வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 5,532 
 
 

மீனா அவசரமாக புத்தகப் பையை தோளில் சுமந்துக் கொண்டு,தெருவிற்கு வந்தாள் தூரத்தில் ஒரு பேருந்து ஆடி அசைந்து வருவதைக் கண்ட அவள்,பேருந்து நிலையத்திற்கு வேகமாக ஓடிச்சென்று வந்து நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டாள் மீனா,கூட்ட நெரிசலில் மூச்சி திணறி தான் போனது,கால் வைக்க கூட இடம் இல்லை,தட்டுதடுமாறி ஒரு கைப்பிடியை இருக பிடித்து சமாளித்து நின்றுக் கொண்டாள் மீனா,எவனோ ஒருவன் அவள் பின்னாடி உரசிக் கொண்டு நிற்பதை உணர்ந்த அவளுக்கு வேர்த்துப் போனது,திரும்பி கூட பார்க்க முடியாத நெரிசல்,இவளும் முடிந்தளவு தள்ளி தள்ளி நின்றாலும்,வேண்டும் என்றே அவன் உரசுவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.பல்லை கடித்துக் கொண்டு,மனதில் அவனை எருமைமாடுகள் இடிக்கவே வருதுகள் என்று திட்டிக் கொண்டே நின்றாள் மீனா.சற்று நேரத்தில் அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது,பெரும் பாடுப்பட்டு பேருந்தைவிட்டு இறங்கிகொண்டாள் மீனா.

இது வழமையாகவே நடப்பவை தான்,அவள் இருக்கும் ஊருக்கும், டவுனுக்கும் இரண்டு மூன்று பேருந்துகள் தான் மாறி,மாறி ஓடும்,அனைவரும் அதை நம்பி தான் டவுன் பாடசாலைக்கும்,வேலைக்கும் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.மீனாவின் ஊரில் ஆறாம் வகுப்பு மட்டும் படிக்கும் பாடசளை ஒன்று மட்டும் உள்ளது,அதை மீறி படிக்க ஆசைப்பட்டால் இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவைத்தே பாடசாலைக்கு போகவேண்டும்,இதனால் பாதி பெண்பிள்ளைகள் ஆறாம் வகுப்பை தாண்டி படிப்பதும் இல்லை,அவர்கள் பெற்றோர்கள் அதை விரும்புவதும் இல்லை,ஆடை உற்பத்தி நிறுவனம் டவுனில் இருப்பதால்,அதிகமானவர்கள் அதில் வேலை செய்கின்றார்கள்.

படிக்க அனுப்பிவைக்காத பெற்றோர்கள்,வேலை செய்வதற்கு மட்டும் பெண்பிள்ளைகளை அனுப்பிவைத்தார்கள்,இதுவே பெரிய படிப்பு என்று நினைக்கும் பல ஆண் பிள்ளைகளும் வேலைக்கு தான் செல்கின்றார்கள்,மீனாவின் பெற்றோர்கள் எப்படியாவது மீனாவை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்று நினைத்தார்கள்,பெண்பிள்ளைகளுக்கு படிப்பு தான் முக்கியம் என்பதை உறுதியாக நம்பினார்கள்,கூலி வேலைக்குப் போனாலும் படிப்பின் அருமையை நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்கள் அவர்கள்,மீனாவும் அதை உணர்ந்து நன்றாகவே படிக்கின்றாள்,போய்வரும் போது எல்லாம் சில உரசல்கள்,இடிகள் இதையெல்லாம் சமாளித்து போய் வருவது சிரம்மமாக இருந்தாலும்,மீனா படிப்பு வேண்டாம் என்று ஒரு நாளும யோசித்தது இல்லை

இளவரசனும்,பரமேஷ்வரியும் மீனாவிடம் சொல்வதெல்லாம்,நல்லா படித்து ஏதாவது ஒரு தொழிலுக்கு போய் விடு,எங்களோடு இந்த கூலி வேலை முடியட்டும்,காத்து,மழை,வெயில் என்று இந்த இயற்கையோடு போராடித்தான் ஒவ்வொரு நாளும் நாங்கள் வேலைக்குப் போய் வருகிறோம்,தேயிலை பறித்து நம் கையெல்லாம் காப்புகாச்சி போய்விட்டது,எங்களை பெத்தவர்கள் எங்களை படிக்க வைக்கவில்லை,அதே தப்பை நாங்களும் செய்ய கூடாது நம் புள்ளைய படிக்க வைத்து விட வேண்டும் என்று நீ பிறந்தப் போதே நானும்,அம்மாவும் எடுத்த முடிவு,நமக்கு கஞ்சி இல்லை என்றாலும் பரவாயில்லை,நீ நன்றாக படித்து ஒரு வேலைக்குப் போய் விடனும் என்பது தான் எங்களுடைய ஆசையும் கனவும் என்பார்கள்.

