கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 2,748 
 

(1984ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

6 – 10 | 11 – 15 | 16 – 20

11. பரணர் இல்லம் 

நிலக்கள்ளியின் மீது யவனனான க்ளேஸியஸ் போர்த்தி யிருந்த போர்வையை நீக்கி, “இதோ உங்கள் எதிரி” என்று கூறிய சஞ்சயன், அமைச்சர் நகைத்ததால் சட்டென்று திரும்பிப் பார்த்து, தான் பிடித்து வந்தது அமைச்சரின் மகளென்பதை உணர்ந்ததால் வியப்புக்கும். ஏமாற்றத் துக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகி சிலையென நின்றுவிட்டான் பல விநாடிகள். 

அவன் நிலையைக் கண்ட அமைச்சரே பேச முற்பட்டு, “சஞ்சயா! எதிரியுடன் இவன் சார்ந்ததால் இவளும் எதிரி தான் நமக்கு, குற்றவாளியோடு சேர்ந்தவர்களையும் குற்றவாளியென மதிக்கும்படிதான் நீதி சாத்திரமும் கூறுகிறது ஆகையால் நீர் செய்ததில் தவறு ஏதுமில்லை. குற்ற தந்தையையும் சேர்த்துப் பிடிக்காததுதான் கிடப்ப தவறு” என்றார். அவர் குரலில் ஏளனம் நிரம்பிக் தையும் முன்பு வெளிப்பட நகைத்த அமைச்சர் இப்பொழுது ள்ளுச நகைத்துக் கொண்டிருக்கிறாரென்பதையும் உணர்ந்த சஞ்சயன் பேசுவது இன்னதென்று தெரியாமல் நின்றான். அவன் மௌனத்தை அமைச்சர் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். “சஞ்சயா! என் மகள் கடல்வேந்தன் உயர் மில்லையே. ஆனால், எதிரியைப் பிடிக்க முயன்ற துரிதத்தில் உயரத்தையோ, எதிரியின் திண்ணிய உடற்கட்டையோ பார்க்க அவகாசமிருந்திருக்காது” என்று சஞ்சயன் சோத னைக்கு ஓர் ஆட்சேபணையும் தெரிவித்து, அதற்கு சமாதானமும் தாமே சொன்னார்.

ஒவ்வொரு சொல்லிலும் அமைச்சர் தனது முட்டாள் தனத்தை எடுத்துக் காட்டுவது கண்ட சஞ்சயன், “குற்றம் சாட்டுவது எளிது. குற்றவாளியைக் கண்டு பிடிப்பதுதான் கஷ்டம்” என்று சொன்னான் வெறுப்புடன். 

“கஷ்டம் என்பது நமக்கு முன்னமே தெரிந்ததுதான் அது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் சுடல் வேந்தனுக்கு வலை விரித்துப் பிடித்து விடுவதாகச் சபதம் செய்தது நாணல்ல” என்றார் அமைச்சர். 

சஞ்சயன் முகத்தில் சினம் லேசாகத் துளிர்த்தது. “ஆம் அமைச்சரே! எதிரியை நீர் பிடிப்பதோ, முடியாவிட்டால் பழிை யை ஏற்பதோ உமது கடமையல்ல…. என்று சினம் துளிர்த்த குரலில் பேசவும் செய்தான். 

அமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு அறிகுறியாக தலையை அசைத்து, “உண்மை சஞ்சயா! முடியா தைச் சாதிப்பதாக வீம்பு காட்டும் வழக்கம் எனக்குக் கிடையாது. பிறகு காரியம் முடியவில்லை என்று தெரிந்ததும் அதற்கு சப்பை கட்டும் வழக்கமும் எனக்குக் கிடையாது” என்று கூறியது மட்டுமின்றி, “அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று வினவினார். 

சஞ்சயன் முகத்தில் ஈயாடாவிட்டாலும் தான் செய்த ஏற்பாட்டின் அடுத்த பகுதியை அவருக்கு விளக்கினான். “கடல்வேந்தன் சிக்கிய அதே சமயத்தில் வில்லம்பு இலச் சினை இல்லத்தில் புகுந்து அங்கு யார் இருந்தாலும் சிறை செய்து வர வீரர்களை அனுப்பியிருக்கிறேன்” என்று கூறினான் 

“நன்று! நன்று!” என்று உற்சாகப்பட்ட அமைச்சர் இவளைக்கொண்டுவிட வந்த கடல்வேந்தன் அங்கு இருந் தாலும் இருக்கக்கூடும்” என்றார், “அங்கு சென்ற வீரர்கள் வரட்டும். அதற்குள் இவளை என்ன செய்யலாம்? காவலில் வைக்கிறாயா!” என்று வினவிய அமைச்சர், “எனது மகள் என்பதற்காக எந்தச் சலுகையோ அனுதாபமோ காட்ட வேண்டாம்” என்றும் சொன்னார். 

“உங்கள் மகளைக் காவலில் வைக்கும் அளவுக்கு நான் முட்டாளல்ல”-சஞ்சயன் பதிலில் எரிச்சலிருந்தது, 

“அதில் அளவு வேறு இருக்கிறது போலிருக்கிறது?” என்று அவன் காதுபட முணுமுணுத்த அமைச்சர், “சஞ்சயா! இதில் முக்கிய பகுதியை மறந்துவிட்டாய்” என்றும் சுட்டிக் காட்டினார். 

முணுமுணுப்பால் தனது முட்டாள்தனத்தை ஊர்ஜிதம் செய்த அமைச்சரிடம் பெரிதும் கோபம் கொண்ட சஞ்சயன், “அந்த முக்கிய பகுதி தங்களைப் போன்ற சிறந்த அறிவாளிக்குத்தான் புலனாகும். அது என்ன அமைச்சரே? எனக்குத் தெரியலாமா?” என்று கேட்டான். 

“உனக்குத் தெரிந்ததுதான் சஞ்சயா” என்றார் அமைச்சர்.

“எனக்குத் தெரிந்ததா?’ 

“ஆம்” 

“எது அமைச்சரே?” 

“கடல்வேந்தன் நிலக்கள்ளியை அழைத்துச் சென்ற போது வில்லம்பு இலச்சினை இல்லத்தில் என்ன சொன்னான்?*” 

“நினைப்பில்லை” 

“எனது மகளை அவனே நேரில் கொண்டுவந்து விடுவதாகச்  சொன்னான். வந்தானா?” இதைக் கேட்ட அமைச்சர் சஞ்சயனை மட்டுமின்றி நிலக்கள்ளியையும் கூர்ந்து நோக்கினார். 

கடலில் விழுந்தவன் துரும்பையும் பிடித்துக் கொள்வது போல சஞ்சயன், அமைச்சர் சுட்டிக்காட்டிய வேந்தன் தவறை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘வரவில்லை. இத்தனை காவலிருக்கும்போது வர அவன் என்ன பைத்தியமா?” என்று கேட்டான். அப்படிக்கேட்ட போது அவன் பார்வையில் பாதி நிலக்கள்ளியின் மீது இருந்தது. 

அதுவரை மெனனமாயிருந்த நிலக்கள்ளி புன்முறுவல் செய்தாள். சேர தூதனை நோக்கி, ”தூதுவரே! கடல்வேந்தனைப் பிடிக்கமுடியாததற்கு ஏதோ ஒரு சாக்கைக் கண்டு பிடிக்கிறீர். அவர் என்னை அழைத்து வருவதாகச் சொன் னாரே, நீர் என்ன செய்தீர் பதிலுக்கு? முதலில் இந்த மாளி கையில் வந்தபோது பிடிக்கமுடியாத நீர், என்னுடன் வரும் வேந்தரைப் பிடிக்க வலைவிரித்தீர், அவரை கௌரவமாக வரவேற்பதை விட்டு மாளிகையைச் சுற்றிலும் ஆள்களை நிறுத்தினீர். இது எந்த நியாயத்தில் சேர்ந்தது?” என்று கேட்டாள் புன்முறுவலின் ஊடே. 

“கொள்ளைக்காரனைப் பிடிப்பதில், வழி முறைகள் கிடையாது. அவைபெல்லாம் தர்ம யுத்தத்துக்குத்தான். புலியைப் பிடிக்க வேண்டுமென்றால் போர் முரசா கொட்டுகிறோம்? தப்பட்டை அடித்து வலை விரித்துதான் பிடிக்கிறோம்” என்று சஞ்சயன் நிலக்கள்ளிக்குப் பதில் சொன்னான். 

நிலக்கள்ளி ஏளனப் புன்முறுவலொன்றை உநடுகளில் பரவவிட்டு, “அவர் புலி என்று ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று சொன்னாள் ஏளனம் குரலிலும் ஒலிக்க,. “அப்பா! அவர் புலியானால் இவர் யார்?” என்று தந்தையை நோக்கி வினவினாள். 

அமைச்சர் சிறிதும் தயக்கமின்றிச் சொன்னார் “அவர் சிங்கமாயிருக்கும்” என்று. 

“நீங்கள்?” 

“அமைச்சருக்குத் தந்திரம் அவசியம்.. “

“ஆகையால்… “

“நரியென்று வைத்துக்கொள்” என்ற அமைச்சர். “நாம் இப்படியே பேசிக்கொண்டு போனால் இந்த அரண்மனை மிருசுக்காட்சி சாலையாகிவிடும்” என்றும் விளக்கினார் இடக்காக. 

சஞ்சயன் மனநிலை சொல்லத் தரமில்லாததாய் இருந்தது. ‘”அமைச்சரே! இன்று நாள் தவறியது உண்மை ஆனால், அடுத்தமுறை தவறமாட்டேன்” என்றான் சற்றுத் திணறி. 

“எந்த முயற்சிக்கும் மும்முறை அனுமதிப்பது சாத்திர சம்மதம்” என்றார் அமைச்சர். 

சஞ்சயன் கோபத்தின் எல்லைக்குச் சென்றதால் யாரிடம் பேசுகிறோமென்பதை அறியாமல், “உமது  சாத்திரத்தைக் கொண்டுபோய் குப்பையில் கொட்டும்” என்று சீற்றம் நிரம்பிய குரலில் கூவினான். 

“அது கஷ்டமல்ல” என்றார் அமைச்சர்.

“எது?” 

“சாத்திரத்தைக் குப்பையில் கொட்டுவது.”

“ஏன் கஷ்டமில்லை?” 

“முசிறியில் இப்பொழுது குப்பை அதிகமாயிருக்கிறது”.  

“என்னை அதிகமாக அவமதிக்க வேண்டாம். அமைச்சரே! வில்லம்பு இலச்சினை இல்லத்திலிருந்து எனது வீரர் வரும் நேரம் ஆகிவிட்டது. சற்றுப் பொறும் தெரியும்’ என்றான். 

அவன் சொன்னதும் சொல்லாததுமாக இரண்டு வீரர்கள் உப்பரிகைக் கூடத்தில் நுழைந்தனர். “தூத பெருமானே! நீங்கள் சொன்னபடி வில்லம்பு இலச்சினை இல்லம் சென்றோம்….” என்று இழுத்தான் வீரர்களில் ஒருவன். 

“ம்” என்று மேலே சொல்லலாம் என்பதற்கு அறி குறியாக ‘உம்* காரம் கொட்டினான் சஞ்சயன். 

“இல்லம் பூட்டப்பட்டிருந்தது” என்றான் இன்னொரு வீரன்.

“அப்படியா!” என்ற சஞ்சயன் குரலில் ஏமாற்றமிருந்தது. 

முதல் வீரன் தொடர்ந்தான். ”ஆனால் பக்கத்துக் குடிசையில் சிலர் குடித்துவிட்டுச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்” என்றான். 

“அதைப்பற்றி இப்பொழுது என்ன?” 

“ஒன்றுமில்லை. அந்தக் கூட்டத்தில் ஒரு யவனன் இருந்தான், அவனை மற்றவர்கள் க்ளேஸியஸ் என்று அழைத்தார்கள் – “

இங்கு அமைச்சர் சிரத்தை காட்டினார். ”அவனைப் பிடித்தீர்களா?” என்று கேட்டார். 

“இல்லை” என்றான் வீரன். 

“ஏன்?” 

“கடல்வேந்தனைப் பிடிக்கத்தான் உத்தரவு. யவனனைப் பிடிக்க உத்தரவில்லை”. 

வீரன் சொல் கேட்ட சஞ்சயன் வெகுண்டான், “கடல்வேந்தன் நண்பனைப் பிடி என்று சொல்ல வேண்டுமா? உனக்காக யோசனை கிடையாதா?” என்று கேட்டான் சஞ்சயன் மிகுந்த கோபத்துடன். 

“தலைவர் உத்தரவை நிறைவேற்றுவதுதான் எந்த வீரன் கடமையும். அத்து மீறிப் போக அதிகாரம் கிடையாது. அப்படிப் பிடித்து வந்தாலும் “இவனை ஏன் பிடித்து வந்தாய்?” என்று நீங்கள் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்?” என்று வீரன் வினவினான். 

“அவன் சொல்வதில் பொருளிருக்கிறது” என்று அமைச்சரும் வீரனுக்கு ஒத்துப் பாடினார். 

இதனால் மனம் உடைந்த சஞ்சயன், “சரி நீங்கள் போகலாம்” என்று வீரர்களுக்கு விடை கொடுத்தான். 

வீரன் சிறிது தாமதித்தான். “ஏன் நிற்கிறாய், பனை மரம் மாதிரி?” என்று எரிந்து விழுந்தான் சஞ்சயன். 

வீரன் சங்கடத்தால் சிறிது அசைந்தான் நின்ற இடத்திலேயே. “நடந்தது முழுவதையும் கேட்க வில்லையே?” மீண்டும் தொடங்கினான். 

“முழுவதையும் சொல்லவில்லையா? சொல் சொல்” என்றான் சஞ்சயன் 

“தூதர் பெருமானே” என்று தொடங்கினான் வீரன். 

”பெருமானிருக்கட்டும். சொல் விஷயத்தை” 

“நாங்கள் அந்த யவனனைப் பிடிக்கவில்லையே தவிர அவன் உங்களுக்குச் செய்தி சொல்லி அனுப்பியிருக்கிறான்” என்றான் வீரன். 

இதனால் அமைச்சர், சஞ்சயன் இருவருமே அதிர்ச்சி யடைந்தாலும், “இதை ஏன் இத்தனை நேரம் சொல்ல வில்லை?” என்று அமைச்சரே கேட்டார். 

“சொல்ல எங்கு விட்டீர்கள்?” என்ற வீரன், “க்ளேஸியஸ் நாங்கள் திரும்ப முற்பட்டபோது. குடிசையி லிருந்து வெளியே வந்து, “வீரனே! அமைச்சரை வருந்த வேண்டாமென்று சொல். உங்களை நம்பி வரும் வேந்தனை நீங்கள் தந்திரமாகப் பிடிக்க முயன்றதைவிடப் பேடித்தனம் வேறு எதுவுமில்லை என்று நான் சொன்னதாகச் சொல். கடல்வேந்தன் காதலியிடம் எந்தவித சினத்தையும் காட்ட வேண்டாமென்று சொல். எதற்கும் நிலக்கள்ளி பொறுப்பல்ல என்று தெரிவி” என்று கூறத் திரும்பக் குடிசையில் புக முயன்றவன், மீண்டும் குடிசை வாயிலில் நின்று திரும்பி, “நிலக்கள்ளிக்கு எந்தக் கஷ்டம் நேர்ந்தாலும் இந்த முசிறி உடனடியாகச் சூறையாடப் படுமென்றும் சொல்” என்று சொல்லிவிட்டுச் சென்றான்” என்று வீரன் தனது தூதை முடித்தான். 

அமைச்சர் சிந்தையில் இறங்கினார். சஞ்சயனைப் போகச் சொல்லிவிட்டு மகளை நோக்கி, “மகளே! நீ சென்று படுத்துக் கொள். நாளை காலையில் வேலை இருக்கிறது” என்றார். 

“என்ன வேலை தந்தையே?’ என்று கேட்டாள் நிலக்கள்ளி. 

“நாம் பரணர் வீட்டுக்குப் போகிறோம், அவரை விசாரிக்க. கடல்வேந்தன் தமது மகன் என்று அவர் கூற வில்லையா?” என்று வினவினார். 

நிலக்கள்ளி ஏதோ ஆட்சேபனை செய்ய விரும்பியதை அனுமதிக்கவில்லை. மறுநாள் இருவரும் பரணர் வீட்டுக்குச் சென்றனர். அங்கு பரணர் கவிபாடிக் கொண்டிருந்தார். அவர் படுக்கையில் ஒருவாலிபன் படுத்துக் கிடந்தான். சாட்சாத் கடல்வேந்தனைப் போலவே அவனிருந்ததால் அமைச்சர் வியப்பின் வசப்பட்டார். ஆனால், அவன் கடல்வேந்தனாயிருக்க முடியாது என்று தீர்மானித்தார். அவர் ஊகத்திற்கு படுத்திருந்த அந்த வாலிபன் அத்தாட்சி கூட்டினான், அவன் கண்விழித்து அமைச்சரைப் பார்த்ததும் நடுங்கினான் ஒருமுறை. மறுபடியும் தலையணையில் முகத்தைப் புதைத்துப் படுத்துவிட்டான். அவன் உடன் அச்சத்தால் உதறியது, “பயப்படாதே அப்பா! அமைச்சர் நமக்கு வேண்டியவர். உன்னை எதுவும் செய்யமாட்டார்” என்று அவனுக்குத் தைரியம் சொன்னார் பரணர். 

12. அமைச்சரும் புலவரும் 

சாட்சாத் கடல்வேந்தனைப் போலவே உடலமைப்புக் கொண்ட வாலிபனை- அரப்பில் பார்த்ததும் முதவில் அதிர்ச்சியனடந்த அழும்பில்வேள், அவன் தம்மைப் பார்த்து நடுங்கியதையும், தலையணையில் முகத்தைப் புதைத்துப் படுத்துக் கொண்டதையும் கவனித்தால், அவன் அசகாய காரியங்களைச் செய்துள்ள கடல்வேந்தனாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். தவிர, “அமைச்சர் நமது நண்பர், உன்னை எதுவும் செய்யமாட்டார்” என்று புலவர் பரணர் அவனுக்குத் தைரியம் சொன்னதையும் கண்ட அமைச்சர்,. முதலில் ஏற்பட்ட சந்தேகத்தை அறவே விலக்கிக் கொண்டார். ஏதாவது கொஞ்சம்நஞ்சம் சந்தேகமிருந்தால் அதுவும் தீர்ந்துவிட்டது, அடுத்துச் சில நிமிடங்களில். 

பரணர், அந்த வாலிபன் பக்கத்தில் அமர்ந்து அவனை முதுகில் தடவிக்கொடுத்துத் தலையையும் ஓர் உலுப்பி உலுப்பி, “அப்பா! குட்டுவா! எழுந்திருடா கண்ணே!” என்று பரணர் அவனை எழுந்திருக்கச் செய்யவே, அவன் மெதுவாக எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கண்களைக் சுசக்கிவிட்டுக் கொண்டான். கடல்வேந்தன் உடற்கட்டு அவனுக்கிருந்தாலும், அதே வாளிப்பு இருந்தாலும் அவன் படுக்கையிலிருந்து எழுந்தபோதும், பல் துலக்கி முகம் கழுவ. எழுந்து நடந்துசென்ற போதும் அவன் நடைக்கும், கடல்வேந்தன் நடைக்குமிருந்த மாறுபாட்டை அமைச்சர் கவனிக்கவே செய்தார். கடல்வேந்தனின் உறுதியான, ஒரே சீரான ராணுவ நடைக்கும் இந்தக் கோழையின் தடுமாற்ற நடைக்கும். அடியோடு சம்பந்தமில்லை என்பதை அமைச்சர் பார்த்தார், தவிர அந்த வாலிபன் முசும் குழந்தை முகமாயிருந்ததையும், நாற்பது வயது மதிக்கத்தக்க கடல்வேந்தனின் முற்றிய முகமில்லாததையும், கடல்வேந்தன் முகத்திலிருந்த சதை மடிப்புகளும் ஒரு விகாரத்தன்மையும் இந்த வாலிபன் அழும்பில்வேள் முகத்தில் இல்லாதகையும் கண்டார். இதைத் தவிர, கடல்வேந்தன் தலைக்குழல், புருவங்கள் சிறுமீசை அனைத்தும் செம்பட்டையாயிருந்ததையும் அவர் எண்ணிப் பார்த்து ‘”இவன் தலைக்குழலும், புருவங்களும், மீசையும் மிகக் கருமையாய் இருக்கின்றன. பார்வையிலும் கனிவும் அச்சமும் இருக்கிறதே தவிர அந்தக் கடுமையில்லை” எனவும் சொல்லிக் கொண்டார். 

அவர் அப்படி அணு அணுவாகக் குட்டுவனை ஆராய் வதைப் பார்த்த பரணர் ஏதும் பேசவில்லை. நிலக்கள்ளியை மாத்திரம் பார்த்துப் புன்முறுவல் செய்தார். ஆராய்ச்சியை முடித்துக்கொண்ட அழும்பில்வேள் பரணர் புன்சிரிப்புக்குக் காரணம் புரியாததால் “ஏதோ மகிழ்ச்சிக்கான சம்பவம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்றார். குரலில் அலுப்பைக் காட்டினார். 

கவிஞர் பெருமானான பரணர் தமது புன்முறுவலைச் சற்று அதிகமாக்கி, ”அமைச்சர் போன்ற பெருமக்கள் அடி மையின் குடிசையை நாடி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா?” என்று வினவினார். 

“ஆம்…ஆம். மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சிதான் என் வரவு!” என்ற அமைச்சர், “இங்கு மன்னரே வருவதாகக் கேள்வி, அப்படியிருக்க அமைச்சர் வருவதில் என்ன சிறப்பிருக்கிறது?” என்று வினவினார். 

பரணர் அமைச்சரை நிதானமான கண்களால் நோக் சினார். “மன்னர் வருவதில் அர்த்தமிருக்கிறது. இத்தனை நாளும் வராத அமைச்சர் வருவது தான விந்தை” என்று கூறினார். அந்த விந்தையை முகத்தின் சாயையிலும் காட்டினார் கவிஞர். 

“மன்னர் வருவதில் அர்த்தமிருக்கிறதா?” என்று வியப்புடன் கேட்டார் அமைச்சர். 

பரணர் லேசாகத் தலையை அசைத்தார். “மன்னர் மாணாக்கராக வருகிறார். என்னிடம் தமிழ் படிக்க. அமைச்சர் எதற்காக வருகிறார்?” என்று வினவினார். கண்களில் ஒரு கேள்வியையும் தோற்றுவித்தார். 

அமைச்சருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாததால், “ஏன் அமைச்சர் தமிழ் படிக்கவரக்கூடாதோ?” என்றொரு கேள்வியை வீசினார் சிறிது கோபத்துடன். 

”வரலாம். தமிழ் படித்தால் அறிவும் வளரும்” என்றார் பரணர். 

“நான் தமிழ் படிக்காததால் எனக்கு அறிவில்லை என்கிறீரா?” உஷ்ணத்துடன் கேட்டார் அமைச்சர். 

 பரணர் புன்முறுவல் செய்தார் விஷமமாக. “அமைச்சர் சொற்களைக் கவனிக்கவேண்டும். தமிழ் படித்தால் அறிவு வளருமென்று சொன்னேனே தவிர, தங் அறிவில்லை என்று சொல்லவில்லை. அப்படிப் களுக்கு பார்த்தால் சிருஷ்டியில் யாருக்கு, யாருக்கு, எதற்கு அறிவில்வை? ஆடுமாடுகளுக்கு அறிவில்லையா? புரவிகளுக்கு அறிவில்லையா?” என்று வினவினார் கவிஞர். 

அமைச்சர் அழும்பில்வேள் தமது நிதானத்தை அடி யோடு இழந்து, “என்னை ஆடு,மாடு என்கிறீரா?” என்று கேட்டார், சினம் குரலில் தெளிவாகத் தெரிய. 

பெரும் புலவரான பாணர் சிறிதும் சலனப்படாமல் ‘அமைச்சரே! இந்த இல்லத்தில் சில பண்பாடுகளைக் கடைப்பிடிக்கிறோம். உம்மை ஆடு, மாடு என்றழைக்க வில்லை. பொது அறிவைப் பற்றிச் சொன்னேன். உம்மைப் போன்ற விருந்தாளியை அவமதிக்கும் பழக்கம் இன்னும் சிருஷ்டியில் பிறக்கும் போது உயிரி வரவில்லை எனக்கு. னங்கள் எல்லாவற்றுக்கும் அறிவு உண்டு. ஆனால் அறிவு வளர்ச்சி மனிதனுக்குக் கல்வி சுற்பதால் ஏற்படுகிறது. அதுவும் தமிழ் படிப்பவனுக்கு அறிவு அதிகமாக ஏற்படு கிறது. கூர்மையாகவும் ஆகிறது. என்ன காரணம்? அறிவுச் செல்வங்களை, அறிவாற்றல்களை நமது பெரியவர்களெல் லாரும் தமிழ்க் கவிதைகள் மூலமும், தமிழ்ப் பெரும் காப்பி யங்கள் மூலமும் திரட்டித் தந்திருக்கிறார்கள். அவற்றைப் படிக்கும் மனிதன் மற்ற மனிதர்களைவிட உயர்ந்தவனா கிறான். மற்றவர் இல்லங்களுக்குச் செல்லும்போது நண் பனாகவும் பண்போடும், நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளவும் செல்கிறான். நீர் அந்த மாதிரி ஏதாவது அறிய வந்திருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார். 

அவர் விளக்கமும், கேள்வியும் அமைச்சரைத் திக்கு முக்காட வைத்துவிட்டதால் பேசமுடியாமல் தவித்தார். அவர் சங்கடத்தைப் புரிந்து கொண்ட புலவர் நிலக்கள்ளியை நோக்கிக் கேட்டார்,  “அம்மா! அமைச்சர் பேசச் சங்கடப்படுகிறார். நீதான் சொல்லேன், அமைச்சர் எதற்கு இந்த அதிகாலையில் இக்குடிசைக்கு வந்தார்?” என்று. 

அவள் ஏதோ சொல்ல முயன்ற சமயத்தில், காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நீராடி நெற்றியில் திலகமும் இட்டு வந்தான் அந்த வாலிபன். வந்தவன் அமைச்சரை நோக்கித் தலைவணங்கிவிட்டு நிலக்கள்ளியை நோக்கிப் புன்முறுவலும் செய்தான். பிறகு நேராக உள்ளே சென்று சில ஓலை நறுக்குகளை எடுத்து வந்து எழுத்தாணியால் ஏதோ எழுத ஆரம்பித்தான். அவன்  செயலைக்கண்ட அமைச்சர், “அப்பா! நீ என்ன எழுதுகிறாய்?’ என்று வினவினார். 

“கவிதை” என்று மிக இனிமையான குரலில் பதில் சொள்னான் அந்த வாலிபன். 

“உன் பெயர்?” ஆவலுடன் கேட்டார் அமைச்சர். அவன் பதில் அமைச்சரைத் தூக்கிவாரிப் போட்டது. “குட்டுவன்! குருநாதர் என்னை எழுப்பியபோது பெயர் சொல்லி அழைத்ததைக் கவனித்திருக்கலாமே” என்றான் அந்த வாலிபன். 

அவன் இப்படித் தம்மை மட்டந்தட்டியதைக் கவனித்தாலும் கவனிக்காதது போலவே நடந்து கொண்ட அமைச்சர், “நன்று! நன்று! குட்டுவன்! நல்ல பெயர். சிறிது செம்மையைச் சேர்த்துக் கொண்டால் செங்குட்டுவன் என்று நமது மன்னர் பெயரைப் போல் ஆகிவிடும்” என்றார் அமைச்சர். 

“இமயத்தில் இலச்சினை பொறித்த மன்னரெங்கே, நானெங்கே? இமயத்துக்கும், மடுவுக்குமுள்ள ஏற்றத் தாழ்வு மன்னருக்கும் எனக்கும்” உன்று மிகுந்த பணிவைக் காட்டினான் குட்டுவன். மேற்கொண்டு உரையாடலில் சம் பந்தப்பட இஷ்டமில்லாமல் ஓலைச் சுவடிகளில் எழுத் தாணியை ஓட்டினான். இடையிடையே திருட்டுக் சுண் களால் நிலக்கள்ளியை மட்டும் பார்த்தான். நிலக்கள்ளியும் அவன் கண்களைத் தனது கமலக் கண்களால் சந்தித்தாள். உதடுகளில் புன்முறுவலையும் படரவிட்டாள். 

இருவர் பார்வையையும் புன்முறுவலையும் கண்ட அமைச்சர், “நிலக்கள்ளி இவனை முன்பே உனக்குத் தெரியுமா” என்று வினவினார். 

“நாங்கள் இரண்டு பேரும் இங்கு தமிழ் படித்தோம்” என்றாள் நிலக்கள்ளி. 

“கடல் வேந்தனும் இங்குதானே படித்தான்?” 

”ஆம்”

“அவனிடமும் பரிச்சயம் இருக்கிறதா?”

“ஆம்” 

“இன்னும் யார் யாருடன் பரிச்சயம் உனக்கு?” 

“இங்கு தமிழ் படிக்கும் நல்லவர்கள் எல்லாருடனும் வழக்கம் உண்டு”. 

இந்தச் சமயத்தில் ஓர் அதிர்வேட்டை வெடித்தார் அழும்பில்வேள். 

“அப்படியானால் கடல்வேந்தனும் நல்லவனா?” என்று வினவினார். 

“மிகவும் நல்லவர்” என்ற நிலக்கள்ளி, “வேண்டுமானால் குருநாதரைக் கேளுங்கள்” என்றான். 

“அவனைத்தான் குருநாதர் தமது மகன் என்று வில் லம்பு இலச்சினை இல்லத்தில் சொன்னாரே. அவனைப்பற்றி இவர் எப்படி தவறாக எதுவும் சொல்ல முடியும்?” என்று சீறிய அழும்பில்வேள்,  “சேரமானின் அவைக்களப்புலவரே! கேளும், நான் வந்த காரணத்தை. கடல்வேந்தன் அவனைச் சிறை செய்து இங்கிருந்தால் செல்லவும், இல்லாவிட்டால் அவனிருப்பிடம் அறிந்து செல்லவும் வந்திருக்கிறேன்” என்று பலத்த குரலில் அறிவித்தார். 

அதுவரை எட்ட இருந்த ஆசனத்தில் உட்கார்ந் திருந்த பரணர் எழுந்து நின்றார். கம்பீரமாக “இந்தக் குரலில் இங்கு பேச மன்னனும் அஞ்சுகிறான். கேவலம் அமைச்சரான நீர் சத்தம் போடுகிறீர். கடல்வேந்தன் மரக்கலம் எல்லார் கண்களிலும் படும்படியாக முக துவாரத்தில் நிற்கிறது. சாமர்த்தியமிருந்தால் அங்கு போய் அவனைப் பிடியும். சாமர்த்தியமில்லாவிட்டால் இன்றிரவு இங்கு வாரும், அவனைக் காட்டுகிறேன். இனி நீங்கள் செல்லலாம்” என்று வாசலைக் காட்டினார் தமது கையால்.

அமைச்சர் திகைத்து நின்றார். அந்த சமயத்தில் சுவடியில் எழுதிக் கொண்டிருந்த வாலிபன் சுளுக்கென்று நகைத்தான். அதனால் கோபம் அதிகமாகவே அழும்பில் வேள் புலவரைச் சுட்டுவிடுவது போலப் பார்த்து, “புலவரே! கடல்வேந்தன் கொள்ளைக்காரன். அவனுக்குப் புகலிடம் அளிப்பதே குற்றம். இரவு வருகிறேன். அவனைக் காட்டும். உமது குற்றத்திற்கு அதுதான் பரிகாரம்” என்று கூறிவிட்டு வெளியே நடந்தார். குருவை வணங்கிவிட்டு நிலக்கள்ளியும் நடந்தாள். அன்றிரவு அமைச்சர், பரணர் சென்றார். தனியாக அல்ல, சுமார் இருபது இல்லம் வீரர்களுடன் சென்றார், பரணர் வீட்டு மார்க்கத்தில் பல இடங்களில் அவர்களை மறைத்து வைத்தார். இப்படி தனக்கு விரிக்கப்பட்டிருந்த வலையை அறியாமலே கடல் வேந்தனும் அன்றிரவு புலவர் இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். 

பரணர் வீட்டு வாயிலில் சிறு விளக்கு ஒன்று மட்டும் எரிந்து கொண்டிருந்ததால் உள்ளிருந்தவர்களையோ வெளியே இருந்தவர்களையோ நன்றாகப் பார்க்க முடியவில்லை கடல்வேந்தனால். ஆகவே அவன்மிக அலட்சியமாக நடந்து வந்தான், பரணர் இல்லமிருந்த பாதையில். பாதைக்கு இருபுறதிலுமிருந்த சிறு தோப்புகளில் மறைந்திருந்த வீரர்கள் யாரும் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடல்வேந்தன் பார்வை ஏதோ ஒரு சமயத்தில் மட்டும் இருபுறமும் லேசாகப் பார்த்தது. அதன் விளைவாக அவன் இதழ்களிலும் புன்முறுவலொன்று படர்ந்தது. சதை மடித்த அவன் விகார முற்றல் முகம், அதிக விகாரமாகத் தெரிந்தது. அந்தப் புன்முறுவலின் விளைவாக புலவர் இல்லத்தை அணுக இருந்த சில அடிகளுக்கு முன்பே நின்றான். அந்தச் சமயத்தில் அவன் சட்டென்று பரணர் ஏதோ சைகை செய்ய இல்லத்துக்குள்ளிருந்த முற்படவே, சஞ்சயன் “உம்! ஜாக்கிரதை. உயிரின் மீது ஆசையிருந்தால் ஜாடை காட்டுவதோ குரல் கொடுப்பதோ கூடாது. அவன் இங்கு வந்தபின் பேச நிரம்ப அவகாசம் இருக்கிறது” என்று எச்சரித்தான். அதையும் மீறிப் புலவர் ஓர் அடி முன்னேற முயன்றார். அதே சமயத் தில், புதரிலிருந்த இரு காவலர் உருவிய வாளுடன் கடல் வேந்தன் மீது பாய்ந்துவிட்டனர். மற்றொரு பக்கத்தின் புதரிலிருந்து ஈட்டிகள் இரண்டு வீசப்பட்டு ‘விர்’ரென்று மந்திராஸ்திரம் போல் அவை அவன் மார்பை நோக்கி வந்தன. கடல்வேந்தன் ஆயுள் அத்துடன் முடிந்துவிட்ட தென்றே நினைத்தார் பரணர். 

13. சிறை வேந்தன் 

படைத்தளபதி ஒருவன் தனது பாசறையை நோக்கி வருவது போல நிமிர்ந்த பார்வையுடனும், சீரான நடை யுடனும் புலவர் இல்லம் நோக்கி நடந்து வந்த கடல் வேந்தன், பக்சுத்துப் புதர்களிலிருந்து தன்மீது பாய்ந்து வந்த இரு வீரர்களையோ, மார்பை நோக்கிப் பாய்ந்த ட்டிகளையோ லட்சியம் செய்யாமல் மேலும் நடக் வே செய்தான். அவன் மார்பு மீது பாய்ந்த இரு ஈட்டிகளும் செயலற்றுக் கீழே விழுந்த அதே சமயத்தில், இடையிலி ருந்த தனது நீண்ட வாளை உருவாமல் இரு குறுவாள்களை மட்டும் எடுத்து, தன்மீது பாய முற்பட்ட இரு வீரர்களை கைகளும் நோக்கி எறிந்து விடவே, அவர்கள் இருவர் செயலற்று வாள்களும் கீழே விழுந்து, விபரீத ஒலிகளைப் பரப்பின. தன்மீது பாய்ந்து செயலற்று விழுந்த இருவேல் களையும் பாதையிலிருந்து காலால் ஒதுக்கித் தள்ளிய கடல் வேந்தன், எதிரி வீரர்களை நோக்கிச் சென்று, அவர்கள் கைகளில் தைத்துத் தொங்கிக் கொண்டிருந்த தனது இரு குறுவாள்களையும் பிடுங்கி, ரத்தத்தை அவர்கள் உடையி லேயே துடைத்து விட்டு, மீண்டும் அவற்றைத் தனது கச்சையில் செருகிக் கொண்டான். அடுத்து அந்த இரு வீரர்களையும் நோக்கி ‘இன்னும் யாராவது இருக்கிறார் களா?” என்று வினவவும் செய்தான். 

அவன் கேள்வி முடிவதற்குள்ளேயே பக்கத்துப் புதர் இன்னும் பத்துப் பேர் வெளியே வரவே களிலிருந்து தனது நீண்டவாளை எடுத்து உருவி அதன் கூர்மை பார்த்த “வீரர்கள் திருடர்கள் போல் பதுங்க கடல்வேந்தன், வேண்டிய நிலைமை சேர நாட்டுக்கு வந்து விட்டதா?” என்று வினவினான். “சேர வீரர்களை வெட்டி வழக்க மில்லை எனக்கு. வேறு வழியில்லாவிட்டால் உங்களை வெட்டாமலும் இருக்க முடியாது. உங்களை அழைத்து வந்து பதுங்க வைத்தது யார்? அமைச்சரா? தூதுவனா?” என்ற கேள்விகளையும் இரைந்து கேட்டான். இரவின் பெரி அமைதியில் அந்தச் சொற்கள் மிகத் தெளிவாகவும் தாகவும் கேட்டன புலவர் பெருமான் இல்லப் பகுதியில். 

சுடல்வேந்தன் எழுப்பிய கேள்வியால் அவனை உடனடியாகத் தாக்க முயலாத வீரர்கள் பரணர் இல்லத்தை நோக்கினர். ஒருவன் மட்டும் சொன்னான். “நீங்கள் சரணடைந்து. விட்டால் நாங்கள் உங்களைத் தாக்க அவசியமில்லை” என்று. 

இதைக்கேட்ட கடல்வேந்தன், அந்தப் பகுதியே அதிரும்படியாக நகைத்தான். “சரணடைவதா? எதற்கு? யாரிடம்?” என்னும் சொற்களை வீசினான், அந்த நகைப் பின் ஊடே. அவன் நகைப்பு பயங்கரமாகவே இருக்கவே அவனுக்கு வெறி ஏதாவது பிடித்து விட்டதோ என்று நினைத்துத் திகிலடைந்த அழும்பில்வேள், பரணர் இல்லத் தின் வாயிலுக்கு வந்து நின்று, “கடல் வேந்தனே!’ என்று இரைந்து அழைத்தார். 

அவர் தோன்றியதன் விளைவாகப் போரிடாமல் நின்று விட்ட அரசாங்க வீரர்களையும், அமைச்சரையும் நோக்கிய சடல்வேந்தன், “அமைச்சர் பெருமானே! என்னைப் பிடிக்க என் தந்தையின் இல்லத்துக்கு வருவா னேன்? கடலில் நிற்பது எனது ஒரே மரக்கலம். அங்கேயே வந்து பிடித்திருக்கலாம். அல்லது சேரநாட்டு மரக்கலங்கள் இரண்டை ஏவி என்னை மடக்கலாம்” என்று விளக்கி மீண்டும் நகைத்தான் பழையபடி பயங்கரமாக. 

“கொள்ளைக்காரனை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். பிடிக்கும் வழியைக் கொள்ளைக்காரனிடமிருந்தே அறிய அவசியமில்லை” என்று சற்று அதிகாரக் குரலிலேயே பேசினார் அமைச்சர். 

கடல்வேந்தன் சிறிது சிந்தித்தான். ஆம் அமைச் சரே! திருடனைப் பிடிக்க அமைச்சரும் திருட்டுத் தொழி லில் இறங்க வேண்டுமா?” என்று வினவினான் சிந்தனைக் குப் பிறகு. 

“நான் திருட்டுத் தொழிலில் இறங்கினேனா?” 

“ஆம்”. 

“எப்பொழுது?’ 

“இப்பொழுதுதான். என்னைப் பிடிக்க பல வீரர்களை திருடர்களைப்போல் வழியில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள். நீரும் திருடனைப்போல் என் இல்லத்தில் பதுங்கியிருக்கிறீர். அந்தக் கையாலாகாத சஞ்சயனும் இங்குதான் பதுங்கிக் கிடப்பான் என்று நினைக்கிறேன்”. 

“சஞ்சயன் இங்கிருப்பது உனக்கு எப்படி தெரியும்?”

“இருளிருக்குமிடத்தில் பிசாசும் இருக்கும்”

இதைக் கேட்டதும் கோபங்கொண்ட அமைச்சர், ‘யார் இருள்? யார் பிசாசு?” என்று வினவினார் கோபக் குரலில், 

“அது உங்களுக்குள் தீர்மானமாக வேண்டிய விஷயம்” என்ற வேந்தன் மறுபடியும் நகைத்தான். 

அந்தச் சமயத்தில் அமைச்சர் நின்றிருந்த வாயிலில் அவர் பக்கத்தில் தோன்றிய சஞ்சயன், “வேந்தா! நான் தனியாக வரவில்லை…” என்றான் சற்றே கடுமையான குரலில், 

“அந்தத் துணிவு உமக்கோ அமைச்சருக்கோ இல்லை என்பது எனக்குத் தெரியும்” என்று ஏளனத்துடன் பேசினான் வேந்தன். 

“புலியைப் பிடிக்க பல ஆள்களுடன் செல்வது துணிவற்ற செய்கையல்ல” என்று சுட்டிக் காட்டினான் சஞ்சயன். 

“புலியைப் பிடிக்க நரிகளுடன் செல்வது உசிதமல்ல என்பதை உணர்ந்திருக்க வேண்டும் தூதரே” என்ற கடல்வேந்தன். வேகமாக முன்னேற முயன்றான். அவனைப் பத்து வாள்கள் தடுத்தன. 

அந்த வாள்கள் தனது மார்பில் புதைந்த நிலையில் அவற்றையும் பார்த்து அமைச்சரையும், சேர தூதனையும் நோக்கி, “உங்களுக்கு வேண்டியது சண்டையா சமா தானமா?” என்று நிதானமாக, ஆனால் பெரிய குரலில் வினவினான் கடல்வேந்தன். 

“உன் மார்பில் பத்து வாள்கள் பதிந்திருக்கின்றன என்று சுட்டிக் காட்டினார் அமைச்சர்.

“பார்த்தேன். கேட்டதற்குப் பதில் சொல்லும்” என்றான் வேந்தன். 

இப்படிக் கேட்டுக் கொண்டே சரேலென்று கீழே உட்கார்ந்து, வாள்களிலிருந்து தப்பி மீண்டு, அதே வேகத்தில் எழுந்து, வீரர்களை இடித்துத் தள்ளி, தனக்கும் இடம் செய்துகொண்ட கடல்வேந்தன். தனது வாளை வேகமாக வீசி எதிரிகளின் வாள்களைத் தடுத்தான். புயலே கத்தி வடிவமெடுத்து வந்துவிட்டது போன்ற பிரமை யடைந்த வீரர்களில் நால்வரின் கையிலிருந்த வாள்கள் பறந்துவிடவே, அவர் கொடுத்த இடைவெளியில் புகுந்து வலக்கையில் வாளுடன், கீழே கிடந்த வேலொன்றையும் காலால் எடுத்து இடக்கையில் ஏந்திக்கொண்ட சுடல் வேந்தன் வேல், வாள், இரண்டினாலும் ஒரே சமயத்தில் போராடினான். 

அவன் போர் முறையைக் கண்டு “ஒரு மனிதன் இத்தனை பேரைச் சமாளிக்க முடியுமா?” என அமைச்சர் வியப்படைந்த சில விநாடிகளுக்குள்ளேயே வேந்தனைச் சூழ்ந்த இரு வீரர்கள் வேலுக்கும் இன்னும் இருவர் அவன் வாளுக்கும் இலக்காகிவிடவே அவர்களிடமிருந்து நீங்கி, ஒரே எட்டில் அமைச்சர் இருந்த இடத்தை அணுகிவிட்ட கடல்வேந்தன், “அமைச்சரே! உமதுவீரர்களை வாள்களைக் கீழே போடச் சொல்லுங்கள் என்று கடுமையான குரலில் உத்தரவிட்டான். 

 கடல்வேந்தன் கையிலிருந்த வேல் தமது கழுத்தைத் தடவிக் கொண்டிருந்ததைப் பார்த்த அமைச்சர், “வாள்களைக கீழே போடுங்கள்” என்று இரைந்து சீறினார். 

வீரர்கள் வாள்களை இழந்ததும் அமைச்சரை நோக்கிய- கடல்வேந்தன், “அமைச்சரே! சஞ்சயனையும் இந்த வீரனை யும் உமது மாளிகைக்கு அனுப்பிவிடும். உம்முடன் நான் வரு கிறேன். என்னை நீங்கள் சிறையில் தள்ளிவிடலாம்* என்று கூறினான். 

அதைக் கேட்ட அமைச்சர் விழித்தார். சஞ்சயன் அதில் ஏதோ சூது சூது இருப்பதாக நினைத்து, “வீரர்கள் போய்விட்டால் உன்னை எப்படிப் பிடிப்பது?” என்று கேட்டான். 

“வீரர்கள் இருந்தும் பிடிக்கவில்லை. இல்லாமல் பிடித்தால் உமக்கு கௌரவமில்லையா? கடல்வேந்தன் சொல்லில் நம்பிக்கையிருந்தால் வீரர்களை அனுப்பிவிடும். இல்லையேல் சம்பிரதாயம் உங்களை அழித்துவிடும்” என்றான் கடல்வேந்தன், 

“சம்பிரதாயமா?” வியப்புடன் வினவினாள் சஞ்சயன்.. 

“ஆம் தூதரே. நான் இன்று விடியற்காலையில் என் மரக்கலத்துக்குத் திரும்பவேண்டும். நான் அப்படித் திரும் பாவிடில் கொள்ளைக்காரர்கள் இன்று பகலிலேயே பல வேடங்களில் முசிறியில் புகுந்து என்னைத் தேடுவார்கள். இருப்பிடமறிந்தால் அந்த இடம் அன்றிரவு தாக்கப் படும். இது எங்கள் சம்பிரதாயம். விளைவு சற்று கசப்பானது  சொல்ல எனக்கிஷ்டமில்லை” என்றான் கடல் வேந்தன். 

அந்தச் சமயத்தில் பரணரும் குறுக்கிட்டு, “அமைச் சரே! வேந்தன் புத்திமதியை ஏற்றுக்கொள்ளும் என்று தூண்டினார். 

அமைச்சர் சிந்தித்தார். சஞ்சயனையும் பார்த்தார் சங்கடத்துடன். கடைசியாக வீரர்களைத் திரும்பச்சொல்லி கட்டளையும் இட்டார். வீரர்கள் புதர்களிலிருந்தும் பரணர் இல்லத்திலிருந்தும் கிளம்பிச் சென்ற பிறகு கடல்வேந்தன் அமைச்சரை நோக்கி, “அமைச்சரே! நான் சற்று உறங்கிவிட்டு வருகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்” என்று கூறிவிட்டு உள்ளே உள்ளே போய்ப் படுத்து விட்டான். 

சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் உறங்குவதை ஒரே சீராக வந்த அவன் மூச்சிலிருந்து புரிந்துகொண்ட அமைச்சர் கூடத்திலிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். சஞ்சயன் மட்டும் விவரிக்க இயலாத கலக்கத்தால் அப்படியும் இப்படியுமாக அலைந்து கொண் டிருந்தான். 

பரணர் கூடத்தின் ஒரு மூலையிலிருந்த விளக்கடியில் உட்கார்ந்து நறுக்கு ஓலைகளை எடுத்து எழுத்தாணியால் எழுதலானார். ‘இந்தச் சமயத்தில் எழுத்து என்ன வேண்டியிருக்கிறது?” என்று உள்ளூர அலுத்துக்கொண்ட அமைச்சர் அதைப் பற்றி கேட்கவும் செய்தார். “புலவரே! என்ன எழுதுகிறீர்?” என்று. 

“புலவன் என்ன எழுதுவான்? கவிதைதான்” என்றார் பரணர். 

“கவிதை எழுத இதுவா சமயம்Ī” என்று வினவினார் அமைச்சர். 

“கவிதை எழுத சமயம் ஏது? தோன்றும்போதெல்லாம் எழுத வேண்டியதுதான்” என்ற பரணர் எழுத்தாணியை ஏட்டில் ஓட்டினார். 

“எழுத மனநிம்மதி வேண்டாமா?” என்று கேட்டார் அமைச்சர். 

“இப்பொழுது அமைதிக்கு என்ன குறைவு?” என்று புலவர் கேட்டார். 

“கடல்வேந்தனைப் பற்றி உமக்குக் கவலையில்லையா?”

“எதற்குக் கவலை?” 

“நான் சிறைபிடித்துப் போகிறேனே?” 

“அது உங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம். அவன் சிறைப்பட ஒப்புக்கொண்டான். நீர் சிறை செய்கிறீர். அது முடிந்த விஷயமாயிற்றே?” என்ற பரணர் மேலும் எழுதலானார். 

சில விநாடிகள் ஓடின: அமைச்சர் சங்கடத்துடன் உட்கார்ந்திருந்தவர் எழுந்து புலவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். புலவர் எழுதுவதையும் பார்த்தார். பிரமித் தார். “புலவரே! இதென்ன நடக்காத காரியத்தை எழுதுகிறீர்?’ என்று கேட்கவும் செய்தார். 

“எது நடக்காதது?” 

“யவனரை மன்னர் விரட்டி விட்டதாக எழுதுகிறீரே?” 

“இனிமேல் நடக்கும். கவிஞன் பார்வை எப்பொழுதும் முன்னால் ஓடும்.” 

“யவனர் வாளாவிருப்பார்களா?” 

“யவனர் எழுந்தால் அடக்கப்படுவார்கள். அதை முன்னர் செய்து முடிப்பார். கடல்வேந்தனிருக்கும் வரை செங்குட்டுவன் கரம் வலுத்தே இருக்கும்” என்ற பரணர் மேலும் எழுதலானார். 

அமைச்சர் பெரும் குழப்பத்திலிருந்தார். அப்பொழுது கடல்வேந்தன் எழுந்து வந்தான் அறையிலிருந்து. ”அப்பா!” என்று புலவரை அழைத்தான். 

“என்ன குழந்தாய்?” புலவர் சுவடியிலிருந்து கண்களை ஏறெடுத்து அவனை நோக்கினார். 

“க்ளேஸியஸ் வந்தால் என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி விடுங்கள்” என்று கூறிவிட்டு அமைச்சரிடம் தனது வாளை நீட்டி, “அமைச்சரே! வாரும் போகலாம்!” என்று தலைவணங்கினான். 

அமைச்சர், வேந்தன் வாளைப் பெற்றுக் கொண்டார். பிறகு சஞ்சயனை நோக்கி, “தூதரே! வேந்தனை எங்கு சிறை வைக்கலாம்?” என்று வினவினார்.

சஞ்சயன் பதில் சொல்லுமுன்பு கடல்வேந்தனே பதில் சொன்னான், “உமது மாளிகையில், நிலக்கள்ளியின் அறைக்கு அடுத்த அறையில்” என்று. 

“நிலக்கள்ளிக்கும் நீ சிறையிருப்பதற்கும் எனன சம்பந்தம்?” என்று வினவினார் அமைச்சர். 

“என்னைப் பிணைக்கக்கூடிய கயிறு அது ஒன்றுதான் வேறு எங்கு வைத்தாலும் தப்பி விடுவேன்” என்று சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னான் கடல்வேந்தன். 

இந்தச் சமயத்தில் பரணரும் இடை புகுந்து, ‘வேந்தன் சொல்கிறபடி செய்யும்” என்று யோசனை சொன் னார். 

“வேந்தன் என்ன என் விருந்தாளியா? சிறையல்லவா பிடிக்கிறேன்!” என்றார் அமைச்சர். 

“இரண்டும். ஒன்றுதான்” என்று அலட்சியமாகச் சொன்னார் பரணர். 

அமைச்சர் வேறு வழியின்றி கடல்வேந்தனும் சஞ்சயனும் பின்தொடர, தமது மாளிகை நோக்கி நடந்தார். கடல்வேந்தன் சொன்ன அறையில் வைத்து அவனனப் பூட்டினார். “கடல்வேந்தன் சிறை வேந்தன்” என்று உற்சாகமும் பட்டார். நிலைத்தது. அந்த உற்சாகமும் ஒரே நாள் தான் நிலைத்தது.

14. சிறை இருந்தவன் ஏற்றம் 

கடல்வேந்தனைப் பிடிக்க முயன்று தாம் அடைந்த தோல்வியாலும், அவனாகவே வலுவில் சிறைப்பட்டுத் தம்முடன் வந்த விசித்திரத்தாலும், பரணர் இல்லத்தின் முன்பு நடந்த சண்டையைப் பற்றிய வியப்பினாலும் அன்றிரவு முழுவதும் உறங்கவில்லை சேரன் அமைச்சரான சுமார் பன்னிரண்டு படை வீரர்களை அழும்பில்வேள். ஒருவனாகச் சமாளிப்பதையும், விரைந்து வந்து தமது கழுத்தில் வேலை வேலை ஊன்றித் தம்மைப் பணியலைத் ததையும் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து, “இத்தனை வீரரால் இவனைப் பிடிக்க முடியவில்லை என்றால் வேறு எப்படித்தான் பிடிப்பது?” என்ற ஒரு கேள்வியையும் தம் அமைச்சர். இத்தகைய முள் எழுப்பிக் கொண்டார் தோல்வி மனப்பான்மையின் காரணமாக அவர் கோபம் சஞ்சயன்மீது திரும்பி, “இவன் என்ன பெரிய தூதன், தந்திரக்காரன்? ஒரு கொள்ளைக்காரனை, தன்னந்தனியாக வந்தவனைப் பிடிக்கமுடியா தவன் எதைக் கண்டுபிடிப்பான்? எதைத்தான் சாதிப்பான்?” என்று சீறிக் கொண்டார் உள்ளத்துள். 

இந்த யோசனைகளுடன் கடல்வேந்தன் போர் முறை ‘அவன் விசித்திரமாயிருந்தது. யும் அவருக்குப் பரம்: சண்டையிட்ட விதம் ஒருபுறமிருக்க, அவன்மீது மறைவி லிருந்து வீசிய வேல்கள் அவன் மார்பில் பாய்ந்து பயன் அற்று ஏன் வீழ்ந்தன? இதை நாளை அவனையே கேட்டு விடுகிறேன்” என்றும் சொல்லிக்கொண்டார். அத்துடன் ஒரு சந்தேகமும் எழுந்தது அழும்பில்வேள் மனத்தில். “இவன் எதற்காக நிலக்கள்ளியின் அறைக்குப் பக்கத்து அறையில் சிறையிருக்க விரும்பினான்? என் மகள் இவனைத் தப்பவிட்டு விடுவாளோ? ஏன் கூடாது? வில்லம்பு இலச் சினை இல்லத்தில் எங்களை அனுப்பி விட்டு, இவனுடன் சென்றவள்தானே?” என்றும் சிந்தனையில் இறங்கினார். இத்தகைய சந்தேகங்களாலும், ஆத்ம விசாரணையாலும் உறக்கம் வராததால் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே இருந்ததன் விளைவாகப் படுக்கையில் புரண்டபடி நேரத் தைச் செலவழித்து, விடிவதற்குக் கால் ஜாமம் இருக்கும் போதே படுக்கையை விட்டு எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மாளிகைக் கூடத்தில் உலாவினார். உலாவிக்கொண்டே நிலக்கள்ளி அறையையும் கடல்வேந்தன் நெருங்கி ஊன்றிப் பார்த்தார். ஏதாவது அறையையும் அரவம் வருகிறதா என்று காதுகளைத் தீட்டிக் கொண்டு உற்றுக் கேட்கவும் செய்தார். 

இரண்டு அறைகளிலும் அரவம் அணுவளவும் கிடை யாது. கடல்வேந்தனைக் காக்க வேண்டிய காவலர்களும் கீழே உட்கார்ந்து அறைக்கதவு மீது சாய்ந்து நன்றாகத் கொண்டிருந்தார்கள். தூங்கிக் அமைச்சர் வரவினால் 

ஏற்பட்ட அவர் காலடி ஒலிகள்கூட அவர்களை எழுப்ப வில்லை. அதனால் வெகுண்ட அமைச்சர் ஒரு காவலனைக் காலால் சீண்டவே அவன் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்து அவருக்குத் தலைவணங்கி, “மாமன்னர் செங்குட் டுவர் வாழ்க! அமைச்சர் வாழ்க!’ என்று கட்டியம் சொன்னான். 

அமைச்சர் அவனையும் அவன் கூறிய கட்டியத்தால் விழித்துக்கொண்ட காவலனையும் இகழ்ச்சியுடன் பார்த்து, ”உங்களுக்குத் தெருக்கூத்தில் பழக்கமுண்டா?” என்று வினவினார். 

காவலர்கள் மௌனமாக நின்றனர். அவரால் காலால் உதைக்கப்பட்ட காவலன் மட்டும் சிறிது நேரம் கழித்து, “அமைச்சருக்குத் தெரியாததல்ல, ஆண்டுதோறும் இந்த ஊர் அம்மன் விழாவில் கூத்தாடுபவர் என் கோஷ்டியார் தான். அதில் நான் அரச வேடம் போடுவேன். தாங்களே பார்த்திருக்கிறீர்கள்….” என்று இழுத்தான். தற்பெருமை பிடிபடாததால் தலையையும் குனிந்து கொண்டான். 

இதைக்கேட்ட அமைச்சர் சினம் ஆயிரம் மடங்கு அதிகமாகவே, “நீ எப்பொழுது காவலன் வேடம் போட ஆரம்பித்தாய்?” என்று கோபத்துடன் இகழ்ச்சி மரியாதை யையும் காட்டினார். 

“தாங்கள் நியமித்தது முதல்” என்றான் காவலன். “அப்படியா?” அமைச்சர் சினம் அதிகமாயிற்று. ”ஆம்! அமைச்சர் பெருமானே!” 

“அமைச்சரிடம் அரசர் காவலிருக்கக்கூடாது. இன்றி லிருந்து உம்மை வேலையிலிருந்து நீக்கி விட்டேன்”. 

“அது வெறும் வேடம்” 

“இதுவும் அப்படித்தான். நீ காவலா புரிகிறாய்? தூங்குவது காவலா?” 

“இல்லை.”

 “அப்படியானால் ஏன் தூங்கினாய்?” 

“அவர் உத்தரவு?” 

“யார் உத்தரவு?” 

“கடல்வேந்தர் உத்தரவு.” 

காவலர் சொற் கேட்ட அமைச்சர் பிரமித்தார். “என்ன உளறுகிறாய்?” என்று சீறினார். 

இன்னொரு காவலன் முதல் காவலன் உதவிக்கு வந்து “அவர் உளறவில்லை. நாங்கள் காவல் புரிந்து கொண்டு முன்பு நடமாடிக் கொண்டிருந்தோம். அறை உள்ளே உறங்கிக் கொண்டிருந்த கடல்வேந்தர் வெளியே தலை நீட்டி, தான் இரண்டுநாள்களுக்குத் தப்பப் போவதில்லை யென்றும், எங்களை உறங்கும்படியும் சொன்னார். எங்கள் நடமாட்ட ஒலியால் அவர் தூங்குவது தடைப்படுவதாகச் சொன்னார். பிறகுதான் நாங்கள் கதவில் சாய்ந்து தூங்கி னோம்” என்று நடந்ததை விளக்கினான். 

 அமைச்சருக்கு என்ன சொல்வதென்று விளங்காததால், “நீங்கள் சொல்வது நிஜமென்று எனக்கெப்படித் தெரியும்?” என்று பெரிதாகக் கேட்கவே, அதன் விளைவாகப் பக்கத்து அறை திறந்து நிலக்கள்ளி வெளியே வந்து, “அப்பா! ஏன் கொள்ளப் கூச்சல் போடுகிறீர்கள்? அவர் விழித்துக் போகிறார்” என்று கூறி வாயின்மீது வாயின்மீது கையை வைத்து எச்சரிக்கையும் செய்தாள். 

காவலர் மீதிருந்த கோபம் மகளின்மீது திரும்பவே “நிலக்கள்ளி!” என்று அதிகாரத்துடன் அழைத்தார் அமைச்சா. 

”உஸ்! உஸ்! இப்பொழுதுதானே சொன்னேன், இரையாதீர்கள் அப்பா” எனறு மீண்டும் வாயை பொத்திக் காட்டினாள் நிலக்கள்ளி. 

“இரைந்தாலென்ன? அவர் விழித்துக்கொண்டால் தானென்ன? என் தலையைத் திருகிவிடுவாரோ?” என்று கோபத்துடன் கேட்டார் அமைச்சர். 

“ஆம்!” என்றாள் நிலக்கள்ளி. 

“என்ன ஆம்?” அமைச்சர் கோபம் எல்லை கடந்ததால் சத்தம் பலமாயிற்று. 

“அரைத் தூக்கத்தில் எழுந்தால் வெறியுடன் வரு வார். அப்பொழுது அவர் என்ன செய்வார், ஏது செய்வார் என்று கூறமுடியாது என்று கடல்வேந்தனின் குணாதிசயங்களை எடுத்துச் சொன்னாள் நிலக்கள்ளி, 

அமைச்சர் அவளுக்குப் பதில் சொல்லாமல் அவளை உற்று நோக்கினார் பல விநாடிகள். பிறகு சாந்தமடைந்து, “நிலக்கள்ளி! இது என் அரண்மனையா? அவன் அரண் மனையா? இங்கு அவன் சிறைவாசியா? விருந்தாளியா?”” என்று வினவினார் மிக மெதுவான குரலில். 

நிலக்கள்ளி சிந்தித்தாள் சில விநாடிகள், பிறகு அவள் பதில் சொன்ன போது அவள் குரலில் மென்மை இருந்தது. அவள் வதனம் கனிந்தும், குரல் குழைந்தும் இருந்தது. சொற்களில் ஓர் இனியையும் ஒலித்தது. “தந்தையே! இது உங்கள் அரண்மனைதான். அவரும் உங்களிடம் சிறை யிருக்க ஒப்புக்கொண்டதால் சிறைவாசிதான். அடுத்து இரண்டு நாள்கள் சிறையிருக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகையால் கவலைப்படாதீர்கள்” என்று மெதுவாகவும் இனிமையான குரலிலும் சொன்னாள் மந்திரி மகள். 

“சிறையிருக்க ஒப்புக் கொண்டாரா? இல்லாவிட்டால் தப்பிவிடுவாரா? இங்கு எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் தெரியுமா உனக்கு?” என்று அமைச்சர் வினவினார். 

இதற்கு நிலக்கள்ளி திட்டமாகவே பதில் சொன்னாள்: “ஆயிரம் வீரர்கள் இருந்தாலும் அவர் தப்ப இஷ்டப் பட்டால் நீங்கள் தடுக்க முடியாது என்று. அப்பா! ஏற்கனவே இந்த மாளிகையிலிருந்து அவர் தப்பிச் சென்றது உங்களுக்கு தெரியாதா? என்னையும் அழைத்துச் சென்றதை மறந்துவிட்டீர்களா?” என்றும் வினவினாள் அவள் சொன்னது உண்மையென்று தெரிந்திருந்ததால் அமைச்சர் வீண்விவாதத்தில் இறங்கவில்லை.”இப்பொழுது என்ன செய்யச் சொல்லுகிறாய்?” என்று வினவினார் ரிச்சலுடன்.

“அவர் சிறையிருக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகையால் அதைப்பற்றி வீண் விவாதங்கள் கிளப்பாதீர்கள்” என்றாள் நிலக்கள்ளி. 

“நிலக்கள்ளி! இவன் அரசாங்கப் பணப்பெட்டிகளைத் திருடியிருக்கிறான்” என்று நினைவுபடுத்தினார். 

“அதைத்தான் அவரே ஒப்புக்கொண்டாரே முதல் நாள் இரவில்” என்று கூறி அவன் கொள்ளைக்கு நியாயமும் கற்பித்தாள் நிலக்கள்ளி. 

“அப்படியானால் குற்றத்துக்குத் தண்டனை கிடையாதா?”  

“உண்டு. அவரையே கேளுங்கள், கொள்ளையடிக்கும் காரணத்தை”. 

“சரி சரி கேட்கிறேன்” என்று உறுமிய அமைச்சர் தமது அறையை நோக்கி நடந்தார். நிலக்கள்ளியையோ காவலர்களையோ திரும்பியும் பார்க்காமல். 

அமைச்சர் சென்றதும் அவர் மகளை நோக்கி ஒரு காவலன் கேட்டான், “அம்மணி! நாங்கள் காவல் புரிவதா வேண்டாமா?” என்று. 

“வேண்டாம். நீங்கள் செல்லுங்கள் காவல் வீரர் கூடத்துக்கு” என்றாள் அவள். 

“இந்தக் கொள்ளைக்காரனை …” என்று தொடங்கிய வீரன் நிலக்கள்ளியின் வதனத்தில் விரிந்த சினத்தைக் கண்டு “கொள்ளைக்காரரை-” என்று மெல்ல விழுங்கினான். 

“நான் பார்த்துக் கொள்கிறேன். போய்விடுங்கள். வீணாக இரைச்சல் போடாதீர்கள்’ என்று அவர்கள் செல்வதற்குப் படிகளைக் காட்டினாள். 

“அமைச்சருக்குப் பதில் சொல்வது யார்?” என்று வினவினான் ஒரு காவலன். 

“நான்” என்ற நிலக்கள்ளி கோப விழிகளை அவர்கள் மீது நாட்டினாள். அந்த ஒரு பார்வை காவலர்களைப் பறக்க வைத்தது. 

பிறகு நிலக்கள்ளி நேராக நீராடும் அறை நோக்கி நடந்தாள். நீராடி தலை சீவி முடித்துச் சமையலறை சென்று காலை உணவு சித்தமாயிருக்கிறதா என்று பார்த் தாள். சித்தமாயிருப்பது தெரிந்ததால் சிறை அறைக்குச் சென்று கதவைத் தட்டினாள். யாரது?” என்று எழுந்தது வேந்தன் குரல், 

“நான்தான், எழுந்திருங்கள் பொழுது விடிந்து ஒரு நாழிகை ஆசிவிட்டது’ என்று நிலக்கள்ளி அதட்டினாள். மெல்லக் கதவைத் திறந்து தலையை நீட்டிய கடல்வேந்தன், “இதற்குள் என்ன அவசரம்!’ என்று வினவினான் 

“காலை உணவு சித்தமாயிருக்கின்றது” என்றாள். நிலக்கள்ளி. 

கடல்வேந்தன் அவளைப் பின்பற்றி நடந்தான். நீராட அறைக்குச் சென்றதும் அங்கியையும், உள்ளங்கியையும் களைந்து நிலக்கள்ளியிடம் கொடுத்துவிட்டு நீராட முற்பட்டான். இரண்டு அங்கிகளையும் எடுத்துக்கொண்டு அவள் அவன் அறையை நோக்கி நடந்தாள். இந்த விந்தையைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் அவளைப் பின் தொடர்ந்தார். 

நிலக்கள்ளி, கடல்வேந்தன் அறையில் அங்கிகளைப் படுக்கை மீது வைத்தாள் ஒரு புறமாக, அந்த அங்கிகளைக் கண்ட அமைச்சர் வியந்து உள்ளங்கியைத் தமது கை லெடுத்துப் பார்த்தார். அது முழுவதும் இரும்புக் கம்பி களால் பின்னப்பட்டிருந்தது. அது யவனர்கள் பாது காப்புக்கு அணியும் இரும்புச்சட்டை என்பதை உணர்ந்த அமைச்சர், முதல் இரவில் அவன் மீது தாக்கிய வேல்கள் காரணத்தைப் புரிந்துகொண் விழுந்ததன் செயலற்று டார். இன்னோர் அங்கி அவர் ஏற்கெனவே பார்த்தது தாள் பெரிய தளபதிகள் போர்க்களங்களில் அணியும் அங்கி அது. அதன் கச்சையில் நானகு. குறுவாள்கள் இருப்பதைக் கவனித்தார் அமைச்சர், அவன் வாளைத் தாம் எடுத்துக் கொண்டதால் அது மட்டும் அங்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அமைச்சருக்கு அவனைச் சிறைப் பிடித்தது சரிதானா என்ற சந்தேகமும் ஏற் பட்டது. அன்றே மன்னருக்கு இதுபற்றித் தெரிவிக்கத் தீர்மானித்தார். 

அந்தச் சமயத்தில் நீராடிவிட்டுச் சிறுதுணியை இடுப் பில் கட்டிவந்த கடல்வேந்தன் அமைச்சருக்குத் தலைவணங் கினான். அமைச்சர் அவனை தோக்கினார். அவன்தலைக் நீராடவில்லை என்பதையும், கழுத்துக்குக் கீழ்தான் குளித்திருக்கிறானென்பதையும் புரிந்து கொண்ட அமைச்சர் *’வேந்தரே! தலைக்குத் தண்ணீர்விடும் பழக்கமில்லை போலிருக்கிறதே” என்று கேட்டார். 

“சில சமயங்களில் உண்டு,” என்ற கடல்வேந்தன் ‘”நிலக்கள்ளி! காலை உணவு கொண்டு வா” என்று உத்தர விட்டு உள்ளே சென்றுவிட்டான். 

அவன் உத்தரவை நிறைவேற்ற நிலக்கள்ளி விரைந்தாள். அமைச்சர் கலங்கி நின்றார். சிறையிலிருப்பவன் உத்தரவிடுவதும் அதை நிறைவேற்றத் தன் மகள் ஓடுவதும் பெருவிந்தையாயிருந்தது அவருக்கு, மகள் காலை உணவுடன் திரும்பியதும் கேட்டார் அமைச்சர், “அம்மா! இவன் என்ன மருமகப் பிள்ளையா இந்த வீட்டுக்கு?” என்று. 

“அந்தப் பாக்கியம் உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை விட அதிர்ஷ்டசாலி வேறு யாரும் கிடையாது சேரநாட்டில்” என்ற நிலக்கள்ளி அவர் மீது புன்சிரிப்பொன்றை வீசிவிட்டு வேந்தன் சிறையிருந்த அறைக்குள் சென்று விட்டாள்; 

அமைச்சர் ஏதும் பேசாமல் சிலையென நின்றார். “கடல் வேந்தனே! நீ இந்த வீட்டு மருமகப்பிள்ளையா? பார்த்து விடுகிறேன் அதை” என்று சீறினார். அவர் உள்ளத்தில் பயங்கரத் திட்டமொன்று உருவாயிற்று அந்த சமயத்தில். 

15. நாத சொர்க்கம் 

தானாகவே வலுவில் வந்து தம்மிடம் சிறைப்பட்டு, தமது பெண்ணின் அறைக்குப் பக்கத்து அறையில் தங்கித் தமது வீட்டு மருமகப்பிள்ளை போல சொந்தம் கொண் டாடிய கடல்வேந்தனை மீண்டும் தப்பவிட்டால், தமது பெயருக்குப் பெரும் மாசு ஏற்படும் என்பதை உணர்ந்த அமைச்சர் அழும்பில்வேள், அவனை நிரந்தரமாகச் சிறை யில் அடைத்துவிட பயங்கரமான ஒரு திட்டத்தை தமது மனத்தில் சிருஷ்டித்துக் கொண்டார். முதல் நாள் ஏதும் தாம் இஷ்டத்திற்குத் நடக்காதது போலும் அவன் இணங்குவது போலும் நடித்து மூன்றாவது நாள் இரவில் அவனைக் கட்டிப் போட்டு, பொழுது விடிவதற்குள் தலை நகரான வஞ்சிமா நகருக்கு அனுப்பி விட்டால் கடல் வேந்தன் அத்தியாயம் முடிந்துவிடும் என்று திட்டமிட் டார், அமைச்சர் அழும்பில்வேள். ஒரு முறை அவன் வஞ்சிமாநகர் சிறையில் சிக்கிக் கொண்டால் படைப்புக் கடவுளான பிரமன் கூட அவனை மீட்க முடியாதென்பதை உணர்ந்துகொண்ட அமைச்சர், அன்று காலையில் அவன் நீராடியதிலிருந்து அவனுக்குச் சால உபசாரங்களையும் செய்ய முற்பட்டார். ஆனால் தான் உபசரிக்க உபசரிக்க, கடல் வேந்தன் அடித்த அமர்க்களம் பொறுக்க முடியாதிருந்ததையும் கண்டு சில சமயங்களில் அமைச்சர் உக்கிர மூர்த்தியானாலும் ஏதும் செய்ய வகையின்றித் தம்மை அடக்கிக் கொண்டார். 

நிலக்கள்ளி அவனது அறையிலேயே அவனுக்குச் சிற்றுண்டி பரிமாறித் திரும்பியதும், “அம்மா! கடல்வேந்தன் எப்படி இருக்கிறார்?” என்று விசாரித்தார் அமைச்சர். 

“அவருக்கென்ன மருமகப்பிள்ளை மாதிரி அட்டகாசமாக இருக்கிறார்!” என்ற நிலக்கள்ளி, “அப்பா! நான் மறந்தே விட்டேன். நல்லதாக இரண்டு இளநீர் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்று கேட்டாள். 

அமைச்சர் முகத்தில் வியப்பைக் காட்டி “இளநீரா? இத்தனை காலையில் எதற்கு?” என்று விசாரித்தார். 

“அவர் காலை சிற்றுண்டிக்குப் பிறகு இளநீர்தான் சாப்பிடுவது வழக்கம்” என்றாள் நிலக்கள்ளி. 

“அவர் உணவு முறைகள்கூட உனக்குப் பழக்கம் போலிருக்கிறது” என்று கேட்ட அமைச்சர் முகத்தில் சிறிது சினத்தைத் தோற்றுவித்துக் கொண்டார். 

“என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? அவர் தேவைகள் முழுவதும் எனக்குத் தெரியும்” என்று சொன்னாள் நிலக்கள்ளி. இதைச் சொன்னபோது அவள் குரலில் மென்மை இருந்தது. 

அதைக் கவனித்த அழும்பில்வேனின் சினம் உள்ளூர அதிகப்பட்டாலும் அதை வெளியே காட்டவில்லை அவர் ‘ஓகோ” என்று மட்டும் பதில் சொன்னார். 

தந்தை மனத்தில் ஏதோ விகல்ப எண்ணங்கள் ஓடுவதை நிலக்கள்ளி புரிந்துகொண்டதால், “என்ன ஓகோ?” என்று கேட்டாள். 

“நமது சிறைப் பறவையின் தேவைகள் எல்லாம் உனக்குத் தெரியும்? உம்” என்று முனகினார் அழும்பில்வேள். 

”ஆம்!” என்றாள் நிலக்கள்ளி. திடமாகத் தந்தையை நோக்கவும் செய்தாள். 

அவள் கண்களைச் சந்திக்க அஞ்சிய அமைச்சர், ”அவர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முயலுவாய் போலிருக்ககிறது” என்று வினவினார். 

‘”அதைவிட பாக்கியம் எனக்கு என்ன இருக்கிறது?” நிமிர்ந்து நின்று பதில் சொன்னாள் நிலக்கள்ளி. 

ஆனால் மகளை நிமிர்ந்து பார்க்க முடியாத அழும்பில் வேள் “இல்லை, இல்லை, இது விசேஷமான பாக்கியம்” என்றார். 

அதற்கு மேல் ஏதும் பேசாமல் தமது அறையை நோக்கி நடந்து விட்டார். நிலக்கள்ளி அவர் போவதைப் பார்த்துப் புன்முறுவல் செய்து, “பாவம் தந்தை! எதை எதையோ கற்பனை செய்கிறார். வீண் கற்பனை தோல் விக்கு அஸ்திவாரம்” என்று கூறிவிட்டு, கடல்வேந்தனுக்கு உணவுத் தட்டுடன் உள்ளறைகளை நோக்கிச் சென்றாள். கிறிது நேரத்திற்கெல்லாம் உள்ளறையிலிருந்து கொடு வாளுடன் வெளியே வந்த ஒரு பணிமகன் வேகமாகப் படிகளில் இறங்கிச் செல்ல முயன்றான். 

“டேய்!” என்று அதட்டி அவனைத் தடுத்த அமைச்சர் “எங்கு போகிறாய்?” என்று வினவினார். 

“தோப்பிற்குப் போகிறேன்!” என்றான் பணிமகன். 

“கையில் கொடுவாளெதற்கு?’ என்று கேட்டார் அமைச்சர். 

“இளநீர் சீவ” என்றான் பணிமகன். 

“இளநீர் சீவவா?” அமைச்சர் குரலில் சீற்றம் இருந்தது. 

“ஆம்.” 

“யாருக்கு இளநீர்?”

“கடல்வேந்தருக்கு.”

“கடல்வேந்தருக்கா, மரியாதை பலமாக இருக்கிறது?” 

“மரியாதையாக நடக்க வேண்டுமென்பது உத்தரவு”

“யார் உத்தரவு?” 

“நிலக்கள்ளியார் உத்தரவு” என்ற பணிமகன் அமைச்சருக்குத் தலைவணங்கி விட்டுப் படிகளில் இறங்கிச் சென்றான். 

அமைச்சருக்கு இந்தத் தடபுடல் அடியோடு பிடிக் காத்தால் தமது அறைக்குச் சென்று உட்கார்ந்து சிந்திக் கலானார். அவர் சிந்தனை தொடங்கிய சில நிமிஷங்களுக் கெல்லாம் திறந்த அவர் அறைக் கதவின் மூலம் சீவிய இரண்டு இளநீர்களைக் கையில் தாங்கிப் பணிமகன் செல்வதைக் கண்டார் அமைச்சர். அடுத்து, தமது மகள் பெரிய வெள்ளிக் கிண்ணமொன்றுடன் கடல்வேந்தன் அறையை நோக்கி நடப்பதைக் கண்டு அந்த வெள்ளிக் அறையை கிண்ணத்தில் இளநீர் இருப்பதைப் புரிந்து கொண்டார். அது மட்டுமல்ல அவர் புரிந்து கொண்டது, தாம் இஷ்டப் பட்டாலும், படாவிட்டாலும் கடல்வேந்தனுக்கு உபசாரம் தடபுடலாயிருக்குமென்பதை அமைச்சர் சந்தேகமறப் அதிகமாய்த் தமது வெறுப்பை  புரிந்து கொண்டதால் வெளிக்குக் காட்டவில்லை. 

அன்று நடுப்பகல் உணவும் கடல்வேந்தனுக்கு அவனது அறையிலேயே படைக்கப்பட்டது. அந்த உணவைத் தாங்கிய இரு பணிமக்கள் பின்தொடர நிலக்கள்ளி முன் சென்றதைக் கண்டார் அமைச்சர். கடல்வேந்தன் உணவை அந்த அறையிலேயே உண்டான். நிலக்கள்ளியே பரிமாறினாள். 

அமைச்சரின் அமைநி அமைதி பறந்தது. பறந்தது. மகளை அழைத்து, “நிலக்கள்ளி, அவருக்கு நீயே உணவு பரிமாறினாயா?” என்று வினவினார். 

“ஆம்” என்றாள் நிலக்கள்ளி. 

“அவர் நம்முடன் நமது உணவு அறையில் சாப்பிட மாட்டாரோ?” இகழ்ச்சியாகக் கேட்டார் அமைச்சர். 

“மாட்டார்” திட்டமாகப் பதில் சொன்னாள் நிலக்கள்ளி. 

“ஏன்”

“அவர் சொன்ன வார்த்தை மீறாதவர்.’ 

“என்ன சொல்லிவிட்டார்? எதை மீறவில்லை?” 

‘”இரண்டு நாள்கள் உங்களிடம் சிறையிருப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஆகையால் அவசியமானாலன்றி இருக்கும் அறையை விட்டு நகர மாட்டார்.” 

இந்த விந்தையைக் கேட்ட அமைச்சருக்கு சிரிப்பதா அழுவதா என்று விளங்கவில்லை. ‘நிலக்கள்ளி!” என்று உஷ்ணமாக அழைத்தார். 

“ஏன் தந்தையே?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டாள் அவள். 

“நியும் அந்தக் கொள்ளைக்காரனும் என்னை என்ன வென்று நினைக்கிறீர்கள்?” அமைச்சர் குரலில் சீற்றம் அதிகப்பட்டது. 

“என்ன நினைக்கிறோம்?” 

“முட்டாளென்று நினைக்கிறீர்கள்?” 

“அப்படியொன்றுமில்லை.”

“என்ன ஒன்றுமில்லை? அவன் இங்கு சிறையிருப்பதாக பேர், ஆனால் என் மகள் அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். இளநீர் வெட்டிக் கொடுக்கிறாள்…” 

“அதனாலென்ன?”

“பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’ 

“ஏதும் நினைக்கமாட்டார்கள். வீணாக மனத்தை அலட்டிக் கொள்ளாதீர்கள்.” 

இதைச் சொன்ன நிலக்கள்ளி தனது அறையை நோக்கி நடந்தாள். “இருக்கட்டும். உங்கள் கொம்மாளத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று கருவிக் கொண் டார் அமைச்சர். 

அன்று பகல் முழுவதும் சுடல்வேந்தனுக்கு நிலக்கள்ளி மட்டுமின்றி காவலர் அனைவருமே வேண்டிய உபசாரம் செய்தார்கள். அன்று மாலை நெருங்கியதும் அமைச்சர் தமது மாளிகையை விட்டுக் கிளம்பி இரண்டு மாளிகைகள் சஞ்சயன் வீட்டுக்குச் சென்றார். அங்கு தள்ளியிருந்த சஞ்சயனுடன் கடல்வேந்தனை ஒரு வழியாக ஒடுக்குவதைப் பற்றி ஆலோசனை செய்தார்! ‘சஞ்சயா! இப்பொழுது அந்தக் கொள்ளைக்காரன் நம்மிடம் அகப்பட்டுக் கொண் டிருப்பதால்… என்று தொடங்கியவரை இடைமறிந்த சஞ்சயன், “அமைச்சரே எனக்கு ஒன்றும் விளங்கவில்லை’ என்றான். 

“என்ன சஞ்சயா!” என்று வினவினார் அமைச்சர். சஞ்சயன் சிறிது சிந்தித்துவிட்டு “கடல்வேந்தன் நம் மிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறானா? நாம் அவனிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமா?” என்று வினவினான். “எதுவும் நமது சாமர்த்தியத்தைப் பொறுத்தது” என் றார் அமைச்சர். 

“நமக்கு சாமர்த்தியமிருக்கிறதா?” என்று சஞ்சயன் வினவினான். 

“இல்லாமலா அவனைப் பிடித்திருக்கிறோம்!” என்று அமைச்சர் கேட்டார். 

“நாம் பிடிக்கவில்லை. அவனாக வந்தான் உமது பாளிகைக்கு. அது மட்டுமல்ல. அங்கு அவனுக்கு ராஜோபசாரம் நடக்கிறதாகக் கேள்வி” என்று சஞ்சயன் தன அதிருப்தியைக் காட்டினான். 

அமைச்சர் சங்கடத்தால் தமது ஆசனத்தில் சிறிது அசைந்தார். “சஞ்சயா! கடல்வேந்தனை உண்மையாகப் பிடிக்க ஓர் ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்றார். 

“என்ன ஏற்பாடு அமைச்சரே?” என்று வினவினான் சஞ்சயன், 

அமைச்சர் மெல்லத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “சஞ்சயா! இப்பொழுது கடல்வேந்தன் என் மாளிகை அறையில் தானிருக்கிறான். அவனைக் காவல் செய்ய இரு காவலரை நியமித்திருக்கிறேன். இன்று அவனைப் பற்றிக் கவலை இல்லை. நாளை இரவுக்குமேல் அவன் சிறையிருக்க மாட்டானாம். நாளைக்கு மறுநாள் விடியற்காலையில் புறப்பட்டுப் போய்விடுவானாம், ஆகையால் நாளை இரவில் அவனைக் கட்டி வஞ்சிக்கு அனுப்பி விட ஏற்பாடு ய்ெதிருக்கிறேன். அதற்கு உனது உதவி வேண்டும்” என்று கூறினான். 

“உத்தரவிடுங்கள்” 

“இந்தக் கடல்வேந்தன் சரியாக உறங்குவது கிடை யாதென்று கேள்வி. சிறிது சத்தமிருந்தாலும் விழித்துக் கொள்வானாம்”. 

“அப்படித்தான் கேள்வி!” 

“ஆகையால் அவனை நன்றாக உறங்கச் செய்ய வேண்டும்.” 

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” 

“நாளை இரவு நீ எனது மாளிகைக்கு வா. அவனுடன் நாம் மது அருந்துவோம். அவன் மதுவில் மருந்து கலந் திருக்கும். அதைக் குடித்தால் அவன் இரவு முழுவதும் மயக்கத்திலிருப்பான். பிடிப்பது சுலபம்”. 

இதைச் சொன்ன அமைச்சர் சஞ்சயனை உற்று நோக்கினார். 

அமைச்சரின் யோசனை சஞ்சயனுக்குப் பிடிக்கவில்லை. “இது ஆபத்து அமைச்சரே! வேந்தனுக்கு ஏதாவது துளி சந்தேகம் ஏற்பட்டாலும் நாம் ஒழிந்தோம்” என்று சஞ்சயன் கூறினான் அச்சச்துடன். 

“மதுவைக் கொடுக்க நானிருக்கிறேன். அல்லது, எனது மகளின் கையால் கொடுக்கச் செய்கிறேன்” என்று தைரிய மூட்டினார் அமைச்சர். 

சஞ்சயன் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டான் அன்று முழுவதும் மிக உற்சாகத்தில் கழித்தார். அழும்பில் வேள். கடல்வேந்தனுக்குத் தாமே வேண்டிய உபசாரங் களைச் செய்தார் அடிக்கடி அவன் அறையில் உட்கார்ந்து கொண்டு கடல் கொள்ளைகளைப் பற்றிய விவரங்களைக் கேட்டார். அவன் விவரித்த விஷயங்களைக் கேட்டு மெய் சிலிர்த்தார். 

மெல்ல மெல்ல மறுநாள் இரவும் வந்தது. சஞ்சயனும் வந்து சேர்ந்தான். இருவரும் சேர்ந்தே இருவரும் சேர்ந்தே கடல்வேந்தனை அவனது அறையில் சந்தித்தார்கள். 

இரவு சிறிது ஏறியதும் ஏறியதும் “உணவருந்துவோமா?” என்று அமைச்சர் விசாரித்தார். 

கடல்வேந்தன் புன்னகை செய்தான் நிலக்கள்ளியை நோக்கி, “நிலக்கள்ளி உன்னிடம் என்ன யாழ் இருக்கிறது?” என்று கேட்டான். 

“சகோட யாழ்” என்றாள் நிலக்கள்ளி. 

“அதை எடுத்து வா” என்று சொன்ன கடல்வேந்தன் அவள் எடுத்து வந்ததும் கட்டிலில் அமர்ந்த வண்ணமே சுருதி கூட்டினான். பிறகு நிலக்கள்ளியை நோக்கி, “பாடு நிலக்கள்ளி, நான் வாசிக்கிறேன்” என்றான் கடல்வேந்தன்.

“எதைப் பாடட்டும்?” என்று நிலக்கள்ளி கேட்டாள். 

“கடல் பாட்டு” என்றான் கடல்வேந்தன். 

“இப்பொழுது எதற்குப் பாட்டும் கூக்தும்? முதலில் உணவு அருந்துவோம்” என்றார் அமைச்சர். 

கடல்வேந்தன் சொன்னான்: “செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று. பிறகு சிறிதும் தாமதிக்காமல் கடல்பாட்டை யாழில் தொடங்கினான். நரம்புகளை மீட்டி, யாழின் சுருதியுடன்  கலந்தது நிலக்கள்ளியின் இனிமைக்குரல். நாதசொர்க்க மொன்று அந்த அறையில் சிருஷ்டிக்கப்பட்டது. 

– தொடரும்…

– கடல் வேந்தன்(நாவல்), முதற் பதிப்பு : டிசம்பர், 1984, பாரதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *