிக்கவில்லை நீங்கள்..” என்று மிரட்டிய அவள், “நேரமாகிறது” என்றாள்.
“எதற்கு?” அவன் மெதுவாகக் கேட்டான், அவள் சொன்னதைத் தவறாகப் புரிந்துகொண்டு.
அவன் இச்சையைப் புரிந்து கொண்ட அவள் மனோகரமாக மிக மெதுவாக நகைத்தாள். “தந்தை வருவதற்கு” என்று நகைப்பின் ஊடே கூறினாள்.
அதிர்ச்சி அவன் உணர்ச்சிகளை அறுத்தெறிந்தது. “எதற்கு உன் தந்தை வருகிறார்?” என்று வினவினான் சத்ருஞ்சயன்.
“மூன்றாவது ஜாம ஆரம்பத்தில் தெரியும்.” என் றாள் அவள்.
“அதுவரை…?” என்று அவன் கேட்டான்.
“நான்!”
“உம்?”
“உங்கள் அடிமை” என்று அவள் அவன்மீது சாய்ந்தாள். சாய்ந்த அந்தத் தாமரையை அவன் தனது கைகளில் ஏந்தினான், இழுத்தான், இறுக்கினான்.
– தொடரும்
– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.