அவர்களை பார்க்கும் போது மீனாவிற்கு பாவமாக இருக்கும்,எந்த சுகத்தையும் காணாதவர்கள்,உலகமே மீனா தான்,வேலையை தவிர வேறு எதுவும் தெரியாது,தேயிலை தொழிலாளர்களுக்கு என கட்டப்பட்ட வீட்டையே அரண்மனை என்று நினைத்து வாழ்பவர்கள்,அந்த வீடுகள் ரயில்வண்டி மாதிரி நீண்டு இருக்கும்,அதை பிரித்து இடையில் ஒரு சுவர் கட்டி தனி தனி வீடுகளாக்கப்பட்டிருக்கும்,மின்சார வசதி இல்லை

மண்தரை,விறகு அடுப்பு,வீட்டினுள் நுழையும் போதே சமையல்கட்டு,அதை தாண்டி உள் அறைக்குப் போகனும்,பகல் நேரத்தில் கூட அறை இருட்டாக தான் இருக்கும்,மீனா படிப்பது என்றால் சமையல் அறை வாசலில் கீழே உட்கார்ந்துப் படிப்பாள்,மழை காலம் என்றால் கூரை ஓட்டையில் இருந்து தண்ணி சொட்டு சொட்டாக விழும்,கழிவறை வெளியில் கொஞ்சம் தள்ளி இருக்கும்,குளிப்பது,துவைப்பது எல்லாம் வாசல் முன்பக்கம்,மாதவிடாய் நேரம் பெண்கள் தடுமாறி தான் போவார்கள்.

பக்கத்து வீட்டு சண்டைகள்,சாராய நாத்தம்,வெற்றிலை பாக்கு கரைகள்,அடுப்பு புகை,கிழவன் முதற் கொண்டு காளையர்கள்வரை ஏக்கமாக பார்க்கும் பார்வைகள்,இதை அனைத்தும் கடந்து பேருந்தில் ஏறி இறங்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்கள்,ஒவ்வொரு நாளும் இதையெல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருந்தாள் மீனா படிப்பதற்காக,நாட்கள் வேகமாக ஓடியது,பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்தாள்,அவள் மேற் படிப்பை தொடர்வதற்காக உதவித்தொகையும் கிடைத்தது.சாதாரணமான ஒரு காலேஜில் சேர்ந்தாள்,வசதியான பிள்ளைகள் அந்த காலேஜில் படிக்காவிட்டாலும்,சாதாரண குடும்பத்துப் பிள்ளைகள் படித்தார்கள்,மீனாவை யாரும் கணக்கெடுப்பது இல்லை.

தலைக்கு எண்ணெய் தேய்த்து சடை போட்டு,பொட்டு வைத்து,தன்னிடம் இருக்கும் இரண்டு,மூன்று தாவணிகளை துவைத்து பிளியாமல் உதறி காயப்போட்டு அயன் செய்யாமல் போட்டுக் கொண்டு வரும் மீனாவை ஏழனமாகப் பார்ப்பார்கள் சிலர்,அதற்காக அவள் ஒரு நாளும் வருத்தப் படுவதும் இல்லை, அவளின் அம்மா பரமேஷ்வரியை நினைத்துக் கொள்வாள்,தன்னிடம் இருக்கும் கிழிந்த புடவையை கையில் தைத்து,வேலைக்கு போட்டுக் கொண்டு போகும் அம்மா ஒரு நாளும் புது புடவை வேண்டும் என்று கேட்டதும் இல்லை,ஆசைப் பட்டதும் இல்லை,இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது பெற்றோர்களின் வேதனைகளும்,வலிகளும்,இவ்வளவு வறுமையின் மத்தியிலும்,மகளை படிக்கவைக்கும் பெற்றோரின் அருமை,பெருமைகள் ஒரு நாளும் புரியாது இவர்களுக்கு என்று மனதில் நினைத்துக்கொள்வாள் மீனா.

காலேஜில் நன்றாகவே படித்தாள் அவள்,அதுவும் சில மாணவர்களுக்கு பொறாமை,எந்த வசதியும் இல்லாமல்,எவ்வளவு மட்டம் தட்டினாலும்,அதையெல்லாம் கண்க்கெடுக்காமல் பரீசையில் எப்படி நல்ல மதிப்பெண் எடுக்க முடிகின்றது இவளுக்கு மட்டும் என்று சில மாணவர்களுக்கு ஆச்சிரியமாகவும் இருந்தது.காலேஜ் முடிந்து பட்டமளிப்பு விழாவிற்கு தன் பெற்றோர்களை வற்புருத்தி அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் மீனா,வரவே முடியாது என்றார்கள் அவர்கள்,நீங்கள் வரவில்லை என்றால் நான் போகவே மாட்டேன் என்று அவள் அடம் பிடித்ததால் அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

தன் மகள் மீனா மேடையில் நிற்கும் போது,இருவரினதும் கண்கள் கலங்கிவிட்டது,அவர்கள் பட்ட கஷ்ட்டங்கள் எல்லாம் காற்றோடு பறந்துப் போனது போல் இருந்தது அந்த தருணம்,மேடையை விட்டு மீனா இறங்கியதும் அவளை கட்டி அணைத்துக் கொண்டார்கள் இளவரசனும்,பரமேஷ்வரியும்.தூரத்தில் இருந்து இதை கவனித்த ஒரு பேராசிரியர் மீனாவின் பெற்றோர்களிடம் வந்து உங்கள் மகள் ரொம்ம நல்லா படித்தாள்,அமைதியான பொண்ணு,எந்த பிரச்சினைக்கும் போகமாட்டாள் என்றார் அவர்,ரொம்ப சந்தோஷங்க,உங்களுக்கு தான் நன்றி சொல்லனுங்க,என்று இருவரும் கையெடுத்து கும்பிட்டார்கள் அந்த ஆசிரியரை உங்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்லனும்,எப்படியாவது கஷ்டப்பட்டு மகளை படிக்க வைத்து விட்டீங்கள்,இனி கவலைப் பட தேவையில்லை,அவளுக்கு நல்ல வேலை கிடைக்கும்,இனி பெற்றோர்களை நீ தான் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மீனாவிடம் கூறிவிட்டு அவர் சென்று விட்டார்

மீனாவிற்கு எப்போதும் ஆசிரியர் தொழில் பிடிக்கும்,அவள் ஊர் பாடசாலையில் அவளுக்கு வேலை கிடைத்தது,முதல் நாள் அவள் பாடசாலைக்கு அடியெடுத்து வைத்தாள்,அவள் படித்த அதே பாடசாலையில் வேலை,சந்தோஷமாக இருந்தது,ஒரு பெரிய அறைக்குள் அத்தனை மாணவர்களும் அடைப்பட்டு படிக்கவேண்டிய சூழ்நிலை,கழிவறை,தண்ணி வசதி கிடையாத பாடசாலை,மாணவர்களின் எண்ணை வைக்காத பரட்டை தலைகளும்,துவைக்கப் படாத சீருடைகளும்,கிழிந்து தொங்கும் புத்தகப் பைகளும்,புகை பட்டு பழுப்பு நிற புத்தகங்களும்,மூக்கு ஒழுகும் முகங்களும்,ஒரு வித மணமாகவும் இருந்தது அந்த அறை,மீனாவும் இப்படி படித்து வந்தவள் தான்,அதனால் இதுவெல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை,அதிபர் ராசையா மீனாவை கண்டதும் சந்தோஷப் பட்டார்,இதே பாடசாலையில் படித்திருக்க,இங்கு வசதிகள் குறைவு என்று தெரிந்திருந்தும்,எப்படியம்மா இதே பாடசாலைக்கு வருவதற்கு விருப்பபட்ட என்றார் அவர்,இந்த ஊரில் இந்த பாடசாலை கூட இல்லையென்றால்,இன்று நான் ஆசிரியர் இல்லை சேர்,எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இந்த பாடசாலை தானே சேர்,என்றாள் மீனா.

அது உண்மையாக பட்டது அவருக்கு,அவளை அந்த பாடசாலையில் சில சிறுவர்கள் மீனாவை அக்கா என்றே அழைத்தார்கள் அதற்கு காரணம் எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்,இவள் பாடம் நடத்தும் போது,பக்கத்து வகுப்பு மாணவர்கள் சண்டை போட்டுக் கொண்டும்,கத்தி கொண்டும் இருப்பார்கள்,ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தார்கள் பாடசாலையில்,ஆசிரியர் பற்றாக்குறை வேறு,அதிலும் சம்பளத்திற்காக மட்டும் வேலை செய்பவர்களும் இருக்கவே செய்தார்கள்,மீனா நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு ஆசிரியராகவும்,ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரும் படி அதிபர் கூறினார் அவளும் அதற்கு ஒத்துக்கொண்டாள்,படிப்பின் அருமையை மாணவர்களுக்குப் புரியவைத்து,அவர்களை நல்வழிப் படுத்த ஐந்து ஆறு மாதங்கள் தேவைப்பட்டது மீனாவிற்கு,அவளின் வகுப்பு மாணவர்கள் மட்டும் தனியாக தெரிய ஆரம்பித்தார்கள்.

மீனா அவள் வகுப்பு மாணவர்களுக்கு சொல்வது எல்லாம் நமது பெற்றோர்கள் எவ்வளவு சிரமபட்டு வேலை செய்வது எங்களுக்கு தெரியும்,அதை மனதில் நினைவு வைத்துக்கொண்டு படிக்கனும்,சுத்தமாக இருப்பது முக்கியம்,எங்களிடம் இரண்டு உடை இருந்தாலும் அதை நன்றாக துவைத்து காயப் போட்டு போடனும்,வாரத்தில் இரண்டு நாளாவது தலைக்கு குளித்து,எண்ணை தேய்த்து தலையை நன்றாக சீவி கட்டனும்,இப்படி ஆரம்பித்து பல மாற்றங்கள் அந்தப் பாடசாலையில் நிகழ்ந்தது மீனாவினால்,மற்ற ஆசிரியர்களும் அவர்களின் வகுப்பு மாணவர்களை கண்டிக்க தொடங்கினார்கள் ஓரளவிற்கு பாடசாலை மாணவர்களும் சுத்தமாக பாடசாலைக்கு வர ஆரம்பித்தார்கள்,அதிபர் ராசையா மீனாவை பாராட்டினார் எப்போதும் அவருக்கு அவளை பிடிக்கும்,அவள் பாடம் நடத்தும் போது மாணவர்கள் ஆர்வமாக படித்தார்கள்,அதிபரும் அவளும் பாடசாலை கட்டிட குறை முதற் கொண்டு அனைத்தையும் சரிசெய்வதற்கு பெரும் பாடு பட்டனர்,மனு எழுதிப் போட்டனர்,உயர் அரசாங்க அதிகாரிகளை போய் சந்தித்து குறைகளை எடுத்துக் கூறி உதவி கேட்டார்கள்.

கேட்ட உடனே கிடைக்காவிட்டாலும்,தாமதமாக சரி கிடைத்தது,பத்தாம் வகுப்பு மட்டும் கல்வி கற்பதற்கு அதே பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது,கட்டிடம், தண்ணி,மின்சாரம்,கழிவறை என்று புது பொழிவுடன் அந்த படசாலை முன்னேற்றம் அடைந்தது.அவளின் ஊரும் ஓரளவிற்கு முன்னேற்றம் அடைந்தது,தேயிலை தொழிலாளிகள் இருக்கும் வீடுகள் அவர்களுக்கே இனி சொந்தம்,என்று அறிவிக்கப்பட்டதும் அளவில்லா சந்தோஷம் அவர்களுக்கு,மின்சாரம் வழங்கப்பட்டது,அவர்கள் இருக்கும் வீட்டை ஓரளவிற்கு மாற்றி அமைத்துக் கொண்டார்கள்,கழிவறை,குளிப்பதற்கு மறைவாக கட்டிக் கொண்டார்கள்.ஆரம்பகால தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கையை விட தற்போது அவர்களின் வாழ்க்கை எவ்வளவோ உயர்ந்து உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவர்களிடத்தில் பல மாற்றங்களை கொண்டுவறலாம்,படித்திருந்தால் அவர்களின் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு மீனா ஒரு உதாரணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *